காங்கிரஸ் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை கடந்த ஞாயிறன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்ள விபரங்கள் பல்வேறு பத்திரிக்கைகளில் தப்பும் தவறுமாக வந்த வண்ணம் உள்ளன.
ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்பது பலருக்கும் தெரியாது. என்ன நடந்தது என்பதை சவுக்கு தனது வாசகர்களுக்கு தெரியப்படுத்த கடமைப் பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை மணிரத்னம் திரைப்பட பாணியில் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
கருணாநிதி வாங்க..
சிதம்பரம் வந்துட்டோம்.
தங்கபாலு வேணும்
டி.ஆர்.பாலு எங்களுக்கும் வேணும்
வாசன் லுல்ளலளல்ளழல்ல
கருணாநிதி புரியல
ஜெயந்தி எங்களுக்கும் புரியல
தங்கபாலு வேணும். 90 வேணும்
டி.ஆர்.பாலு 90 டாஸ்மாக்ல இல்ல. குவார்டர் தான் இருக்கு
ஜெயக்குமார் அது இல்ல. சீட் வேணும். 90 சீட் வேணும்
கருணாநிதி தோணும். இப்டியெல்லாம் யோசிக்க தோணும்
தங்கபாலு போவோம். போயஸ் கார்டன் போவோம்
டி.ஆர்.பாலு கிடைக்காது.. நீங்க கேக்கறது கிடைக்காது
சிதம்பரம் விடமாட்டோம்.
கருணாநிதி தரமாட்டோம்.
சிதம்பரம் ஸ்பெக்ட்ரம்
டி.ஆர்.பாலு ஓல்டு மங்க் ரம்
சிதம்பரம் சிபிஐ
கருணாநிதி பாத்துருக்கோம்
தங்கபாலு துணை முதல்வர்
கருணாநிதி முதல்வருக்கு துணை
ஜெயக்குமார் நிதித்துறை
டி.ஆர்.பாலு கழிவறை
சிதம்பரம் கலைஞர் டிவி
கருணாநிதி முடிந்தது
ஜெயந்தி தயாளு
டி.ஆர்.பாலு பாத்துக்கறோம்
வாசன் லுல்லுலுல்லலல்ளள்லா
கருணாநிதி தமிழ். தமிழ்.
ஜெயக்குமார் இது தமிழ் தான்
டி.ஆர்.பாலு இல்ல. துளு
சிதம்பரம் 90
கருணாநிதி நிறுத்தச் சொல்லு. எல்லாத்தையும் நிறுத்தச்
சொல்லு
சிதம்பரம் நிறுத்தினா
டி.ஆர்.பாலு 50
ஜெயந்தி அப்போ நிறுத்த முடியாது
கருணாநிதி அப்போ 40
சிதம்பரம் அப்போ திகார்.
கருணாநிதி எனக்கா ?
சிதம்பரம் ராஜாத்திக்கு, தயாளுவுக்கு, கனிமொழிக்கு
கருணாநிதி 90
சிதம்பரம் 120
கருணாநிதி அதிர்ச்சியடைகிறார்.
வெளியில் வந்து செய்தியாகர்களை சந்தித்த, ப.சிதம்பரமும், டி.ஆர்.பாலுவும், முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்ததாகவும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடரும் என்றும் தெரிவித்தார்கள்.