ஜெயலலிதாவின் மேல் முறையீடு குறித்து, உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பிணையை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்துள்ள உச்சநீதிமன்றம், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்; இதற்காக சிறப்பு அமர்வு ஒன்றை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்திற்கு ஆணையிட்டிருக்கிறது.
இந்த தீர்ப்பு குறித்து, அதிமுக தரப்பில் இது அம்மாவுக்கு பெரும் வெற்றி என்று கூறப்படுகிறது. அம்மா நினைத்தது போலவே, விரைவாக இந்த வழக்கை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்மா நினைத்தது போலவே, மே மாதம் முன்பாக அம்மா மீண்டும் முதல்வராக அமர்வார் என்று அடிமைகள் கூக்குரலிட்டுக் கொண்டுள்ளனர்.
அதிமுக அடிமைகள் இப்படிக் கூறிக்கொண்டிருந்தாலும், நடுநிலையாளர்கள் மத்தியில், இந்த உத்தரவு பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்ட பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், , “உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய நீதித்துறை வரலாற்றில் இதற்கு முன் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரியவில்லை. கடந்த காலத்தில் இதே போன்ற கோரிக்கை ஜெயலலிதா தரப்பில் முன்வைக்கப்பட்டபோது அதை உச்சநீதிமன்றம் நிராகரித்த வரலாறு உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நிலுவையிலுள்ள கிரிமினல் வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம் உதவ வேண்டும் என்று கடந்த ஜூன் 11 ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டார். ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து விட்ட அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, “சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதற்காக அவர்கள் மீதான வழக்குகளை விரைவாக நடத்தினால், அதன் காரணமாக ஏற்கனவே நிலுவையில் உள்ள மற்ற வழக்குகள் பாதிக்கப்படும். குறிப்பிட்ட சிலரின் வழக்குகளை விரைவாக நடத்துவதை விட அனைத்து வழக்குகளையும் விரைந்து விசாரிப்பதற்கான நடைமுறையை உருவாக்குவது தான் சிறந்தது” என்று தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில் ஜெயலலிதாவுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்? என்பது தான் மக்கள் மனதில் எழுந்துள்ள மிகப்பெரிய வினாவாகும். ஊழல் வழக்குகள் விரைந்து விசாரித்து முடிக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கம் கூட இதற்கு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த நல்ல நோக்கத்தை காட்டுவதற்குக்கூட இவ்வழக்கு தகுதியற்றது என்பது தான் மக்களின் கருத்தாகும். அதிகபட்சமாக ஓராண்டிற்குள் விசாரித்து முடிக்கப்பட வேண்டிய சொத்துக்குவிப்பு வழக்கை 17 ஆண்டுகளுக்கு இழுத்தடித்தவர் ஜெயலலிதா. இல்லாத காரணங்களைக்கூறி வழக்கு விசாரணையின்போது 185 முறை வாய்தா வாங்கியவர். இப்படிப்பட்ட ஜெயலலிதா அவரது சொந்த நலனுக்காக மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று கோரும்போது, உச்சநீதிமன்றத்திற்கு அதை ஏற்க வேண்டிய தேவை என்ன? என்பது தான் என்னை போன்றவர்களின் மனதில் எழும் வினா.
உச்சநீதிமன்றத்தில் 64,919 வழக்குகள் உட்பட நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் மொத்தம் 3.15 கோடி வழக்குகள் பல ஆண்டுகளாக தேங்கிக்கிடக்கின்றன. காவிரி பிரச்சனை தொடர்பான வழக்குகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் தீர்வு ஏற்படவில்லை. காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பை செயல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரும் மனு மீதான விசாரணை விரைவுபடுத்தப்படவில்லை. செய்யாத குற்றத்திற்காக 24 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரும் தண்டனைக்காலம் முடிவடைந்த பிறகும் விடுதலை செய்யப்படாதது குறித்த வழக்கின் விசாரணை விரைவுபடுத்தப்படவில்லை.
