பொதுவாக, தமிழ்நாட்டுக்கென ஒரு ‘ட்ரென்ட்’ உண்டு. அது பத்திரிக்கையாளர்கள் மீதான புகார்களைப் பற்றி மூச்சு விடாதது. பத்திரிக்கையாளர்களைப் பற்றி வண்டி வண்டியாக புகார்கள் இருந்தாலும், அதைப் பற்றி எந்த பத்திரிக்கையும் எழுதாதாம். அதுதான் பத்திரிக்கை தர்மமாம். இந்த தர்மத்தை மூத்த பத்திரிக்கையாளர்களும் கடை பிடிப்பது, தமிழகத்தின் சாபக்கேடு.
ஊரில் உள்ள ஊழல்களையெல்லாம் எழுதுவார்களாம். ஆனால், அதை விட முடை நாற்றமெடுக்கும் இவர்களின் ஊழலைப் பற்றி யாரும் எழுதக் கூடாதாம். ஆனால், இது சவுக்கு அய்யா. சவுக்கு. சவுக்குக்கு இந்த பத்திரிக்கை தர்மமெல்லாம் பொருந்தாது. ஊழல் செய்தவர்கள் யாராயிருந்தாலும், அவர்களின் முகத்திரையை கிழிப்பதே சவுக்கின் வேலை.
சுவாமி நித்யானந்தா… …. தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும், அனைவராலும் உச்சரிக்கப் பட்ட ஒரு பெயர். தமிழ்நாட்டில் அனைத்துப் பிரச்சினைகளையும் பின்னுக்குத் தள்ளி ஏறக்குறைய ஒரு மாத காலத்துக்கும் மேலாக தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பெயர். இந்த பிரச்சினையில் நுழையும் முன், இந்தியாவின் ஆன்மீக வியாபாரத்தை புரிந்து கொள்வது அவசியம்.
இந்தியாவில் எப்போதுமே, ஆன்மீக வியாபாரத்துக்கு நல்ல மதிப்பு இருந்தே வந்திருக்கிறது. 99 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருந்ததன் மூலம், ஓஷோ, இந்தியாவின் ஆன்மீக வியாபாரத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
ஓஷோவின் கணக்கிலடங்காத சொத்துக்கள், இது எவ்வளவு பணம் புழங்கும் வியாபாரம் என்பதை உலகுக்கு உணர்த்தியது.
இவர் அளவுக்கு சம்பாதிக்க வில்லை என்றாலும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் “கிருஷ்ணமூர்த்தி பவுன்டேஷனும்“ பணம் புரளும் ஒரு ட்ரஸ்ட்தான்.
இவர்கள் இருவரின் மறைவுக்குப் பின் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப வந்தவர்கள் மூவர்.
ஒருவர் ஜக்கி வாசுதேவ். அடுத்தவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.
அடுத்தவர், இன்று கழன்ற டவுசரோடு (Caught with pants down) மாட்டிக் கொண்ட நித்யானந்தா.
இந்தியாவின் ஆன்மீக வியாபாரத்தை பங்கு போட்டுக் கொள்வதில் இந்த மூவருக்கும் தான் கடும் போட்டி. இவர்கள் மூவரைத் தவிர, மேல்மருவத்தூர் சாமியார் போன்றவர்கள் அல்லு சில்லுகள். இந்த மூவரைப் போல, வெளிநாட்டு பணத்தை வாங்கி பெரும் பணக்காரனாகும் வியாபார நுணுக்கம் தெரியாதவர்கள்.
இந்த மூவரும், தங்கள் வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்ள பகீரதப் பிரயத்தனங்களை செய்ய ஆரம்பித்தார்கள். ஒருவர் ஆனந்த விகடனில் தொடர் எழுதுவார். இன்னொருவர் குமுதத்தில் தொடர் எழுதுவார். ரவிசங்கர், இந்தியா டுடேவின் அட்டைப் படத்தில் வருவார்.
இது போக மின்னணு ஊடகங்களிலும் இடம் பிடிப்பதில் இவர்கள் மூவருக்கும் இடையே கடும போட்டி.
