அனாதைகளுக்கும், செம்மொழி மாநாட்டுக்கும் என்ன தொடர்பு ?
இருக்கிறது.
இந்த ஆண்டு நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை எப்படியாவது வெற்றி பெற்றதாக காட்ட வேண்டும் என்று கருணாநிதி கடும் முனைப்பு காட்டி வருகிறார் என்பது குழந்தைக்குக் கூட தெரியும்.
இந்த மாநாட்டை நடத்தி விடுவதன் மூலம் தமிழினத்தின் மத்தியில் தனக்கு கிடைத்திருக்கும் “துரோகி“ என்ற பட்டம் அழிக்கப் படும் என்ற கருணாநிதியின் நம்பிக்கையே இந்த மாநாட்டில் அவர் காட்டும் அதி தீவிர முனைப்புக்கு காரணம்.
இம்மாநாடு அறிவிப்பு வெளியான நாள் முதலே குளறுபடிதான். முதலில் உலகத்தமிழ் மாநாடாக அறிவிக்கப் பட்டிருந்தது. உலகத் தமிழ் மாநாடு நடத்த ஒப்புதல் கொடுக்க வேண்டியவரான நொபொரு கரோஷிமா ஒப்புதல் வழங்கவில்லை என்பதால், உலகத்தமிழ் மாநாடு, செம்மொழி மாநாடு ஆயிற்று.
ஜனவரியில் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டிருந்த, மாநாடு 6 மாதங்கள் தள்ளி வைக்கப் பட்டது.
அடுத்த சர்ச்சை, ஈழத் தமிழ் அறிஞர் சிவத்தம்பியின் பங்கேற்பு பற்றியது. சிவத்தம்பி பங்கேற்கப் போவதில்லை என்று பத்திரிக்கைகளில் வெளிவந்த அறிவிப்பினை அடுத்து, கடும் கோபம் அடைந்த கருணாநிதி, தனது உளவுத்துறையை முடுக்கி விட்டு, சிவத்தம்பி வாயாலேயே தான் கலந்து கொள்கிறேன் என்று சொல்ல வைத்தார்.
அதற்கு அடுத்த நாட்களிலெல்லாம் தொடர்ந்து செம்மொழி மாநாடு பற்றி விளக்கமாக அறிக்கைகளும் கடிதங்களும் வெளியிட்டு வந்தார் கருணாநிதி.
செம்மொழி மாநாட்டில் யாரும் கலந்து கொள்ளாமல் இருக்கக் கூடாது என்று அடுத்த முகாரியாக செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு அரசியலில் இருந்து ஓய்வு என்று அறிவித்தார்.
2001ல் நடந்த தேர்தலிலும், 2006ல் நடந்த தேர்தலிலும் இதுதான் எனது கடைசித் தேர்தல் என்ற கருணாநிதியின் அறிவிப்புக்கு என்ன கதி நேர்ந்ததோ அதே கதிதான் இந்த அறிவிப்புக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்ரமாதித்யன் போல, “ஓய்வு அறிவிப்பை“ விடாப்பிடியாக பிடித்துக் கொண்டுள்ளார் கருணாநிதி.
இம்மாநாட்டில் கலந்து கொள்ள உலகெங்கும் உள்ள தமிழாய்ந்த அறிஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு முன் பதிவு செய்து வருகிறார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டு மாநாடு அமோகமாக நடக்கப் போகிறது என்ற மாயையை ஏற்படுத்த முனைப்பாக இருக்கும் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பு தான் வியாழனன்று மாநாட்டில் பங்கேற்க 30.12.2009 வரை 1244 அறிஞர்கள் முன் பதிவு செய்திருக்கிறார்கள் என்ற அறிவிப்பு.
இந்த அறிவிப்பில் விசித்திரம் என்னவென்றால் உலகெங்கும் இருந்து வெப்சைட் மூலமாகவும், ஈமெயில் மூலமாகவும், தபால் மூலமாகவும் 1244 பேர் முன் பதிவு செய்திருக்கிறார்களாம்.
இந்த அறிவிப்பில் வெளிநாட்டவர் 188 பேர் என்பதோடு, “நாடு தெரியாதோர்“ என்று 4 பேர் முன் பதிவு செய்திருப்பதாக அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. எந்த நாடு என்றே தெரியாமல், மாநாட்டில் முன்பதிவு செய்தால் அதை ஏற்றுக் கொண்டு அதை அறிவிப்பாகவும் வெளியிடும் கருணாநிதிக்கு மறை கழன்று விட்டதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
சாதாரணமாக ரயில்வே முன் பதிவு படிவத்தில் கூட ஏதாவது ஒன்றை சரியாக பூர்த்தி செய்யாமல் விட்டால் படிவம் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது. ஒரு உலகத் தமிழ் மாநாட்டுக்கு பங்கேற்கப் போகும் ஒரு நபர் எந்த நாடு என்றே குறிப்பிடாமல் விண்ணப்பம் அளித்தால், அதையும் ஏற்றுக் கொண்டு அறிவிப்பாக வெளியிடுவதில் இருந்து கருணாநிதியின் desperation நன்கு தெரிகிறது.
நடக்கப் போவது தமிழ்ச் செம்மொழி மாநாடு தானே ? ஆங்கில மாநாடு அல்லவே ?
வெப்சைட்டுக்கு இணையத்தளம் என்ற தமிழ்ச் சொல் இருப்பது தமிழாய்ந்த அறிஞருக்கு தெரியாதா ? ஈமெயிலுக்கு மின்னஞ்சல் என்ற அழகான தமிழ்ச்சொல் இருப்பது மாநாடு நடத்துபவருக்கு தெரியாதா ?
இணையத்தில் பார்த்தால், புலம் பெயர்ந்த தமிழர்களும், பதிவர்களும், அழகான தமிழ்ச் சொற்களை பயன்படுத்துவது தெரிந்திருக்குமே ?
அஞ்சல் என்ற அழகுத் தமிழ் சொல்லிருக்க தபால் என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்திருப்பது “கனியிருப்ப காய் கவர்வது தானே”
நடக்கப் போகும் செம்மொழி மாநாட்டால் மக்கள் பணம் பல கோடிகள் செலவாவது தவிர வேறு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
Dear Savukku, I heard that the Ex SP Prem Kumar who arrested the Kanchi Sankarachariyar is suffering from severe kidny disease and two of his Inspectors have become handicapped. Please investigate this story and publish the same.
அட அதை விட்டு தள்ளுங்கள் தோழரே… இதை கவனியுங்கள்..
//தாத்தாவின் செம்மொழி மாநாடும்… பேரனின் ‘குவாட்டர் கட்டிங்’கும்! //
தமிழ்ப் படம் என்ற பெயரில் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகையும் துவைத்து தோரணம் கட்டியிருக்கும் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி, அடுத்து தயாரிக்கும் இன்னொரு படத்துக்குப் பெயர் என்ன தெரியுமா?. சுத்தமான ‘தமிழ்’ப் பெயர் – குவாட்டர் கட்டிங்!!
இது தமிழ்ப் பெயரா… என்ற ஆராய்ச்சியெல்லாம் அப்புறம்… முதலில் விஷயத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த குவாட்டர் கட்டிங்கை தயாநிதி நேரடியாகத் தயாரிக்கவில்லை. தமிழ்ப் படம் என்ற படத்தை எப்படி சிஎஸ் அமுதன் அண்ட் கோவின் ‘வொய் நாட்’ என்ற கம்பெனி தயாரித்து பின்னர் தயாநிதியின் க்ளௌட் நைனுக்கு விற்றதோ, அதே பாணியில்தான், குவாட்டர் கட்டிங்கும் தயாராகிறதாம்.
இந்தப் படத்திலும் ஹீரோ அதே மிர்ச்சி சிவா-தான்.
சத்தமில்லாமல்… அதே நேரம் வேகவேகமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.
தமிழ் தலைப்புதானா இது?
‘இந்த தலைப்பு மற்றும் வரி பிரச்சினை பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை… காரணம் குவாட்டர், கட்டிங் என்பதெல்லாம் வழக்குச் சொல்லில் வந்துவிடும்’ என்கிறார்கள் கூலாக.
செம்மொழி மாநாடு நடக்கும் நேரமாகப் பார்த்து இந்த ‘கட்டிங்’கை விடுவார்களோ, என்னமோ தெரியவில்லை.
ஆஹா, தமிழுக்கு குவார்ட்டர், கட்டிங் என இரண்டு புதிய வார்த்தைகள் நல்வரவாக வந்திருக்கின்றன. சந்தோஷப்பட வேண்டிய சமாச்சாரமல்லவா!
தமிழன் ரசனையை என்னமாய் புரிந்து வைத்திருக்கிறார்கள்!
நன்றி தட்சுதமிழ்
Karunanidhi-ku savukku adi super….This guy wont let Tamil peoples to improve. He wanst to keep them fool allways. He should be evacuvated in from TAMIL peoples.
மூஞ்சியிலே அடிச்சமாறி இருக்கு உங்க பதிவு..
உண்மையப் பட்டவர்த்தனமா சொல்றீங்க..
தொடரட்டும் உங்கள் பணி..இதையெல்லாம் பார்த்து கொஞ்சப்பேராவது திருந்தட்டும்…