14 ஜுலை இதழ் டைம்ஸ் ஆப் இந்தியா சென்னை பதிப்பின் முதல் பக்கத்தில் ஒரு செய்தி வந்திருந்தது. காவல்துறை கண்காணிப்பாளரின் போன் உளவுத்துறையால் ஒட்டுக் கேட்கப்படுகிறது. இது குறித்து அந்த எஸ்.பி டிஜிபி ராமானுஜத்திடம் புகார் அனுப்பியுள்ளார். இது குறித்து புகார் அளித்த எஸ்.பி, தன்னுடைய தொலைபேசி அழைப்புகள் உளவுத்துறையால் கண்காணிக்கப்படுவதாகவும், இது குறித்து சென்னையில் உள்ள உயர் அதிகாரியிடம் புகார் அளித்திருப்பதாகவும் எஸ்.பி சார்பாக தெரிவிக்கப்பட்டது.
இந்த செய்தி காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. யார் இந்த எஸ்பி ? எதற்காக அவரது அழைப்பை உளவுத்துறை கண்காணிக்கிறது. என்று பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் உலவின.
திமுக ஆட்சிக்காலத்தில் சட்டவிரோதமான ஒட்டுக் கேட்பு சரளமாக நடைபெற்று வந்தது அனைவரும் அறிந்ததே. அதற்கு காரணமான ஜாபர் சேட் குறித்தும், சட்டவிரோத ஒட்டுக் கேட்பு குறித்தும், சவுக்கு தளத்தில் பல்வேறு கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அப்படி பலரின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்ட ஜாபர்சேட்டின் உரையாடலையே வெளியிட்ட பெருமையும் சவுக்கு தளத்தையே சாரும்.
ஆனால், அதிமுக அரசு வந்த பிறகு, டிஜிபியாக ராமானுஜம் பொறுப்பேற்ற பிறகு, இது போன்ற சட்டவிரோதமான ஒட்டுக்கேட்புகள் முழுமையாக நிறுத்தப்பட்டன என்றே தகவல்கள் கூறுகின்றன. விதிமுறைகளை மதிப்பதில் கவனமாக இருக்கும் ராமாமனுஜம், விதிகளின் படி, உள்துறைச் செயலாளரின் அனுமதி பெற்ற பிறகே தொலைபேசிகளை ஒட்டுக் கேட்க அனுமதிக்கிறார்.
இந்த நிலையில், திடீரென்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் இப்படி ஒரு செய்தி வந்தது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சரி என்னதான் நடந்தது. யார் அந்த அதிகாரி என்று விரிவான விசாரணை நடத்தியதில், பல்வேறு தகவல்கள் வெளி வந்தன.
என்னுடைய தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்று புகார் அளித்தவர் யார் என்று பார்த்தால் அவர் அஸ்ரா கர்க்.
அஸ்ரா கர்க். இந்த பெயர் ஊடகங்களில் வந்து புகழடைந்தது கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதுதான். மதுரையில் அழகிரி சாம்ராஜ்யமாக இருந்த இடத்தில் தேர்தலை சீராக நடத்த தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்த அதிகாரிகள், சகாயம் ஐஏஎஸ், கண்ணப்பன் ஐபிஎஸ் மற்றும் அஸ்ரா கர்க் ஐபிஎஸ்.
இந்த மூன்று அதிகாரிகளும் இணைந்து, மதுரையில் தேர்தலை சிறப்பாக நடத்தியதோடு, அஞ்சா நெஞ்சனை ஒடுக்கினர். இதையடுத்து ஜுனியர் விகடன் இதழ், தேர்தலை சிறப்பாக நடத்தியது இந்த மூவர்தான் என்று கவர் ஸ்டோரி வெளியிட்டதும், அஸ்ரா கர்குக்கு, தலைக்கனம் தாங்க முடியாத அளவுக்கு ஏறி விட்டது.
அதற்கு முன்னதாக, அஸ்ரா கர்க் 2010ம் ஆண்டுகளில் திருநெல்வேலியில் இருந்தார். அப்போது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்தவர் ராதாகிருஷ்ணன் நாயுடு. ராதாகிருஷ்ணனும், அவர் அண்ணனும் சேர்ந்து, தமிழகமெங்கும் நில பேரங்களில் ஈடுபட்டது அப்போது மிக பிரசித்தம். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருப்பதால், ராதாகிருஷ்ணனின் வார்த்தைகளை எந்த மாவட்ட எஸ்.பியும் தட்டவே முடியாது. எந்தெந்த மாவட்டங்களில் நிலம் தொடர்பான தகராறுகள் இருக்கிறதோ, அந்த இடத்துக்கு ராதாகிருஷ்ணனின் சகோதரர் செல்வார். சம்பந்தப்பட்ட காவல் நிலையம் செல்வார். சென்னையிலிருந்து சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியான ராதாகிருஷ்ணனிடமிருந்து மாவட்ட எஸ்.பிக்கு போன் வரும். காவல் நிலையத்தில் வேலை மின்னல் வேகத்தில் நடக்கும். ராதாகிருஷ்ணனின் போன் வந்தும் கூட வேலை நடக்காவிட்டால், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் எஸ்.பிக்கு எந்தெந்த வகையில் எல்லாம் தொந்தரவு கொடுக்க முடியுமோ… அந்தந்த வகையிலெல்லாம் தொந்தரவு தருவார் ராதாகிருஷ்ணன்.
