இந்த ஆண்டு போல சவுக்கு தளத்துக்கு சோதனையான ஆண்டு எதுவுமே அமைந்தது கிடையாது. நமது இருப்பே கேள்விக்குள்ளாக்கப்படும் அளவுக்கு கடுமையான சோதனைகள்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் முதல் கட்டுரையாக வந்தது புகழ்த்தடம் தேடி. தற்போது நியூஸ் 7 செய்திச் சேனலில் அடைக்கலாமாயிருக்கும் மகா தமிழ்ப்பிரபாகரன் என்ற அந்த இளைஞர், சிங்கள ராணுவம் தன்னை கைது செய்து துன்புறுத்தியதாக நடத்திய நாடகத்தை அம்பலப்படுத்தியது அந்தக் கட்டுரை.
சவுக்கு தளத்தை முடக்க நீதிபதி சி.டி.செல்வம் கடுமையாக முயற்சி செய்து வருகிறார் என்ற தகவல் ஜனவரி 7 அன்று வெளியானது. அது குறித்து எழுதப்பட்ட கட்டுரைதான் சவுக்கு தளத்தை முடக்கும் பணியில் நீதியரசர்கள் என்ற கட்டுரையில் விரிவாக எழுதப்பட்டிருந்தது. தலித் ஆதரவு என்ற பெயரில் ஒரு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட தலித்துகளை மயிலிறகால் வருடிக் கொடுக்கும் போலிப் பெண்ணியவாதிகள் குறித்த கட்டுரை முற்போக்கு முகமூடிகள். அனைத்து தரப்பிரிடமும் பரவலான வரவேற்பை பெற்றது இக்கட்டுரை.
வேறு எந்த ஊடகமும் செய்யத் தவறும் அல்லது அஞ்சும் ஒரு பணியை சவுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. அந்த அடிப்படையில் நீதிபதி கர்ணன் குறித்து நீதிக்கு அவமானம் என்ற கட்டுரை வெளியிடப்பட்டது. நேரடி மாவட்ட நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் இருந்த விவகாரத்தை முதன் முதலில் பிரத்யேகமாக அம்பலப்படுத்தியது சவுக்கு தளம் மட்டுமே. அந்தக் கட்டுரை இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது. இந்தக் கட்டுரை வழக்கறிஞர் சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஜெயா டிவியில் தொழிலாளர்கள் சகட்டுமேனிக்கு பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து விரிவாக கட்டுரை எழுதியது சவுக்கு மட்டுமே. அந்தக் கட்டுரை சசிகலா என்ற ஆமை ஆளுங்கட்சி தொலைக்காட்சிக்கு எதிராக ஒருவரும் வாய்த்திறக்க மறுக்கும் ஒரு சூழலில், நமக்காக குரல் கொடுக்க ஒரு தளம் இருக்கிறது என்று ஜெயா டிவியின் முன்னாள் இன்னாள் ஊழியர்கள் மனதார சவுக்கை வாழ்த்தினார்கள்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எப்படிப்பட்ட முறைகேடுகளில் ஈடுபடுகிறார் என்பதை விரிவாக எழுதிய ஒரே ஊடகம் சவுக்கு மட்டுமே. நேரடியாக ஒளிவு மறைவின்றி, இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் சாதி வெறியையும், எதேச்சதிகாரப் போக்கையும் நாம் மட்டுமே அம்பலப்படுத்தினோம். அந்தக் கட்டுரை சாக்கடைகளும் சந்தன மரங்களும்
2ஜி டேப்புகள் என்று அழைக்கப்படும் ஜாபர் சேட்டின் உரையாடல்கள் அடங்கிய ஒலிநாடா சவுக்கு கைக்கு கிடைத்ததும் அந்த உரையாடல்களில் உள்ள குரல்களை சரிபார்க்கும் பணி ஜனவரி இறுதி வாரத்தில் நடைபெற்று வந்தது. ஜனவரி 30 அன்று இந்த வழக்கு செல்வத்தின் முன் விசாரணைக்கு வந்தது. அது வரை, இந்த வழக்கை சாவகாசமாக விசாரித்துக் கொண்டிருந்த செல்வம், அன்று மிக மிக ஆவேசமாக நாளை சவுக்கு தளத்தை நடத்துபவர் கைது செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். சவுக்கு தளத்தை வடிவமைத்துத் தந்த தோழர் முருகைய்யன் பாண்டிச்சேரியிலிருந்து கைது செய்யப்பட்டார். சவுக்கு தளத்தை நடத்துபவரை கைது செய்ய உத்தரவு என்ற கட்டுரையில் இது குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது. அன்று முதல் தலைமறைவு. சிறைக்கு செல்வதற்கு அச்சம் அல்ல. கையில் இருந்த 2ஜி டேப்புகளை பத்திரமாக வெளியிட வேண்டுமே என்ற கவலை. ஏனென்றால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஊடகங்களை அணுகி, ஒருவரும் பதிப்பிக்க முன்வராத காரணத்தால், அதை எப்படியாவது வெளியிட வேண்டுமே என்ற ஒரே நோக்கம்தான். உடனடியாக சவுக்கு தளத்தை நடத்துபவரை கைது செய்ய வேண்டும் என்று சி.டி.செல்வம் உத்தரவிட்டதற்கு மறுநாள், சவுக்கு தளத்தில் ஜாபர் சேட்டின் முதல் உரையாடல் வெளியானது. வல்லவனுக்கு வல்லவன் என்ற அந்த கட்டுரை தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஊரில் உள்ள அனைவரின் தொலைபேசிகளையும் ஒட்டுக்கேட்ட ஜாபர் சேட்டின் உரையாடல்களை சவுக்கு வெளியிட்டபோது, காவல்துறை அதிகாரிகள் அனைவரும் வியப்படைந்தனர். எந்த ஊடகங்களும் 2ஜி டேப்புகளை வெளியிட முன்வராத நிலையில் வேறு வழியின்றி டெல்லி பயணம். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பிரசாந்த் பூஷணை சந்தித்து, உரையாடல்களை ஒப்படைத்ததும், இரண்டே நாட்களில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி உரையாடல்களை வெளியிட்டார் பூஷண். நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அந்த உரையாடல்கள் இணைப்பு. சவுக்கு தளத்தின் பெருமிதமான தருணங்களுள் அது ஒன்று.
