இது 1980ல் வெளியான ‘சுஜாதா’ என்ற படத்தில் இடம் பெற்ற படம். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், அதிகம் அறியப்படாத கல்யாணி மேனன் என்ற பாடகி. இவர் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனனின் தாயார் என்பது கூடுதல் செய்தி.
இந்தத் தலைப்பு எதற்கென்றால், இன்று எழுதப் போகும் கட்டுரைக்கு இதை விட பொருத்தமான தலைப்பு இல்லை.
சவுக்கு யாரை இப்படி வழிமேல் விழி வைத்து அழைக்கிறது என்று வியக்கிறீர்களா ? உங்கள் அனைவருக்கும் தெரிந்த, சவுக்கின் குடியரசு தின விருதாக டெட்டி பேர் விருது பெற்ற, தலைமைச் செயலாளர் மாலதி தான் அது.
ஏன் சவுக்கு மாலதிக்காக காத்திருக்க வேண்டும். சவுக்குக்கும், மாலதிக்கும், நீண்ட நாள் உறவு இருக்கிறது. ஆம், சவுக்கை உருவாக்கியதில், மாலதிக்கு ஒரு பெரும் பங்கு இருக்கிறது. நம்ப முடியவில்லையா ? உண்மை தோழர்களே… உண்மை.
மாலதி உள்துறை செயலாளராக இருந்த போதுதான், சவுக்கு மீது, பல்வேறு பிரிவுகளில், அரசு ரகசியத்தை வெளியிட்ட குற்றத்திற்காக, தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யக் கோரி புகார் அளித்தது.
மாலதியின் புகாரை ஒட்டியே, சவுக்கு கைது செய்யப் பட்டு, காவல்துறையால் ‘நையப் புடைக்கப் பட்டு‘ சிறையில் அடைக்க பட்டது. மாலதி கொடுத்த அந்தப் புகாரின் அடிப்படையில் சவுக்கு இரண்டு மாதங்கள் சிறையில் இருந்த பின்னர் பிணையில் வெளி வந்தது.
சவுக்கு மீது வழக்கு பதிவு செய்யப் படாவிட்டால், சவுக்கு என்ற ஒன்று உருவாகாமல், லஞ்ச ஒழிப்புத் துறை என்ற ‘சோம்பேறிகள் மடத்தில்‘ சவுக்கும் ஒரு ஓரத்தில், பென்ச்சை தேய்த்துக் கொண்டிருந்திருக்கும்
அதற்காக மாலதிக்கு சவுக்கு வாசகர்கள் ஒரு ‘ஓ‘ போடுங்கள். போட்டு விட்டீர்களா ? சரி விஷயத்துக்கு வருவோம்.
இப்போது, சவுக்கு மீதான வழக்கு, விரைவு நீதிமன்றத்தில் தொடங்க இருக்கிறது. இந்த வழக்குக்கென்றே, என்.ஆர்.இளங்கோ என்ற மூத்த வழக்கறிஞர் நியமிக்கப் பட்டிருக்கிறார்.
ஒரு வழக்கின் விசாரணையில் முதல் சாட்சியாக புகார் அளித்தவர் விசாரிக்கப் படுவது தானே முறை ?
ஒரு உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு கொலையை பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கிறீர்கள். வழக்கு விசாரணைக்கு வருகையில், அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை எப்படி பதிவு செய்யப் பட்டது என்பதை கண்டறிய, புகார்தாரரை முதலில் விசாரித்த பிறகே, மற்ற சாட்சிகள் விசாரணை தொடங்கும். புகார் கொடுத்த நீங்கள் சாட்சி சொல்ல வர மாட்டேன் என்றால், விசாரணை எப்படி தொடங்கும் ? இது எந்த வழக்குக்கும் பொருந்தும் தானே ?
ஆனால் தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில் மட்டும், புகார் தாரரான மாலதி சாட்சி சொல்ல வரமாட்டாராம் …. என்னய்யா அநியாயம் இது ?
இது அநியாயம் என்று உங்களுக்கு தோன்றுகிறதா ? சவுக்குக்கும் அப்படியே தான் தோன்றுகிறது. சவுக்கின் மீதான இந்த வழக்கில் விசாரணை தொடங்கப் போகிறது என்று தெரிந்த உடனேயே, மாலதி போட்ட முதல் நிபந்தனை நான் சாட்சி சொல்ல வர மாட்டேன் என்பதுதான்.
இந்த நிபந்தனையை உடனடியாக ஒட்டக் கூத்தரிடம் தெரிவிக்கிறார். அவரு பெரிய சீப் ஜஸ்டிஸ் இல்ல. அதான் அவருகிட்ட சொல்றாங்க. ஒட்டக் கூத்தர் உடனே, ‘மேடம் நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க. நான் வராம பாத்துக்கறேன், என்று கூறி விட்டார்.