இந்த அஸ்ரா கர்க் இருக்கிறாரே……. இயல்பாகவே இவர் ஒரு தலைக்கனம் பிடித்த தறுக்கன். உயர் அதிகாரியா இருந்தா…. ? அவன் என்ன சொல்றது…. நான் என்ன கேக்கறது என்று ராதாகிருஷ்ணன் சொல்தை கேட்க மறுத்தார். நாயுடு சும்மா இருப்பாரா….. எல்லா வகையிலும் அஸ்ரா கார்குக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.
அந்த நேரத்தில் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில், ராதாகிருஷ்ணனின் எதிரி யார் என்று பார்த்து, அவரிடம் தஞ்சம் அடைந்தார் ராதாகிருஷ்ணனுக்கு குல எதிரி யார் ? சங்காராம் ஜாங்கிட். ஜாங்கிட், ராதாகிருஷ்ணனின் தாக்குதல்களில் இருந்து, அஸ்ரா கர்கை காப்பாற்றினார். ஜாங்கிட்டுக்கு திமுகவில் இருந்த செல்வாக்கு உலகறிந்தது. இந்த செல்வாக்கு இப்போதும் குறையாமல் அப்படியேதான் இருக்கிறது. ஜாங்கிட் கிட்டத்தட்ட திமுக குடும்பத்தில், திமுக என்ன திமுக….. கருணாநிதி குடும்பத்தில் ஒருவர் போலவே ஐக்கியமாகி விட்டார்.
சட்டவிரோத வெளிநாட்டுக் கார் இறக்குமதியில், ஸ்டாலினின் மகன் உதயநிதியை விசாரணைக்கு அழைக்கிறார்கள் என்று தெரிந்ததும் துடிதுடித்துப் போனது, ஸ்டாலினை விட ஜாங்கிட்தான். கன்னியாக்குமரியில் இருந்து நேரடியாக சென்னை கிளம்பி வந்து, சிபிஐயில் சில உயர் உயர் அதிகாரிகளை சந்திக்க முயன்றார். அவர் வருகையின் நோக்கம், ஸ்டாலினின் பினாமி ராஜா சங்கரை மட்டும் விசாரணைக்கு தயவு செய்து அழைக்காதீர்கள் என்பதே. அவர் உயர் உயர் அதிகாரிகளை சந்திக்க முடிந்ததா என்ற தகவல்கள் இல்லை. அப்படி ஒரு திமுக விசுவாசி ஜாங்கிட்.
இப்படி ஜாங்கிட் அரவணைப்பில் தனது தலைக்கனத்தை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டே பணியாற்றுகிறார் அஸ்ரா கர்க். இதற்குப் பிறகுதான் மதுரை எஸ்.பி பதவி, தேர்தல் பணி ஆகியன. மதுரையில் அதிரடி எஸ்.பி என்று பெயர் வாங்கி, முறுக்கான அதிகாரி என்று கபட நாடகம் ஆடினாலும், அஸ்ரா கர்கை ஒரு பகல் கொள்ளைக்காரனோடு தாராளமாக ஒப்பிடலாம். அப்படி ஒரு கபட நாடக பேர்வழி.
மதுரையிலிருந்து, அஸ்ரா கர்கை திருப்பூருக்கு மாற்றுகிறார்கள். மதுரையில் அதிரடி என்று பெயர் எடுத்து விட்டோம். திருப்பூரிலும் இதை தொடர்ந்தால், வசூலை குவிக்கலாம் என்ற எண்ணத்தோடு, திருப்பூர் போனதும் மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளை அதிரடியாக முடக்குகிறார். ஏறக்குறைய 800க்கும் மேற்பட்ட லாரிகளை முடக்கிவிட்டு, லாரி உரிமையாளர்களிடம் வசூல் குறித்து பேச்சு நடத்துகிறார். அவர்கள் கல்லா கட்ட முடியாது என்று மறுத்து, வேலை நிறுத்தத்தில் இறங்குகின்றனர். இணைப்பு என்னடா இது போகும் இடத்திலெல்லாம் பஞ்சாயத்து இழுக்கிறான் என்று, அஸ்ரா கர்கை திருப்பூரில் இருந்து தருமபுரிக்கு மாற்றுகிறார்கள்.
