இன்று தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, தளபதி என்றவுடன் எந்தப் போரில் சண்டையிட்டு வெற்றி பெற்றார் என்று அதிகப் பிரசங்கித் தனமாக கேட்காதீர்கள். தன்னுடைய அண்ணன் அஞ்சாநெஞ்சனோடு போடும் சண்டையை விடவா பெரிய சண்டை வேண்டும் ? அப்படிப் பட்ட வீரத் தளபதி மு.க.ஸ்டாலினுக்கு இன்று பிறந்த நாள். இது தமிழக வரலாற்றில் பொன்னாள் அல்லவா ? அந்தப் பொன்னாளில், அடிமைகள் சென்று சந்தித்து, தளபதிக்கு வாழ்த்துச் சொல்வதை விட வேறு என்ன வேலை ? ஒரு வேளை, மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் ? எதற்கும் இருக்கட்டுமே…. ?
இந்த மலர்கொத்துக்களுக்கான பணத்தை தங்கள் சொந்த பாக்கெட்டிலிருந்து வாங்கியிருப்பார்கள் என்று மட்டும் தவறாக நினைத்து விடாதீர்கள். அவ்வளவு சூடு சொரணையெல்லாம் இந்த அதிகாரிகளுக்கு இல்லை. அதற்காகத் தான் எப்போதும் இருக்கிறதே… “ரகசிய நிதி”
இதோ அந்த அடிமைகள்.
எத்தனையோ பேர் போட்டோக்கு போஸ் குடுத்தாலும், ஒட்டக் கூத்தர் இஷ்டைலே தனி பாஸு. ட்ரெஸ்ஸெல்லாம் இஷ்டைலாத் தான் பண்றாரு…. பைவ் ஸ்டார் ஓட்டலுக்கு போனாத்தான் ஓசில துண்றாரு…. இன்னா பண்றது…. ?