என்னடா இது ஏதோ கசமுசா சமாச்சாராம் என்று பார்க்கிறீர்களா ? இதை கசா முசா சமாச்சாரம் என்று சொல்ல முடியாது. கண்றாவி சமாச்சாரம் என்று தாராளமாக சொல்லலாம்.
‘நேத்து ராத்திரி யம்மா… தூக்கம் போச்சுடி யம்மா’ இந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படம் சகலகலா வல்லவன். ஏவிஎம்மின் மிகப் பெரிய வெற்றிப் படம் இது. அந்தப் பாடல், பட்டி தொட்டியெங்கும் பின்னி பெடலெடுத்தது.
அந்தப் படத்தில் தான் இந்தப் பாடல். சவுக்கு இந்தப் படத்தை பார்த்த போது, வயது எட்டு. அந்தப் படம் அந்த வயதில் சவுக்குக்கு அப்படி பிடிக்கும். முதல் முறை பார்த்து விட்டு, அதற்கு பிறகு வீட்டுக்கு உறவினர்கள் வந்தால் அவர்களை நச்சரித்து ஆறு முறை பார்த்தாகி விட்டது. ஏழாவது முறை, தஞ்சாவூர் ஹவுசிங் யூனிட் குடியிருப்பில், திறந்த வெளியில் திரையிடுகிறார்கள் என்ற தகவல் அறிந்து, அம்மாவிடம் கேட்ட போது, இரவு நேரம் என்பதால் போகக் கூடாது என்று உறுதியாக சொல்லி விட்டார்கள். அம்மா தூங்கியவுடன், சவுக்கு நைசாக கிளம்பி, அந்தப் படத்தை ஏழாவது முறையாக பார்த்து விட்டு, வீட்டுக்கு வந்ததும், அடி விழுந்தது பாருங்கள்…. உங்க வீட்டு அடி எங்க வீட்டு அடி இல்ல. இரவு விழுந்த அடி பத்தாது என்று, மறுநாள், வீட்டு வாசலில் உள்ள விளக்குக் கம்பத்தில் வைத்து ஒரு அரை மணி நேரம் அடி. அப்புறம் பக்கத்து வீட்டுக்காரர்கள் காப்பாற்றினார்கள். அப்படி ஒரு அடி. அதனால், அந்தப் படத்தை மறக்கவே முடியாது.
சரி அந்தப் படத்திற்கும் இந்தக் கட்டுரைக்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கிறீர்களா ? அந்தப் படத்தில் நேத்து ராத்திரி யம்மா, தூக்கம் போச்சுடி யம்மா.. என்ற பாடர் வரிகளைப் போலவே, தூக்கத்திற்கு பதில், மானம் போனது. யாருக்கு என்று கேட்கிறீர்களா ? வேற யாரு… ? நம்ப ஒட்டுக் கேட்கும் ஒட்டக் கூத்தர் ஜாபர் சேட்டுக்குத் தான்.
அந்தக் கண்றாவிக் கதையை ஏன் கேட்கிறீர்கள் ? நேற்று அண்ணிக்கு பிறந்த நாள். அண்ணி என்றால் யாரென்று யோசிக்காதீர்கள். நம்ப ஒட்டக் கூத்தர் ஜாபரின் மனைவி பர்வீனுக்குத் தான்.
ஒட்டக் கூத்தர் தன் மனைவியோடு நேற்று அண்ணி பிறந்த நாளை முன்னிட்டு, இரவு விருந்துக்குப் போயிருக்கிறார். எங்கே தெரியுமா ? தாஜ் கன்னிமரா. ஒட்டக் கூத்தரும் அவர் மனைவியும் அதற்கு கம்மியான சாதாரண இடத்தில் சாப்பிடுவார்களா என்ன ?
ஒட்டக் கூத்தர் மிகப் பெரிய அதிகாரி. அண்ணி திருவான்மியூரில் மிகப் பெரிய தொழில் அதிபர். அவர்கள் ஸ்டேட்டஸ்சுக்கு அதற்கு கம்மியாக சாப்பிட்டால் நன்றாக இருக்குமா ?
