பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்
பெரியதுரை என்னினுடல் வேர்ப்பான்
யாரானாலும் கொடுமை இழைப்பான் – துரை
இம்மென்றால் நாய்போல உழைப்பான்.
என்று பாரதி சொன்னது எத்தனை சத்தியமான வார்த்தைகள் ? இந்தப் பதிவு எந்த பார்ப்பானைப் பற்றித் தெரியுமா ? இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலராக உள்ள என்.சீனிவாசன் என்பவரைப் பற்றித் தான் ?
இந்திய சிமென்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருக்கும் இந்த என்.சீனிவாசனின் பேராசைப் பற்றித் தான் இன்று இப்பதிவு விவாதிக்கப் போகிறது.
இந்த என்.சீனிவாசன், தொடக்கம் முதலே, கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமாக அறியப் பட்டவர். ஜெயந்திரர் கைதின் பொழுது, அவரைக் காப்பாற்ற, சீனிவாசன் எடுத்த முயற்சிகள், வெற்றி பெறாமல் போனது. ஆனால், கருணாநிதி குடும்பத்துடன், எப்போதும் நெருக்கமாக அறியப்படுபவர் தான் இந்த என்.சீனிவாசன்.
சமீபத்தில் ஒலிபரப்பப் பட்ட தொலைபேசி உரையாடலின் போது, கனிமொழி சொன்னது போல், வெளிப்படையாக பேசுவது ஒன்று, உண்மை நிலை வேறு என்று சொன்னது, கனிமொழியின் தந்தைக்குத் தான் பொருந்தும். ஊருக்கு, பார்ப்பன எதிர்ப்பு, பெரியார் அரசியல், உள்ளுக்குள், பார்ப்பனர்களோடு கள்ள உறவு. இதுதான் கருணாநிதி.
சமீபத்தில், ஐபிஎல், சர்ச்சை எழுந்ததும், முதலில், கொச்சி அணி ஏலம் எடுத்ததில் சிக்கல் என்று இந்த பிரச்சினை தொடங்கியது. பிறகு, லலித் மோடி, இதில் ஏதோ விளையாடி விட்டார், ஏகப்பட்ட கருப்புப் பணத்தை சேர்த்துள்ளார் என்ற செய்தி வெளி வந்தது. பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஷஷாங்க் மனோகரும், செயலர் என்.சீனிவாசனும், கூட்டணி அமைத்து, லலித் மோடிக்கு எதிராக களம் இறங்கினர். திடீரென, லலித் மோடி எப்படி பிசிசிஐன் பெரிய எதிரியாகிப் போனார் என்பது அதிசயம். மோடி மீது நடவடிக்கை எடுக்கப் படுமா, படாதா என்ற சர்ச்சைகள் எழுந்து, விவாதிக்கப் பட்டுக் கொண்டிருந்த போதே, மனோகர், சீனிவாசன் அணி, லலித் மோடிக்கு எதிராக பேட்டி கொடுக்க ஆரம்பித்தது.
லலித் மோடி, ஒன்றும் சத்தியச் சந்திரன் இல்லை. பெரிய யோக்கியன் ஒன்றும் இல்லை. ஆனால், இத்தனை ஆண்டுகள், ஐபிஎல், 1, 2 எல்லாம் நடக்கும் போது, அமைதியாக இருந்த மனோகர், சீனிவாசன் கூட்டணி, இப்போது, திடீரென சீறி எழுந்ததற்கான காரணம் என்ன ? இந்த திடீர் கோபத்தில் சாதிய உள்ளீடுகள், இருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. (லலித் மாடி, கொஞ்சம் கருப்பா வேற இருக்கார்)
லலித் மோடி மீது எழுந்த முக்கிய குற்றச் சாட்டு, “முரண் விருப்பம்“ (Conflict of interest). அதாவது, கொச்சி அணியிலும், இதர அணிகளிலும், மோடிக்கும், அவர் உறவினர்களுக்கும் பங்குகள் உள்ளன என்பது.
