மனித குல வரலாற்றில் மிகப் பெரிய துரோகி யார் ?

You may also like...

9 Responses

  1. Barari says:

    ivarkalai ellam vida mika periya thuroki oruvar irukkiraar.than paathukappirkkaka thaan sellumidamellam makkalai azaiththu sendru kedayamaaka akki avarkalai pali koduththa pirabakaran ennum sarvaathikaari.ennilla poralikalai sayanaid sappittu saka sonna intha eli (puli)than uyirai kaappatri kolla singalavar mun vellai kodi pidiththu thurokam seitha piraba thaan mika priya thamilina thuroki.

  2. நண்பர் சாய் அவர்களே, ஈழத் தமிழர்களுக்கு ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, ஒன்றுமே செய்யவில்லை என்பதில் நாம் இருவரும் உடன்படுகிறோம். ஆனால் தமிழினத் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் கருணாநிதிக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது, அவர் நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார் என்பதில் தான் நாம் இருவரும் வேறுபடுகிறோம் என்று நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள் ?

  3. Sai says:

    இதே ஜெயலலிதாதான் போர் என்று வந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று தமிழர்களின் உயிரை மிக கொச்சையாக பேசினார். இவ்வாறு அவர் பேசியது இலங்கைக்கு இராணுவம் அனுப்புவேன் என்று கூறிய தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன். கச்சதீவை மீட்பேன் என்று சூளுரயிட்ட அவர் அங்கிருந்து ஒரு கருவாட்டைகூட 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் எடுத்துவரவில்லை. இவர்களையெல்லாம் எப்படிதான் நம்புகிறீர்களோ!!! இதுதான் ஏமாளி தமிழர்களின் தலைவிதி.

  4. தோழர் சாய் அவர்களே, ராமதாஸ் மற்றும் ஜெயலலிதா கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடமில்லை. ஆனால், சந்தர்ப்பவாத நிலைபாடாக இருந்தாலும், எந்த வகையான நிலைபாட்டை ஒருவர் எடுக்கிறார் என்பது முக்கியம்.
    எனக்கு 40 தொகுதிகள் தந்தால், இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் பெற்றுத் தருவேன் என்று தேர்தலுக்காகவாவது ஜெயலலிதா சொன்னார். மேலும், ஜெயலலிதா, தன்னை உலகத் தமிழர்களுக்கு தலைவி என்று என்றுமே சொல்லிக் கொண்டதில்லை. ஜெயலலிதாவை தமிழர்கள் தங்களுக்கு ஆதரவான நிலை எடுப்பார் என்று என்றுமே நம்பியதில்லை. ஆனால், கருணாநிதியை நம்பினார்கள். அதனால்தான், ஜெயலலிதாவை விட கருணாநிதி மோசமானவர் என்று கூறுகிறேன். கருணாநிதி நம்ப வைத்து கழுத்தறுத்தார். மேலும், போர் முடிவடைவதற்கு முன் கருணாநிதி, இலங்கையில் சுயநிர்ணய உரிமைக்காக நீதிபதிகள் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தார். நினைவிருக்கிறதா ? இப்பொழுது எங்கே போயிற்று அந்தக் குழு ? அத்தனை பேரும் செத்து மடிந்தாயிற்று. மீதம் உள்ளவர்களை கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துள்ள இந்த நிலையில், மவுனத்தின் வலி என்று கடிதம் எழுதுகிறாரே கருணாநிதி ! அடி வயிற்றை பிறட்டவில்லை ?

    எனக்கு பிறட்டுகிறது தோழரே.

    மேலும் அந்தக் கடிதத்தில், மாவீரன் மாத்தையாவிற்கு புலிகள் இயக்கம் மரண தண்டனை விதித்தது என்கிறாரே ? சகோதர யுத்தத்தில், தினகரன் நாளிதழ் ஊழியர்கள் அப்பாவிகள் 3 பேர் உயிரோடு கொளுத்தப் பட்டு 3 ஆண்டுகள் ஆகிறதே. இலங்கையின் சகோதர யுத்தம் பற்றி கேள்வி எழுப்பும் கருணாநிதிக்க், அந்த அப்பாவிகளுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று தோன்றுகிறதா ? இப்பொழுது தெரிகிறதா கருணாநிதியின் இரட்டை நிலைபாடு ?

    என் மனது ஆறவில்லை. உறுதியாகச் சொல்கிறேன் கருணாநிதி நினைத்திருந்தால் என் தமிழ் மக்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.

