இனிக்காத சர்க்காரியா முதல் பாகம் எழுதியதையடுத்து, பின்னூட்டங்களில் பல கண்டனங்கள் வந்திருந்தன. ராசாத்தி அம்மாளின் தனிப்பட்ட வாழ்க்கையையும், கருணாநிதியின் தனிப்பட்ட வாழ்க்கையையும் எழுதுவதால் யாருக்கு என்ன பயன் என்று ? அதற்கு பதில் எழுதியிருந்தாலும், மேலும் சில கண்டனங்கள் வரத்தான் செய்தன.
அது முதல் பாகம் தோழர்களே… இந்த இரண்டாவது பாகத்தை படியுங்கள். படித்துவிட்டு, முதல் பாகம் அவசியமா இல்லையா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.
“1969ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் நாளில் திருமதி, தர்மா, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் எண் 9, முதல் குறுக்குத் தெருவில் உள்ள வீட்டை திருமதி.ஈ.எல்.விசுவாசம் என்பவரிடமிருந்து ரூ.57,000 க்கு கிரயத்திற்கு வாங்கியதாக கூறப்படுகிறது.
1970ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21ம் நாளில் திருமதி.தர்மா அதே வீட்டை 60 ஆயிரத்திற்கு விற்று விட்டார். இதற்கு பதிவுப் பத்திரம் ஒன்றும் இருக்கிறது. (ஆவணம் எண் 1523/70). அந்த விற்பனைப் பத்திரத்தில் பதிவாளர், அந்த வீட்டை வாங்குபவரான டி.கே.கபாலி, ராஜாத்தி என்ற திருமதி தர்மாவுக்கு ரூ 14,000 ரொக்கம் தம் முன்னிலையில் கொடுத்ததாக எழுதி வைத்திருக்கிறார். அதே நாளன்று திருமதி தர்மா பதிவு செய்யப் படாத குத்தகைப் பத்திரம் ஒன்றை டி.கே.கபாலியின் பெயருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். அதன் படி மாதம் ரூ.300 அவருக்கு வாடகையாக கொடுக்க வேண்டும்.
1972ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் நாளில் கபாலி இந்த வீட்டை திருமதி தர்மாவின் தாயார் திருமதி.சிவபாக்கியம் அம்மாளக்கு ரூ.45 ஆயிரத்துக்கு விற்றார். இதற்குப் பதிவு பெற்ற பத்திரம் ஒன்று இருக்கிறது. இந்த வீட்ப் பொறுத்தவரையில் சிவபாக்கியம் அம்மாள் 1972ம் ஆண்டு மார்ச்சு மாதம் 20ம் நாளில் அவரது மகள் திருமதி.தர்மா, தர்மாவின் மகள் கனிமொழி ஆகியோரின் பெயருக்குச் செட்டில்மென்ட் பத்திரம் ஒன்றை எழுதிக் கொடுத்தார். இந்தப் பத்திரத்தில் மேற்படி சொத்து அவர் மரணத்துக்குப் பின்னர் அவர்களைச் சேரும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நான்கு விவகாரங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் மேலும் சில விவரங்களை இங்கே குறிப்பிடலாம்.
முதற்கண் 1969ம் ஆண்டு, ஜனவரி மாதம் 20ம் நாள் திருமதி தர்மா வாங்கிய வீடு ரூ.5,415 மதிப்புள்ள முத்திரைத் தாளில் 82/1969ம் ஆவணமாக பதிவு செய்யப் பட்டது. இதற்கு பதிவுக் கட்டணமாக ரூ.291 செலுத்தப் பட்து. இதனை மயிலாப்பூர் உதவிப் பதிவாளர் திரு.வி.எஸ்.தாமோதரன் பதிவு செய்தார். அச்சமயம் அஞ்சல் துறையில் அஞ்சல் பிரிப்பாளராக இருந்த திரு.கருணானந்தம் உதவிப் பதிவாளர் முன்னிலையில் கிரயதாரருக்கு ரூ.57 ஆயிரம் கொடுத்தார். திரு.கருணானந்தம் இப்பணத்தை திருமதி தர்மாவிடமிருந்து வாங்கி அவர் சார்பில் விற்பவருக்கு கொடுத்ததாகக் கூறினார்.