தருமபுரியில் அஸ்ரா கர்க் பணியேற்ற நேரம், நத்தம் பகுதியில் திவ்யா இளவரசன் காதல் திருமணத்தையொட்டி கலவரம் வெடிக்கிறது. இந்தக் கலவரத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பகுதியினர் வன்னிய இனத்தவர்கள். இவர்களில் பலர் தலைமறைவாகினர். ஊரே சுடுகாடு போல ஆகிப் போனது. இந்திய அளவில் இந்த கலவரம் கவனம் பெற்றதால், கவனமாக நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று.
இந்த கலவரத்தை கையாண்ட சமயத்தில்தான், அஸ்ரா கர்க், மருத்துவர் ராமதாஸோடு நெருக்கமாகிறார். ராமதாஸோடு அஸ்ரா கர்கை நெருங்க வைத்தது வேறு யாருமல்ல… ஜெகஜ்ஜால கில்லாடி ஜாங்கிட்தான். ஜாங்கிட்டும், ராமதாஸும் எப்படி நெருக்கமானார்கள் என்பது இன்னொரு தனிக்கதை. டாக்டர் ராமதாஸை ஜாங்கிட் எப்படி கொலை வழக்கிலிருந்து காப்பாற்றினார் என்பதை இந்த இணைப்பில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இணைப்பு . ஜாங்கிட், ராமதாஸிடம் அஸ்ரா கர்க் பற்றி எடுத்துரைத்ததும், ராமதாஸின் நற்பெயர் பெற்ற அதிகாரியாகிறார் அஸ்ரா கர்க்.
சித்திரைத் திருவிழாவிற்கு பின் நடந்த கலவரங்களைத் தொடர்ந்து, கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதிலும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு பெருமளவில் உதவி செய்தார் அஸ்ரா கர்க். இப்படி ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினரோடு ஏற்பட்ட நெருக்கம் எந்த அளவுக்கு அதிகமானதென்றால், 2014 பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, அன்புமணி ராமதாஸின் மீது கல்வீசி தாக்கி கொல்ல முயற்சி என்ற செய்தி வெளியாகி பரபரப்பானது.
அந்த தாக்குதல் புகைப்படத்தை பார்த்தாலே, அது செட்டப் என்பது வெளிப்படையாகத் தெரியும். இப்படியொரு தாக்குதல் நடந்தால் அந்த பழி நிச்சயமாக தலித்துகளின் மீதுதான் விழும். தலித்துகள் அன்புமணியை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள் என்ற செய்தி, தலித் அல்லாதவர்கள் இடையே பரவினால், ஒட்டுமொத்த தலித் அல்லாதவர்களின் வாக்கும் அன்புமணி ராமதாஸுக்கே விழும். என்ன காரணமென்றால், அதிமுக, திமுக என்று அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் வன்னியர்கள் என்ற காரணத்தால், வன்னியரல்லாத இதர சமூகத்தினரின் வாக்குகளை அள்ளுவது மட்டுமே வெற்றிக்கு வழி வகுக்கும் என்பது ராமதாஸுக்கு தெரியும். இந்த அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல் நாடகம் அரங்கேறியது.
தமிழகத்தில் யாருக்காவது மலச்சிக்கல் என்றால் கூட சிபிஐ விசாரணை கேட்கும் மருத்துவர் ராமதாஸ் அதற்காக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் ராமதாஸ், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை எதுவும் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கல் வீசித் தாக்குபவர்கள் எப்போதும் இருட்டிலிருந்து தாக்கி விட்டு ஓடி விடுவார்கள். ஆனால் இந்தத் தாக்குதல் நடந்த அன்றே பெத்தூரை சேர்ந்த மதி என்கிற மதியழகன் (50), மாசிலாமணி (60), செல்லப்பன் என்பவரது மகன் பிரசாந்த் (20), அன்பரசன் (18) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இப்போது கூட தாமதிக்கால், இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, கைது செய்யப்பட்டவர்களை விசாரித்தால் உண்மை அப்பட்டமாக வெளி வரும்.
இப்படி ராமதாஸின் நாடகத்துக்கு துணை போகும் அளவுக்கு அஸ்ரா கர்க் செயல்பட்டு வந்தார். தருமபுரி தொகுதியில் அதிமுக தோற்று, அன்புமணி வெற்றி பெற்றதால், ஜெயலலிதாவின் கவனம், தருமபுரி பக்கம் திரும்பியது. அங்கே என்ன நடக்கிறது என்பதை விசாரிக்கும்படி உளவுத்துறைக்கு உத்தரவிட்டதன் அடிப்படையிலேயே அஸ்ரா கர்க் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்.