அதைத் தொடர்ந்து சவுக்கு தளத்தில் ஜாபர் சேட் குறித்த விரிவான கட்டுரையோடு மற்றொரு உரையாடல் வெளியிடப்பட்டது. கடைசி ஆணி. இந்தக் கட்டுரையும், அதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. ஜாபர் உரையாடல்கள் வெளியானதும் ஒரு காவல்துறை உயர் அதிகாரி சொன்னது The goose is cooked.
ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் சிபி.சிஐடி போலீசார் எப்படி கோடிக்கணக்கில் கொள்ளையடித்தார்கள் என்ற விபரத்தை விரிவாக பதிவு செய்த கட்டுரை பஞ்சாப் திருடன். மற்ற ஊடகங்கள் எழுதத் தவறிய பல விஷயங்கள் அக்கட்டுரையில் இடம் பெற்றன. வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் கொலை வழக்கில், அந்த விசாரணையை திசைத்திருப்ப சங்கரசுப்புவே எப்படியெல்லாம் முயன்றார் என்பதை முதன் முறையாக வெளிப்படையாக எழுதிய கட்டுரை விலகாத திரை. பெரும்பாலான வழக்கறிஞர்களுக்கு தெரிந்த விவகாரமாக இருந்தாலும், இதை முதன் முதலில் பதிவு செய்தது சவுக்கு மட்டுமே. இந்த கட்டுரைக்காக பல்வெறு மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் வந்தன.
சொன்னா உதைப்பீங்க என்ற கட்டுரையில் மீதமிருந்து இரண்டு உரையாடல்களும் வெளியிடப்பட்டன. பிப்ரவரி இறுதி வாரத்தில் தனது முயற்சிகளையெல்லாம் மீறி சவுக்கு தளத்தில் 2ஜி உரையாடல்கள் வெளியிடப்பட்டுள்ளதே என்ற ஆத்திரத்தில் சவுக்கு தளத்தை முடக்க உத்தரவிட்டார் சி.டி.செல்வம். அவருக்கு எழுதப்பட்ட திறந்த மடல். சவுக்கு தளம் முடக்கப்பட்டதை கண்டித்து தினமணி நாளேடு தலையங்கம் எழுதியது சவுக்கு தளத்தின் பெருமை மிகு தருணம் இணைப்பு. சவுக்கு தளத்தின் மீதான தடை உத்தரவு ஊடகங்களில் பரவலாக பதிவு செய்யப்பட்டது. இணைப்பு. சி.டி.செல்வம் பெயரிலேயே மூன்று இணையதளங்கள் திறக்கப்பட்டதுதான் விசித்திரம்.
தலித்துகளுக்காகவே குரல் கொடுப்பதாக நடித்துக் கொண்டு ஊழல் புரிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் மீதான ஊழல் புகாரை முதன் முதலாக அம்பலப்படுத்தியதும் சவுக்கு தளமே. 2ஜி உரையாடல்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த வழக்கும் நீதிபதி சி.டி.செல்வம் முன்பாகவே விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கின் முடிவு என்ன என்பதை சொல்லவும் வேண்டுமா ? கருணாநிதியின் அடிமையாக சி.டி.செல்வம் எப்படி மாறிப் போனார் என்பதை விளக்கும் கட்டுரை. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து, ஆங்கில இணைய இதழான நியூஸ் மினிட்டில் சவுக்கு எழுதிய கட்டுரை வெளியானது. இணைப்பு. கேரவன் மாத இதழில் வெளிவந்த மோடி குறித்த ஒரு அற்புதமான கட்டுரை, பத்திரிக்கையாளர் டிஎன்.கோபாலன் உதவியோடு சவுக்கில் தொடர் கட்டுரைகளாக வெளியிடப்பட்டது. பாராளுமன்றத் தேர்தலையொட்டி வெளியான இக்கட்டுரை, சங் பரிவார் அமைப்பினர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இணைப்பு ஜெயலலிதாவின் மோசமான ஆட்சியை கடுமையாக விமர்சித்து செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா என்ற கட்டுரை எழுதப்பட்டபோதுதான் பலருக்கு, சவுக்கு அதிமுக ஆதரவு தளம் அல்ல என்பதே உரைத்தது. அது வரை, சவுக்கு தளத்தை ஆகோ ஓகோ என்று புகழ்ந்து கொண்டிருந்த அதிமுக அடிமைகள், வசை பாடத் தொடங்கினார்கள். தேர்தல் குறித்த தொடர் கட்டுரைகளாக அடுத்து அலசப்பட்டது திமுக. கயமை, கயவாளித்தனம், கபளீகரம்.
