தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு, ஒரு நாடகத்தை அரங்கேற்ற திட்டமிட்டு, நேற்று இரவு இலங்கை சென்ற, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை, இலங்கை அரசு நேற்று திருப்பி அனுப்பியது.
பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் பங்கேற்று, அங்கே புகைப்படம் எடுத்து, அதை சுவரொட்டிகளாக தமிழகமெங்கும் ஒட்டி, அதை வைத்து சட்டசபைத் தேர்தலில் ஆதாயம் தேடலாம் என்று திட்டமிட்டிருந்த தொல்.திருமாவளவனுக்கு, இது பெரும் பின்னடைவு என்று கருதப் படுகிறது.
ஈழ ஆதரவாளர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ஈழத் தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்துக் கொண்டு, தமிழனின் மானத்தையும், தலித்துகளின் மானத்தையும், அந்தோனியோ மொய்னோவின் காலடியில் அடகு வைத்த திருமாவளவனுக்கு, தேசியத் தலைவரின் தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எந்த உரிமையும் இல்லை, அவரை இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பியது சரியே என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே, விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்கள், திருமா திருப்பி அனுப்பப் பட்டதை கண்டித்து, இலங்கை துணைத் தூதரகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.