தாம் கண்காணிக்கப்படுகிறோம் என்ற விபரம் தெரிந்ததும், அத்தனை விவகாரங்களையும் திசைத்திருப்ப, அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் விதமாக மிக மிக மோசமான ஒரு அயோக்கியத்தனத்தை அரங்கேற்றினார் அஸ்ரா கர்க். அது என்னவென்றால், தருமபுரி பகுதியில் மாவோயிஸ்டுகள் ஆயுதப் பயிற்சி எடுத்து வருகிறார்கள். அவர்கள் வன்னிய தலைவர்களை கொலை செய்யும் நோக்கத்தோடு ஆயுதப் பயிற்சி எடுத்து வருகிறார்கள் என்ற மற்றொரு நாடகத்தை அரங்கேற்றினார் அஸ்ரா கர்க்.
ஏழு பேர் ஆயுதங்களோடு கைது செய்யப்பட்டு மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் கைது செய்யப்படுகின்றனர். இந்தக் கைது நடந்த அன்றே மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிடுகிறார். அவர் தனது அறிக்கையில்
“தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியில் ஐயத்திற்கிடமான நடவடிக்கைகள் நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று அதிகாலை காவல்துறை நடத்திய ஆய்வில், பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த இளைஞர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகளும், ஆறு குழாய் வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டிருப்பதாக காவல்துறை கூறியுள்ளது. இது வழக்கமாக நடைபெறும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக தோன்றவில்லை. மாறாக தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள மிகப்பெரிய ஆபத்தின் தொடக்க முனை தர்மபுரியில் அம்பலமாகி இருப்பதாகவே தெரிகிறது. இக்கைது நடவடிக்கையின் பின்னணி பற்றி வெளியாகியுள்ள செய்திகள் தமிழகத்தின் எதிர்காலம் குறித்து அச்சமும், கவலையும், அளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. காதல் நாடகத் திருமணம் செய்து, தூண்டிவிட்ட சமூக விரோத கும்பலால் கைவிடப்பட்டதையடுத்து தற்கொலை செய்து கொண்ட நத்தம் காலனி இளவரசனின் முதலாண்டு நினைவு நாள் வரும் 4ம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது. அதே நாளில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியத் தலைவர்கள், வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் என பத்துக்கும் மேற்பட்டோரை படுகொலை செய்ய நத்தம் காலனியைச் சேர்ந்த சிலரும், அவர்களுக்கு பின்னணியாக செயல்பட்டு வரும் சக்திகளும் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதற்காக நத்தம் காலனியை சேர்ந்தவர்கள் உட்பட 30 பேரை ஒரு கும்பல் வெளிமாவட்டங்களுக்கு அழைத்துச் சென்று நக்சலைட்டுகள் மூலம் வன்முறை, கலவரம், துப்பாக்கிச்சூடு, குண்டு வெடிப்பு உள்ளிட்ட நாசகார செயல்களை செய்வதற்கான பயிற்சிகளை அளித்திருக்கிறது. பாமக மற்றும் வன்னிய சமுதாயத் தலைவர்களை கொலை செய்யும் நோக்குடன் துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள், குழாய் வெடி குண்டுகள் போன்றவற்றை கொண்டு வந்து நத்தம் காலனியில் பதுக்கி வைத்து விட்டு சதித் திட்டத்தை அரங்கேற்றுவதற்கான ஒத்திகைகளில் ஈடுபட்டிருந்த போது தான் சதிகாரர்களை காவல்துறை கண்டுபிடித்து கைது செய்திருக்கிறது. காவல்துறையின் இந்நடவடிக்கை பாராட்டத்தக்கது.”
கட்டுரையின் கடைசி வரியை கவனித்துப் பாருங்கள்.
“எதிர்க்கட்சியினர் மீது பொய்வழக்கு போடவும், அரசியல் பழிவாங்கலுக்கும் மட்டுமே பயன்படுத்துவதை விட்டுவிட்டு, சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கை சரிசெய்யும் பணியில் காவல்துறையை ஈடுபடுத்த வேண்டும்; இதன் மூலம் மக்கள் மனதில் நிலவும் அச்சத்தை தமிழக அரசு போக்கவேண்டும்” இது பிப்ரவரி 24 அன்று ராமதாஸ் காவல்துறை பற்றி வெளியிட்ட அறிக்கை.
“ஆட்சியாளர்களின் சட்டவிரோத உத்தரவுக்கு பணிந்து, மாவட்ட ஆட்சியர்கள் தங்களின் மனதை முழுமையாக செலுத்தாமல் எந்திரத்தனமாக கைது உத்தரவை பிறப்பிப்பதால் தான் தடுப்புக் காவல் சட்டங்களால் அப்பாவிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, தடுப்புக் காவல் சட்டங்களைப் பயன்படுத்தி அப்பாவிகள் கைது செய்யப்படுவதற்கு துணை போகும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தண்டிக்கும் வகையில் இந்த சட்டங்களில் உடனடியாக திருத்தம் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” இது 16 ஜுன் 2014 அன்று ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை.