  5. Sai says:

    தங்கள் மறுமொழிக்கு நன்றி. பாமக, இடதுசாரிகள் தமிழகத்தில் செல்லாகாசுகள். இவர்களால் தமிழகத்தில் எந்த ஆட்சி மாற்றமும் நடைபெறமுடியாது. இந்த கட்சிகளுக்கு சுயமரியாதை இருந்தால் ஏன் ஜெயாவுடன் கூட்டணி வைக்க வேண்டும்? இந்த கட்சிகள் தம்பட்டம் அடிப்பது போல் உண்மையான தமிழுணர்வு இருந்தால் ஏன் இலங்கைத்தமிழர்களின் முதல் எதிரியான அந்த அம்மையாருடன் போய் சேரவேண்டும்? இவர்களின் பச்சோந்திதனமான நிலைபாடுகளை என்றாவது உங்களை போன்றவர்கள் கேள்வி கேட்டதுண்டா? இதுதான் தமிழர்களின் துரதிருஷ்டம். உண்மையான எதிரி எங்கோ நல்லவன் போல் ஒளிந்திருக்க, உண்மை தமிழ் நலன் விரும்பிகளை நாம் வசை பாடுவோம். திமுக நீங்கள் சொல்வது போன்ற நிலையை எடுத்திருந்தால் நிச்சயமாக காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும். காங்கிரஸ்சின் 15 சதவீத வாக்குகள்தான் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் இப்போது காட்டும் சிறு எதிர்ப்பை கூட இங்கே காட்ட திருமாவளவன் போன்ற வீராதிவீரர்களுக்கு துநிவிருந்திருக்காது. அப்படியே அவர்கள் எதிர்த்தாலும், வைகோ போன்று வேலூர் சிறையில் கலி தின்ன வேண்டியிருந்திருக்கும. காங்கிரஸ்சுக்கு வோட்டு போடும் மக்கள் திருந்தும் வரையில் தமிழகத்தில் தமிழுணர்வுக்கு வழியில்லை. அதிகாரத்தையும் இழந்துவிட்டு ஜெயலலிதாவின் வெறித்தனமான ஆட்சியையும் கருணாநிதி சகித்துக்கொள்ள வேண்டியுருக்கும்

  6. கருணாநிதி துரோகி அல்ல…

    தமிழினத்தின் முதல் எதிரி கருணாநிதி

  7. saravanan says:

    ya its true tamil nadu people never never worry about elam

    k. saravanan

    singapore

  8. நண்பர் சாய் அவர்களே. உங்கள் கருத்தோடு நான் மாறுபடுகிறேன். புலிகள் நல்லவர்களா இல்லையா, இந்திரா காந்தி புலிகளுக்கு உதவி செய்தார்களா இல்லையா என்பது விவாதப் பொருளல்ல. இந்த ஆண்டு ஜனவரி முதல் தமிழர் பகுதிகள் மேல் தொடர்ந்து நடந்த தாக்குதல்களை கருணாநிதியால் நிறுத்தியிருக்க முடியுமா இல்லையா என்பது தான் கேள்வி. தேர்தல் முடிவுகள் வரும் முன், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாவே இப்படி ஒரு வெற்றியை எதிர்ப் பார்க்கவில்லை. திமுக வை பெரிதும் நம்பியிருந்தது காங்கிரஸ். 2004ல், பிஜேபி ஜெயிக்காது என்று தெரிந்ததும் தான், பிஜேபி மதவாத கட்சி என்று திடீர் ஞானோதயம் வந்து கூட்டணியை விட்டு விலகினார் கருணாநிதி. அதே போல், இலங்கையில் போரை நிறுத்தாவிட்டால், ஆதரவு வாபஸ், கூட்டணி இல்லை, தனித்து போட்டி, என்று கருணாநிதியால் அறிவித்திருக்க முடியுமா முடியாதா ? காங்கிரசோடு சேராமல், பாமக, இடது சாரிகளோடு தனித்து நின்றிருந்தால், 40 இடங்களையும் கருணாநிதி பெற்றிருப்பார்.
    கருணாநிதி ஏன் இதைச் செய்யவில்லை என்றால், ஈழத் தமிழர்களை விட, அறுபதாயிரம் கோடியை அள்ளித் தந்த தொலைத் தொடர்புத் துறை முக்கியம். கேட்ட இலாகா கிடைக்கவில்லை என்றதும், பிணக்காகி, கோபித்துக் கொண்டு வரத் தெரிந்த கருணாநிதிக்கு, இலங்கை தமிழர்கள் விஷயத்தில் இப்படி ஒரு கோபத்தை ஏன் காட்ட முடியவில்லை ? கூறுங்கள் நண்பரே.