ஏப்ரல் மாதத்தில் www.savukku.in என்ற முகவரியில் புதிய வடிவமைப்போடு சவுக்கு பயணத்தை தொடர்ந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவை காப்பாற்றுவதற்காக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் பிறப்பித்த மோசடியான உத்தரவு மற்றும், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடித்தது ஆகிய இரண்டு விவகாரங்களையும் விரிவாக அலசிய கட்டுரை முடிவில்லாத பாதையில். இந்த கட்டுரையும் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் ஆங்கில வடிவம். இன்றைய தலைமுறைக்கு பரிச்சயம் இல்லாத சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கைகள் தேர்தலை ஒட்டி, தொடர் கட்டுரைகளாக சவுக்கு தளத்தில் வெளியிடப்பட்டன. இணைப்பு. மருத்துவர் ராமதாஸ் எப்படிப்பட்டதொரு பச்சையான சந்தர்ப்பாவத அரசியல்வாதி என்பதை இரண்டு பகுதிளாக தொடர் கட்டுரைகளாக வெளியிட்டது சவுக்கு. இணைப்பு 1 இணைப்பு 2
இதன் நடுவே, அடுத்தடுத்து இரண்டு வழக்குகளை காவல்துறை பதிவு செய்ததும், அந்த வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியபோது, எப்படியெல்லாம் அந்த வழக்கை இழுத்தடிக்க முடியுமோ அப்படியெல்லாம் இழுத்தடித்தனர் நீதியரசர்கள். ஆனால், ஜெயலலிதா போன்றோர் வழக்கு தொடுத்தால், அவசர அவசரமாக விசாரித்து நிவாரணம் வழங்கினர். நீதித்துறையின் ஊழல் குறித்து விரிவாக எழுதிய கட்டுரைதான் கடல்லயே இல்லையாம். தேர்தலையொட்டி, 2ஜி ஊழல் குறித்து விரிவான கட்டுரைகள் நான்கு பாகங்களாக வந்தன. இணைப்பு. உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் எப்படி அரசியல்வாதியைப் போல நடந்து கொண்டார் என்பதை விளக்கிய கட்டுரைதான் அரசியல் நிழலில். பதவி ஓய்வுக்குப் பின்னால் மீண்டும் பதவியைப் பிடிக்க எப்படியெல்லாம் நீதிபதிகள் அரசியல்வாதிகளின் காலைப் பிடித்து கதறுகிறார்கள் என்பதை விளக்கும் கட்டுரைதான் போதையின் பிடியில்.
www.savukku.in என்ற தளத்தையும் தடை செய்ய சி.டி.செல்வம் உத்தரவிட்டதோடு, ஐஜி அந்தஸ்திலான அதிகாரி, சவுக்கு தொடர்பான விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இணைப்பு. அத்தோடு சவுக்கு இணையதளம் உலகின் எந்த மூலையில் எந்த வடிவில் இருந்தாலும் தடை செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இணைப்பு. இவர் இப்படி உத்தரவு போட்டு, எட்டு மாதங்கள் கடந்தும் இன்று வரை, இவர் நோக்கம் நிறைவேறவில்லை என்பதுதான் வேடிக்கை. உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து வானளாவிய அதிகாரம் வைத்திருந்தாலும், ஒரு இணையதளத்தை தடை செய்யக்கூட முடியாமல் கடும் மனச்சிக்கலில் அவதிப்படும் செல்வத்துக்கு எங்கள் அனுதாபங்கள்.
திமுக ஆதரவு நபராக மட்டும் இல்லாமல், அதிமுக அமைச்சருக்கும் தனது உத்தரவின் மூலம் உதவி செய்த சி.டி.செல்வத்தை அம்பலப்படுத்திய கட்டுரையும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இணைப்பு. ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் வேந்தர் வெங்கடாச்சலம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பிறகு, அவருக்கு அவசர அவசரமாக எப்படி ஜாமீன் வழங்கப்பட்டது என்பதை அம்பலப்படுத்திய கட்டுரை நீதி வியாபாரிகள். காவல்துறை அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் அவரச அவரசமாக மாநில அரசு விடுவிக்கும் முன்பாகவே சிபிஐயில் பணியில் சேர்ந்த காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அந்த விவகாரத்தை அலசிய கட்டுரைதான் ஏன் இந்த அவசரம், முதன் முறையாக சவுக்கு தளத்தில் தேர்தல் முடிவுகள், நண்பர்களின் உதவியோடு நிமிடந்தோறும் அப்டேட் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. பல ஆள்பலம் உள்ள வெகுஜன ஊடகங்களுக்கு இணையாக நாமும் தேர்தல் முடிவுகளை வெளியிட்டதில் பெருமகிழ்ச்சி. இணைப்பு பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை அலசிய கட்டுரை மக்கள் தீர்ப்பு.
ஜெயலலிதா வழக்கில் அரசு அதிகாரிகளும், லஞ்ச ஒழிப்புத் துறையும் செய்த தவறுகளை வெளிப்படுத்திய கட்டுரைதான் சூதும் வாதும். ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மீது தாக்குதல் தொடுத்த மோடி அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து எழுதியதுதான் முதல் தாக்குதல்.
ஜெயமோகன் பெண் எழுத்தாளர்களைப் பற்றி ஏதோ எழுதி விட்டாரென்று, தமிழகத்தில் உள்ள அனைத்து பெண் எழுத்தாளர்களும் வரிந்து கட்டிக் கொண்டு, அவருக்கு எதிராக ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டார்கள். அந்த பெண்ணியவாதிகளுக்கு எதிரான எழுதப்பட்ட கட்டுரைதான் பின்தொடரும் பெண்களின் குரல். இந்தக் கட்டுரையால் பல பெண் நண்பர்கள் எதிரிகளானார்கள். பலர் முற்றிலும் உறவைத் துறந்தார்கள்.
கோபால் சுப்ரமணியம் உச்சநீதிமன்ற நீதிபதியாகி விடக்கூடாது என்று பகீரதப் பிரயத்தனம் செய்து அதில் வெற்றியும் கண்ட மோடியின் தந்திரம் குறித்த கட்டுரை, நீதியே தலை வணங்கு. ஜெயலலிதா தண்டிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று ஜுன் மாதமே சவுக்கு எழுதிய கட்டுரைதான் இறுகும் சுருக்கு. இந்தக் கட்டுரை எழுதப்பட்டபோது, பலர் இதை மறுத்துப் பேசினார்கள். அதெல்லாம் எப்படியும் அம்மா வெளியில வந்துடுவாங்க என்றனர். ஆனால் காலம் அவர்களுக்கு பதிலளித்தது.
நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்து, ஊடகங்களை விலைக்கு வாங்கி எப்படியெல்லாம் வைகுண்டராஜன் தனி சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை அம்பலப்படுத்திய ஊடகம் சவுக்கு மட்டுமே. சவுக்கில் வெளிவந்த எத்தனை கோடிகள் கொடுத்தாய் வைகுண்டராஜா என்ற கட்டுரை, பலத்த வரவேற்பை பெற்றது. வைகுண்டராஜனின் சாம்ராஜ்யத்தை தொடர்ந்து அம்பலப்படுத்திய கட்டுரை, திருச்செந்தூரில் கடலோரத்தில் வைகுண்டராஜன் அரசாங்கம். அந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவம்.