எந்தத்தவறும் செய்யாத லட்சக்கணக்கானோர் விசாரணை கைதிகளாகவே தண்டனைக்காலத்தை விட அதிக காலம் சிறையில் வாடும் சோக வரலாறு நம்முன் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் குற்றவாளி ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை மட்டும் விரைந்து விசாரித்து முடிப்பதன் மூலம் நாட்டுக்கு என்ன நன்மை ஏற்பட்டுவிடப்போகிறது? என்பது தான் தெரியவில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, அதை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று ஆணையிடாத நீதிமன்றம் இப்போது மட்டும் அவசரம் காட்டுவது ஏன்? என்ற வினா மக்களிடையே எழுந்துள்ளது. தாமதிக்கப்பட்ட நீதி… மறுக்கப்பட்ட நீதி என்பதைப்போல, அவசரம் காட்டப்படும் நீதி….. புதைக்கப்பட்ட நீதி என்பதை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளாதது ஏன் எனத்தெரியவில்லை.
அதுமட்டுமின்றி, இந்த வழக்கை இரு மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்; அடுத்த ஒரு மாதத்தில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது இவ்வழக்கை விசாரிக்கவிருக்கும் நீதிபதிகள் மீது ஒருவிதமான அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் ஜெயலலிதாவின் பிணை மனுவை முடித்து வைக்காமல் இன்னும் ஆய்விலேயே வைத்திருப்பதும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அரியானாவில் ஆசிரியர் நியமன ஊழலில் தண்டிக்கப்பட்ட அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு 123 நாட்களுக்கு பிறகு தான் பிணை வழங்கப்பட்டது. கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் 75 நாட்களுக்கு பிறகே பிணையில் விடுதலையாக முடிந்தது. இவர்களின் மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி, பிணை விதிகளை மீறியதாகக் கூறி ஓம்பிரகாஷ் சவுதாலா மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், நீதித்துறையை அடுத்தடுத்து அவமதித்த ஜெயலலிதாவுக்கு நிபந்தனைகளே இல்லாமல் இடைக்கால பிணை வழங்கப்படுகிறது; அவர் கோரியவாறு மேம்முறையீட்டு மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது “சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானா?” என்ற வினா சாமானியர் மனதில் மீண்டும் மீண்டும் எழுவதை தவிர்க்க முடியவில்லை.”
ராமதாஸ் எழுப்பியுள்ள இந்த கேள்விகள் நியாயமானவை. அனைவர் மனதிலும் ஓடும் சந்தேகங்களையே ராமதாஸ் தொகுத்துள்ளார். இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை வேறு கோணத்திலும் பார்க்க இயலும்.
ஜெயலலிதாவுக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்படாமல் 60 நாட்கள் கழித்து ஒரு வேளை உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தால், மேல் முறையீடு எத்தனை ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். ஜாமீனில் வெளியே வந்த ஜெயலலிதா, தற்போது போலவே மக்கள் முதல்வராக 2016 வரை ஆட்சி நடத்தி வந்திருப்பார். இப்போது நடக்கும் வசூல் பல மடங்கு அதிகரித்திருக்கும். பன்னீர் செல்வம் உள்ளிட்ட அடிமைகள், அம்மாவின் விடுதலைக்காக, தமிழகம் முழுக்க உள்ள கோவில்களில் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்திருப்பார்கள். மக்கள் முதல்வரின் ஆலோசனையின் படி நடக்கும் தமிழக அரசு என்று, ஜெயா தொலைக்காட்சியில் செய்திகள் நம் காதுகளை தழுவிக் கொண்டிருந்திருக்கும்.
இரண்டு லட்சம் பக்கத்துக்கும் அதிகமாக இருக்கும் மேல் முறையீட்டு ஆவணங்களை நகல் எடுக்க ஜெராக்ஸ் மிஷின் ரிப்பேர் போன்ற பல்வேறு காரணங்களைக் கூறி வாய்தா மேல் வாய்தா வாங்கி இந்த வழக்கை இன்னும் பல வருடங்களுக்கு இழுத்தடித்திருப்பார் ஜெயலலிதா. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருந்த சதாசிவம் அல்லது கே.ஜி.பாலகிருஷ்ணன் போன்றவர்கள் நீதிபதிகளாக வரும்போது, அந்த வழக்கை அவசர அவசரமாக நடத்தி, டான்சி வழக்கில் விடுதலை பெற்றது போல விடுதலை பெற்றிருப்பார் ஜெயலலிதா.
