கருணாநிதி டெல்லி சென்று சோனியாவை சந்தித்தார். 45 நிமிடங்கள் நீடித்த அந்த சந்திப்பு மிகவும் சுமூகமாக அமைந்தது என்றும் தெரிவித்தார். அந்த உரையாடலில் என்னதான் நடந்தது என்பது வெளியில் வராத மர்மமாகவே உள்ளது.
சவுக்கு அதை புலனாய்வு செய்து தனது வாசகர்களுக்கு சொல்லவில்லை என்றால், அப்புறம் சவுக்கு எதுக்கு இருக்கு…. ?
கருணாநிதி வணக்கம். தியாகத் திருவிளக்கே… காங்கிரஸ் குளவிளக்கே… தமிழரின் தலைவிளக்கே…. இத்தாலியின் மதுவிலக்கே…
சோனியா கருணாநிதி.. போதும். விஷயத்துக்கு வாங்க..
கருணாநிதி அம்மா… அந்தக் கூட்டணி…….
சோனியா யாருப்பா அங்க… பீட்ஸா ரெடி ஆயிடுச்சான்னு கேளுங்க.
கருணாநிதி அம்மா தேர்தல் வருது. இந்த தொகுதி பங்கீடு விஷயமா…..
மன்மோகன் மச மசன்னு நிக்காம, போயி பீட்சா ரெடியாயிடுச்சான்னு பாக்க சொல்லுங்க… போங்க. எத்தனை வாட்டி சொன்னாலும் உங்களுக்கு புரிய மாட்டேங்குது.
கருணாநிதி அம்மா. நான் வேணா போயி பீட்சா. வாங்கிட்டு வர்றேன். இந்த தொகுதி பங்கீடு…..
சோனியா அய்யய்யய்ய… இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலையே…. என்ன மிஸ்டர் கருணாநிதி…. உங்களுக்குத் தான் 80 தொகுதி தர்றேன்னு சொல்லியிருக்கேன்ல…. அப்புறம் என்ன ?
கருணாநிதி அது இல்லம்மா…. போன வாட்டியே மைனாரிட்டி கவர்மென்டா இருந்துச்சு. அதான் இந்த வாட்டி.
சோனியா மைனாரிட்டி கவர்மென்ட்லயே… உங்க குடும்பம் ஒரு லட்சம் கோடி தமிழ்நாட்டுல மட்டும் சம்பாதிச்சுருக்குன்னு ஐபி ரிப்போர்ட் சொல்லுது. அது பத்தாதா ?
கருணாநிதி இல்லை தாயே… அது அந்த அம்மையார் செய்யும் பொய்ப் பிரச்சாரம். கழக ஆட்சியில் ஊழலுக்கு கிஞ்சித்தும் இடம் தராது, அப்பழுக்கற்ற, ஆட்சியை வழங்க வேண்டும் என்று…..
சோனியா மிஸ்டர். ஸ்டாப். இது தமிழ்நாடு இல்ல. டெல்லி. ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
கருணாநிதி இல்லை தாயே… எதிரிகள் சிலர் பொய்பிரச்சாரம் செய்து வருகின்றனர், அதைத்தான் சொன்னேன்.
சோனியா அப்போ, ஐபி ரிப்போர்ட் பொய்ன்றீங்களா ?
கருணாநிதி அம்மா… தப்பு. தப்பு அப்படிச் சொல்வேனா ? ஐபி ரிப்போர்ட்டுனா கரெக்டாத் தானேம்மா இருக்கும்.
சோனியா அந்த ஐபி தான், நீங்க 30 சீட்டுக்கு மேல நிக்கக் கூடாதுன்னு சொல்லுது. என்ன சொல்றீங்க…
கருணாநிதி அம்மா, எங்க வீட்டுல இருக்கறவங்கள மொத்தமா கணக்கு போட்டாலே, 150 தொகுதியாவது வேணும்மா. நான் கட்சிக்காக கேக்கல… எங்க குடும்பத்துக்காக கேக்கறேன்.
சோனியா கருணாநிதி… தட் ஈஸ் நாட் மை ப்ராப்ளம். நான் உங்களுக்கு 30 தான் கொடுக்கலாம்னு நெனச்சேன். ஆனா, மேரா முன்னா ராகுல் தான், போனாப் போகுதுன்னு 80 குடுக்கச் சொல்றாரு.
