முதன் முதலாக தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சித் தலைவர், ஜெயலலிதாவின் புதிய சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து குரல் கொடுத்திருக்கிறார். மருத்துவர் ராமதாஸ், ஜனவரி 5 அன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், 1996க்குப் பிறகு, ஜெயலலிதா மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் சேர்த்துள்ள சொத்து குறித்து புதிதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேணடும். இது தொடர்பாக ஒரு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, இது குறித்து பேசியுள்ள மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பொறுப்பற்ற முறையில், இப்படி ஒரு விவகாரம் இருப்பதையே கண்டு கொள்ளாமல், மராத்தான் ஓடிக்கொண்டும், குஷ்புவோடு சண்டை பிடித்துக் கொண்டும், உலகம் முழுக்க நான் பாப்புலர் என்று பேசிக்கொண்டும், கட்சியை மூத்த மகனுக்கு அளிப்பதா, இளைய மகனுக்கு அளிப்பதா அல்லது மகளுக்கு அளிப்பதா என்று விவாதித்துக் கொண்டும் இருக்கும் பொறுப்பில்லாத எதிர்க்கட்சிகளுக்கு கண்டனங்கள்.
ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனுவின் மீதான விசாரணை திங்களன்று, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடங்கி விட்டது. இந்த விசாரணை தொடங்குவதற்கு முன்பாக, நடந்த சில விவகாரங்கள் சுவராஸ்யமானவை.
பெங்களுரு சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ஜெயலலிதா, முதல் 20 நாட்களுக்கு யாரையும் சந்திக்கவில்லை. சசிகலாவைத் தவிர வேறு யாரோடும் பேச்சுவார்த்தை கிடையாது. இப்படி தனக்குத்தானே தண்டனை விதித்துக் கொண்டு, தனிமைச் சிறையில் தன்னை அடைத்துக் கொண்ட ஜெயலலிதாவிடம் ஒரு மாதத்துக்கு முன்னதாக திடீர் மாற்றம். மக்கள் தலைமைச் செயலாளரான ஷீலா பாலகிருஷ்ணன், மக்கள் டிஜிபியான ராமானுஜம், ஆகியோரை சந்தித்தார். தொடர்ந்து தலைமைச் செயலாளர் உள்ளிட்ட இதர அதிகாரிகளையும் சந்திக்கத் தொடங்கினார். இவரது சந்திப்பு தொடங்கிய பிறகு, வரிசையாக அதிகாரிகள் மாற்றப்படத் தொடங்கினர். காரண காரியங்கள் இல்லாமல், பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் மாற்றப்பட்டனர். அதன் பின் ஜெயலலிதாவை சந்தித்த அதிகாரிகள் அனைவரிடமும் ஜெயலலிதா சரளமாக உரையாடியுள்ளார். புதிய திட்டங்கள் குறித்து, அதிகாரிகள் பேச்சை எடுத்தபோதெல்லாம் ஜெயலலிதா இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் நான் மீண்டும் முதல்வராக வந்து விடுவேன். வந்ததும் அந்த திட்டத்தை அறிவித்துக் கொள்ளலாம் என்று கூறியிருப்பதைக் கேட்டு பல அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எப்படி முடியும் ? இது சாத்தியமா என்று பலருக்கு வியப்பு. ஆனால் அபரிமிதமான நம்பிக்கையோடு அவ்வாறு கூறியிருக்கிறார்.
இந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான், டிசம்பர் 11 அன்று, ஜெயலலிதா சார்பாக உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட ஃபாலி நரிமன், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அனைத்த ஆவணங்களையும் தாக்கல் செய்து விட்டதாகவும், டிசம்பர் 18 அன்று நடக்கும் வழக்கு விசாரணையை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.
அந்த நம்பிக்கைக்கு காரணம், ஜெயலலிதாவுக்கு 22 நாட்களில் பிணை வழங்கிய உச்சநீதிமன்றமும், அதன் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களும். 31 டிசம்பர் 2014 அன்று, சவுக்கு முகநூல் பக்கத்திலும், வாட்சப் போன்ற மென்பொருட்கள் மூலமாகவும் ஒரு தகவல் பகிரப்பட்டது. அந்தத் தகவல் என்னவென்றால், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா அங்கிருந்து மாற்றப்படுவார். அலகாபாத் உயர்நீதிமன்றத்திலிருந்து வினீத் சரண் என்ற நீதிபதி கர்நாடகத்துக்கு மாற்றப்படுவார். பணி மூப்பு அடிப்படையில் அவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது நீதிபதியாக இருப்பார். அங்கே முதல் நீதிபதியாக உள்ள மஞ்சுநாத் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருப்பார். அவர், இந்த வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று முடிவெடுப்பார். இந்த மஞ்சுநாத் மற்றும் இந்திய தலைமை நீதிபதி தத்து ஆகியோர் நெருக்கம் என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இச்செய்தியை உறுதிசெய்யும் விதமாக, டெல்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையும் முதல் பக்க செய்தி வெளியிட்டிருந்தது. இணைப்பு
இதற்கு மறுநாளே, ஜனவரி 1 அன்று, கர்நாடக உயர்நீதிமன்றம், நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல் முறையீட்டு மனுக்களை விசாரிப்பார் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது.