பட்டயக் கணக்கர் திரு.ஜெகதீசன் மூலமாக வருமானவரி அதிகாரிக்கு அனுப்பி 1973ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் நாளிட்ட தனது கடிதத்தில் திருமதி தர்மா இந்த வீட்டை வாங்குவதற்காக அவர் கபாலியிடமிருந்து ரூ.40 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், எஞ்சியுள்ள 23 ஆயிரத்தை தனது சொந்த சேமிப்பிலிருந்து கட்டியதாகவும் கூறினார். ரூ.40 ஆயிரம் கொடுத்ததற்கு சான்றாக பதிவு பெறாத 1970ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் நாளிட்ட ஒப்பந்தம் ஒன்று இருக்கிறது. இது கபாலியின் பெயருக்கு அவர் எழுதிக் கொடுத்ததாகும். அதில் மேற்படி தொகை ரூ. 15 ஆயிரம் என்று மூன்று ஆறுமாதத் தவணைகளில் திருப்பிக் கொடுக்கப் படும் என்றம், அப்படிக் கொடுக்கத் தவறினால் மேற்படி சொத்தை கபாலிக்கு விற்று விடுவதாகவும் அதில் நிபந்தனை குறிப்பிடப்டிருந்தது. மேற்சொன்ன கடனைத் தவணைகளில் செலுத்த வேண்டும். இதற்குச் சான்றாக 1970ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21ம் நாளில் திருமதி.தர்மாவால் எழுதிக் கொடுக்கப் பட்டது. திருமதி.தர்மாவிடமிருந்து ரூ.40 ஆயிரம் பெற்றுக் கொண்டதாக டி.கே.கபாலி இந்தப் புரோநோட்டில் எழுதி வைத்தார். இந்தப் புரோ நோட்டைப் பட்டயக் கணக்கர் ஜெகதீசன் அலுவலகத்திலிருந்து 1976ம் ஆண்டு, மார்ச்சு மாதம் 23ம் நாளில் வருமான வரி உதவி இயக்குனரால் கைப்பற்றப் பட்டது.
புலனாய்வு அறிக்கையின் படி, திருமதி.தர்மாவுக்கு கபாலி ரூ.40 ஆயிரம் கொடுத்துள்ளதாகத் தோன்றுகையில் அவருக்குப் பெரும் நிதி நெருக்கடி இருந்தது. 1969ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளில் கபாலி இந்தியன் வங்கியிடமிருந்து ரூ.20 ஆயிரம் கடன் கேட்டு இருந்தார். அவரது கடன் விண்ணப்பத்தில் வங்கிக்கு கொடுக்க வேண்டிய இருப்புகள், பொறுப்புகள் அறிக்கையில் திருமதி தர்மாவுக்கு ரூ.40 ஆயிரம் கடன் கொடுத்திருப்பதை குறிப்பிடவில்லை. 1970ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் நாளில் திரு.கபாலி 1969-70ம் ஆண்டுக்கான தமது வருமான வரிக் கணக்கை நிகர ஆண்டு வருமானம் 3,500 என்று கணக்குக் காட்டி தாக்கல் செய்தார்.
1973ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் நாளில் கபாலி 1971-72 ்ம ஆ்ணடு்ககான கண்ககை ரூ.4819 நிகர நட்டமென காட்டித்தாக்கல் செய்தார். இந்தக் கணக்கில் திருமதி தர்மாவுக்குக் கொடுத்த தொகையையும், வி.சிவபாக்கியம் அம்மாளிடமிருந்து ரூ.20 ஆயிரம் கடன் பெற்றதையும் அவர் காட்டியிருந்தார்.
புகார் மனு கொடுத்தவர்கள் இந்தக் குற்றச் சாட்டுகளைக் கொடுத்த பல ஆண்டுகளுக்குப் பின்னர் கபாலி தானே முன்வந்து திருத்த வருமான வரிக் கணக்கொன்றை 1975ம் ஆண்டு மார்ச்சு மாதம் 5ம் நாளில் தாக்கல் செய்தார். அதில் 1968-69ம் ஆண்டுக்கும் நிகர வருமானம் 12,490 எனக் காட்டியிருந்தார்.
எண் 9 முதல் குறுக்குத் தெருவில் உள்ள இந்த வீட்டில் விற்பனை பத்திரம் 21.03.1970ல் கபாலியின் பெயருக்கு திருமதி.தர்மா எழுதிக் கொடுத்ததாகும். இந்தப் பத்திரம் மயிலாப்பூர் உதவி பதிவாளரால் பதிவு செய்யப் பட்டது.