இந்த நிலையில் தான், நக்கீரன் பத்திரிக்கையில் 1993 94 ஆண்டுகளில் ஜக்கி வாசுதேவின் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியிடுகிறது. இந்த செய்தியை எழுதியவர் மகரன் என்ற நிருபர்.
இதற்கு அடுத்து அதே ஆண்டுகளில் நக்கீரன் ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்தில் கஞ்சா சரளமாக புழங்குகிறது என்று ஒரு செய்தி வருகிறது. இதையும் மகரன் என்ற நிருபரே எழுதுகிறார்.
1994-95ம் ஆண்டுகளில் ஜக்கி வாசுதேவின், மாஹே மற்றும் ஏணம் பகுதிகளில் உள்ள ஆசிரமங்களில் பெண் விவகாரங்களில் கலாச்சார சீரழிவு என்று மீண்டும் செய்தி வருகிறது.
இந்நிலையில், ஜக்கி வாசுதேவ், 1996-97ம் ஆண்டுகளில் நக்கீரன் காமராஜை அழைக்கிறார்.
அப்போது கோவை சென்று ஜக்கியை சந்திக்கும் காமராஜ், அந்த ஆசிரமத்திலேயே ஒரு மாதம் தங்குகிறார். இந்த கால கட்டத்தில், ஜக்கியின் தேனொழுகும் பேச்சில் மயங்கிய காமராஜ், ஜக்கியின் பரம சீடனாக உருவெடுக்கிறார். ஜக்கிக்காக தமிழ்நாட்டில் பல காரியங்களை செய்து கொடுக்கும் பரம பக்தனாக காமராஜ் மாறுகிறார்.
இதையடுத்து, ஜக்கியின் ஆசிரமத்துக்காக சொத்தக்களை வாங்கிக் குவிப்பதிலும், இது தொடர்பாக அரசு அலுவலகங்களில் வேலைகளை சுலபமாக்குவதிலும், காமராஜ் பெரும் பங்கு வகிக்கிறார்.
ஜக்கியை அழைத்து வந்து, சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் உள்ளே கருணாநிதி தலைமையில் மரம் நடும் விழா நடத்தப் பட்டது அல்லவா. அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்ததே காமராஜ் தான்.
தன்னுடைய குருவான ஜக்கி வாசுதேவை கருணாநிதிக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்ற முயற்சியை நிறைவேற்ற கருணாநிதியிடம் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தியே இந்த ஏற்பாடுகளை செய்தார்.
காமராஜின் மகன், கோவையில் உள்ள ஜக்கி வாசுதேவின் உறைவிடப் பள்ளியில் படித்து வருகிறான் என்பதும் குறிப்பிடத் தகுந்த தகவல்.
இந்த மூன்று சாமியார்களுக்குள் ஏற்கனவே இருந்த தொழில் போட்டியை தன்னுடைய போட்டியாக காமராஜ் கருதத் தொடங்கினார். இதையொட்டியே, காமராஜுக்கு, நித்யானந்தாவின் சீடர், லெனின் என்கிற தர்மானந்தாவின் பழக்கம் ஏற்படுகிறது. இந்த தர்மானந்தா, நித்யானந்தாவின் பெண் தொடர்புகள் பற்றி காமராஜிடம் கூறுகிறார். இருவரும் சேர்ந்து ஒரு பெரிய சதித் திட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
நித்யானந்தாவை சிக்கலில் மாட்டுவது போன்ற ஒரு வீடியோ படத்தை தயாரிக்கத் திட்டமிடுகின்றனர். லெனினுக்கு தொழில்நுட்பம் பற்றிய விபரங்கள் ஏதும் தெரியாது என்பதால், இதற்கான வீடியோ கேமரா மற்றும் இதர உபகரணங்களையும் காமராஜே வாங்கிக் கொடுக்கிறார். திட்டமிட்டபடி வீடியோ உபகரணம் உரிய இடத்தில் பொருத்தப் படுகிறது என்று ஆசிரம வட்டாரங்கள் கூறுகின்றன.
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல, நித்யானந்தாவோடு, நடிகை நெருக்கமாக இருக்கும் காட்சி பதிவாகிறது. இதைப் பார்த்த, காமராஜுக்கும், லெனினுக்கும் சாமியாரை மிரட்டி பணம் பறிக்கலாம் என்ற எண்ணம் வருகிறது.