சவுக்கு மீதுள்ள வழக்குக்காக என்.ஆர்.இளங்கோ என்ற மூத்த வழக்கறிஞர் நியமிக்கப் பட்டுள்ளார். இந்த வழக்கில் என்.ஆர்.இளங்கோவின் பெயர் பரிந்துரை செய்யப் பட்டு, அவர் வழக்கை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு அவர் சந்தித்த நபர், சிபி.சிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரத்தையோ, வழக்கின் புலனாய்வு அதிகாரியோ அல்ல. இரண்டு வாரத்திற்கு முன், என்.ஆர்.இளங்கோ சந்தித்த நபர், நமது ஒட்டக் கூத்தர் தான்.
ஒட்டக் கூத்தரை சந்தித்த போது என்.ஆர்.இளங்கோவிடம் ஒட்டக் கூத்தர் போட்டது இரு நிபந்தனைகள். ஒன்று, ‘சவுக்குக்கு’ எப்படியாவது தண்டனை வாங்கிக் கொடுத்து சிறையில் அடைக்க வேண்டும். மற்றொன்று, மாலதி சாட்சி சொல்ல வரக் கூடாது. இந்த இரண்டு நிபந்தனைகளையும், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஏற்றுக் கொண்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலதி வரவில்லையென்றால், சவுக்கு விட்டு விடுமா என்ன ? மாலதியை வர வைப்பதற்கென்று, உயர்நீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கு தொடுக்காதா என்ன ? மாலதி வராமல் இந்த வழக்கின் விசாரணை முடிவடையாது, என்ன ஆனாலும் சரி. பார்த்து விடுவோம்.
சரி…. மாலதி வருவதற்கு ஏன் தயங்குகிறார். மாலதி தரப்பில் சொல்லப் படும் காரணம்…. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பது. மாலதி புற்று நோயால் பாதிக்கப் பட்டுள்ளார் என்பது உண்மை தான். இப்படிப் பட்ட ஒரு நோயால் பாதிக்கப் பட்ட ஒரு நபர், விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு, வீட்டில் ஓய்வு எடுப்பதுதானே முறை ? உடல் நிலை சரியில்லையென்ற காரணத்தை காட்டி, நீதிமன்றத்துக்கு சென்று சாட்சி சொல்லும் கடமையிலிருந்து தவறுவது சட்ட விரோதம் ஆகாதா ? உடல்நிலை சரியில்லாதவர்களை வைத்து கொண்டு வெட்டியாக மக்கள் பணத்தில் ஊதியம் அளிக்க தமிழக அரசு அலுவலகம் என்ன ‘சத்திரமா‘ ?
உடல் நிலை சரியில்லாத ஒரு நபருக்கு, பொறுப்புகள் அதிகம் மிகுந்த தலைமைச் செயலாளர் பதவி மட்டும் வேண்டுமா ? 24 மணி நேரமும் பணிச்சுமை இருக்கும் ஒரு பதவி வேண்டாமென்று விட்டு, ஆவணக் காப்பகம், எழுது பொருள் அச்சகத் துறை போன்ற அதிக வேலைப் பளு இல்லாத பணியை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே ? மாலதி தலைமைச் செயலாளர் ஆக வேண்டுமென யார் அழுதது ?
எதற்காக மாலதி இப்படி உடல் நிலை சரியில்லாத நிலையிலும், மல்லுக் கட்டிக் கொண்டு இந்தப் பதவியை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறார் என்றால், அப்போது தானே, பிச்சை நாயுடு, ஒட்டக் கூத்தர் போன்ற அதிகாரிகள் செய்யும் தவறுகளை எல்லாம் மூடி மறைக்க முடியும்.
மாலதியை நேர்மையான அதிகாரி என்றெல்லாம் சொல்லுவார்கள். நேர்மையும் கிடையாது. ஒரு புடலங்காயும் கிடையாது. மாலதி இந்த அரசாங்கம் வந்த போது உள்துறை செயலாளராக இருந்த போதிலிருந்தே, கருணாநிதியின் சட்ட விரோத ஆட்சிக்கு உற்ற துணையாக, மனித உரிமை மீறல்களை மறைத்து காவல்துறையை விட்டு மக்கள் போராட்டங்களை ஒடுக்கியவர்.
கழிவு நீர் மற்றும் குடிநீர் குழாய்களை புதுப்பிக்க சென்னை மாநகராட்சி செய்த பணிகளில், பல கோடி ரூபாய் ஊழல் செய்தார் என்று, லஞ்ச ஒழிப்புத் துறையால், எஃப்.ஐ.ஆர் போட பரிந்துரை செய்யப் பட்டவர்.
உண்மையில் மாலதி எதற்காக வர மறுக்கிறார் தெரியுமா ? சவுக்கின் மீது வழக்கு பதிவு செய்யச் சொல்லி மாலதி அளித்த புகாரில், “இந்தக் கடிதத்தை, அரசுத் தரப்பு ஆவணமாக நீதிமன்றத்திலோ, துறை நடவடிக்கைக்கான ஆவணங்களிலோ, எந்த இடத்திலும் சேர்க்கக் கூடாது” என்று இருக்கிறது.