அப்படி ஆகாமல், இந்த வழக்கு விரைவாக முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்க வேண்டிய ஒரு விவகாரமாகவே சவுக்கு பார்க்கிறது. அநேகமாக, இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வரும். அதிமுக அடிமைகள் சொல்வது போல டீல் முடிந்து விட்டது, அம்மா வெளியே வந்து விடுவார் என்ற கூற்றில் உண்மை இருக்கிறதா என்று பார்ப்போம்.
நீதிபதி மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பின்படி, 30 ஏப்ரல் 1996 அன்று உள்ளபடி ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பு ரூபாய் 55,02,48,215.00 வளர்ப்பு மகன் திருமணம் உள்ளிட்ட செலவு : ரூபாய் 8,49,06,833.00. இவை இரண்டின் கூட்டு ரூபாய். 63,51,55,048.00. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய அனைவரின் வருமானம் : ரூபாய் 9,91,05,094.00. ஆக, ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் சேர்க்கப்பட்ட வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூபாய் 53,60,49,954.00. ரூபாய் ஐம்பத்து மூணு கோடியே அறுபது லட்சத்து, நாற்பத்து ஒன்பதாயிரத்து ஐம்பத்து நான்கு ரூபாய். ஆக ஜெயலலிதா இந்த ஐம்பத்து மூணு புள்ளி 60 கோடிக்கான கணக்கை கொடுத்தாக வேண்டும். இந்த காலகட்டத்தில் ஜெயலலிதாவின் இல்லாத வருமானத்தை இருப்பதாக காட்டுவது என்பது நடக்கவே நடக்காத காரியம். ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகள் வழக்கு விசாரணை நடைபெறுகையில் எடுத்த பல்வேறு முயற்சிகள் அனைத்துக்கும் தனது தீர்ப்பில் விரிவாக பதில் அளித்துள்ளார் நீதிபதி குன்ஹா. அப்படி இருக்கையில், யாரோ ஒரு விலைபோன நீதிபதியிடம் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டால் கூட, ஜெயலலிதாவுக்கு இந்த 53.60 கோடி எப்படி வந்தது என்பதை, அந்த நீதிபதி எப்படி விளக்குவார் ? ஒரு கோடி அல்லது இரண்டு கோடிகளுக்கு ஏதாவது விளக்கம் சொல்லலாம். 53 கோடிக்கு எந்த நீதிபதியால் விளக்கம் சொல்ல இயலும் ?
அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விவகாரம். உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில் நடக்கும் மேல் முறையீடுகளில் மீண்டும் சாட்சி விசாரணைகள் நடைபெறாது. ஏற்கனவே நடந்த விசாரணையில் இருக்கும் குறைகளையே சுட்டிக்காட்ட இயலும். 27 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ராஜீவ் வழக்கில் பலர் விடுதலை செய்யப்பட்டனர் ஏழு பேருக்கு மட்டுமே தூக்கு உறுதி செய்யப்பட்டது என்பதை மறந்து விடக்கூடாது.
விஸ்வரூபம் திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்தது தொடர்பாக எழுந்த சர்ச்சையின்போது ஜெயலலிதா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஜெயா டிவி குறித்து இவ்வாறு கூறினார்.
