பெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதி நாயகர் குன்ஹா, அந்த வழக்கில் ஜெயலலிதாவும், சசிகலாவும், கீழ்கண்ட பினாமி நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
1) ஜே ஃபார்ம் ஹவுசஸ்
2) ஜே எஸ் ஹவுசிங் டெவலப்மென்ட்
3) ஜே ரியல் எஸ்டேட்
4) ஜெயா கான்ட்ராக்டர் அன்ட் பில்டர்ஸ்
5) ஜே எஸ் லீசிங் அன்ன் மெயின்டெனன்ஸ்
6) க்ரீன் ஃபார்ம் ஹவுசஸ்
7) மெட்டல் கிங்.
8) சூப்பர் டூப்பர் டிவி லிமிட்டெட்
9) ஆஞ்சனேயா ப்ரின்டர்ஸ்
10) ராம்ராஜ் அக்ரோ மில்ஸ்
11) சினோரா பிசினெஸ் என்டர்ப்ரைசஸ்
12) லெக்ஸ் ப்ராப்பர்டீஸ் டெவலப்மென்ட்
13) ரிவர்வே அக்ரோ ப்ராடக்ட்ஸ்
14) மீடோ அக்ரோ ஃபார்ம்ஸ்
15) இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அன்ட் பார்மசூட்டிக்கல்ஸ்
16) ஏ.பி அட்வர்டைசிங் சர்வீசஸ்
17) விக்னேஷ்வரா பில்டர்ஸ்
18) லட்சுமி கன்ஸ்ட்ரக்சன்ஸ்
19) கோபால் ப்ரமோட்டர்ஸ்
20) சக்தி கன்ஸ்ட்ரக்சன்ஸ்
21) நமசிவாயா ஹவுசிங் டெவலப்மென்ட்
22) அய்யப்பா ப்ராப்பர்டி டெவலப்மென்ட்ஸ்
23) சீ என்க்ளேவ்
24) நவசக்தி கான்ட்ராக்டர்ஸ் அன்ட் பில்டர்ஸ்
25) ஓஷியானிக் கன்ஸ்ட்ரக்சன்ஸ்
26) க்ரீன் கார்டன் அபார்ட்மென்ட்ஸ்
27) மார்பிள் மர்வெல்ஸ்
28) வினோத் வீடியோ விஷன்
29) ஃபேக்ஸ் யுனிவெர்சல்
30) ஃப்ரெஷ் மஷ்ரூம்ஸ்
31) சூப்பர் டூப்பர் டிவி மற்றும்
32) கொடநாடு டீ எஸ்டேட்.
பேக்ஸ் அனுப்புவது முதல் காளான் வளர்ப்பு வரை ஒரு தொழில் விடாமல் தொடங்கி நடத்தியிருக்கிறார்கள் பார்த்தீர்களா ?
30 ஆகஸ்ட் 1994 அன்று தொடங்கப்பட்ட மற்றொரு நிறுவனம், ஸ்ரீ ஜெயா ஃபினான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ். இந்த நிறுவனம், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் பெயரிலேயே தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் தொடங்கப்படுகையில் 50 லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளது
இந்த நிறுவனத்தின் நோக்கமாக குறிப்பிடப்பட்டிருப்பது என்னவென்றால், அசையும் அசையா சொத்துக்களின்பேரில் நிதி வழங்குவது, கடன் வழங்குவது ஆகியன. பின்னாளில் 2002ம் ஆண்டு, தங்கம், முத்து, பவளம், வைரம் வைடூரியம் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு கடன் வழங்கலாம் என்று திருத்தம் செய்யப்படுகிறது. சுருக்கமாக சொன்னால், மார்வாடிக் கடை.
இந்த நிறுவனம் ஒரு வேளை சொத்துக்குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தால், ஜெயலலிதாவின் சொத்துக்கள் 66.50 கோடிக்கு பதிலாக, 67 கோடிகளாக இருந்திருக்கும்.
1994ல், 50 லட்ச ரூபாய் என்பது இன்றைய தேதிக்கு என்ன மதிப்பு என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரைக் கொண்டே தொடங்கப்பட்டுள்ளது.
மீண்டும் 2001ல், ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்த பின்னால், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் இந்த நிறுவனங்களில் இருந்து விலகிக் கொள்கின்னறனர். இவர்கள் விலகியதை அடுத்து, இளவரசியின் மருமகன்களில் ஒருவரான வி.எஸ்.சிவக்குமார் மற்றும் அனந்தராமன் ஆகியோர் இயக்குநராகின்றனர்.
