இன்று இலங்கைத் துணைத் தூதரகத்தை திருமாவளவன் முற்றுகிகையிட்டு, தனது விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தினருடன் கைதானார். அப்போது செய்தியாகர்களிடம் பேசுகையில், மிகவும் உருக்கமாக, ஒரு இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கூட அனுமதிக்காத ராஜபக்ஷே அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து விட்டு, உடனடியாக இலங்கைத் தூதரகத்தை மூட வேண்டும் என்றும், ஒரு எம்பியை இலங்கைக்குள் அனுமதிக்காமல் மறுத்ததன் மூலம், இந்திய அரசையே இலங்கை அவமதித்து விட்டது என்றும், இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.