“தனியார் டி.வி.க்கு படத்தை விற்பதில் பிரச்னை என்றும் விமர்சனம் எழுந்தது. குறிப்பாக ஜெயா டி.வி.க்கு விற்பதில் பிரச்னை ஏற்பட்டதாக விமர்சிக்கப்பட்டது. ஜெயா டி.வி. என்பது அதிமுக ஆதரவு தொலைக்காட்சிதான். அந்த டி.வி.க்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதில் நான் பங்குதாரரும் இல்லை” ஒரு அதிமுக ஆதரவு தொலைக்காட்சி, எதற்காக 24 மணி நேரமும், மக்கள் முதல்வர், மக்கள் முதல்வர் என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறது ? அதற்கான காரணம் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
1993 வாக்கில் சன் டிவிக்கு போட்டியாக தொடங்கப்பட்டதுதான் ஜெஜெ டிவி. இதுவும் அடிமை சேனலாகவே இருந்தது. இந்த தொலைக்காட்சி தொடங்கப்பட்டதில் ட்ரான்ஸ்பாண்டர்கள் வாடகைக்கு எடுப்பதில், அந்நியச் செலாவணி மோசடி நடந்ததாக அப்போது அமலாக்கப்பிரிவு தனியாக வழக்கு ஒன்று தொடர்ந்தது. 1996 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மரண அடி வாங்கியது. அந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோதே, ஜெஜெ டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
அதன் பிறகு, 1998ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி மீண்டும் தொலைக்காட்சிச் சேனல் அவசியம் என்பதை உணர்ந்த ஜெயலலிதா தொடங்கிய சேனல்தான் ஜெயா டிவி. இந்த சேனல், மன்னார்குடி மாபியாவின் முக்கிய புள்ளிகளை வைத்துத்தான் இந்த சேனல் தொடங்கப்பட்டது.
சசிகலாவன் ஒரு அண்ணன் சுந்தரவதனின் மகன் டாக்டர் வெங்கடேஷ், மகள் பிரபாவதி சிவக்குமார் மற்றும் மற்றொரு அண்ணன் விநோதகனின் மகன் கே.வி.மகாதேவன் ஆகியோரை இயக்குநராக கொண்டு, 21.20 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டதுதான் ஜெயா டிவி. ஜெயா டிவி என்பது வணிகப்பெயர். கம்பெனி பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்டுள்ள பெயர் மேவிஸ் சாட்காம் என்பது.
டாக்டர் வெங்கடேஷ் நமது எம்ஜிஆர் பத்திரிக்கையை அச்சடிக்கும் ஆஞ்சநேயா ப்ரின்டர்ஸ் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகித்து வந்தார். மன்னார்குடி குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒரு காலகட்டத்தில் அதிகாரம் செலுத்துவார்கள். பிறகு புயலில் சிக்கிய சிறகு போல காணாமல் போவார்கள். தினகரன் மகாதேவனுக்குப் பிறகு அதிமுகவில் தொடங்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் தலைவராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்தான் வெங்கடேஷ்.
டிடிவி தினகரன் அதிகாரம் செலுத்திவந்த வரை, அவர் ஜெயா டிவி அலுகலகத்தில் அருகிலேயே உள்ள ஹோட்டல் ஹயாட்டில் அமர்ந்து ஜெயா டிவியை நிர்வாகம் செய்து வந்தார். அவர் அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டதும், அவர் மனைவி அனுராதா தினகரன் ஜெயா டிவியின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டார். மன்னார்குடி மாபியா வெளியேற்றப்பட்ட பிறகு, தினகரன் அனுராதா ஆகிய அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
அந்த சூழலில், ஜெயா டிவியில் செக் கையெழுத்திடுவது உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளும், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வசம் ஒப்படைக்கப்படுகிறது. சில காலம் கழித்து, அதிமுக எம்.பி பி.எச்.மனோஜ் பாண்டியன் இதில் இயக்குநராக்கப்படுகிறார்.
தற்போது பூங்குன்றன், பிரபா சிவக்குமார், மனோஜ் பாண்டியன் ஆகியோரோடு சேர்த்து, நடராஜனின் சகோதரர் பழனிவேலுவும் இயக்குநர்களாக உள்ளனர்.
