அன்பரே !
உங்களைப் போல் கொஞ்சும் தமிழில் எனக்கு எழுதத் தெரியாது. மந்திரத் தமிழில் மயக்கத் தெரியாது. என் மனதை எழுதத் தெரியும்.
உங்களுக்கு அப்போது பிடித்த ‘காகிதப் பூ’ கதாநாயகி இப்போது உங்கள் மனம் கவராமல் போனது காலத்தின் கோலமே ! காகிதப்பூ நாடகத்தில் நான் கதாநாயகியாக இருந்தாலும், உங்கள் நடிப்பில் நான் மனதைப் பறிகொடுத்ததுதான் உண்மை.
அனைத்து சாதிக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் நீங்கள் என்னை மணம் புரிந்தீர்களா என்பதை நான் அறியேன்; ஆனால் திருமணமான நாள் முதலாகவே, என்னை நீங்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் தடத்தி வந்திருக்கிறீர்கள்.
என்னதான் ஆயினும் அக்காள் தயாளுதான் மூத்தவர் என்பதால் அவருக்கும் அவர் பிள்ளைகளுக்கும் தாங்கள் முன்னுரிமை அளித்ததை இத்தனை காலம் பொறுத்தே வந்திருக்கிறேன். ஆனாலும், இனி பொறுப்பது பயன் தராது என்று தோன்றுகிறது.
எங்களோடு நெருக்கமாக இருக்கும், எங்கள் உறவினர், ஆலடி அருணாவின் மகள் பூங்கோதையை என்ன பாடு படுத்தினீர்கள் ?
அந்த வீணாய்ப் போன உபாத்யாவோடு அப்படி என்ன தவறாக பேசி விட்டார் ?
லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட அவர் அத்தை மகனை நடவடிக்கை எடுக்காமல் விடச் சொன்னார் !
இது என்ன அப்படி ஒரு குற்றமா ?
அந்த வீணாய்ப் போன உபாத்யாய் இதையெல்லாம் டேப் பண்ணி வைத்திருப்பார் என்று யாருக்கு தெரியும் ?
அப்படி எல்லோரும் டேப் பண்ணி வைத்திருந்தால் நீங்கள் எத்தனை முறை பதவி விலக நேர்ந்திருக்கும் ?
சர்க்காரியா கமிஷன் உங்களை விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர் என்று சொல்லவில்லையா ?
அதற்குப் பிறகு நீங்கள் முதல்வராக வில்லையா ?
உங்களோடு அமைச்சர்களாக இருக்கும் எத்தனை பேர் ஊழல் குற்றச் சாட்டுக்கு
ஆளானார்கள் ?
அனைவரும் பதவி விலகி விட்டார்களா என்ன ?
ஏதோ போன் பேசி விட்டார் என்று பூங்கோதையை ராஜினாமா செய்யச் சொல்லி எவ்வளவு நெருக்கடி தந்து ராஜினாமா செய்ய வைத்தீர்கள் ? உங்கள் நெருக்கடி இல்லையென்றால் பூங்கோதை தானாகவே முன்வந்து ராஜினாமா செய்யும் அளவுக்கு சுயமரியாதை உள்ளவரா என்ன ?
தேர்தல் நெருங்கவும் நாடார்களின் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காகத் தான் பூங்கோதையை மீண்டும் அமைச்சர் ஆக்கினீர்கள் என்பது நாங்கள் அறியாததா ?
பிறகு நான் உங்களிடம் வேறு என்ன கேட்டேன் ? நீண்ட நாட்களாக என்னிடம் கேட்டு வந்தார்கள் என்பதற்காக, கள் இறக்க அனுமதி கொடுங்கள் என்று கேட்டதற்கு மக்கள் என் “மந்திரத் தமிழில் மயங்கிக் கிடக்கிறார்கள்; அவர்களுக்கு வேறு போதை வேண்டியதில்லை” என்று “இருட்டுக் கடை அல்வா” கொடுத்தீர்கள்.
ஆனால் மூத்தவர் கேட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைத்திருக்கிறீர்கள்.
கடந்த மன்மோகன் அரசாங்கதில் என் மகளை நான் பெற்ற செல்வத்தை, கனிமொழியை மந்திரியாக்குங்கள் என்று மன்றாடிக் கேட்டும் மறுத்து விட்டீர்கள். மூத்தவர் பிள்ளைகளுக்கும் உங்கள் அக்காள் பேரன்களுக்கும் மட்டும் கட்சிப் பதவிகளையும் அரசுப் பதவிகளையும் வாரி வழங்குகின்றீர்கள். இந்த மந்திரி சபையிலாவது கேபினெட் அமைச்சர் பதவி வாங்கித் தருவீர்கள் என் எதிர்ப்பார்த்தால் முதல் முறை எம்பி ஆன மூத்தவர் மகனுக்கு முன்னுரிமை அளிக்கிறீர்கள்.