இதையடுத்து, லெனினையே, நித்யானந்தாவோடு பேரம் பேச அனுப்புகிறார் காமராஜ். இவர்களின் பேரம் பல கோடி ரூபாய்களைக் கேட்கிறார்கள்.
நித்யானந்தாவோடு பேரம் தொடங்கியதும், நித்யானந்தா இந்த விவகாரத்தைப் பற்றி, சேலத்தில் உள்ள ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியிடம் ஆலோசனை கேட்கிறார். அந்த அதிகாரி, இது போல பணம் கொடுத்தால், இந்த ப்ளாக் மெயில் தொடரும் என்பதால், பணம் கொடுக்க மாட்டேன் என்று மறுக்க சொல்கிறார். அதன் படியே நித்யானந்தா பணம் கொடுக்க மறுக்க, இந்த வீடியோவை வெளியிடுவது என்று லெனினும் காமராஜும் முடிவெடுக்கின்றனர்.
அச்சு ஊடகங்களில் வந்தால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று காட்சி ஊடகங்களிலும் வர வேண்டும் என்று முடிவெடுக்கப் பட, காமராஜ் சன் டிவியுடன் பேரம் பேசி, இந்த வீடியோவுக்கான பிரத்யேக ஒளிபரப்பு உரிமைகளைத் தர, ஒரு தொகையை பெற்றுக் கொள்கிறார்.
இது போல வீடியோ ஒளிபரப்பப் படுகிறது என்ற தகவல் அறிந்த ஒரு மூத்த பத்திரிக்கையாளர் சன் டிவியின் செய்தி ஆசிரியரை தொடர்பு கொண்டு வீடியோ நகல் ஒன்று வேண்டும் என்று கேட்க, மொத்த கன்ட்ரோலும் நக்கீரனிடம் உள்ளது என்றும் எந்த நகலையும் யாருக்கும் தர உரிமை இல்லை என்று பதில் அளித்தது குறிப்பிடத் தக்கது.
இந்த வீடியோவை வெளியிட்டதால் நக்கீரன் உட்பட அனைவருக்கும் லாபம் தான். இது தொடர்பான செய்தி முதலில் வெளி வரும் நேரத்தில் நக்கீரனின் சர்குலேஷன் எவ்வளவு தெரியுமா ? வெறும் 60,000. இந்த நேரத்தில் வாரம் இருமுறை இதழாக இருக்கும் நக்கீரனை மீண்டும் வார இதழாக மாற்றலாமா என்ற ஆலோசனை நடக்கும் அளவுக்கு நிலைமை பரிதாபமாக இருந்தது. நித்யானந்தா கதைக்குப் பிறகு, நக்கீரனின் சர்குலேஷன் 1.5 லட்சத்தை தொட்டிருக்கிறது.
இந்த செய்தியை முதன் முதலில் வெளியிட்டு, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக, நக்கீரன் கவர் ஸ்டோரியாக, நித்யானந்தாவுக்கு சுய இன்பப் பழக்கம் உண்டு, நித்யானந்தா நீலப்படம் பார்ப்பார் என்று இந்தக் கதைகளையே வெளியிட்டு, சரோஜா தேவி கதைகளை மீண்டும், தமிழுக்கு கொண்டு வந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. நித்யானந்தா நக்கீரனை காப்பாற்றினார் என்றால் அது மிகையாகாது.
சென்னை காவல் துறையிடம் புகார் ஒன்னை கொடுத்த லெனின் என்கிற தர்மானந்தாவை எந்த பத்திரிக்கையாளரையும் சந்திக்க அனுமதி வழங்கப் படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
சென்னை மாநகர காவல்துறை இந்த விவகாரத்தை கையாண்ட விதம் ஒரு பெரிய தமாசு. முதலில் நாலு வழக்கறிஞர்கள் சென்று கமிஷனரிடம் புகார் கொடுக்கிறார்கள். உடனே நித்யானந்தா மேல் வழக்கு பதிவு செய்கிறார் கமிஷனர்.