2013 மார்ச் அன்று தாக்கல் செய்துள்ள கணக்கு வழக்குகளின்படி, ஜெயா டிவி நிறுவனம் லாபத்திலேயே இயங்கி வருகிறது. இதற்கான முக்கிய காரணம் ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை. அதிமுக அடிமைகளைப் பொறுத்தவரை, உலகத்திலேயே உண்மைச் செய்திகளை வெளியிடும் ஒரே செய்திச் சேனல் ஜெயா டிவி மட்டுமே. ஜெயா ப்ளஸ்ஸின் டிஆர்பி ரேட்டிங் மூன்றாவது இடத்திலோ அல்லது நான்காவது இடத்திலோதான் எப்போதும் இருக்கும் என்பது உங்களுக்கெல்லாம் ஆச்சர்யாமான செய்தியாக இருக்கக்கூடும். இதற்கான காரணம் வேறு ஒன்றும் இல்லை. அதிமுக நிர்வாகிகள் எப்போது மாற்றப்படுகிறார்கள். எப்போது புதிதாக நியமிக்கப்படுகிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. அந்த விபரங்கள் ஜெயா டிவியில் மட்டுமே உடனடியாக வெளியிடப்படும். அதே போல சசிகலா உள்ளிட்டோர் நீக்கம் என்ற செய்தியும் முதலில் வந்தது ஜெயா டிவிக்கு மட்டுமே.
தனக்கும் ஜெயா டிவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிவித்த ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்ததும் அறிவித்த மின் கட்டணம், பேருந்துக் கட்டணம், மற்றும் பால் விலை உயர்வு ஆகியவற்றை, அரசுத் தொலைக்காட்சி போல ஜெயா டிவியில் மட்டுமே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மன்னார்குடி மாபியாவைச் சேர்ந்தவர்கள், மன்னார்குடியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள். அவர்களால் 1998ம் ஆண்டு 22 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கவே முடியாது.
மன்னார்குடி மாபியா ஜெயலலிதா என்ற பிம்பத்தை வைத்து, தமிழகத்தில் அடித்த கொள்ளையை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. அதற்காக, அம்மா நல்லவர்கள், மன்னார்குடி மாபியாவைத்தான் குற்றம் சொல்ல வேண்டும் என்ற கூற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் இவற்றுள் எதுவுமே நடக்க வாய்ப்பில்லை. வாயில் விரல் வைத்தால் கடிக்கக் கூடிய பப்பா கிடையாது ஜெயலலிதா.
ஜனவரி 2011ல் சென்னையில் ஒரு புதிய நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. ராயப்பேட்டா கார்டியாக் சென்டர் என்ற ஒரு புதிய நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதலீடு 75 லட்ச ரூபாய். முதலீடு வெறும் 75 லட்ச ரூபாயாக இருந்தாலும், இந்த நிறுவனத்தின் நோக்கமாக இவர்கள் குறிப்பிட்டுள்ளது இதுதான்.
1. To carry on the business of establishing, maintaining, running , managing and administering Cardiac Care Centers, Hospitals, Nursing Homes, Clinics, Dispensaries, Medical Research and Diagnostic Centers, Pathological clinics , CAT / MRI scan and X-Ray Laboratories and Clinics, ECG clinics and Blood Banks and Diagnostic Nutrition Centers.
2. To undertake , promote, administer, manage, develop, improve and research in Organ Transplant, Cardiology, Cardio/Vascular, Thoracic Surgery and other fields of Medicine / Surgery directly or indirectly connected to cardiology and / or cardio-vascular diseases / deficiencies and to facilitate scientific exchange of knowledge and cooperation , projects for the development of Research Centres, Surgical Equipments, innovation in the field of Bio-Medical Engineering, methods of early detection of diseases and medicines for the treatment of diseases.
3. To undertake, promote or engage in all kinds of research in Cardiology / Cardio Vascular Diseases or Deficiencies including clinical research and development work required to promote, assist or engage in setting up hospitals, health care centres and facilities for manufacturing medical equipment and to promote facilities for the discovery, improvement or development of new methods of diagnostic, understanding and prevention and treatment of Cardio-vascular / related disorders , deficiencies and diseases.
