அன்று உயர்நீதிமன்ற வளாகமே போர்க்களமாக காட்சியளித்தது. வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பொதுமக்கள் என ஒருவர் விடாமல் காவல்துறையினர் அடித்து நொறுக்கினர். வழக்கறிஞர்களின் வண்டிகள் கூட தப்பவில்லை.
உச்சநீதிமன்றம் நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்தது. அந்த ஸ்ரீ கிருஷ்ணா தனது அறிக்கையில், பிப்ரவரி 19 அன்று கமிஷனர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு மாலை 5.14 மணிக்குத் தான் வந்தார்.
ஆகையால் நடந்த சம்பவத்துக்கு அவரை பொறுப்பாக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இதன் விசாரணை ஏறக்குறைய 2 மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றது.
வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா மற்றும் பானுமதி அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச் இன்று தனது தீர்ப்பை வழங்கியது.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் “பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய கமிஷனர் (ராதாகிருஷ்ணன்) தனது கடமை மற்றும் பொறுப்பிலிருந்து தவறி, ஒழுங்கற ஒரு சூழ்நிலையை உருவாக்கி, உயர்நீதிமன்ற வளாகத்தினுள் ஒரு மோசமான சம்பவம் நடைபெற்று, நீதித்துறையின் மீது தீராத கறை ஏற்பட காரணமாக இருந்திருக்கிறார்.” இறுதியாக, உயர்நீதிமன்றம், ராதாகிருஷ்ணன், ஏ.கே.விஸ்வநாதன், ராமசுப்ரமணியன், ப்ரேம் ஆனந்த் சின்ஹா ஆகிய நான்கு அதிகாரிகள் மீது துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், துறை நடவடிக்கை முறையாக நடக்க ஏதுவாக இந்த நான்கு அதிகாரிகளும் பணி இடைநீக்கம் செய்யப் பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர் மேலும், ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகம் முழுவதும் நீதிமன்ற நடவடிக்கைகள் முடங்க 19/2 சம்பவம் காரணமாக இருந்ததால், இந்த நான்கு அதிகாரிகள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ப்படும் என்றும் தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது. இத்தீர்ப்பை வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
ஆனால், போலீஸ் ராஜ்யம் நடத்தி வரும் இந்தக் கருணாநிதி, இந்த அதிகாரிகளை இடை நீக்கம் செய்வாரா என்பது சந்தேகமே !
நான் இத்தாலி துணிகளை சலவை செய்யும் பாங்கு அளவிடற்கரியது:
மனிமொழி பேசும் கனிமொழி நங்கையை அமைச்சர் ஆக்க நான் எடுக்கும் முயற்ச்சிக்கு….
மானம் போனால் என்ன?மயிர் போனால் என்ன, பதவிதானே எனக்கு முக்கியம்?
//போலீஸ் ராஜ்யம் நடத்தி வரும் இந்தக் கருணாநிதி, இந்த அதிகாரிகளை இடை நீக்கம் செய்வாரா என்பது சந்தேகமே !//
Yeah Its true.