நக்சலைட்டுகள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டது குறித்து, ராமதாஸ் வாயே திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர் கைது நடவடிக்கைகளாலும், சிறைவாசத்தாலும் காவல்துறையின் மீது கடுமையான கோபத்தில் உள்ள ராமதாஸ் காவல்துறையை பாராட்டுகிறார் என்றால், அது காவல்துறைக்கான பாராட்டு அல்ல. அஸ்ரா கர்குக்கான பாராட்டு
ஆறு நக்சலைட்டுகள் கைது குறித்து, அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்திய பேராசிரியர் மார்க்ஸ் அந்தக் கைதுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்.
காவல்துறையின் நடவடிக்கைகள் ஜோடிக்கப்பட்டவை என்று உறுதியாக கூறுகிறார். இது தொடர்பாக மார்க்ஸ் வெளியிட்ட அறிக்கையில் “கைது செய்யப்பட்டுள்ள முதல் ஆறு பேர்களும் ஜூன் 27 மதியம் 12 மணிமுதல் நள்ளிரவு வரை கைது செய்யப்பட்டு சித்திரவதையும் செய்யப்பட்டுள்ளனர். அதற்கு ஊர் மக்கள் நேரடி சாட்சிகளாக உள்ளனர். B1 நிலையத்தில் ஊர் மக்களுக்கும் காவல் துறைக்கும் விவாதம் நடந்துள்ளது. இது தொடர்பான உரையாடல்கள் செல்போன்கள் மூலமாக ஊர் மக்களுக்கும் எச்.பி அஸ்ரா கார்க் மற்றும் சி.பி.சி.ஐ.டி சிங்காரம் ஆகியோருடக்கும் இடையில் நடந்துள்ளது. இப்படி காவல்துறை கஸ்டடியில் இருந்தவர்கள் ஜூன் 28 காலை 5 மணிக்கு கையில் ஆயுதங்களுடன் பா.ம.க மதியழகனைக் கொல்லச் சென்ற போது நாய்க்கன்கொட்டாய்க்கு அருகில் பைக்கிலும் கந்தன் குட்டைக்கு அருகிலும் கைது செய்யப்பட்டனர் என்பது முற்றிலும் பொய்.
நத்தம் கிராமத்தில் தலித்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது எனில் எப்போது அது கைப்பற்றப்பட்டது? ஏன் பத்திரிகையாளர்கள் அப்போது அழைக்கப்படவில்லை? இது தொடர்பாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் கேள்வி எழுப்பியபோது இருட்டாக இருந்ததால் உங்களை அழைக்கவில்லை என்று எஸ்.பி பதிலளித்துள்ளார். இது ஒரு பதிலா? அப்படியானால் எந்த இரவு அது நடந்தது?
கடந்த பல மாதங்களாக அப் பகுதிக்கு தீவிரவாதிகள் வந்து செல்வதும் நத்தம் தலித் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி எடுப்பதும் காவல் துறைக்குத் தெரியுமெனில் ஏன் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் இளவரசன் நினைவு நாள் வரும் வரை காத்திருந்தனர்?
இளவரசன் சமாதிக்கு அருகில் கடந்த ஓராண்டாக சி.சி.டி.வி காமரா பொருத்தப்பட்டுள்ளது சமாதிக்கு வருபவர்களை மட்டுமின்றி ஊருக்குள் வந்து செல்பவர்களையும் அது படமெடுக்கும். ஆயுதப் பயிற்சி அளித்தவர்கள் வருகையை அது படம் எடுக்கவில்லையா? இளவரசன் சமாதி அருகில் ஆயுதத்தை துரை புதைத்து வைத்தார் என்றால் அதை சிசிடிவி படம் எடுக்கவில்லையா?
மெரீனாவிலிருந்து ஆறு கி.மீ தொலைவில் கடற்கரையில் ஒரு ஆயுதப் போராட்டக் குழு ஆயுதப் பயிற்சி எடுக்க முடியுமா? தருமபுரி காவல்துறை ஒரு வேளை மாநகரக் காவல்துறை மற்றும் இதர கண்காணிப்புத் துறைகளைக் கிண்டல் செய்கிறதா ?” என்று பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார் மார்க்ஸ்.
சரி. இத்தனை நாடகங்களையும் அஸ்ரா கர்க் அரங்கேற்ற வேண்டிய தேவை என்ன ? எதற்காக பல்வேறு நாடகங்களை தொடர்ந்து நடத்த வேண்டும் ?
இந்த இடத்தில் இன்டர்வெல். பாப்கார்ன் சாப்பிட்டு விட்டு வாருங்கள்.
சாப்பிட்டு விட்டீர்களா ? இப்போது கதையைத் தொடருவோம்.
கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில், சேலம் வினாயகா மிஷன் மருத்துவமனை மற்றும் எஸ்கேஎஸ் மருத்துவமனையில் பணியாற்றிய சிறுநீரக சிறப்பு மருத்துவர் வி.எம்.கணேசன் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டார்கள். இணைப்பு இந்த மருத்துவர் வி.எம்.கணேசன், வினாயகா மிஷன் மருத்துவமனையின் சிறந்த சிறுநீரக நிபுணர்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை சீர்திருத்த பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும், நடைமுறையில் ஏழைகளின் சிறுநீரகங்கள் விலைக்கு வாங்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. விநாயகா மருத்துவமனையிலும், எஸ்கேஎஸ் மருத்துவமனையிலும், இது போல பல்வேறு அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. இந்த அடிப்படையில், மருத்துவர் கணேசன் மற்றும் இடைத்தரகர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
கைது செய்யப்பட்ட மருத்துவர் கணேசன், அஸ்ரா கர்கின் உத்தரவின் பேரில், நையப் புடைக்கப்படுகிறார். காவல்துறை விநாயகா மருத்துவமனையிலும், எஸ்கேஎஸ் மருத்துவமனையிலும் சோதனைகள் நடத்துகிறது. அஸ்ரா கர்க், விநாயகா மருத்துவமனை நிர்வாகத்திடம், மருத்துவமனையை தடை செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்போவதாக மிரட்டுகிறார். நிர்வாகம் மிரண்டு போய் பணிகிறது. என்ன வேண்டுமானாலும் உங்களுக்கு செய்கிறோம் என்கிறது.
ஒன்னும் பெருசா வேண்டாம். என் மச்சினிச்சிக்கு விநாயகா கல்லூரியில் ஒரு எம்.டி சீட் வேண்டும் என்று கேட்கிறார். அதுவும் எம்.டி அனஸ்தீசியா. எம்.டி அனஸ்தீசியா சீட்டின் விலை என்ன தெரியுமா தோழர்களே…. ஒன்றே முக்கால் கோடி. ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சம். மருத்துவமனை சீல் வைக்கப்பட்டால், பிழைப்பை நடத்த முடியுமா ? வேறு வழியில்லாமல் அஸ்ரா கர்கின் மச்சினிச்சி கீர்த்தி ஸ்ரீ என்பவருக்கு எம்.டி அனஸ்தீசியா சீட் கல்லூரி நிர்வாகத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது.
சரி. மச்சினிச்சிக்கு சீட் வாங்கியாயிற்று. அவர் கல்லூரிக்கு பேருந்திலா சென்று வருவார் ? அஸ்ரா கர்க் மாவட்ட கண்காணிப்பாளராக இருக்கையில், அவர் எதற்கு பேருந்தில் செல்ல வேண்டும் ? மச்சினிச்சிக்கு இல்லாத அரசு வாகனம் எதுக்கு சார் ? இல்ல எதுக்குங்கறேன்…… இதை ஒரு குத்தமா உளவுத்துறை விசாரிக்கிறாங்க சார். என்ன அநியாயம் பாத்தீங்களா ?
அஸ்ரா கார்க் அரசு வாகனத்தை தன் மைத்துனிக்காக தினந்தோறும் துஷ்பிரயோகம் செய்கிறாரா என்பதை கண்டுபிடிப்பதற்காக, அந்த வாகனத்தின் ஓட்டுனரின் கால் ரெக்கார்டுகள் எடுக்கப்படுகின்றன. எந்த நேரத்தில் எந்த டவரில் ட்ரைவரின் செல் போன் இருந்திருக்கிறது என்று ஆராயப்படுகின்றன. வாகனம் எங்கே இருக்கும் ? காலையில் கல்லூரியில் இருக்கும். மீண்டும் கல்லூரி முடிந்ததும் அவரை அழைத்து செல்ல கல்லூரியில் இருக்கும். அந்த நேரம் போக, கீர்த்தி ஸ்ரீ நண்பர்களோடு, ஷாப்பிங் சென்றால், அந்த இடத்தில் இருக்கும். இதை ஒரு குத்தமா உளவுத்துறை விசாரிக்கிறதென்றால்…… நாட்டில் நீதி செத்துப் போச்சு சார் செத்துப் போச்சு.
தன் வாகன ஓட்டுனரின் கால் ரெக்கார்டுகள் பெறப்பட்டது, பிஎஸ்என்எல்லில் உள்ள சில கருப்பு ஆடுகளால், அஸ்ரா கர்குக்கு தெரியப்படுத்தப்படுகிறது. எங்கே தனது தவறுகள் தெரிந்து விடுமோ என்று முந்திக் கொண்டு, என் தொலைபேசியை உளவுத்துறை ஒட்டுக் கேட்கிறது என்று டிஜிபிக்கு புகார் அனுப்பியுள்ளார் அஸ்ரா கர்க். அதாவது, ஒரு நேர்மையான அதிகாரியின் தொலைபேசியை உளவுத்துறை ஒட்டுக் கேட்கிறதாம்….