வெறும் 75 லட்ச ரூபாய் முதலீட்டில் இத்தனையையும் எப்படி செய்யப் போகிறார்கள் என்று உங்களுக்கு வியப்பு வரலாம். இது வெறும் வெளித்தோற்றம் மட்டுமே. கோடி கோடியாக நாளை அடிக்கப் போகும் கொள்ளையை இது போன்ற மருத்துவமனைகளில் முதலீடு செய்து கருப்பை வெள்ளையாக்கலாம் என்பதே இந்தத் தொலைநோக்குத் திட்டம்.
மன்னார்குடி மாபியாவின் இந்த கொள்ளைக்கூட்டம் இன்னும் எத்தனை கோடிகளை கொள்ளை அடிக்கும், அடிக்கப் போகிறது என்பதையெல்லாம் உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை.
சவுக்கில் தொடர்ந்து இந்த கட்டுரைகளை படித்து வருபவர்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். இந்த புதிய நிறுவனங்களில் இருப்பவர்கள், சசிகலாவின் உறுப்பினர்கள். இவர்களை எப்படி ஜெயலலிதாவோடு சம்பந்தப்படுத்தவது என்பதே அது.
இப்போது நீதிநாயகர் குன்ஹாவின் தீர்ப்பில் ஒரு பகுதியை பார்ப்போம்.
“அரசு சாட்சி 15 நரேஷ் என்பவர் தனது வாக்குமூலத்தில் அவருக்கு சீத்தாராம் என்பவரை தெரியும் என்று கூறியிருக்கிறார். அவரது சாஸ்திரி நட்ஸ் அன்ட் போல்ட்ஸ் அலுவலகம் 48 ஈக்காட்டுத்தாங்கல் என்ற முகவரியில் இயங்கி வந்தது. முதலில் அந்த நிறுவனத்தை வேறு ஒருவர் நடத்தி வந்தார். பின்னர் நரேஷ், சீத்தாராமிடமிருந்து ஏழு லட்ச ரூபாய்க்கு அதன் பங்குகளை வாங்குகிறார். அவர் தனது அச்சகத்தை அந்த ஈக்காட்டுத்தாங்கல் கட்டிடத்துக்கு மாற்றுகிறார். அவர் தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்துக்கு புத்தகங்களை அச்சடித்துக் கொடுத்தார். 1991-1992 ஆண்டுவாக்கில் சசிகலா அவரது ஈக்காட்டுத்தாங்கல் அலுவலகத்துக்கு வந்தார். இங்கிலாந்திலிருந்து அவர் தருவித்திருந்த அச்சகத்தை எட்டு லட்ச ரூபாய்க்கு விலைக்கு கேட்டார். ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் கணக்கில் உள்ள எட்டு லட்ச ரூபாய்க்கான செக்கை அளித்தார். அந்த அச்சு இயந்திரங்களை சில நாட்கள் கழித்து எடுத்துக் கொள்வதாக கூறினார். அரசு பாடநூல் நிறுவனத்துக்கு அவர் அந்த அச்சு இயந்திரங்களை வைத்து பாடநூல்கள் அச்சடித்துத் தர வேண்டும் என்று சசிகலா கூறினார். (சசிகலாவும் ஜெயலலிதாவும் பங்குதாரர்களாக இருந்த ஆஞ்நேயா ப்ரின்டர்ஸ் மூலமாக பாடநூல்கள் அச்சடித்து தந்ததுதான் ஜெயலலிதா மீது எழுந்த முதல் ஊழல் புகார்) ஆனால், நரேஷ் அச்சடிக்கையில் தவறுகள் ஏற்பட்டால் தான் பொறுப்பல்ல என்று கூறுகிறார். உடனடியாக ஊரக ஆணையர் அலுவலகத்திலிருந்து அவருக்கு நோட்டீஸ் வந்தது. மறுநாள் தாசில்தார் அச்சகத்துக்கு வந்தார். (இனி அச்சகம் நடத்த முடியாது என்பதை உணர்ந்த) நரேஷ் சசிகலாவின் உதவியை நாடுகிறார். சசிகலா அந்த நிறுவனத்தை முழுவதுமாக தனக்கு விற்று விடுமாறு கூறுகிறார். போயஸ் தோட்டம் சென்று சசிகலாவை சந்திக்கிறார். நிறுவனத்தின் விலையாக நரேஷ் 70 லட்சம் கூறுகிறார். ஆனால், சசிகலா வெறும் 64 ஆயிரத்து 500 மட்டுமே தருவேன் என்று கூறுகிறார். மறுநாள் விஎன்.சுதாகரன் இது தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தோடு நரேஷ் அலுவலகத்துக்கு வருகிறார். சுதாகரனோடு ஆடிட்டர் ராஜசேகரும் வந்திருந்தார். இறுதியாக 20 ஆயிரத்து 16 ஆயிரத்துக்கு நிறுவனத்தை விற்பது என்று முடிவாகிறது. அந்த தொகைக்கான காசோலைகள் வழங்கப்படுகின்றன. விற்பனை நடந்ததற்கு பிறகு அச்சகத்தின் பெயர் ஆஞ்நேயா பிரின்டர்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.”