தற்போது, ஸ்டாலினையும், துணை முதல்வர் ஆக்கி விட்டீர்கள்.
இஸ்லாமியர்களுக்கு இதயத்தில் இடம் அளித்தது போல் எனக்கும் என் மகளுக்கும் இதயத்தில் இடம் அளிக்கிறேன் என்ற வழக்கமான அல்வாவைத்தான் கிண்டிக் கொடுப்பீர்கள் என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது. மூத்தவர் மகன் அழகிரிக்கு முன் என் மகள் எம்.பி ஆகவில்லையா ? ஆனால் அவர் அமைச்சராகி விட்டார், என் மகள் இன்னும் எம்.பியாகவே உள்ளார். இதுதான் உங்கள் நெஞ்சுக்கு நீதியா ?
ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் உங்கள் கபட நாடகத்தை நான் கண்டு கொண்டேன். மந்திரி பதவி தருகிறேன், தருகிறேன் என்று கடைசியில் என் மகள் கனிமொழியை “சென்னை சங்கமத்தில்” கரகாட்டம் ஆட விட்டு விடுவீர்கள் என்பது தெளிவாகத் தெரிந்து விட்டது.
ஏற்கனவே மந்திரி பதவி கிடைக்காத விரக்தியில், டி.ஆர்.பாலு, ஸ்ரீபெரும்புதுரில் “தலப்பாக்கட்டு பிரியாணி” கடை வைத்து விட்டார். என் மகளும் கரகாட்டப் பயிற்சிப் பள்ளி தொடங்கப் போகிறேன் என்று சொல்கிறாள்.
இதற்கு மேலும், உங்களுடன் இருந்து, நீங்கள் கொடுக்கும் அல்வாவை சாப்பிட நானும் என் மகளும் தயாராக இல்லை.
அதனால், உங்களிடமிருந்து விவாகரத்து பெற முடிவு செய்து விட்டேன். விவாகரத்து பெறலாம் என்றால், ஏற்கனவே நீங்கள் போலீசை வைத்து வக்கீல்களை அடித்து நொறுக்கியதால், என் வழக்கை எந்த வக்கீலும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். வேறு வழியில்லாமல், என் வழக்கை நானே வாதாடி நடத்துவது என்று முடிவெடுத்து விட்டேன்.
ஜீவனாம்சம் வழங்குவதிலாவது, குறை வைக்காமல், நீங்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் ஒரு லட்சம் கோடியை, சரியாக பங்கீடு செய்து, எனக்கும் என் மகளுக்கும் பிரித்துத் தருவீர்கள் என்ற நம்பிக்கையில்
கனத்த இதயத்தோடு உங்களை விட்டுப் பிரியும்
காகிதப்பூ கதாநாயகி
கனிமொழியின் தாய்.
really its a great job savukku.u have well dare to publish this all real news.
அண்ணா கருணாநிதிக்கு
எழுதிய கடிதம்
எனது ஆட்சியில்
“பொதுப் பணித்துறை“
அமைச்சராக நீ
இருந்தபொழுது,
“பொதுப்பணியை“
கவனிக்காமல்,
“கலைப்பணி“ யில்
ஈடுபட்டு, “காகிதப்பூ“
கதாநாயகியை
கர்ப்பிணியாக்கி நான்
சொன்னதால், இரண்டாவதாக
மணம் புரிந்ததையும்
நான் அறிவேன்.
what a sense of humour:) இவ்வளவு நடந்துக்கொண்டிருக்கிறதா? நாங்கள் என்னவோ ஓசியில் டீ வி கொடுத்தார்கள் என்று ஒட்டை போட்டு விட்டு வருகிறோமே….
tis is. 2222much ………………………………………………………………………………………………………………….
நல்ல நகைச்சுவை உணர்வு ஐயா உங்களுக்கு. நீண்ட நாட்களுக்கு பிறகு படி்த்து ரசித்து சிரித்தேன். இது தொடர வேண்டும். தலைப்பைப் பார்த்தவுடன் தங்கள் பெயருக்கேற்றவாறு ஏதோ ஒப்பாரி வைக்கப் போகிறீகள் என்று நினைத்தேன்.
தங்கள் விமர்சனத்துக்கு நன்றி. தமிழக மக்களுக்குத்தான் எதுவும் செய்யவில்லை என்றால், நாட்டையே தன் சொத்தாகக் கருதி, அதைப் பாகப் பிரிவினை செய்வதில் கூட கருணாநிதி நியாயமாய் நடந்து கொள்ளவில்லை என்பதைத் தான் நகைச்சுவையாய் கட்டுரையாளர் ஒப்பாரி குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து படித்து ஆதரவு தாருங்கள்.
this is too tooo much