மருத்துவரை மிரட்டி, மச்சினிச்சிக்கு ஒன்றே முக்கால் கோடி மதிப்பிலான முதுகலை மருத்துவ சீட்டை பெற்ற விவகாரமும், மைத்துனி அரசு வாகனத்தில் தினமும் கல்லூரிக்கு சென்ற விவகாரமும் விசாரிக்கப்பட்டு நாம் மாற்றப்பட்டால் என்ன செய்வது என்று முந்திக்கொண்டே அப்படியொரு புகாரை டிஜிபிக்கு அனுப்பியுள்ர் அஸ்ரா கர்க்.
இப்போது அஸ்ரா கர்க் அந்த இடத்திலிருந்து மாற்றப்பட்டால், என்ன பேசுவார்கள்…. ? ஒரு நேர்மையான அதிகாரியின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டதும் இல்லாமல், அவர் அதை எதிர்த்துக் கேட்டதால், அவரை மாறுதல் செய்து விட்டார்கள் என்ற கருத்து பரவுமா பரவாதா ? இதுதான் அஸ்ரா கர்கின் இந்தத் திட்டத்தின் பின்னணி.
சரி. டிஜிபிக்கு புகார் அனுப்பியாகி விட்டது. இப்போது இதை வெளியுலகுக்கு சொல்ல வேண்டாமா ? இந்த இடத்தில்தான் பிரபல லாபியிஸ்ட் சங்காராம் ஜாங்கிட் வருகிறார்.
டைம்ஸ் ஆப் இந்தியாவில் பணியாற்றும் ஜெயராஜ் சிவன் என்ற பத்திரிக்கையாளர் கிட்டத்தட்ட ஜாங்கிட்டின் கைக்கூலி போல செயல்படுபவர் என்பதும், இருவரும் ரியல் எஸ்டேட்டில் தொழில் கூட்டாளிகள் என்பதும் ஏற்கனவே சவுக்கில் வந்த பஞ்சாப் திருடன் என்ற கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. அந்த ஜெயராஜ் சிவன்தான் ஜாங்கிட் சொல்லியபடி இந்த செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியிட்டார். சோர்ஸ்கள் சொல்லியபடி செய்தி வெளியிட்டுள்ளாராம். அவரது சோர்ஸ் அவருக்கு மணப்பாக்கத்தில் வீட்டு மனை ஒதுக்கிய ஜாங்கிட்தான் என்பது ஊரறிந்த விஷயம்.
ஜெயராஜ் சிவன் சார். பேசாம பத்திரிக்கையாளர் பணியை ராஜினாமா செய்து விட்டு, ஜாங்கிட்டுக்கு ஆர்டர்லியா போயிடுங்க. உங்களுக்கு என்ன வேணுமோ அய்யா செஞ்சு குடுப்பாரு. இந்த மாதிரி செய்தி போட்றதுக்கு பதிலா, அய்யா கார் கதவை திறந்து விட்டு, அய்யா ஷுவுக்கு பாலீஷ் போட்டு, அய்யா மனம் கோணாம நடந்துக்கிட்டீங்கன்னா, மாசா மாசம் சீக்ரட் ஃபன்டுல இருந்து ரிவார்ட் குடுப்பாரு.
ஜாங்கிட்டுக்கு தற்போதைய டிஜிபி ராமானுஜம் மீது கடுமையான கோபம். மூன்று வருடங்களாக டக்கரடித்துப் பார்த்தும், கன்னியாக்குமரியில் இருந்து சென்னை வர முடியவில்லையே என்று கடுமையான கோபம். மற்றொரு புறம் சிபிஐ செல்ல விடாமல் தடுத்து, தன்னை பணி இடைநீக்கம் செய்ய காரணமாக இருந்து விட்டாரே என்று அர்ச்சனா ராமசுந்தரத்துக்கு ராமானுஜத்தின் மீது கோபம்.
அஸ்ரா கார்கின் பெயர், சிபிஐக்கு அயல் பணியில் செல்ல பரிந்துரைக்கப் பட்டு டெல்லியின் பரிசீலனையில் உள்ளது என்பது கூடுதல் தகவல். சிபிஐ கூடுதல் இயக்குநர் நியமனத்தில் அர்ச்சனா ராமசுந்தரம் என்ற பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டுமென்று ஒற்றைக் காலில் நிற்கும் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மற்றும் அர்ச்சனா ராமசுந்தரம் நெருக்கம் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆக, அர்ச்சனா ராமசுந்தரத்தின் பேச்சைக் கேட்டால், எப்படியும் நம்மை சிபிஐக்கு எடுத்துக் கொள்வதோடு, நாளை நமக்கு உயர் அதிகாரியாகவும் இருப்பார் என்பதால், இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு, டிஜிபி ராமானுஜத்துக்கு எதிராக என்னென்ன வேலைகள் செய்ய முடியுமோ, அத்தனை வேலைகளையும் செய்து வருகிறார் அஸ்ரா கர்க்.