இதுதான் குன்ஹா தீர்ப்பில் உள்ள பகுதி. அந்த வழக்கின் தீர்ப்பின்படி, சாஸ்திரி நட்ஸ் அன்ட் ப்ளேட்ஸ் என்ற நிறுவனம், ஜெயலலிதாவின் பினாமி நிறுவனம் என்று முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா கட்ட வேண்டிய 100 கோடி அபராதத்தில், இந்த நிறுவனமும் சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனம் தற்போது வரை இயங்கி வருகிறது. 31 மார்ச் 2013 வரை ஆண்டுக் கணக்குகளை தாக்கல் செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் தற்போதைய இயக்குநர்கள் யார் தெரியுமா ? சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன் டாக்டர் வெங்கடேஷ் மற்றும் மகள் பிரபாவதி சிவக்குமார். இந்த வெங்கடேஷ் மற்றும் பிரபாவதி சிவக்குமார் ஆகியோர்தான் பல்வேறு புதிய நிறுவனங்களில் இயக்குநர்களாக உள்ளனர்.
சவுக்கு தொடர்ந்து பதிப்பித்து வரும் இந்த ஆதாரங்கள், ஒரு பெருங்கடலின் ஒரு துளியே.
இப்படி தொடர்ந்து தமிழகத்தை கொள்ளையடிக்கும் இப்படிப்பட்ட ஒரு கொள்ளைக்கூட்டமும், அதன் தலைவி ஜெயலலிதாவும் இருக்க வேண்டிய இடம் சிறைதானே ?
தொடரும்
Yr analysis is good and commendable. No doubt corruption is bane to our society and is a root cause of many other problems. Considering that Jaya hasn’t done great reforms in the society to merit a condonation of punishment, it is also true that she deserves what she got for her past crimes.
Having said that, as matured analysts we also have to see other ramifications by broadening our horizon a bit further. Today in TN, we have such an array of comedians and criminals in politics that people hardly have a choice for a leader with whom they can relate and repose confidence. The result is a big leadership vacuum for which all kinds of foreign forces are vying with each other to capture. We have to see if it is good for TN to be without a strong leader of people’s choice or with a leader imposed from north with agendas not so pleasant for its people.
We are unable to name even a single person from the existing political set up as a capable leader – from the crop of Vkant/Vaiko/Stalin/Ramdos. They are either comedians or discredited because of their focus on doing bad things. Under these circumstances, when we look back at JJ, one can not refuse to admire the sheer leadership competence built over decades within her party and the sway she has over the entire cadre with an unparalleled grip on everything she handles. Her clear and strong un fearing views on many issues affecting the state is something none of her predecessors including MGR had (despite the fact that they were all men!). Her bold approaches have borne fruit in terms of getting us progress in Cauvery and Mullaiperiyar waters.