அது வரை, நிம்மதியாக மக்கள் அதிகாரிகளை சந்தித்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு இது பெரும் அதிர்ச்சியை அளித்தது. இந்த அதிர்ச்சி அவர்கள் போட்டு வைத்திருந்த திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியானதையே காட்டியது.
2 ஜனவரி 2015 அன்று இந்த வழக்கு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அன்று நீதிபதி குமாரசாமி விடுமுறை என்பதால், அவ்வழக்கு நீதிபதி பெல்லியப்பா முன்பு வந்தது. அவர் முன்பு ஆஜரான ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் வர இருப்பதாகவும், ஆகையால் வழக்கை 12ம் தேதிக்கு தள்ளி வைக்குமாறும் கோரிக்கை விடுத்தார். ஆனால் நீதிபதி பெல்லியப்பாவோ, நான் பொறுப்பு நீதிபதிதான், நீங்கள் உங்கள் கோரிக்கைகளை நீதிபதி குமாரசாமியிடம் கூறுங்கள், அவர் திங்கட்கிழமை வந்து விடுவார் என்று கூறுகிறார். ஆனால் குமாரோ, அந்த நீதிபதியோடு ஒரு மணி நேரம் வாதம் செய்கிறார். நீதிபதி பிடிவாதமாக வழக்கை அடுத்த வேலை நாளுக்கு ஒத்தி வைத்தார்.
டிசம்பர் 11 அன்று நடந்த ஒரு சம்பவத்தையும், இதையும் பொருத்திப் பார்க்க வேண்டும். டிசம்பர் 11 அன்று ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பாலி நரிமன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் முன்பாக எழுந்து முறையிட்டார். டிசம்பர் 18 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வர வேண்டும். ஆனால் நாங்கள் அனைத்து ஆவணங்களையும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விட்டோம். ஆகையால் இந்த வழக்கை முன்னதாகவே விசாரிக்க வேண்டும் என்று கோரினார். ஆனால் உச்சநீதிமன்றம் இந்த கோரிக்கையை நிராகரித்தது. இணைப்பு
உச்சநீதிமன்றத்தில் வழக்கை விரைவாக விசாரியுங்கள் என்று கோரிக்கை வைத்த ஜெயலலிதா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஏன் வழக்கை தள்ளி வைக்க கோர வேண்டும்….. ? முரணாக உள்ளதல்லவா ? இரண்டாவது நாள் நீதிபதி குமாரசாமியிடம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீண்டும் இதே கோரிக்கையை வைத்தார் பி.குமார். ஒரு வாரம் தள்ளி வையுங்கள். டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் வருகிறார் என்று அவர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நீதிபதி குமாரசாமி, “ஒரு மணி நேரம் கூட இந்த வழக்கை தாமதிக்க முடியாது. உங்களால் முடிந்தால் வாதிடுங்கள். இல்லையென்றால் உங்கள் ஜுனியர்களை வாதிட வையுங்கள் என்று கறாராக கூறி விட்டார். இதன் பிறகு, பி.குமார், எனக்கு சர்க்கரை வியாதி உள்ளது. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை பத்து நிமிடம் இடைவெளி வேண்டும் என்றார். நீங்கள் இருபது நிமிடம் கூட எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், அந்த இருபது நிமிடத்தில் உங்கள் ஜுனியரை வாதிடச் சொல்லுங்கள் என்று கூறியதும் பி.குமார் ஆடிப்போனார்.
வேறு வழியில்லாமல் வாதத்தை தொடங்காமல், நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை எவ்வளவு மெதுவாக முடியுமோ, அவ்வளவு மெதுவாக படித்துக் கொண்டிருக்கிறார்.
18 வருடங்களாக என்ன செய்து சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடித்தார்களோ, அதே வேலையை மீண்டும் தொடங்கி விட்டார்கள். ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்குகையில் குறிப்பிட்ட முக்கிய நிபந்தனை, இந்த வழக்கை இனியும் தாமதப்படுத்தக் கூடாது என்பதே. ஆனால், விசாரணையின் முதல் நாளே தாமதத்துக்கான வழி தேடுகிறார்கள்.