2008ம் ஆண்டில், திமுக ஆட்சிக்காலம் நடந்து கொண்டிருக்கையிலேயே, இந்த நிறுவனத்தின் முதலீடு 50 லட்சத்திலிருந்து ஆறு கோடியே ஆறரை லட்சமாக உயர்த்தப்படுகிறது.
தற்போது இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் யார் தெரியுமா ? ஏற்கனவே நாம் பார்த்த ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் இயக்குநர்களான கார்த்திகேயன் கலியபெருமாள் மற்றும் சிவக்குமார் ஆகிய இருவரே. மூன்றாவதாக இவர்களோடு இயக்குநராக இருப்பவர் பெருந்தொழிலதிபர் பூங்குன்றன்.
சரி. இப்படி ஆறரை கோடி உயர்த்தி என்ன செய்யப்போகிறார்கள் என்று உங்களுக்கு வியப்பு வருமல்லவா ? வருமானமே இல்லாத ஏழைப் பெண் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார்கள் என்றால் வியப்பாக இருக்கும். அந்தப் பெண் வேறு யாருமல்ல. மக்கள் முதல்வர் என்று அழைக்கப்படும் ஜெயலலிதாதான் அந்த ஏழைப் பெண்.
செப்டம்பர் 2012 அன்று உள்ளபடி இந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைப் பார்ப்போம். இந்த நிறுவனம் உலகத்திலேயே இல்லாத ஒரு மிகப்பெரிய நிதி நிறுவனம் என்று இந்த நிறுவனத்தில் அடித்துப் பிடித்துக்கொண்டு ஏராளமானவர்கள் பங்கு முதலீட்டுக்காக வருகிறார்கள். அவர்கள் யார் என்பதுதான் சுவையான செய்தி. மூன்று கோடியே பதினைந்து லட்சம் முதலீடு செய்து பங்கு கேட்டுள்ள முதல் நிறுவனம் எது தெரியுமா ? நமது எம்ஜிஆர். இந்த நமது எம்.ஜி.ஆர் நிறுவனத்தை வைத்துத்தான் பெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்கையே முடிக்க முயன்றனர் ஜெயலலிதாவும் சசிகலா என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக 76 லட்சம் முதலீடு செய்திருப்பது, ஜெயா ப்ரின்டர்ஸ். அடுத்து 53 லட்சம் முதலீடு செய்துள்ள நிறுவனம் ஜே ஃபார்ம் ஹவுஸ். 28 லட்சம் முதலீடு செய்துள்ள அடுத்த நிறுவனம் மகாசுகலட்சுமி திருமண மண்டபம். அடுத்ததாக வருபவர் சிவக்குமார். வெறும் 20 ஆயிரம்தான். ஒரு கோடியே 50 லட்சம் முதலீடு செய்துள்ள அடுத்த நிறுவனம், சேஷியேட் பினான்ஸ் நிறுவனம். இது என்ன புது நிறுவனம் என்று உங்களுக்கு சந்தேகம் எழலாம். இந்த நிறுவனத்தின் இயக்குநர் யார் தெரியுமா ? வேறு யாருமல்ல. இதே விஎஸ்.சிவக்குமார்தான். அடுத்தாக 5 கோடியே 19 லட்சம் முதலீடு செய்துள்ள அடுத்த நிறுவனம் ஸ்ரீ ஜெயா பப்ளிகேஷன். இந்தத் தொகைகள் அனைத்தும், ஜெயா பினான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுனத்தில் பங்கு வாங்குவதற்காக முதலீடு செய்யப்பட்ட தொகை. மொத்த முதலீடு 11 கோடியே 43 லட்சத்து 21 ஆயிரத்து 900.
ஜெயா பினான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம், எத்தனை பேருக்கு கடன் கொடுத்துள்ளது தெரியுமா ?
ஃபேன்சி ட்ரான்ஸ்போர்ட்ஸ் 15 லட்சம். க்ரீன் ஃபார்ம் ஹவுஸ் 5 லட்சத்து 50 ஆயிரம். ஜெயா ப்ரின்டர்ஸ் 33 லட்சம். ஜெயா ரியல் எஸ்டேட்ஸ் 17 லட்சம். லெக்ஸ் ப்ராப்பர்டீஸ் அன்ட் டெவலப்பர்ஸ் 41 லட்சத்து 65 ஆயிரம். இளவரசி 11 லட்சத்து 13 ஆயிரம். வி.கே.சசிகலா 10 லட்சத்து 49 ஆயிரம். மக்கள் முதல்வர் ஜெயலலிதா 1 கோடியே 92 லட்சத்து 20 ஆயிரம். ஸ்ரீ ஹரி சந்தானா ரியல் எஸ்டேட்ஸ் 2 கோடியே 19 லட்சம். ராயல் வேலி ஃப்ளிடெக் எக்ஸ்போர்ட்ஸ் 45 லட்சம். அவிக்னா அக்ரோ 15 லட்சம் காட்டேஜ் ஃபீல்ட் ரிசார்ட்ஸ் 50 லட்சம். மொத்தம் 6 கோடியே 54 லட்சத்து 97 ஆயிரம்.