இந்த ஆபாச வீடியோவை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி குழந்தைகளோடு டிவி பார்க்க விடாமல் நெருக்கடிக்கு உள்ளாக்கிய சன் டிவி மீதும், வாரமிருமுறை இதழாக சட்ட விரோதமாக விற்கப் படும் “போர்னோ“ பத்திரிக்கையான நக்கீரன் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பதிவுத் தபாலில், கல்யாணி என்ற வழக்கறிஞர் அனுப்பிய புகார் ஏன் கமிஷனர் ராஜேந்திரன் கண்ணுக்குத் தெரியவில்லை ?
ஏனென்றால், இது அத்தனையையும் ஆட்டி வைப்பது காமராஜ். அவர் சொன்னால் வழக்கு பதியப் படும். வேண்டாம் என்றால் மூடப்படும். முதலில் வழக்கு பதிவு செய்த சென்னை காவல்துறை, உடனடியாக வழக்கை பெங்களூருக்கு மாற்றம் செய்ததும் குறிப்பிடத் தக்கது. நித்யானந்தா கைது செய்யப் பட்டதும், ஒரு தனிப்படை பெங்களுர் சென்று நித்யானந்தாவை விசாரிக்கும் என்று கமிஷனர் ராஜேந்திரன் சொன்னது இன்னொரு தமாஷ்.
ஏற்கனவே மாற்றம் செய்யப் பட்ட வழக்கு தொடர்பாக எப்படி விசாரிக்க முடியும் ?
இந்த சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டை, நித்யானந்தா விவகாரத்தோடு முடிச்சு போட்டு கவர் ஸ்டோரி வெளியிட்டது.
பெரிய வியாபாரிகள் மூன்று பேரில் ஒருவரை ஒழித்துக் கட்டியாகி விட்டது. இன்னும் ஜக்கிக்கு போட்டியாக ஒருவன் இருக்கிறானல்லவா ?
அவனையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த கவர் ஸ்டோரி. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரமே, அந்த துப்பாக்கிச் சூடு, ரவிசங்கரை குறி வைத்து நடத்தப் பட்டதல்ல என்று பேட்டியளித்த பின்பும் கூட இந்த சம்பவங்கள் இரண்டையும் முடிச்சு போட்டு கவர் ஸ்டோரி வெளியிடப் படுகிறது என்றால் ஜக்கியை தூக்கிப் பிடிக்க காமராஜ் எடுக்கும் முயற்சியை பாருங்கள்.
இந்தியாவின் ஒரே ஆன்மீக வியாபாரியாக ஜக்கி வாசுதேவை, ஒரு Monopoly வியாபாரி ஆக்கிவிட்டார் காமராஜ் என்றால், அது மிகையாகாது.
எல்லாம் ஆன்மீகம் அய்யா ஆன்மீகம்.
jaggi-yuma ?. SAD
kalki ashrmam pattriyum athil iruppavargalin pothai palakkangalaaiyum video seithi veliyitta sun tvyil kalki asharmathin ” amma vijayam vilambaram ” vanthathe ithai pattri koora mudiyuma
Savuku, also tell what is happening behind “Jesus Calls” , their wealth , how muslim organizations are getting fund …..what is their long term agenda apart from converting India to a “Islamic State” etc etc……appo dhaan nee oru nadu nilayaana aal !!
saibaba patri en eluthavillai nanbare?
இஇல்லை.
அன்பு நண்பர் அருள் அவர்களே. நீங்கள் காமராஜுடன் இருபது ஆண்டுகளாக பழகி வருகிறேன் என்று கூறி விட்டு, சமீப காலமாகதத்தான் நக்கீரனைப் படிக்க ஆரம்பித்திருப்பதாக கூறியிருக்கிறீர்கள்.
நீங்கள் வழங்கியிருக்கும் தகவல்களை சவுக்கு முழுமையாக மறுக்கிறது.
இந்த பதிவிற்கு, காமராஜ், ஆதாரத்தோடு மறுப்பினை அனுப்புவாரேயானால், அதை பதிப்பிப்பதற்கு சவுக்கு தயங்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குமுதம் குழுமத்தில் உயர் மட்டம் வரை சவுக்குக்கு தொடர்புகள் உண்டு. இந்த தகவல் குமுதம் வட்டாரத்தால் முழுமையாக மறுக்கப் படுகிறது.