மவுலிவாக்கம் கட்டிட விபத்து மற்றும் அது குறித்த ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை கடுமையாக சாடிய கட்டுரைதான் இன்னும் எத்தனை பிணங்கள் வேண்டும் ஜெயலலிதா உங்களுக்கு
டிஎன்பிஎஸ்சி க்ரூப் ஒன் தேர்வில் நடந்த முறைகேடுகள், அந்த முறைகேடுகளுக்கு சப்பைக்கட்டு கட்டும் விதமாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் ஆகியவற்றை விளக்கும் கட்டுரைதான் முட்டாள் அரசு 8. அப்பாவி தலித் இளைஞர்களை நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்தி கைது செய்த ஒரு அயோக்கிய அதிகாரி அஸ்ரா கர்க் குறித்து எழுதிய கட்டுரைதான் அஸ்ரா கர்க் என்ற அப்பாடக்கர். நேர்மையான அதிகாரி போல நடித்து ஊரை ஏமாற்றும் அஸ்ரா கர்கின் முகத்திரையை கிழித்த இந்த கட்டுரை காவல்துறை அதிகாரிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் வேட்டி அணிந்து, சென்னை கிரிக்கெட் கிளப் சென்ற பொழுது அவரை அனுமதிக்க மறுத்தது கிரிக்கெட் கிளப் நிர்வாகம். அது பெரும் சர்ச்சையாக உருவெடுத்து, தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டு இதற்கென ஒரு சட்டமும் உருவாக்கப்பட்டது. இதில் இருந்த போலித்தனத்தை அம்பலப்படுத்தும் கட்டுரையே அய்யர் வீட்டில் ஆட்டுக்கால் பாயா. இந்த கட்டுரை பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அஸ்ரா கர்க் குறித்து சவுக்கில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சியாக வழக்கறிஞர்கள் அஸ்ரா கர்க் மீது டிஜிபியிடம் புகார் அளித்ததன் தொடர்ச்சியாக அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு, அவர் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார் என்பது மகிழ்ச்சிகரமான செய்தி. இணைப்பு.
சவுக்கு இணையதளம் நடத்துவதற்கு தானாக முன்வந்து உதவிய அருமை நண்பர் போத்தி காளிமுத்துவை, சென்னை மாநகர காவல்துறை, சவுக்கு தொடர்பான வழக்கில் கைது செய்தது. இவர் கைது செய்யப்பட்ட வரை, savukku.net. savukku.in, savukku.org, newsavukku.com, newsavukku.org ஆகிய தளங்கள் முடக்கப்பட்டிருந்தன. ஆனாலும், தொடர்ந்து சளைக்காமல் தளத்தை நடத்தி வந்தோம். நண்பர் போத்தியின் கைதைத் தொடர்ந்து சர்வர் மற்றும் அதிலிருந்த அத்தனை பழைய கட்டுரைகளும் காணாமல் போயின. போத்தியை சிறையிலிருந்து வெளியே எடுக்க, வழக்கறிஞர்கள் உதவியோடு கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தளம் முழுமையாக முடங்கியது. சி.டி.செல்வம் எப்படிப்பட்ட மோசடிப் பேர்வழி என்பதற்கு சிறந்த உதாரணமாக, சொத்துத் தகராறு உள்ள தனது தம்பியின் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுத்ததுதான். ஊடகங்கள் நீதிபதிகள் குறித்து எழுத அஞ்சிய நிலையில், இந்த அயோக்கியத்தனமான நடவடிக்கை குறித்து சவுக்கு விரிவாக எழுதியது. அனைத்து தளங்களும் முடக்கப்பட்டதால், இந்த நேரத்தில் நாம் ப்ளாக்ஸ்பாட்டுக்கு மாறி கட்டுரைகளை எழுதி வந்தோம். வாய்க்கால் தவறும் வழிதவறிய நீதியும் என்ற கட்டுரை, வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பலத்த வரவேற்பை பெற்றது.
சிபிஐயால் பல ஆண்டுகளாக தேடப்பட்டு இறுதியாக கைது செய்யப்பட்ட அலெக்ஸ் என்பவருக்கு அவசர அவசரமாக ஜாமீன் வழங்கிய நீதிபதி கர்ணன் குறித்து விமர்சித்த கட்டுரை தகத்தகாய தலித்.
ஒரு பெண் உதவி ஆய்வாளரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார் ஒரு நீதித்துறை நடுவர். அவர் ஒரு தலித் என்று அவருக்கும் ஆதரவாக பல்வேறு குரல்கள் எழுந்தன. அந்தப் பெண்ணை ஏமாற்றிய நீதித்துறை நடுவரை கைது செய்த காரணத்துக்காக, சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுத்து வருகிறது. இந்த அயோக்கியத்தனத்தை கண்டித்து எழுதப்பட்ட கட்டுரையே நீதியின் மரணம். ஒரே ஒரு சதுர அடி கட்டிடத்துக்குக் கூட அனுமதி பெறாமல் ஒரு மருத்துவக் கல்லூரியை நடத்தி வந்தது முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி நிர்வாகம். விரிவான ஆவணங்களோடு, அந்த மோசடியை அம்பலப்படுத்திய கட்டுரைதான் பேய்கள் அரசாண்டால்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியம் எப்படி மலிவான வாடகையில், கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் கொள்ளையடிக்கப்படுகிறது என்பதை ஆதாரங்களோடு சவுக்கு மட்டுமே அம்பலப்படுத்தியது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்தக் கட்டுரை வேட்டி கட்டிக் கொண்டு கொள்ளையடியுங்கள்.