  9. Sai says:

    முன்பு வேறொரு பதிவிற்கு போட்ட பின்னூட்டம் இதற்கும் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதை மறுபடியும் பதிவு செய்கிறேன்.
    இதில் கருணாநிதியை குறை கூறுவது எந்த நியாயமும் இல்லை. இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் தமிழக வாக்காளர்கள். ஆம் 1984 ஆண்டு இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருக்கும்போது, அதற்காக எதையும் செய்யாத MGR அரசையும், மத்திய காங்கிரஸ் அரசையும் எதிர்த்து கருணாநிதியும், அன்பழகனும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தனர். ஆனால் அதன்பின் நடந்த தேர்தலில் அரசாண்ட அதே கட்சிகளுக்கு வாக்களித்து தமிழக மக்கள் தங்களுக்கும் இலங்கையில் நடக்கும் இனபோருக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெளிவுபடுத்தினர். இந்திராவோ அல்லது MGR நினைத்திருந்தால் அப்போதே இலங்கை தமிழர்களுக்கு ஒரு விடிவு கிடைத்திருக்கும். இலங்கை தமிழர்களின் முதல் துரோகிகள் இந்திராவும், MGR ம. சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தாலும், தமிழக மக்கள் கருணாநிதியின் தமிழ் உணர்வுக்கு எந்த மதிப்பும் அளிக்கவில்லை. அதன்பின் 1989 ஆம் வருடம் திமுக ஆட்சி வந்ததும், அவர் இலங்கை தமிழர்கள் மேல் காட்டிய பரிதாப உணர்ச்சியை ஜெயலலிதா கொச்சைப்படுத்தி அவர் புலிகளுக்கு ஆதரவாக உள்ளார் என்று அந்த ஆட்சியை கலைகவைத்தார். அதன்பின் நடந்த தேர்தலிலும் தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக திமுகவை தோற்கடித்து உண்மையான தமிழன விரோதியான ஜெயலலிதாவுக்கு ஆட்சியை கொடுத்தனர். தமிழகத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கும கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்ற சூழ்நிலையில், தன கையில் இருக்கும் அதிகாரத்தை இழந்து கருணாநிதி எப்படி இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்ய முடியும். அவ்வாறு துணிந்தாலும், முடிவு என்னவோ ஜெயலலிதாவுக்கு சாதகமாகத்தான் முடியும். இவர் இலங்கை தமிழர்களை ஆதரித்தால் உடனே ஜெயலலிதா காங்கிரசுடன் கைகோர்த்துக்கொண்டு மொத்தமாக திமுக ஆட்சியை ஒழித்துவிடுவார். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், இப்போதிருக்கும் கொஞ்சநஞ்ச இலங்கைதமிழர்கான ஆதரவும் முழுதும் அழிந்துவிடும். வைகோ கைது போன்ற சம்பவங்கள் யாருக்கும் மறந்திருக்காது.
    இந்திய அமைதிப்படை பிரேமதாசா அவமானபடுத்தி துரதியடித்ததும், சென்னை துறைமுகம் வந்திறங்கிய அவர்களை வரவேற்க செல்ல முடியாது என மிக துணிவுடன் கருணாநிதி அறிவித்தார். இது இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்தாலும், ஆட்சியே இதால் கலைக்கப்படலாம் என்றாலும் மிக துணிவாக அவர் இதை செய்தார். பிரபாகரன் என்றுமே கருணாநிதியை மதித்ததில்லை. அணைத்து தமிழின மூத்த தலைவர்களும் (அமிர்தலிங்கம், சிறி சபாரத்தினம் உட்பட) கருணாநிதியின் பின் அணிதிரள, பிரபாகரன் எதற்குமே உதவியற்ற MGR இன் பின் நின்றார். MGR – இன் தூண்டுதலால் திமுக அளித்த உதவிதொகையையும் வாங்க மறுத்து அவரை அவமானப்படுத்தினார். ஆனால், இதை எதையும் கருணாநிதி பொருட்படுத்தாமல் 1989 இல் ஆட்சிக்கு வந்தவுடன் தன்னால் ஆனா உதவிகள் அனைத்தும் செய்தார். அதற்காக தன ஆட்சியையும் ஜெயலலிதாவின் சூழ்ச்சியால்இழந்தார்.
    தமிழக வாக்காளர்கள் ஜெயலலிதா போன்ற குள்ள நரித்தனமான சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை என்று முழுவதுமாக நிராகரிகிறார்களோ அன்றுதான் இலங்கை தமிழர் வாழ்வில் அமைதி ஏற்படும். இதில் கருணாநிதியை மட்டும் குற்றம் சொல்வதில் எந்தபயனும இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress