ஜனநாயகத்தைக் காக்க வாருங்கள் பதிவர்களே !

You may also like...

12 Responses

 1. Sundar says:

  சன் டிவி செய்தியின் ஜனநாயக கோயபல்ஸ் புலம்பல் வாசிப்பது கே டி பிரதர்ஸ்

 2. ஆனந்த்.க says:

  இனியவன் December 28, 2009 at 9:44 pm
  சவுக்கில் வந்த கட்டுரைகளிலேயே இதுதான் டாப் 1 கட்டுரை. வாழ்த்துக்கள்.உங்கள் கோரிக்கையை ஏற்று பின்னி பெடலேடுக்குறோம் கவலைபடாதீங்க
  இவரை போன்ற பதிவர்கள் என்ன செய்திகள் தந்தார்கள். ஊழலை வெளிபடுதினார்களா? குறைந்தபட்சம் அவர்கள் ஊரில் நடக்கும் உள்ளாட்சி நிரவாகத்தில் நடக்கும் ஊழல், mlm என்ற பெயரில் நடக்கும் ஊழல் ஆகியவற்றை எழுதினார்களா?
  துக்ளக் என்று ஒரு பத்திரிக்கை இருபதாக சவுக்கு கருதவில்லை.அது பார்பனர்கள் பத்திரிக்கை என்று அதை பத்திரிகையாகவே கருதவில்லை என நினைக்கிறேன்.

 3. Anonymous says:

  பொய் முகம்- புலம்பல் ஜனநாயகத்தை காப்பாற்றாது

  நானும் ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் பத்திரிகைகளின் தற்காலப் போக்கு குறித்து இதைவிட மிக கடுமையான விமர்சன கருத்துகள் உண்டு.

  ஆனால், உலகமயமாக்கலுக்கு பிறகு பத்திரிகை நடத்துவது அந்தந்த முதலாளிகளின் லாப நோக்கமாக மாறிவிட்டது.

  உலகின் இப்போதைய பொருளாதார சூழலில் பத்திரிகை நடத்துவது சமூக சேவை அல்ல, தொழில் என்ற கருத்து பல்வேறு நிலைகளில் வலுபெற்றுவிட்டது. இத்தகைய சூழலில் கொள்கை பிடிப்புடன் போராடிவரும் ஏழை பத்திரிகையாளர்களை தவிர்த்து மற்றவர்களிடம் சமூக பொறுப்பையும், ஜனநாயகத்தை காப்பாற்றும் செயல்பாடுகளையும் எதிர்பார்ப்பது எப்படி சரியக இருக்கும் என்பதே என் கேள்வி.

  அடுத்து பதிவுலகம் ஜனநாயகத்தை காப்பாற்றும் என்ற சவுக்காரின் கருத்து அறியாமை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

  நானும் ஒரு பதிவாளர் என்பதைவிட ஏராளமான பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருபவன் என்ற முறையில் கூறுவதென்றால், சவுக்கு உள்பட எத்தனை பதிவர்கள் தங்கள் உண்மை முகத்துடன் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

  பெரும்பாலான பதிவர்கள் சுதந்திரமாக தங்கள் கருத்துகளை வெளியிட பதிவுலகத்தை பயன்படுத்தினாலும், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கள் உண்மை முகத்தை மறைத்தே பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

  பதிவுலகம் வெளியார் தலையீடு இன்றி கருத்துகளை வெளியிட ஒரு நல்ல ஊடகமாக இருக்கிறது என்பது சரி. ஆனால், அது ஜனநாயகத்தை காப்பாற்ற எந்த விதத்திலும் உதவாது.

  அரசை கடுமையாக சாடி கருத்துகளை வெளியிடும் பதிவர்கள் ஓரிருவரை சைபர் கிரைம் சட்டத்தின் ஏதாவது சில பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைத்தால் எத்தனை பதிவர்கள் சாலையில் இறங்கி போராடுவார்கள்

  எனவே, சவுக்கார் தனது கருத்தை மறு ஆய்வு செய்து காலத்துக்கு ஏற்ப நடைபோட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

  • ஆனந்த்.க says:

   பத்திரிகைகள் போன்று எளிதாக எல்லோரும் பதிவு உலகை படிப்பதில்லை. இணைய வசதி, கணணி தேவை என்பதால் எல்லோரும் படிபதில்லை. எங்கள் வீட்டில் என்னை தவிர யாரும் பதிவுகளை படிபதில்லை. என் தாய்,தந்தை ஒரு நாளும் கணினியில் படிபதில்லை.இருவரும் அரசு வேலை மருத்துவர்,ஆசரியர் என செய்தவர்கள்.ஆனாலும் இணையவசதி பற்றி நாட்டம் இல்லாதவர்கள்.

 4. சவுக்கில் வந்த கட்டுரைகளிலேயே இதுதான் டாப் 1 கட்டுரை. வாழ்த்துக்கள்.உங்கள் கோரிக்கையை ஏற்று பின்னி பெடலேடுக்குறோம் கவலைபடாதீங்க

 5. vasan says:

  Very bold, daring and the realistic article. The very needed one at THIS current period (NOW or NEVER). YOUR alarm will awake the RIGHT one to DO the RIGHT writting at the RIGHT place.You have belled the cat, it is now others to be aware of the guilty cat. I keep watching every day your investigative writtings. Good & tough work.
  M.S.Vasan

 6. நன்றி நண்பர் ஜேம்ஸ்பாண்ட் அவர்களே. ஒன்று மட்டும் உறுதியாக கூறுகிறேன் உளவுத்துறை நுழையவில்லை. உளவுத்துறையின் முகத்திரையையும் கிழிக்கும் தளம் தான் இது. பெயரை ஜேம்ஸ்பாண்ட் என்று வைத்துக் கொண்டு, உளவுத் துறையைப் பற்றி அஞ்சலாமா ?