அரசுக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்பிலான நிலம், அடிமாட்டு விலைக்கு ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கு தாரை வார்க்கப்பட்டது. இந்த தாரை வார்த்தலை முன்னின்று நடத்தியவர் பான்டிட் குயின் என்று அழைக்கப்படும் ஷீலா பாலகிருஷ்ணன். இந்த விபரங்கள் அனைத்தும், பிரத்யேகமாக சவுக்கு தளத்தால் அம்பலப்படுத்தப்பட்டது. அந்தக் கட்டுரை பான்டிட் குயின். ஜெயலலிதா தண்டிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் என்று விளக்கிய ஆங்கிலக் கட்டுரையின் இணைப்பு ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு நாள் அறிவிக்கப்பட்ட பிறகு கூட, அந்த வழக்கு குறித்து எழுத மறுத்தன ஊடகங்கள். அது குறித்து சவுக்கு தளத்தில் ஊமை ஊடகங்கள் என்ற பெயரில் விரிவான கட்டுரை வந்தது.
மோடியின் 100 நாள் ஆட்சியை விமர்சித்து ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை இணைப்பு. ஜக்கி வாசுதேவ் என்ற திருட்டுச் சாமியாரைப் பற்றி முதன் முதலில் அம்பலப்படுத்தியது சவுக்கு தளமே. அதன் தொடர்ச்சியாக மேலும் பல்வேறு விபரங்களோடு, சாமியாரை அம்பலப்படுத்திய கட்டுரைதான் திருட்டுச் சாமியாரும், தொள்ளாயிரம் அடிமைகளும். ஒரு தனியார் அமைப்பை ஒரு குற்றத்தை விசாரிக்குமாறு பணித்தார் சி.டி.செல்வம். அந்த மோசடியை அம்பலப்படுத்திய கட்டுரைதான் கதாநாயகர்கள். சி.டி.செல்வம் விசாரிக்க உத்தரவிட்ட, அந்த தனியார் நிறுவனம் எப்படிப்பட்ட மோசடியான நிறுவனம் என்று அவர்களோடு உரையாடி, அதை பதிவு செய்து அம்பலப்படுத்திய கட்டுரைதான் சி.டி.செல்வம் என்ற மொள்ளமாறி. இரண்டாவது பாகத்தில் மேலும் அம்பலப்படுத்தப்பட்டார் சி.டி.செல்வம்.
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு முதல் நாள், அவரது 1991-1996 ஆட்சி காலம் எப்படிப்பட்ட இருண்ட காலமாக இருந்தது என்பது குறித்து ஆராய்ந்து எழுதிய கட்டுரைதான் சென்று வா மகளே சென்று வா. செப்டம்பர் 27 தீர்ப்பு நாளன்று, பெங்களுரு பரப்பன அக்ரஹாரா சென்று, பல புகைப்படங்களை எடுத்து, நிமிடத்துக்கு நிமிடம் தகவல்களை முகநூல் ட்விட்டர் மூலமாக அப்டேட் செய்தது, ஒரு இனிமையான அனுபவம். அந்த புகைப்படங்கள் ஒரு விரிவான கட்டுரையாக வெளியிடப்பட்டது. எத்தனை கோடி இன்பங்கள் வைத்தாய் இறைவா
ஜெயலலிதாவின் 1991-1996 மற்றும் 2001-2006 ஆட்சி காலம் இரண்டு பாகங்களாக மாற்றத்தைத் தவிர மாறாதது ஜெயலலிதா என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இந்த இரண்டு கட்டுரைகளும், இன்றைய இளைய தலைமுறையினர் அறியாத பல விஷயங்களை விளிம்பியது. இரண்டு கட்டுரைகளுமே நல்ல வரவேற்பை பெற்றன. இணைப்பு 1 இணைப்பு 2
ஜுன் மாதம் முதல் ப்ளாக்ஸ்பாட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்த சவுக்கு இணையதளம், அக்டோபர் 22 முதல் www.savukkunews.com என்ற புதிய முகவரியில் செயல்படத் தொடங்கியது. காணாமல் போன நமது பழைய கட்டுரைகள் அனைத்தும் மீட்டு எடுக்கப்பட்டு புதிய வடிவில் செயல்படத் தொடங்கினோம். இணைப்பு. கனிமக் கொள்ளையன் வைகுண்டராஜன் தொலைக்காட்சி செய்திச் சேனல் தொடங்கியது குறித்து விரிவாக, வருக வருக வைகுண்டராஜா என்ற கட்டுரையில் பதிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு பெற்ற ராமானுஜம், மீண்டும் ஆலோசகர் என்ற பதவியில் பணி நீட்டிப்பு பெற்றது, காவல் துறை வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காவல்துறை அதிகாரிகளின் மனவோட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் எழுதப்பட்ட மரணித்த கடவுள் என்ற கட்டுரை, பெரும் வரவேற்பை பெற்றது. பல அதிகாரிகள், எங்கள் மனதில் ஓடியது அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
தமிழகத்தில் மின் திட்டங்கள் எப்படி ஞானதேசிகன் என்ற அதிகாரியின் குளறுபடிகளால் கிடப்பில் போடப்பட்டு, தனியாரிடமிருந்து மின் கொள்முதல் செய்யப்படுகிறது என்ற விபரங்களை சவுக்கு தளமே முதன் முதலில் விரிவாக எழுதியது. இருட்டறையில் உள்ளதடா தமிழகம் என்ற சவுக்கு கட்டுரை, அதிகாரிகள் மற்றும் பொதுமக்களால் வரவேற்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக எழுதப்பட்ட மின்சாரக் கனவுகள் என்ற கட்டுரையும் பலத்த வரவேற்பை பெற்றது. இந்தக் கட்டுரைகளின் அடிப்படையிலேயே பல்வேறு எதிர்க்கட்சிகள் மின்சாரம் குறித்து பிரச்சினையை எழுப்பின என்றால் அது மிகையாகாது. எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்த அத்தனை தரவுகளையும் முதலில் பதிப்பித்தது சவுக்கு தளமே.