If we analyse the circumstances as to why she became corrupt after coming to power in 1991, we have to go back by at least 25 years to see how the TN polity was transformed by the Karuna Govt bringing in all bad things and ruining all good culture. Of course DMK from its birth itself was indecent but we saw flashes of decency & correction from CN. Annadurai who was a bit refined of the lot. As soon as Karuna took over, he changed the perspective totally and engaged in corruption in anything & everything. So long as popular leaders like MGR were with him, great leaders like Kamaraj & Rajaji couldn’t turn a stone. Even after MGR parted with him, he continued his misrule to the distaste of the entire state until he was chucked out in 1976. Even though he lost the ensuing elections in 1977 to MGR, he was like a snake rearing to hit again if MGR was not alert enough. And MGR wasn’t alert enough so Karuna could manage his way back from problems and sustain his party. Then onwards, the only obsession of MGR was to keep the evil out of bay and so everything had to be done with that purpose in mind – that included even accumulating enough money to counter the cunning Karuna.
Karuna as astute as he can be saw an opportunity and used it well when ADMK split briefly after MGR. Even during the short tenure he managed to do as much atrocities as possible and became unpopular again (reflected in the LokSabha election results of 1989 when Jaya along with Rajiv made a sweep in TN). Even though Karuna lost the mandate, he managed to rule until early 1991 when he had to sacked on charges of disrespecting the army and passing on military secrets to the enemy! For this reason alone, he should have been banned from politics forever!
Then came JJ. She had to fight a weak but snaky Karuna and also the fact she is a lonely lady. She needed support to protect her and to wield power and so she had to allow all corrupt practices. Though what she did was absolutely wrong, she was not alone in doing such things in politics as she had many of her predecessors as well as contemporaries doing the same. Only she was raw and lacked the finesse to cleverly arrange everything so that blame never reaches her. It is only her naivety that has landed her in the present trouble. That is why you don’t see the same charges being leveled against her during her 2nd or third terms. To a certain extent, her character of arrogance and insecurity as a female could also take the blame.
But the origin for all these are well seeded by our snaky Karuna who changed the political landscape into one of corruption and if any one has to stand against him and win, they needed resources apart from a strong personality. For people like us who have been deeply disappointed that Kamaraj could not vanquish this evil took some consolation that MGR could do it. But after his death, we needed someone strong enough to carry the process and it was JJ! She has been immensely successful tackling Karuna’s manace, each time learning and becoming better as a seasoned politician. It is virtually impossible to create another leader like her at least in the next 100 years. It is amazing to see the control a lady can exercise on a large bunch of rural men – be it from the confines of a jail or from the four walls of her home. It is sheer amazement!
Therefore, in conclusion, our analysis would pardon JJ for the crimes once done and invite her to take up governance of TN until such time we see a capable alternative leader who will have similar qualities of fearlessness and upright leadership in safeguarding TN’s interests!
absolutely right
Well said KS, you are absolutely right. To my view.. Vaiko is a good leader if he comes out-of-Eelam support. Let’s see who will conquer in coming 2016.. Other able leaders of today is GK Vasan ( odd man out of congress) .. Others such a V.Kant, Ramdoss are of no use.
நிச்சயம் ஜெயா ஒன்றும் விரல் சூப்ப மட்டுமே தெரிந்த குழந்தை இல்லை, தண்டனை அளிக்கபடவேண்டியது அவசியம்.
Super article. I might have umpteen differences with Shankar especially the way he cheaply posted Kaththi’s online movie link on the day of its release but when it comes to exposing corruption at higher places, he is really a legend… Its so unfortunate that the people of TN have a sympathy for Jayalalitha for the simple reason that Karunanidhi & his family corruption is 10 times bigger than this lady’s corruption 🙁
Sir see also http://www.vinavu.com/2014/12/24/mgr-led-tamilnadu-politics-to-degradation/
It is really wonderful and savukku really bring out truth well. The worst part is many people still believe that Jaya only can do good to Tamilnadu. It is shame to Tamilnadu people
your article likes Americas Secret Establishment – By Antony Sutton well done