இது போல கேலிக் கூத்தான புகார் கடிதத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா ? புகார் கொடுப்பார்களாம். அந்தப் புகார் கடிதத்தை எந்த இடத்திலும் குறிப்பிடக் கூடாதாம்.
இந்தக் கடிதத்தை அளித்த போது மாலதி உள்துறை செயலாளர். இது போன்ற முட்டாள் அதிகாரிகளை உள் துறை செயலாளராகவும், தலைமைச் செயலாளராகவும் வைத்திருக்கும் ஒரு அரசு எப்படிப் பட்ட அரசாக இருக்கும் என்பதைத் தான் நீங்கள் பார்த்து வருகிறீர்களே…
அன்பார்ந்த மாலதி…. நீங்கள் பேசாமல் விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு போய் விடுங்கள். சவுக்கு உங்களை சாட்சி சொல்லும் படி வற்புறுத்தாது. விருப்ப ஓய்வில் செல்லாமல் தலைமைச் செயலாளராகவே நீடித்தீர்கள் என்றால், சவுக்குக்கு சிறைத் தண்டனை கிடைத்தாலும் கவலை இல்லை. உங்களை நீதிமன்றத்துக்கு வரவழைத்து, நான்கு நாட்களுக்கு தொடர்ந்து குறுக்கு விசாரணை செய்யும். நீங்கள் குறுக்கு விசாரணையில் திணறுவது, அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வரவழைக்கப் படும். உங்களின் நேர்மை என்னவென்பதை விளக்க, DE 52/2001/PUB/HQ விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் படும். இத்தனை பெரிய ஊழல் புகாருக்கு ஆளான ஒரு அதிகாரி, சவுக்கின் மீது எப்படி புகார் கொடுக்கலாம் என்று கேள்வி எழுப்பப் படும்.
உங்களை குறுக்கு விசாரணை செய்யவென்றே, ஈரோட்டிலிருந்து, குறுக்கு விசாரணையில் மிகச் சிறந்த வழக்கறிஞரை சவுக்கு வரவழைக்க இருக்கிறது. சரியான படி, திட்டமிட்டு நேரம் இருந்தால், சவுக்குக்காக, டெல்லியிலிருந்தே வழக்கறிஞரை வரவழைக்கவும் திட்டம் இருக்கிறது.
உங்கள் நோய் உங்களுக்கு அளிக்கும் வேதனையை விட, சவுக்கின் குறுக்கு விசாரணையில் வழக்கறிஞர்கள் உங்களுக்கு அதிக வேதனையை தர காத்திருக்கிறார்கள்.
என்.ஆர்.இளங்கோ ஒட்டக் கூத்தருக்கு அளித்த உறுதி மொழி மூலமாக சாட்சி சொல்லாமல் தப்பி விடலாம் என்று மனப்பால் குடிக்காதீர்கள். சவுக்கு ஒரு ‘விடாது கருப்பு’.
சவுக்கு சொன்ன இரண்டு யோசனைகளை பரிசீலியுங்கள். அப்புறம் நீங்களாக வந்து சிக்கிக் கொண்டால், சவுக்கு உங்களுக்கு பரிதாபமெல்லாம் பார்க்காது. பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள்.
பூந்தமல்லி, செங்கல்பட்டு முகாமில் நான்கு ஆண்டுகளாக அகதிகளை அடைத்து, அவர்களை வதைத்து வரும் நீங்கள் பெண் அல்ல பேய்.
காவல்துறை பொறுக்கிகளை ஆயுதம் கொடுத்து அனுப்பி, வழக்கறிஞர்களை மிருகத்தனமாக தாக்க உத்தரவிட்ட நீங்கள் பெண் அல்ல பேய்.
கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டிய நான்கு வழக்கறிஞர்களை திமுக ரவுடிகள், கருணாநிதி முன்பாகவே தாக்கிய போதும், பத்திரிக்கையாளர்கள் தாக்கப் பட்ட போதும், எந்த விசாரணைக்கும் உத்தரவிடாமல் மவுனம் சாதித்த நீங்கள் பெண் அல்ல பேய்.
தமிழகம் முழுக்க பல்வேறு நபர்களை போலி என்கவுண்டர்கள் மூலம் படு கொலை செய்த நீங்கள் பெண் அல்ல பேய்.
நியாயமான பதவி உயர்வு வரவேண்டிய நட்ராஜ் என்ற அதிகாரியை டிஜிபி ஆக்காமல், லத்திக்கா சரணை சட்டவிரோதமாக டிஜிபி ஆக்கிய நீங்கள் பெண் அல்ல பேய்.
இது போல நீங்கள் பெண் அல்ல பேய் என்பதற்கான காரணங்கள் ஏராளமாக உண்டு. ஆகையால் சவுக்கிடம் இரக்கத்தை எதிர்ப்பார்க்காதீர்கள்.
உங்கள் வருகையை சவுக்கு ஆவலோடு எதிர்ப்பார்த்து காத்திருக்கிறது. ஏமாற்றாதீர்கள் மாலதி….