இந்துஸ்தான் டெலிப்ரின்டர்ஸ்க்கு சொந்தமான கிண்டி நிலத்தை அடி மாட்டு விலைக்கு, விற்ற விவகாரத்தை ஆவணங்களோடு அம்பலப்படுத்தியது சவுக்கு மட்டுமே. இந்த கட்டுரை, அதிகார மையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கட்டுரைக்காக, அந்த நிலம் இருக்கும் இடத்தில் நேரில் சென்று ஆய்வு நடத்தி முழுமையான விபரங்களோடு எழுதப்பட்டது அந்தக் கட்டுரை. ஊழலே உன் விலை என்ன என்ற அந்தக் கட்டுரைக்குப் பிறகு சிபிஐ இந்த விவகாரம் குறித்து ரகசிய விசாரணை நடத்துவதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்த ஆண்டு சவுக்கு செய்ததிலேயே மிக மிக முக்கியமான பணி ஜெயலலிதா மீதான புதிய சொத்துக் குவிப்பு குறித்த ஆதாரங்களை வெளியிட்டதுதான். இந்த ஆதாரங்கள் கையில் கிடைத்ததும், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகள், முக்கிய ஊடகங்கள் ஆகிய அனைத்து தரப்பும் தொடர்பு கொள்ளப்பட்டது. ஆனால், இந்த ஆதாரங்களை ஒருவருமே வெளியிட விரும்பவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக, சென்னையிலிருந்து வேறு மாநிலத்துக்கு சென்று தங்கி இந்தக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. தங்கியிருந்த இடத்தில் செல்பேசி சிக்னல் கிடையாது. ஆறு கிலோ மீட்டர் மலைப்பாதையில் நடந்தால்தான் சிக்னல் வரும். அப்படி நடந்து சென்று, சிறை செல்லும் சீமாட்டி என்ற பெயரில் தொடர் கட்டுரைகளை வெளியிட்டதில் ஏற்பட்ட உவகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. யாருமே செய்யத் துணியாத காரியத்தை இச்சமூகத்தின் நன்மைக்காக செய்வதில் ஏற்படும் ஆனந்தமே அலாதி. அந்த கட்டுரைகளை படித்தவர்கள் தரும் உற்சாகமே மேலும் மேலும் தொடர்ந்து பணியாற்ற வைக்கிறது. சிறை செல்லும் சீமாட்டி தொடர் கட்டுரைகள் இது வரை ஐந்து பாகங்கள் வெளி வந்துள்ளன. மேலும் வரவிருக்கின்றன.
தமிழ்நாடு மின் வாரியத்தின் பிரத்யேகமான ஆவணங்களை வெளியிட்டு, மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை அம்பலப்படுத்திய கட்டுரை, நத்தம் விஸ்வநாதனின் இருட்டுக்கடை அல்வா.
ஜுனியர் விகடன் கழுகு பகுதி போல அரசியல் விவகாரங்களை வெளியிடும் டாஸ்மாக் தமிழ் பகுதி, மற்ற சிக்கல்களின் காரணமாக நிறுத்தப்பட்டது. நீதித்துறை நடுவர் வி.பி.ரவீந்திரன் என்பவர் ஆதிபராசக்தி மற்றும் சத்யசாய் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விடுவிக்கப் போகிறார் என்றும் விடுவித்து விட்டார் என்றும் நேரடியாக குற்றச்சாட்டு சொன்னது சவுக்கு இணைப்பு அந்த நீதித்துறை நடுவர் மீது உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதும் அவரை பணி நீக்கம் செய்ய இருந்த நிலையில், அவராகவே அவர் வேலையை ராஜினாமா செய்து விட்டு சென்றுள்ளார் என்பதை உங்களிடம் பெருமையோடு பகிர்ந்து கொள்கிறது சவுக்கு.
2014ம் ஆண்டை திரும்பிப் பார்க்கையில், பல ஆயிரம் கோடிகளை வைத்திருக்கும் வைகுண்டராஜனையும், ஜெயலலிதாவையும், மன்னார்குடி மாபியாவையும், சாமான்யர்களாகிய நாம் அசைத்துப் பார்த்திருக்கிறோம் என்பதை நினைத்தால் உள்ளபடியே பெருமையாக இருக்கிறது. மோசம் என்று சொல்ல முடியாத அளவுக்கு ஓரளவுக்கு சிறப்பாகவே பணியாற்றியிருக்கிறோம் 2014ல். இருப்பினும், இன்னும் மேம்பட பணியாற்றியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஏறக்குறைய பத்துக்கும் மேற்பட்ட இணைய முகவரிகள் தடை செய்யப்பட்டன. கடைசியாக நாம் செயல்பட்டுக் கொண்டிருந்த www.tamilwhip.com என்ற முகவரியையும், ஆண்டின் இறுதி நாளான 31 டிசம்பர் அன்று தடை செய்துள்ளது மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம். அடுத்த வினாடியிலிருந்து நாம் புதிய முகவரியில் செயல்படத் தொடங்கி விட்டோம்.
நண்பர்கள் உதவியால், ஆப்பிள் ஐஓஎஸ்ல் செயல்படும் அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கியுள்ளோம். விரைவில் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனும் தயாராக உள்ளது. இந்த அப்ளிகேஷன்களை, சிடி.செல்வத்தின் அப்பனால் கூட தடை செய்ய முடியாது.
2014ம் ஆண்டு இன்னும் 500 வருடங்கள் ஆனாலும் வரலாற்றில் பதிவு செய்ய வேண்டிய ஆண்டு. அகங்காரம் பிடித்த, பணபலம் படைத்த ஒரு மாநிலத்தின் முதல்வரை சிறைக்கு அனுப்பிய ஆண்டு 2014. காங்கிரஸ் கட்சியின் பலவீனத்தாலும் ஊழல்களாலும் மதவாத சக்திகள் அதிகாரத்திற்கு வந்த ஆண்டு 2014. பல்வேறு மாற்றங்களைக் கொண்ட, இந்த ஆண்டில் நாம் நமது பங்கை அளித்திருக்கிறோம் என்பது பெருமிதத்தை அளிக்கிறது.
வரக்கூடிய ஆண்டு சவால் மிக்க ஆண்டாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இணைத்தில் உள்ள சுதந்திரத்தையும் நெருக்கடிக்கு உள்ளாக்க, அதிகார மையங்கள் முனையவே செய்யும். அந்த நெருக்கடிகளையெல்லாம் எதிர்கொண்டு வெற்றிப் பாதையில் பயணிப்போம்.