அதனால் தாஜ் கன்னிமராவுக்கு செல்கிறார்கள். ஒட்டக் கூத்தர் பேமிலியோடு, இன்னும் இரண்டு பேமிலி. ஒட்டக் கூத்தருக்கு கூட ஒரு ரெண்டு பேமிலியை கூட்டிட்டுப் போய், ‘நான் யாரு, என் அதிகாரம் என்ன‘ என்று கித்தாப்பு காட்ட வேண்டாமா ? அதனால் பகுமானமாக, கிளம்பியிருக்கிறார்.
தாஜ் ஓட்டலுக்கு வருகிறேன், ஏற்பாடு செய்யுங்கள் என்று லோக்கல் இன்ஸ்பெக்டரிடம் தகவல் சொல்லப் பட்டது. நேராக ஒட்டக் கூத்தரும், அண்ணியும், அந்த இரண்டு ஆடியன்ஸ் பேமிலியும் தாஜ் கன்னிமரா ஹோட்டலுக்குச் சென்றிருக்கிறார்கள்.
நேராக, அங்கே உள்ள சைனீஸ் ரெஸ்டாரண்டுக்கு சென்றிருக்கிறார் ஒட்டக் கூத்தர். ரெஸ்டாரண்ட், மேனேஜர், ‘சாரி சார். ஆல் டேபிள்ஸ் புல்‘ என்றிருக்கிறார். வந்ததே கோபம் ஒட்டக் கூத்தருக்கு… ஆனால் கோபத்தை காட்ட முடியுமா ? ‘துட்டுக் குடுத்து சாப்டறவன் கோபத்தைக் காட்டலாம். ஓசியில சாப்ட்றவன் ? ‘
வந்த கோபத்தை பல்லைக் கடித்துக் கொண்டு அடக்கி விட்டு, கூட வந்த ஆடியன்ஸ் பேமிலியிடம், ‘தி லோக்கல் போலீஸ் ஆர் தரவுலி இன்எஃபிசியென்ட்‘ என்று கூறி விட்டு, ‘தேர் மஸ்ட் பி சம் கம்யூனிகேஷன் கேப்‘ என்று கூறியிருக்கிறார்.
ஒட்டக் கூத்தர் உடனே ‘கால் தி ஃப்ளோர் மேனேஜர்‘ என்று கூறியிருக்கிறார். ஃப்ளோர் மேனேஜர் வந்த உடனே, ‘வாட் ஹேப்பன்ட். டின்ட் த இன்ஸ்பெக்டர் டெல் யூ டு ரிசர்வ் ய டேபிள் ? ‘ என்று கேட்டிருக்கிறார். அவர், ‘சார், நீங்க தாஜ் க்கு தான் போறதா சொன்னாங்க‘ என்று சொல்லியிருக்கிறார்.
உடனே, ஜாபர், ஆடியன்ஸ் பேமிலியிடம் வழிந்து விட்டு, ‘சீ… ஐ டோல்ட் யூ…. தேர் ஈஸ் ய கம்யூனிகேஷன் கேப்‘ என்று கூறி விட்டு, ‘கம் லெட்ஸ் கோ டு தாஜ்‘ என்று கிளம்பி, நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் ஹோட்டலுக்குச் சென்றிருக்கிறார்.
அங்கே சென்றால், இதை விட பெரிய தமாசு… தாஜ் ஹோட்டலில் மொத்தம் மூன்று ரெஸ்டாரண்டுகள். சைனீஸ் ரெஸ்டாரண்ட்டின் பெயர் கோல்டன் டிராகன். அதுவும் புல். அடுத்து க்ரெகோ என்ற இத்தாலியன் ரெஸ்டாரண்ட். அதுவும் புல். அடுத்தது சதர்ன் ஸ்பைஸ் என்ற தென்னிந்திய உணவகம். அதுவும் புல்.
ஆடியன்ஸ் பேமிலியிடம் இன்னும் என்னென்ன சீன் போடுவது. பொறுமை இழந்த ஜாபர், ‘கால் த ப்ளோர் மேனேஜர்‘ என்று உச்சஸ்தாயில் கத்தியிருக்கிறார். ப்ளோர் மேனேஜர் வந்ததும், ‘வாட் டூ யு திங்க் இன் யுவர் மைன்ட். யு திங்க் யு கேன் ப்ளே வித் அன் ஏடிஜிபி‘ என்று சவுன்ட் கொடுத்திருக்கிறார். ஃப்ளோர் மேனேஜர், அமைதியாக கேட்டுக் கொண்டிருந்து விட்டு, ‘சாரி சார். ஆல் தி கெஸ்ட்ஸ் ஹேவ் புக்ட் டேபிள்ஸ் இன் அட்வான்ஸ்‘ என்று கூறியிருக்கிறார். பொறுமை இழந்த ஜாபர், மிகுந்த கோபத்துடன், ‘எப்பதான்யா டேபிள் காலியாகும்‘ என்று கேட்டிருக்கிறார்.