இது நெடுங்காலக் கடன். குறுகிய காலக் கடன் என்று ஒன்று உள்ளது அல்லவா ? குறுகிய காலக் கடன் யார் யாருக்கெல்லாம் அளித்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்.
அவிக்னா அக்ரோ பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்துக்கு 11 லட்சம். ஃப்ளாட்டுகள் வாங்க முன்பணம் 40 லட்சம். நிலம் வாங்க முன்பணம் 28 லட்சம். அவிரி ப்ராப்பர்ட்டிஸ் நிறுவனத்துக்கு 4 கோடி. பரணி ரிசார்ட்ஸ் நிறுவனத்துக்கு 1 கோடியே 39 லட்சம். காட்டேஜ் ஃபீல்ட் ரிசார்ட்ஸ் நிறுவனத்துக்கு 30 லட்சம். கோவிந்தராஜன் என்பவருக்கு 85 லட்சம். ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்துக்கு ஒரு கோடியே 36 லட்சம். (இந்த ஹாட் வீல்ஸ் நிறுவனத்தைப் பற்றி ஏற்கனவே பார்த்திருக்கிறோம்). இதயம் ஹோம்ஸ் அன்ட் பில்டர்ஸ் நிறுவனத்துககு 71 லட்சம். குமாரவேலன் என்பவருக்கு 3 லட்சம். மாருதி ட்ரான்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துககு 79 லட்சம். மற்றவர்கள் ஒரு கோடியே 4 லட்சத்து ஆயிரத்து நாற்பது ரூபாய். ஜெயா இன்வெஸ்ட்மென்ட் ஏஜென்சி 40 லட்சம். வி.ஆர்.குரோத்துங்கன் 2 லட்சத்து 50 ஆயிரம். வர வேண்டிய வட்டி 1 லட்சத்து 63 ஆயிரத்து 999. வரவேண்டிய வாடகை 5 லட்சம். வேர்ல்ட் ராக் ப்ரைவேட் லிமிட்டெட் 7 லட்சம் மற்றும் க்யூரியோ ஆட்டோ மார்க்ஸ் 50 ஆயிரம். மொத்த குறுகியகாலக் கடன் 10 கோடியே 79 லட்சத்து 15 ஆயிரத்து 39.
கடன் ஒரு பக்கம். இந்த நிறுவனம் செய்துள்ள முதலீடுகள் என்னென்ன தெரியுமா ? பாரத் என்டர்டெயின்மென்ட் ஒரு கோடியே 30 லட்சம். காட்டேஜ் பீல்ட் ரிசார்ட் ஒரு கோடியே 83 லட்சம். அவிக்னா அக்ரோ, ஃபேன்சி ட்ரான்ஸ்போர்ட், ஹாட்வீல்ஸ் இன்ஜினியரிங் மற்றும் மாருதி ட்ரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் தலா 49 ஆயிரம். சாஸ்திரி நட்ஸ் அன்ட் ப்ளேட்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம். சுக்ரா கிளப்பில் 10 லட்சம். மொத்தம் 5 கோடியே 47 லட்சத்து 78 ஆயிரம்.
இதில் முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது, முதலீடு செய்தது, குறுகிய கால கடன், நீண்ட கால கடன் என்று அத்தனை நிறுவனங்களும், மீண்டும் மீண்டும் மாற்றி மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
சரி. ஒரு நிதி நிறுவனம், மற்ற நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் கடன் கொடுப்பது அப்படி என்ன தவறா என்ற கேள்வி எழும்.
இந்த அத்தனை நிறுவனங்களும் ஜெயலலிதாவின் பினாமி நிறுவனங்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
வரக்கூடிய கட்டுரைகளில் பார்ப்போம்.
alert(‘Hi’)
function OnLoadCall() {
document.getElementById(“commentform”).innerHTML = “Savukku”;
}
function OnLoadCall() {
document.getElementById(“commentform”).innerHTML = “Savukku Site”;
}