சவுக்கு மிகுந்த நெருக்கடிகளை சந்தித்த இந்த ஆண்டில், நண்பர்கள் செய்த உதவிகள் காலத்துக்கும் நெகிழ்ச்சியோடு நினைவு கூறக்கூடியன. அவர்கள் இல்லையென்றால் சவுக்கு இல்லை. ஆண்டின் இறுதியில் அவர்களுக்கு சவுக்கு வாசகர்கள் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
காவல்துறை உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் என்று சமூகத்தின் அனைத்து மட்டங்களில் இருந்தும் சவுக்குக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அந்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்பு வாசகர்கள் அனைவருக்கும் 2015 மிகச் சிறந்த ஆண்டாகவும், பூரிப்பையும் புன்னகையையும் வழங்கும் ஆண்டாகவும் அமைய சவுக்கு நெஞ்சார வாழ்த்துகிறது.
வாழ்த்துக்கள் தோழர்களே.
enging task in any business can be acquiring the earliest sale.Ensure that capturing consumers’ name along with email addresses could be the least info gathered from your sale.With this information available, follow-up along with existing consumers, probably with an automated apparatus like regular autoresponder.
This effort may be proven to decrease refund about products plus increase consumers’ satisfaction.Every every now and then, mention your related product that might be of interest to your customers.Write an evaluation and offer you real benefits.Such promotion is very inexpensive, but extremely effective in practice.The product is often anything, including an affiliate program.
3.Make use of up-sell procedure
Right before a customer have a look at to the particular payment entry, prompt regarding optional upgrade towards the better, larger, or better product for any fairly high discount, preferably not available elsewhere.
A particular number in customers will select the option, which translates into additional profits, almost without the need of additional efforts.
four.Provide discount coupons
Coupons need customers to return and go shopping.Promotional coupons work with both advertising as well as some forms of jv.Customers love to know which they get price reduction for what they purchase.Coupons allow it to be so serious and concrete.
5.Cross-promote along with other connected products
There isn’t any limit concerning how may be accomplished.Joint embark with various other business and even competitors is definitely feasible so long as it adds a win-win state of affairs.
One example could be to give away sample associated with other products or services as part of the whole system.As long because the sample is pertinent to the consumer, this advertising could only be seen as an additional value in lieu of pure promotional.
There are lots of other tactics to boost sales nonetheless above tips were proven to be effective often.Choose one at a time and to become self-sufficient.Good fortune..
Pandora Hanging Charms
<meta http-equiv="Content-Type" content="text/html; charset
my best wishes for the future strivings! We expect more than what you have done in the past. We are with you savukku! keep alerming the enemies! keep supporting the common! You deserve more than what the noble and other so-called prizes can offer! let me tell you, You are our noble award bravest Savukku!
இந்த ஆண்டு போல சவுக்கு தளத்துக்கு சோதனையான ஆண்டு எதுவுமே அமைந்தது கிடையாது. நமது இருப்பே கேள்விக்குள்ளாக்கப்படும் அளவுக்கு கடுமையான சோதனைகள்.
-என்னாது இப்ப கருணாநிதி ஆட்சி நடகில்லையா,அம்மா ஆட்சிளயும் நம்மள web site நடத்த உட மாட்டேன்கிராங்களே
நல்லது சவுக்கு…. இந்த வருடம் நிறைய பேர்களிடம் பிச்சை வாங்கி மற்றவர்களைத் தூற்றி செருப்படி வாங்க என் வாழ்துக்கள்
Hat off to your fabulous job, same time take care of yourself. I recommended all my friends/year-mates/class mates/ex-colleagues ( more than 100+) to read your articles wherever they are in this world ( am NRI working in middle east) to get latest updates about what is happening in TN. All of them are really happy to read your blogs.
I love savukku…
அதிகார மையங்களின் மோசடிகளை பொதுமக்களுக்கு தொளுறித்துகாட்டும் சவுக்கு க்கு எத்தனை தடைகள் வந்தாலும் அகலும்!
அதிகாரிகளுக்கு நடுவில் ஊழல் வாதிகள் இருக்கும்போது.. அதே ஊழல் வாதிகளுக்கு நடுவில் பல நேர்மை அதிகாரிகள் உதவி செய்கிறார்கள் என்பது மிகுந்த மகிழ்சிச்சியை அளிக்கிறது…
சங்கர் எதற்கும்கவலைப்பட வேண்டாம்..என்றும் நான் உங்களுடன்…
My best wishes savukku
உங்கள் பணி தொடரட்டும், துரோகிகளும், ஊழல் பெருச்சாளிகளும் , பணம் திண்ணும் பிணங்களும், கொள்ளை கூட்டங்களும் , வெறி பிடித்த அதிகார போதையில் மிதக்கும் அதிகார வர்க்கங்களும், மதவெறி பிடித்த சொம்புகளும்
சவுக்கின் அசைக்க முடியா ஆதாரம் அடிக்கும் அடியில் தொடை நடுங்க வேண்டும்.
தமிழ் தேசியம் மலரவேண்டும் , நல்லாட்சி தன்னலம் இல்லா தமிழர்கலால் மலரும் நாள் வெகு தூரம் இல்லை , உங்கள் கடமை தமிழ்நாட்டை சுயநல கூட்டத்திடம் இருந்து மீட்க்க வல்லது
வாத்துக்கள். வணக்கங்கள்
really great… Please take care… watch your websites. We need more challenging articles.
All the best Savukku…. Keep up the Good Work…. God Bless you !!! Take care
தங்கள் முயற்சி வெற்றியடைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். தலை வனங்குகிறேன்
Shankar, i really appreciate your hardwork you put in providing us the news accurate. Hatsoff to you.. Have a happy, healthy and safe New Year..
I respect your commitment to give us accurate news. i see most your items reflecting in the JV “Mister Kazugku” portion, after you highlighted it in your blog. Good Job!! Well done bro.. Continue your sociall work. Thanks.
You are doing a fabulous job….best wishes Savukku.
