திமுகவை சுயமரியாதையோடும் மானத்தோடும் நடந்து கொள்ளுமாறு, திராவிடர் கழகத் தலைவர் குஞ்சாமணி இன்று வெளியிட்ட அறிக்கையைல் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமையை ‘குட்டக் குட்ட குனிய வேண்டாம் என்றும், திமுக சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும் தீரமிக்க திமுகவுக்கு தாய்க் கழகத்தின் வேண்டுகோள் என்று தெரிவித்துள்ளார்.
அரசியல் நோக்கர்கள், காங்கிரஸை சீண்டிப் பார்க்க, திமுக தலைமை கையாளும் உத்தியே இது என்ற குறிப்பிடுகின்றனர். உச்ச நீதிமன்றத்திலோ, உயர்நீதிமன்றத்திலோ, திமுகவுக்கோ, கருணாநிதிக்கோ எதிரான தீர்ப்புகள் ஏதேனும் வந்தால், உடனடியாக நீதிமன்றத்தை உச்சிக் குடுமி மன்றம் என்று விமர்சிக்க குஞ்சாமணியை கருணாநிதி பயன்படுத்தவது போலவே, இந்த முறை காங்கிரஸை சீண்டிப் பார்ககவும், குஞ்சாமணியை பயன்படுத்தியுள்ளதாக, தெரிகிறது.