மேனேஜர், ‘சார், அட்லீஸ்ட் ஆஃப்டர் அன அவர்‘ என்றிருக்கிறார். அதற்கு பிறகு ஒரு பத்து நிமிடம், கோபத்துடன் கத்தி விட்டு, ‘வாட் டு டூ நவ் ? ‘ என்று கேட்டிருக்கிறார். பிறகு மேனேஜரின் ஏற்பாட்டின் படி, அந்த ஓட்டலிலேயே காலியாக உள்ள ஒரு அறையில் அவர்கள் அனுமதிக்கப் பட்டு, அங்கே உணவு பரிமாறப்பட்டுள்ளது.
உணவு முடிந்ததும், ஜாபர், தன் பர்சை எடுத்து சீன் போட்டிருக்கிறார். ஃப்ளோர் மேனேஜர், ‘நோ சார். இட்ஸ் ஆன் த ஹவுஸ்‘ என்று சொல்லியிருக்கிறார்.
திரும்பி வருகையில், ‘தீஸ் பெலோஸ் ஆர் தரவ்லீ யூஸ்லெஸ். பிட் பார் நத்திங்‘ என்று ஆடியன்ஸ் பேமிலியிடம் புலம்பியிருக்கிறார்.
ஜாபர், நீங்கள் போன பிறகு ப்ளோர் மேனேஜர் என்ன புலம்பினார் தெரியுமா ? ‘ஓசில தின்றதுக்கு இவன் வர்றது இல்லாம, இன்னும் பத்து பேர கூட்டிக்கிட்டு வர்றான். இவனுக்காகவே, கவர்மென்ட் மாறனும்‘ என்று கூறியிருக்கிறார்.
என்ன ஒட்டக் கூத்தரே…. சவுக்கிடம் சொல்லியிருந்தால் உங்களையும், அண்ணியையும், லிங்கிச் செட்டித் தெருவில் உள்ள ஒரு சிறந்த ஹோட்டலுக்கு கூட்டிப் போயிருக்குமே…. அந்த ஓட்டலின் பெயர் ‘மரண விலாஸ்‘. 16 ரூபாய்க்கு மீன் குழம்போடு சாப்பாடு. மத்தி மீன் பிரை சும்மா கும்முனு இருக்கும். அங்க ரிசர்வேஷன் எல்லாம் தேவையில்ல. பாரிமுனையில் பாரவண்டி இழுப்பவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், என பல்வேறு தரப்பினர் வருவார்கள்.
அண்ணி…. அடுத்த வாட்டி, ஒட்டக் கூத்தர நம்பாதீங்க. சவுக்கு கிட்ட சொல்லுங்க. மத்தி மீன் பிரை வாங்கித் தரும். நம்ப சாதி சனத்தோட உக்காந்து சாப்பிடலாம். என்ன… ?
அண்ணி, அப்புறம் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனும் அண்ணி. என்ன அண்ணி, இந்த ஒட்டக் கூத்தர கண்டிக்கவே மாட்றீங்க. என்னென்ன பண்றான் தெரியுமா இந்த ஆளு… போன மாசம், ஐதராபாத்துக்கு சீக்ரெட் வேலையா போறேன்னு சொன்னார் இல்ல ? ஐதராபாத் போயி, ஐந்து நட்சத்திர வேலையில், அணங்கோடு தான் சீக்ரெட் வேலை. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா ? எங்க ஊர்ல, பொம்பளைதான் ஆம்பளையை இழுத்து கட்டி வைக்கணும்னு சொல்லுவாங்க. என்ன அண்ணி இப்படி இந்த ஆள கண்டிக்காம இருக்கறீங்க ?