 7. நண்பர் மாசிலன் அவர்களே. பெயருக்கேற்றார்போல, நீங்கள் மாசு இலன் தான். வெளிப்படையாக உங்கள் ஐயத்தையும் வெளியிட்டு இருக்கிறீர்கள். நண்பரே, அதிகாரத்தையும், போலீசையும் கையில் வைத்திருக்கும் ஆளுங்கட்சியை விமர்சிப்பது தான், வீரம், நியாயம். அதிகாரம் இல்லாமல் பல் பிடுங்கப் பட்ட பாம்பாக இருக்கும் எதிர்க்கட்சியை விமர்சிப்பது இப்போதைய தேவை கிடையாது. மேலும், எதிர்க்கட்சிகளுக்கு, பத்திரிக்கைகளை கட்டுப்படுத்தும் அதிகார வரம்பு கிடையாது. அதனால்தான் ஆளுங்கட்சியைப் பற்றிய விமர்சனம்.

 8. ஜேம்ஸ் பாண்ட் 007 says:

  அப்பப்ப ஏடாகூடமா பதிவு போட்டு எங்களை கலாய்க்கும் நீங்கள் யார் அய்யா?

  சில பதிவுகள் ரொம்ப சூடா இருக்கு!

  சில பதிவுகள் ரொம்ப விவகாரமா இருக்கு!

  சில பதிவுகள் ரொம்ப டர்ரியலா இருக்கு!

  படிச்சாலும் கமெண்ட் போட முடியலை.

  கமென்ட் போட்டா வீட்டுக்கு ஆட்டோ வருமா? இல்லை போலீஸ் வருமான்னு தெரியலை?

  என்ன செய்யறதுன்னு தெரியலையே!

  ஐயய்யோ என்ன செய்யறதுன்னு தெரியலையே!!

  போலிஸைபத்தியும் நிறையா உள்விவகாரங்கள் வருது. ஒருவேளை உளவுத்துறை இங்கயும் நுழைஞ்சிடுச்சா!!!!??????????????

 9. மாசிலன் says:

  இது ஒரு நல்ல பதிவுதான், இருந்தாலும் என் சின்ன மனதிற்குள் ஏதோ ஒன்று இடிப்பது போல் தெரிகிறது. பதிவு முழுதும் கருணாநிதையை தாக்கும் நீங்கள் நீங்கள் எதிர்கட்சியை சார்ந்தவரா?

  எது எப்படியோ, மக்களாட்சி நிலைக்க உங்களது அனைத்து கருத்துக்களுடனும் ஒத்துப்போகிறேன். அதற்காக ஒரே கட்சியை மட்டும் குறைகூறி பிழைப்பு நடத்தவும் கூடாது.

  நன்றி

 10. நானும் ஒரு பத்திரிக்கையாளன் என்ற போதிலும் உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்.பதிவர்கள் பொருப்போடு இருந்தால் நிறையை சாதிக்கலாம்.
  அன்புடன்..சைபர்சிம்மன்

 11. மேலை நாடுகளில் ஊடகங்களை கண்காணிப்பதற்காகவே மீடியா வாட்ச் (Media Watch) நிறுவனங்கள் உள்ளன. சில நாடுகளில் இந்த அமைப்புக்கு பிரஸ் கவுன்சிலுக்கு சமமான அந்தஸ்தும் உண்டு.

  இந்தியாவில் இதுபோன்ற அமைப்புகள் இன்றைய காலத்தின் கட்டாயம். ஆனால் இந்த விழிப்புணர்வு வாசகர்களிடம், பார்வையாளர்களிடம் வந்துவிடாமல் மக்களை பரபரப்பு மற்றும் ஆபாச மயக்கத்திலேயே வைத்திருப்பதில் இந்திய ஊடகங்கள் இதுவரை வெற்றியே பெற்றுள்ளன.

  இந்த நிலையை மாற்ற சமூத்தின் அனைத்துப்பிரிவினரும் குறிப்பாக உயர்கல்வி பெற்றவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்தினாலே சமூகத்தில் பெரும் மாற்றங்கள் நிகழும்.

  இதில் வலைபதிவர்களும் பெரும்பங்கு வகிக்கமுடியும். ஏனெனில் ஏறத்தாழ அனைத்து மீடியா அலுவலகங்களும் வலைபதிவுகள் கவனித்தே வருகின்றன. மேலும் இந்த ஊடகங்கள் உலகத்தமிழர்கள் மத்தியில் அம்பலப்படுத்தவும் இதுவே சிறந்த வழி.

  நான், மீடியா விமர்சனத்தை தொடராகவே எழுதத் தொடங்கி இடையில் வேலைப்பளு காரணமாக நிறுத்தியுள்ளேன். அதை உடனே தொடங்க வேண்டியதன் அவசியத்தை தங்கள் பதிவு வலியுறுத்துகிறது.

  பணியை தொடருங்கள். வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.