இந்தக் குற்றச் சாட்டை முகத்தளவில் (face value) எடுத்துக் கொண்டால் கூட இதில் மோடியை விட, மோசமான குற்றத்தை புரிந்தவர் என்.சீனிவாசன். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர், என் சீனிவாசன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதலாளி, என்.சீனிவாசன். இந்திய செஸ் பெடரேஷனின் தலைவர் என்.சீனிவாசன்.
லலித் மோடி செய்வது முரண் விருப்பமென்றால், சீனிவாசனின் நடவடிக்கைகளுக்கு என்ன பதில் ?
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மிக மிக அயோக்கியத்தனமான ஒரு அமைப்பு. இதற்கு வசதியான போது, பொதுத்துறை நிறுவனம் என்று அழைத்துக் கொள்ளும். வசதி இல்லாத போது, தனியார் நிறுவனம் என்று அழைத்துக் கொள்ளும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, பிசிசிஐ டம் கேள்வி கேட்டால், தனியார் நிறுவனம் என்று கூறிக் கொள்ளும். மத்திய அரசிடம் வரி விலக்கு கேட்க வேண்டும் என்றால் மட்டும், பொதுத் துறை நிறுவனம் என்று கூறிக் கொள்ளும்.
இப்படிப் பட்ட ஒரு அதி பயங்கரமான ஊழல் நடப்பதை, பல ஆண்டுகளாக இந்த ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் இருந்ததற்கு காரணமே, இந்த விளையாட்டினால், ஊடகங்கள் அடையும் கொள்ளை லாபம் தான். இந்த லாபங்களினால், ஊடகங்கள், இதில் நடைபெறும் ஊழலை கண்டு கொள்ள வில்லை.
இந்த ஊழலை வெளிக் கொண்டு வந்ததில், சசி தரூருக்கு, பெரிய பங்கு உண்டு. இவ்விவகாரத்தில், சசி தரூர் மட்டும் சிக்கவில்லை என்றால், இந்த விவகாரம், இத்தனை தூரத்திற்கு வெளியில் வந்திருக்காது.
தற்பொழுது, பல்கேரியா நாட்டில், சதுரங்க போட்டிக்கான, ஆனந்த் டோபலோவ், போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தங்கள் நாட்டில் நடத்துவதற்கு பல்கேரியா நாடு செலவிட்ட தொகை 13 கோடி. விஸ்வநாதன் ஆனந்துக்கு, இந்தப் போட்டியை இந்தியாவில் நடத்த விருப்பம். ஆனால், “காசேதான் கடவுளடா“ இல்லையா ? ஸ்பான்சர்கள் கிடைக்காத காரணத்தால், இப்போட்டி, பல்கேரியா நாட்டுக்கு சென்றது.
என்.சீனிவாசன், சதுரங்க பெடரேஷனின் தலைவராக பொறுப்பேற்ற பிறகுதான், சதுரங்க பெடரேஷன், இப்படிப் பட்ட சரிவைச் சந்திருக்காது என்று கூறுகிறார்கள். 2009 அன்று உள்ளபடி, வரிக்கு பிந்தைய இந்தியா சிமென்ட்சின் வருமானம் எவ்வளவு தெரியுமா 511 கோடி. இந்த சதுரங்கப் போட்டிக்கான ஸ்பான்சராக இந்தியா சிமென்ட்சே பொறுப்பேற்றிருந்தால், 13 கோடி என்பது ஒரு பெரிய விஷயமல்ல. மேலும், இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெற்றிருப்பது, சதுரங்க விளையாட்டுக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருந்திருக்கும்.
ஆனால், என்.சீனிவாசன், சதுரங்க பெடரோஷனின் தலைவராக பொறுப்பேற்ற பிறகுதான், இந்த பெடரேஷன் இப்படிப் பட்ட ஒரு சரிவை சந்தித்தது என்று தெரிகிறது.
அடுத்து, இந்தியாவின் ஸ்குவாஷ் பெடரேஷனின் தலைவர் யார் தெரியுமா ? என்.சீனிவாசனின் சகோதரர், என்.ராமச்சந்திரன். இந்திய விளையாட்டு அமைச்சகத்தின் அங்ககாரம் பெற்ற அமைப்பாக இருப்பதால், இந்த பெடரேஷனுக்கு வரும் நிதி அத்தனையையும் நிர்வாகம் செய்யும் பொறுப்பு என் ராமச்சந்திரனுக்குத் தான்.