அது கூட பரவாயில்ல அண்ணி. போன வாரம் சிஎம் டெல்லி போனாருல்ல ? அப்போ, இந்த ஆளு, சென்னையில இருக்கற ஆபாஷ் குமார்ன்ற ஐபிஎஸ் அதிகாரிய கூட்டிக்கிட்டு, ஐதராபாத் போனாரு. ஐதராபாத் போயி இறங்குன உடனே, ஆபாஷ் குமாரக் கூப்பிட்டு, ‘நீ போயி உங்க பேட்ச் மேட்டையெல்லாம பாத்துட்டு வா. அண்ணனுக்கு, முக்கியமான மீட்டிங் இருக்கு. போயிட்டு வா உனக்கு அண்ணன் குச்சி முட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கித் தர்றேன்‘ னு சொல்லி அனுப்பிட்டார். அனுப்பிட்டு, அந்த பெரிய்ய ஹோட்டலின் பிரெசிடென்சியல் ஸ்வீட்டில், தங்கி ‘ரகசிய விவாதத்தை’ மும்பையிலிருந்து வந்த அணங்கோடு நடத்தியிருக்கிறார்.
ஆபாஷ் குமார், மூன்று மணி நேரம் கழித்து வந்ததும், சரி, மீட்டிங் முடிஞ்சுது, நான் டெல்லி போறேன், நீ ஊருக்குப் போ என்று அனுப்பி விடுகிறார். ஆபாஷ் குமாருக்கு எதற்கு ஐதராபாத் வந்தோம், எதற்கு இப்போது சென்னை போகிறோம் என்பதே புரியவில்லை.
உள்துறை செயலாளர் ஞானதேசிகன் ஒட்டக் கூத்தரை தொடர்பு கொண்டு, எங்கே இருக்கிறீர்கள், என்ன வேலை என்று கேட்டதற்கு, ‘சி.எம். அசைன்மென்ட்‘ என்று சொல்லியிருக்கிறார் அண்ணி.
ஞானதேசிகன் என்ன கருணாநிதியையா போய் கேட்க முடியும். எப்படி ஏமாத்தியிருக்கார் பாருங்க அண்ணி… நீங்க வேணா ஆபாஷ் குமார் கிட்ட, ‘ஏம்பா, ஒட்டக் கூத்தர் போதைக்கு நீ ஊறுகாயா ஆயிட்டியாமே‘ன்னு கேளுங்க.. கதைக் கதையா சொல்லுவாரு.
அண்ணி.. இன்னொரு விஷயம். ஜனவரி 28 அன்னைக்கு பெரிய பாப்பாவுக்கு பர்த்டே தானே… உங்களுக்குத் தெரியுமா இல்லையான்னு தெரியல…. ஆழ்வார்ப்பேட்டை ரெயின் ட்ரீ ஹோட்டல்ல, 60 பேருக்கு, பாப்பாவோட பர்த்டேக்காக, டிரிங்க்ஸ் பார்ட்டி அரேன்ஜ் பண்ணிருக்காரு அண்ணி. பொம்பளப் புள்ளைய இப்படியா அண்ணி வளக்கறது ?
உங்க வூட்டுக்காரரு, தறுதலையா, ஊரு மேஞ்சுகிட்டு போகட்டும், பாப்பா டாக்டருக்கு படிக்குது. பெரிய படிப்பெல்லாம் படிக்குது. இந்த ஆள மாதிரியே, நாசமா போகாம, பத்ரமா பாத்துக்கங்க அண்ணி.
ஏதாவது உங்கள மெறட்டுனார்னா சொல்லுங்க அண்ணி… டொமஸ்டிக் வயலன்ஸ் ஆக்ட், டெவுரி ஹராஸ்மென்ட் ஆக்ட்னு ஊருபட்ட ஆக்ட் இருக்குது. ஹைகோர்ட்டுல, சூப்பர் அட்வகேட்லாம் இருக்காங்க. பீஸ் கம்மியா வாங்கச் சொல்றேன். பிச்சுப்புடலாம் பிச்சு.
ஒன்னும் ஒர்ரி பண்ணாதீங்க அண்ணி.. ஏதாவது தகவல் வேணும்னா சவுக்க கான்டாக்ட் பண்ணுங்க.. இவரு, தும்முனா கூட சவுக்குக்கு தெரிஞ்சுடும்.