உதவிப் பதிவாளர் பி.எஸ்.தாமோதரன், விற்பனைப் பத்திரத்தில் தாம் எழுதியுள்ளதை மறுத்துக் கூறியதாவது. ’21.08.1970 அன்று மாலை சுமார் 5.45 மணிக்க திரு.கருணாநிதியின் தனிச் செயலாளர் வைத்தியலிங்கம் அலுவலகத்திற்கு வந்து அவரை அரசு வண்டி ஒன்றில் ஏற்றிக் கொண்டு ராஜா அண்ணாமலைபுரம், முதல் குறுக்கத் தெருவில் உள்ள 9ம் எண் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். திரு.கபாலியும் அங்கு வந்தார். விற்பனைப் பத்திரக்திற்கான வரைவு ஒப்புதல் அளிக்கப் பட்ட பின்னர் அது, முதலமைச்சர் திரு.கருணாநிதியின் நேர்முக உதவியாளர் சண்முகநாதனால் தட்டச்சு செய்து பெறப்பட்டது. அதன்பின்னர் ராஜாத்தி என்ற திருமதி தர்மாவின் கையொப்பத்துடன் அது கொடுக்க பபட்டது. திருமதி தர்மாவைப் பார்க்கவேயில்லை. முதலமைச்சர் கருணாநிதியின், அவரது நேர்முக உதவியாளர் ஆகியோரது முன்னிலையில் கபாலி, சாட்சியின் முன்னிலையில் ரூ.14 ஆயிரம் ரொக்கம் தம்மால் கொடுக்கப் பட்டது என்று விற்பனைப் பத்திரத்தில் எழுதும்படி கபாலி கேட்டார். முதலமைச்சரிடமிருந்து இப்படிப்பட்ட கட்டனை வருவதாகக் கருதி அவ்வாறே கிரயதாரரான கபாலி விற்பவருக்கு ரூ.14 ஆயிரம் ரொக்கம் கொடுத்ததாக விற்பனைப் பத்திரத்தில் எழுதப் பட்டது.
இந்த விற்பனைப் பத்திரத்தில் சாட்சிகளாக கையொப்பமிட்டுள்ள முருகேசன் மற்றும் சத்தியமூர்த்தி இருவரும், ஆவணத்தில் கையொப்பமிடும் போது அந்தப் பத்திரத்தில் என்ன எழுதப் பட்டுள்ளது என்பது தங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர்.”
இது சர்க்காரியா கமிஷனின் விசாரணை அறிக்கையில் ஒரு சிறு பகுதி மட்டுமே…. ஒரு வீட்டை வாங்குவதற்கே எப்படிப் பட்ட தில்லுமுல்லுகளை அரங்கேற்றியுள்ளனர் என்பதை பாருங்கள்.
ஆயிரக்கணக்கில் செய்த இதே தில்லுமுல்லுகள் அன்று தண்டிக்கப் படாமல் போனதன் விளைவுதான் இன்று ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய்களாக வளர்ந்து நிற்கிறது. அந்த தில்லு முல்லின் வெளிப்பாடே, அண்ணா சாலை வோல்டாஸ் கட்டிடம், ஊட்டி வின்ட்சர் எஸ்டேட் கட்டிடம், இந்தியா முழுக்க நட்சத்திர ஹோட்டல்கள்…
ஜெயலலிதாவை வாய்தா ராணி, ஊழல் வழக்கிலிருந்து தப்பித்தார் என்று கருணாநிதி லட்சக்கணக்கான முறை கூறியிருப்பார். ஜெயலலிதா தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்தே விடுதலை பெற்றிருக்கிறார். ஆனால், கருணாநிதி, சர்க்காரியா கமிஷனால் குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப் பட்ட பின் இந்திரா காந்தியின் காலில் விழுந்து, ஆயிரக்கணக்கானோர் உழைத்து நடத்தப் பட்ட விசாரணையை மீளாத் துயிலில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல், அந்த அறிக்கையின் நகல்களையும் ஒளித்து வைக்கிறார்.
தொடர வேண்டுமா இந்தக் குடும்ப ஆட்சி…. ? முடிவு செய்யுங்கள்.