கருணாநிதி அம்மா குடுக்கலாம். நல்லாத்தான் இருக்கும். ஆனா, காங்கிரஸ்ல கோஷ்டி இருக்குதே..
சோனியா வாட் நான்சென்ஸ்… உங்க குடும்பத்துலயே 28 கோஷ்டி இருக்கு.. (அருகிலிருந்த உதவியாளர் காதில் ஏதோ சொல்லுகிறார்.) ம்ம்.. 25 ம். ரெண்டு கோஷ்டி இணைஞ்சுடுச்சாமே…. உங்க குடும்பத்துல இவ்வளவு கோஷ்டி இருக்கும் போது ஒரு கட்சியில இருக்கக் கூடாதா ?
கருணாநிதி அம்மா… நான் ஒரு 150ல நின்னுக்கறேன். காங்கிரசுக்கு, 35 தர்றேன் மா.
சோனியா மன்மோகன்.. சிபிஐ டைரக்டருக்கு போன் போடுங்க..
கருணாநிதி அம்மா மன்னிச்சுடுங்க. தெரியாம சொல்லிட்டேன். தப்பு பண்ணிட்டேன் மா தப்பு பண்ணிட்டேன்.
சோனியா ஒரு தப்பு ரெண்டு தப்பா பண்ணிருக்கீங்க.
கருணாநிதி உண்மை தான் தாயே. உண்மை தான். ஒரு 100வது குடுங்க தாயீ…
சோனியா நோ மிஸ்டர் கருணாநிதி. தட் ஈஸ் டூ மச். அவ்ளோ தர முடியாது. நீங்களும் ஓவராத் தான் பேசிக்கிட்டு வர்றீங்க. மீனவர் பிரச்சினை, கச்சத் தீவுன்னு பேசிக்கிட்டு இருக்கீங்களே….
கருணாநிதி அய்யோ அம்மா.. அப்படியெல்லாம் தப்பா பேசுவேனாம்மா ? 500 பேரை கொன்னுருக்காங்க. ஏதாவது கேட்டேனா ? அதுக்குத் தான் இறந்த மீனவர் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கொடுத்து விட்டேனேம்மா.
சோனியா. யாரைக் கேட்டுட்டு குடுத்தீங்க……
கருணாநிதி இல்லம்மா. அது காலாகாலமா கொடுக்கறது தான் மா.
சோனியா அப்ப ஓ.கே.. சரி. ஐ டோன்ட் ஹேவ் டைம். வெரி பிசி. வேற என்ன ?
கருணாநிதி அம்மா. அந்த சிபிஐ விசாரணை…
சோனியா சட்டம் தன் கடமையை செய்யும்..
கருணாநிதி (முணுமுணுக்கிறார்) போபர்ஸ்ல செஞ்சுச்சா ?
சோனியா வாட். என்ன சொன்னீங்க…
கருணாநிதி. ஒன்னும் இல்லம்மா. என் தலையெழுத்த நொந்துக்கிட்டேன். அம்மா, இந்த ராசா….
சோனியா அவருக்கென்ன ?
கருணாநிதி இல்லம்மா. ராசா.. அவங்க பேமிலில்ல யார வேணாலும் கைது பண்ணுங்க. என் பேமிலி பக்கம் மட்டும் சிபிஐ வர வேணாம்னு சொல்லுங்கம் மா.
சோனியா அது நீங்க நடந்துக்கறத பொருத்துதான் இருக்கு மிஸ்டர் கருணாநிதி. பாருங்க வந்ததுலேர்ந்து உக்காந்துகிட்டே பேசிக்கிட்டு இருக்கீங்க மரியாதை இல்லாம. அது மட்டும் இல்லாம, வரும்போதே உக்காந்துகிட்டே வர்றீங்க.
கருணாநிதி அம்மா. வீல் சேர்ல வந்ததுனால ?
சோனியா நோ. நோ. நோ ரெஸ்பெக்ட். நோ ரெஸ்பெக்ட்.
கருணாநிதி யோவ். பாலு.. புடிய்யா. கால்ல விழுந்துடறேன். வேற வழியே இல்ல.
வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி, பேச்சுவார்த்தை மிகுந்த சுமூகமாகவும், மனதுக்கு நிறைவாகவும் அமைந்ததாகவும், கூறினார். தமிழக மீனவர்கள் தாக்கப் படுவது குறித்து தனது வருத்தத்தை சோனியா பகிர்ந்து கொண்டதாவும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.