சவுக்குக்கு, யாருடைய தூண்டுதலும் இல்லை, மனப்புழுக்கமும் இல்லை என்பதையும் தங்கள் கவனத்திற்கு திட்டவட்டமாக சவுக்கு தெரிவித்துக் கொள்கிறது. காமராஜைப் பற்றி எழுத தூண்டி விட்டது, பத்திரிக்கையாளர்கள் என்றால், இந்தத் தளத்தில் தொடர்ந்து விமர்சிக்கப் பட்டுக் கொண்டிருக்கும், காவல்துறை அதிகாரிகளையும், கருணாநிதியையும் பற்றி எழுதத் தூண்டி விட்டது யார் ? சவுக்கு, இது போன்ற தூண்டுதல்களுக்கும், மனப்புழுக்கத்திற்கும் அப்பாற்பட்டது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் நண்பர் அருள் அவர்களே.
உங்கள் அருமை நண்பர் காமராஜ் மறுப்பு தெரிவிக்க விரும்பினால் jayajayakanthan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அவரது மறுப்பை அனுப்பலாம் நண்பரே.
காமராஜ் மீது குற்றம் சாட்டுவதில் எந்த உள்நோக்கமும் இல்லை.
காமராஜ் பற்றி நீங்கள் எழுதியிருப்பது குறித்து எனது கருத்தை பதிவுசெய்ய விரும்புகிறேன்.காமராஜுடன் இருபது ஆண்டுகளாக பழகிவருகிறேன்.அவர் நித்தியானந்தாவிடம் பணம்பறிக்க முயன்றார் என்பது மிகவும் தவறான உள்நோக்கமுள்ள குற்றச்சாட்டு.
பத்திரிகையாளர் போர்வையில் பல கேடிகளும் கிரிமினல்களும் வாழ்வை வழமாக ஒட்டிக்கொண்டிருக்க ஏதோ தூண்டுதலில் மனப்புழுக்கத்தில் இந்த மாதிரி கட்டுரைகளை வெளியிட்டு வருகிறீர்கள்.
நித்தியானந்தா விவகாரம் மட்டுமல்ல சமிப காலமாக பல செய்திகளை ஆதாரங்களோடு நக்கீரன் வெளியிட்டிருக்கிறது.அதன் பிறகுதான் நானே மனப்பூர்வமாக காமராஜை பாராட்டிவிட்டு நக்கீரன் படிக்க ஆரம்பித்தேன்.
அதே போன்று எந்த செய்தியானாலும் சன் டிவி தானே முந்தித் தருகிறது.சன்டிவி இந்த வீடியோ கிளிப்பிங்கை காமராஜிடம் காசு கொடுத்து வாங்கியது என்பதும் கட்டுக்கதை.இந்த வீடியோ காப்பிகள் குமுதம் அலுவலகத்திற்கு தான் முதலில் வழங்கப்பட்டது.ஆனால் நித்தியானந்தாவை வளர்த்ததே அவர்கள்தான் என்பதால் அதிர்ச்சியுடன் அவர்கள் நிராகரித்து விட்டார்கள்.
-அருள்
savukkil jaalra sabtham thaangavillai…all are fake and jealous articles…
JAKKI VASUDEV……..RAVISHANKAR………NITHYANANDA……BANGARU ADIGALAR…….NARAYANI AMMA…….MISC.KUTTI SAMIYAR UDPADA ANAIVARATHU MUGATHIRAIYUM KIZIYUM NAAL VEGU THOLAIVIL ILLAI. …….THOTTA.
நக்கீரன் தன்னுடைய பெயருக்கு ஏற்றாற் போல நடப்பது இல்லை என்பது உலகம் அறிந்த விஷயம்…
இந்த பத்திரிக்கை,
1. நடிகை ரோஜாவிற்க்கு எய்ட்ஸ் என்று எழுதியது
2. நடிகை நக்மா முன்னால் பிரதமர் நரசிம்மராவ் மகன் பிரபாகராவிடம் செக்ஸ் வைத்து கொண்டார் என்றும் அந்த நிகழ்வின் கேசட் செல்வி ஜெயலலிதாவிடம் உள்ளது என்று சொன்னது
3. நடிகை ஜோதிகா நடிகர் விக்ரமிடம் உறவு கொண்டார் என்று சொன்னது.