எப்படியாவது சிபிஐக்குப் போய், ராஜபவனி செய்யலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார் அஸ்ரா கர்க். ராமானுஜம் மீது ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. ஆனால், அவர் பணம் வாங்கினார், மகனுக்கு சீட் வாங்கினார், ரகசிய நிதியை எடுத்துக் கொண்டார் என்று ஒருவரும் ஒரு குற்றச்சாட்டை சொல்ல முடியாது.
ராமானுஜம் உளவுத்துறையிலேயே ஊறியவர். அஸ்ரா கர்க் போன்ற பல அதிகாரிகளை தன் பணி நாளில் கண்டிருக்கிறார்.
அப்படிப்பட்ட அதிகாரியைப் பற்றி ஜாங்கிட் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவதூறு பேசி, புகார் கூறி, சிபிஐ சென்று விடலாம் என்று நினைக்கும் அஸ்ரா கர்க் அப்பாடக்கரரா இல்லையா ? நீங்களே சொல்லுங்கள்.
இவ்வளவு செய்திகளையும் யாருடைய தொலைபேசியை ஒட்டு கேட்டு தெரிந்துகொணாடது சவுக்கு. சங்கரன்களுக்குத்தான் தொலைபேசியை ஒட்டு கேட்பது ஒன்றும் புதிதில்லையே.
super
அப்பாடக்கரே தான். ஆமாம் அப்பாடக்கர்னா என்னா சவுக்கு ,
அது சரி..ஐ பீ எஸ் பாஸ் பண்ணி இது கூட பண்ணலணா, இவன் “அதுக்கு” சரிப்படமாட்டான் இன்னு, ஊரு உலகம் பேசும் பாஸ்.. இருந்தாலும், அறிங்கர் அண்ணா வின், ஒரு பேச்சு நினைவுக்கு வருகிற்து…ஆல் இன்டியா சர்வீஸ், தேவை இல்லை என்று சொன்னார்…அதுக்கு நம்ம ஊர் ஒபிசார் எல்லாம் யோக்கியம் என்று பொருள் இல்லை….
CT Selvam Kannil viralai vittu aati kondirupadhal ungalakku oru J
Kalakkitinga Savukku!!!
யாருப்பா இந்த புது பீசு, ஆடர்லி சிவன்?
சவுக்கு, ஜாங்கிட் ஒரு சாக்கடைன்னு ஊருக்கே தெரியும். ஆனா அஸ்ரா கர்க் பத்தி சொன்ன விஷயம் அவ்வளவு ஸ்ட்ராங்கா இல்லையே.. எனகென்னமோ இது சரியான செய்தின்னு தோனல..
ஆனா நீ எத எழுதுனாலும் கொஞ்சம்கூட யோசிக்காம சில பேர் அத நம்பி இங்க கமெண்ட் எழுதிடராங்கலோன்னு தோணுது.
interval and popcorn time….chance illa
சவுக்கு, நல்ல நெர்மாயான அதிகாரி யாராவது இருக்காங்களா தமிழ்நாட்டில?
எங்கேயோ இடிக்க்தே! அஷ்ரா ஜாண்கிட்டுக்கு நெருக்கம் நா, மதுரைல அழகிரிக்கு எதிரா ஏன் நடவடிக்கை எடுக்கணும்?
இத்தகைய கயவாளிகளா போய் சி.பி.ஐ யில் உட்கார்ந்து கொண்டால் அங்கு எப்பேர்பட்ட நடவடிக்கைகள் நடக்கும் ? நாடு விளங்கிடும்.
காவல்துறை தலைவருக்கு சாவுக்கும் போடும் “பாலிஷ் ” அருமையாக உள்ளது…நல்ல வருவீங்க
பாமக மற்றும் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் மேலிருக்கும் காழ்புணர்ச்சியை சாதிவெறி சவுக்குவின் இந்த கட்டுரை மிக தெளிவாக கட்டுகிறது. வன்னியர்களுக்கு ஆதரவாக காவல் துறை செயல்படுகின்றது என்றவுடன் சவுக்குவிர்க்கும் திரு.மார்க்ஸ் அவர்களுக்கும் “அரிக்க”தொடங்கிவிட்டது போல……
Eppadi .. Summa Kalakureenga,,,
Come, ye OOrkuruvi & Nanjunda moorthy, vomit your words here by strongly condemn Karunanidhi!