இப்போது ஒரு நம்பிக்கை கீற்றாக, உச்ச நீதிமன்றம், விளையாட்டை வைத்து, பணம் சம்பாதித்து, தற்போது சம்பாதிக்க இயலாமல், உள்ள இன்னொரு பண முதலை, ஏ.சி.முத்தையா தொடர்ந்த வழக்கில், என்.சீனிவாசனுக்கும், பிசிசிஐக்கும், நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இப்போது சொல்லுங்கள்.
பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்
பெரியதுரை என்னினுடல் வேர்ப்பான்
யாரானாலும் கொடுமை இழைப்பான் – துரை
இம்மென்றால் நாய்போல உழைப்பான்.
பாரதியின் இந்தப் பாட்டு சரிதானே ?
In South Asia Cricket become MAFIA GAME because of Dawood
In India ventha vaayaan Pawar , dalmia , seenu mama etc are sub agent of D
ஒரு மனிதன் செய்யும் தவறுகளை வித்து அவர் இனத்தையே குற்ரம் சொல்வது சேரி இல்லை. ஆண்டிமுத்து ராஜா செய்த ஊழலை வித்து எல்லா தளித்ஹுகளும் பேராசைக்காரர்கள் என்று கூற முடியுமா? கலைஞர் ஊழல் செய்யவில்லையா? அப்படியென்றால் திராவிடர்கள் அனைவரும் பேராசைக்காரர்கள?
என்ன சார் இது? ஊழல் யார் செய்தாலும் ஊழல் தான். ஜாதி ஒரு கவசமாக பயன்படும் வரை நம் நாடு உருப்படவே படாது.
ஏழை தமிழன்…
சரியான சவுக்கடி சார்…
பேராசைக்கார பார்ப்பனர்களுடன், அல்லாதோர் பலரும் கைகோர்த்திருக்கும் அவலத்தை உணர மறுப்பதால்தான் இன்று பெரும்பான்மை சமூகத்தை கருணாநிதி-வீரமணி கும்பல் சுரண்டிப் பிழைக்கமுடிகிறது.
உங்கள் பெயர் மிக நன்றாக இருக்கிறது அம்பி. நன்றி.
பவர் புரோக்கர் நீரா ராடியா – ஜூவி ரிப்போர்ட்
ராசா – நீரா ராடியா உரையாடல் . இது எல்லாம் ஏன் இப்ப இப்ப வரனும்? ராசா – கனிமொழி-கருணாநிதி அவாளுக்கு வேண்டாதவா. தலித் – பிற்படுத்தப்பட்டோர் – இவாளும் அவாளுக்கு வேண்டாதவா. இது எல்லாம் ஏன் இப்ப இப்ப வரனும்?
சசி தரூர் – ஊழல் மன்னன் சீனிவாசன் – மோடி செய்தியை பின்னுக்கு தள்ளனும். அப்புறம் கேதன் தேசாய் –1500 கிலோ தங்கம் 1800 கோடி பணம் லஞ்சம்—-எல்லாம் அவா கூட்டம்.
இந்த அவாளுடைய மோசடியை தலைப்பு செய்திகளில் இருந்து மறைக்க. அதுக்கு CBI அகர்வால் மூலமாக இந்த சமயத்தில் ராசா – நீரா ராடியா உரையாடல் செய்தி…..
நேக்கு நன்னா தீயற நாத்தம் வருதுன்னா? நோக்கு???
yes.till last parppan lives in tamilnadu,no life for tamil community:eradicate braminism!
endha parppan un sothula mannai pottan. Kenayan madiri pesada. adiga alavula parppan nalla level la irukkan (naermaya) athellam theriyadhu. Inge Savukku veliyittiruppadum thavaru. Adhe Bharathi oru parppan than. Avar jaadhigal illayadi paappa nu padiyirukkar. adhai mattum vasadiya marandhudunga. Ippadiye aduthavana pidichu thallina avan munneruvaan nee angeye thaan nippa.