4. வீரப்பன் சொன்னதாக தானாக கட்டுரை எழுதியது.
5. திரு பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று இன்னமும் எழுதுகிறது.
எல்லாம் திமுக ஆட்சி இருக்கும் வரைதான்
பிறகு???
நக்கீரன் மாமா வேலை செய்வதில் நம்பர் ஒன்.தன் பத்திரிக்கை விற்கவேண்டும் என்று எப்போதும் பிரபலமான நடிகைகளின் பின்னால் சென்று அவர்கள் அந்தரங்க வாழ்க்கையில் மூக்கை நுழைப்பது, ஆளும் வர்க்கத்திற்கு ஜால்ர அடித்துக்கொண்டு தன் பிழைப்பை நடதிகொண்டிருக்கிறது.இதில் நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே என்று வசனம்.தமிழர்களுக்குள் இருக்கும் இதுபோன்ற புல்லுரிவகளை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு நன்றி. இதை தமிழச்சியின் பக்கத்தில் படித பின்பு இது வரை பல நண்பர்களுக்கு உங்கள் கட்டுரையை அறிமுகபடுத்தியுள்ளேன்.இது எல்லா தமிழர்களிடமு சென்றடையவேண்டும். வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க.
K. Hasan
savkkadi thodarattum
பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன் என்ற போர்வையில் சில புண்ணாக்கு புல்லுருவிகள்…..எந்த இலக்கணத்திற்கும் சேராத மூன்றாம் தர வியாபாரிகள்…! சவுக்கு சரியாகத்தான் சுழன்றிருக்கிறது. தொடர்ந்து சுழலட்டும்.
மூத்த பத்திரிகையாளர்கள் தான் ஊழலின் உறைவிடம். இளைஞர்கள் எவ்வளவோ பரவாவில்லை.
பத்திரிகை – அரசியல் – வணிக பிரமுகர்கள் இவர்கள்தான் செய்திகளை ‘தயாரிகிறார்கள்’ …!
சவுக்கு…. வர வர உன் சவுக்கு யாரையும் விட்டு வக்க மாட்டேங்குது.பாத்து சுழட்டுமையா.பலான பார்டிங்க மேல பலமா பட்டுரபோகுது.
…iniavan…
நக்கீரனுக்கு சரியான சவுக்கடி….
பட்டாசு கிளப்புங்கன்ணா
yean puttapurathi sai baba intha listla illa avanum oru fraud thaaney
இன்னும் பல உண்மைகள் வெளியில் வந்தால் நல்லது.
அடின்னா அடி சவுக்கடி! இதுபோன்ற செய்திகள் மக்களை சென்றடைய வேண்டும்! அப்போதுதான் என்ன நடக்கிறது என்று விழிப்புணர்வு வரும், பலரின் முகத்திரைகள் கிழிக்கப்படும்!
super story….. tell me how to crete this tybe of story
காடுகளையும், மலைகளையும் ஆக்கிரமிக்கும் – உயிரினப் பன்மயத்தை அழிக்கும் ஜகதீஷு(ஜக்கி)க்கு நக்கீரன் துணைபோவது சமூக விரோத செயலே.
ஊடகங்களை விமர்சிக்கும் தங்கள் பணி நடுநிலையுடன் சிறக்க வாழ்த்துகள்!
சிறப்பான கட்டுரை. வாழ்த்துக்கள். சதியோ, என்னவோ, இத்தகைய extra-constitutional மையங்கள் அம்பலப்படுத்தப்படவேண்டும். சரியாகச் செய்திருக்கிறீர்கள். உங்கள் பணி தொடரட்டும்.
அஜால் குஜால் மேட்டருக்குள் இவ்வளவு அல்மா குல்மா வேலைகளா ?
சவுக்கின் பதிவுகளில் சகலமும் வெளிவருவது வரவேற்கத்தக்கது
எல்லாம் சரி எழுதும்போது பார்த்து எழுதுங்கள் ..
//நித்யானந்தா ஏதாவது ஒரு பெண்ணோடு நெருக்கமாக இருக்கும் காட்சிகளை வீடியோவில் படமெடுக்கும் படி நித்யானந்தாவிடம் காமராஜ் கூறுகிறார்//
You forgot the great Sai Baba. Infact he is the richest among all.