Hats off to you Savukku. Keep up the good work and hopefully we are all here to support you in whatever form we could. What I cannot do, you are doing wonderfully well. Great tidings. I hope the spirit of fighting never dies in you.
All the best of your efforts. Hopefully 2015 also will be more challenging than 2014.
Cheers.
ஆரம்பமே அமர்க்களம்….!!!
போக்கிரி அரசியல்வாதிகள் யாரையுமே
விட்டு வைக்காத உங்கள் சவுக்கு
இந்த புதிய ஆண்டிலும்
புதிய வேகத்துடன் சுழலட்டும் சங்கர்….!
உங்களின் பணி இன்னும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
சாவுக்கு சங்கர் என்ற பெயரில் ஒரு குள்ளநரி இங்கே சில பதிவுகளை வீசிவிட்டு சென்றுள்ளது….
எதிர் கருத்துகளை பதிய அனுமதிக்காத உன் வீரமே….. நீ பரமசிவன் கழுத்தில் கிடக்கும் பாம்பு என்பதை உணர்த்திவிட்டது… ..
தமிழர் நலனை அடகு வைத்து வியாபாரம் பார்த்து கள்ள கட்டும் தன் தானை தலைவர்களை கண்டும் காணமல்….. தெரிந்தும் தெரியாமல்…. போவது ஏனோ….
தான் உதவாத ஈழ தமிழர்களுக்கு வேறு எவருமே உதவ கூடாது என்ற ஈனத்தனமான எண்ணம் கொண்ட உன்னை போன்றவர்களால் தான் நம் இனம் இன்னும் கொடுமைகளை சந்திதுகொண்டுள்ளது….
தமிழ்…. தமிழர்…. தமிழ் தேசிய உணர்வுகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு வேறு எங்கு சென்று ஓட்டு பிச்சை எடுக்க போகிறீர்கள்….
முடிந்தால் முகநூலிலேயே ஒரு நேரடி விவாதத்திற்கு இந்த குள்ளநரி தயாரா…. முடிந்தால்……
you are really super hero of journalism. i respect ur brave and truth duty. i wanna participate a small place of your sacrifice. i do my best.
2014ம் ஆண்டு இன்னும் 500 வருடங்கள் ஆனாலும் வரலாற்றில் பதிவு செய்ய வேண்டிய ஆண்டு. அகங்காரம் பிடித்த, பணபலம் படைத்த ஒரு மாநிலத்தின் முதல்வரை சிறைக்கு அனுப்பிய ஆண்டு 2014. காங்கிரஸ் கட்சியின் பலவீனத்தாலும் ஊழல்களாலும் மதவாத சக்திகள் அதிகாரத்திற்கு வந்த ஆண்டு 2014. பல்வேறு மாற்றங்களைக் கொண்ட, இந்த ஆண்டில் நாம் நமது பங்கை அளித்திருக்கிறோம் என்பது பெருமிதத்தை அளிக்கிறது.
Best Wishes
Good Job… Keep it up but dont risk too much…
Welcome
I have few ethical differences with you especially the way you cheaply posted Kaththi’s torrents link in ur FB page and put illogical abusive posts about Vijay for no reason but when it comes to exposing corruption of VIPS be it CM or Judge or anyone, you are simply THE BEST… Hats off to you. Its only bcos of people like you we get to see some honest news as the entire media in India is corrupt and political…
இனிய புத்தாண்டில் அணைத்து வளமும் பெற்று சகல முயற்ச்சிகளும் இனிதே நிறைவு பெற வாழ்த்துக்கள்.
சேவை தொடரட்டும்.
நன்றி
I am extremely proud of seeing a Tamil youth as capable as Assange and Snowden, I find no words to express my admiration and gratitude, I pray the Almighty to shower upon you all the blessings,
So far SAVUKKU never affraid of bringing the atrocities of Politicians,bureaucrats and the so called activists. Let this new year be a another year of relentlessly and untiringly bringing the truth to the public domai.Wish you Happy New Year 2015 SAVUKKU and Best wishes
Wish you happy new year, I belive God, so i pray for you
Happy New Year. No words to describe your effort.
சாதாரண நாட்டுப்பற்றுமிக்க இளைஞர்களின் இன்றைய ஊழல் அரசியல்வாதிகள் அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீதான கோபமே சவுக்கு..
மேலும் உங்கள் பணி சிறக்க நல்ல வாழ்வையும் உடல் நலத்தையும் தர ஆண்டவனை பிராத்திக்கிறேன்..
Wll done – May god give you the required financial support and health and courage to go further.. The society and the poor people definetly need people like you than those corrupted.. the only painful thing that hurts , inpite of all the expose .. the people still believe them,, I wish an people revolution had to come to throw these culprits and corrupted.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இன்னும் வீரியத்துடனும் உத்வேகத்துடனும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..!! ஆதரவு என்றும் உண்டு
thanks annaa..vila vila ezuvom savukku…
Wish you happy and successful new year….
கிழி… கிழி… கிழி…!
// சி.டி.செல்வம் அப்பனால் கூட// ROFL MAX…
Have a great year..
Great Salute Sankar sir
VERY good work. Keep it up.
hats off boys
Valthukkal
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்!
Windows phone app venum Savukku
Wish you a happy & prosperous new year anna.We are with you.
Hpy New Year Thala… 2015 -il உங்கள் திட்டங்கள் யாவும் வெற்றி பெற வாழ்த்துக்கள். “சவுக்கு” -ku பக்கபலமாக இருக்கும் அணைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்
2014 -la அம்மா…!! 2015 -la கலைஞர்/KD brothers உள்ளே போகணும் ..
/*விரைவில் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனும் தயாராக உள்ளது. இந்த அப்ளிகேஷன்களை, சிடி.செல்வத்தின் அப்பனால் கூட தடை செய்ய முடியாது.*/
ROFL :). Waiting for Android App..
விழ விழ எழுவோம்!
All the very best for all your future endeavors! Let all your efforts become fruitful! Let the Almighty be with you in each and every steps you take! Please keep up the good work!
I was eagerly waiting for such a beautiful summarization! To me, this is the best ever “2014 Year review”. Take care of your health!