இந்த வழக்கை உற்று நோக்கி வரும் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் சவுக்கிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
“ஜெயலலிதாவின் வழக்கு இந்திய நீதித்துறைக்கே ஒரு பரிசோதனை. எத்தனை நாட்களுக்கு இது போன்ற இழுத்தடிப்புகளை ஜெயலலிதா செய்ய இந்த நீதிமன்றங்கள் அனுமதிக்கப்போகிறது என்பது புரியவில்லை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு ஒரு உள்ளார்ந்த சக்தி உண்டு. நீதித்துறை, அரசு நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் ஆகியவற்றில் ஏதாவது ஒரு உறுப்பு வரம்பு மீறுகையிலோ, வழி தவறுகையிலோ, மற்ற உறுப்பி தலையிட்டு அதை சரி செய்யும் சக்தி படைத்தது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.
ஜெயலலிதாவை பொருத்தவரை, இவர் இந்த அமைப்புகள் அத்தனையையும் கேலிக்கூத்தாக்குகிறார். கற்பனைக்கே எட்டாத வகையில், இந்த அமைப்புகளை நகைப்புக்குள்ளாக்குகிறார். நாசம் செய்கிறார்.
உச்சநீதிமன்றம், ஒரே ஒரு நாள் கூட வழக்கை தாமதம் செய்ய மாட்டோம் என்று ஜெயலலிதா தரப்பு அளித்த உத்தரவாதத்தின் பேரிலேயே ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், 18 வருடங்களாக என்ன செய்தார்களோ, அதை மீண்டும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் செய்யத் தொடங்கியுள்ளார்கள். இந்த நேரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு, இவர்களின் ஜாமீன் மனுவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று நோட்டீஸ் வழங்க வேண்டும்.
இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக முன்பு இருந்த பி.வி.ஆச்சார்யா இந்த யோசனையைத்தான் நீதிமன்றத்தின் முன் வைத்தார். வழக்கு நடத்தாமல் குற்றவாளிகள் தாமதப்படுத்துவதன் ஒரே காரணம், அவர்களின் ஜாமீன்தான். ஜாமீனை ரத்து செய்தால், அவர்கள் தானாக வழிக்கு வருவார்கள் என்று கூறினார்.
முதல் நாளே தாமதப்படுத்துவதற்கான தந்திரங்களில் ஜெயலலிதா தரப்பினர் இறங்கியிருப்பதால், உச்சநீதிமன்றம் உடனடியாக தலையிட வேண்டும்” என்று கூறினார்.
டெல்லி இந்திய எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அலகாபாத் நீதிபதியை கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவது குறித்து கேட்டபோது “இந்த செய்தியை ஜெயலலிதா வழக்கிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. ஜெயலலிதா வழக்கு போன்றதொரு முக்கியமான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன் நிலுவையில் இருக்கையில், இந்த மாற்றம் சந்தேகத்தையே எழுப்புகிறது. சம்பந்தப்பட்ட நீதிபதியான வினீத் சரண் தனக்கு விருப்பமில்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார். அலகாபாத் உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்தில் தற்போது பணியாற்றி வரும் ஷிவ் கீர்த்தி சிங் மற்றும் ஆர்.கே.அகர்வால் ஆகிய இரண்டு நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்தும், வினித் சரணை மாற்ற, தலைமை நீதிபதி தத்து ஏன் இவ்வளவு முனைப்பு காட்டுகிறார் என்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இந்த மாற்றம் செயல்படுத்த முடியாமல் போனதால், ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகளின் செயல்பாடுகள் அருவருப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும்” என்று கூறினார்.
அருவருப்பை ஏற்படுத்துகின்றனவா ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் ? நாம் தொடர்ந்து பதிப்பித்து வரும் புதிய சொத்துக் குவிப்பு வழக்கின் தொடர்ச்சியாக இன்று புதிய இரண்டு நிறுவனங்களைப் பற்றி பார்ப்போம்.
முதல் நிறுவனம் க்யூரியோ ஆட்டோ மார்க்ஸ் என்ற நிறுவனம். இந்த நிறுவனம், ராஜ் எச். ஈஸ்வரன், மற்றும் ஹரி ஈஸ்வரன் ஆகியோரால் 5 லட்ச ரூபாய் முதலீட்டில் நவம்பர் 2002ல் தொடங்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் நோக்கங்கமாக குறிப்பிடப்பட்டிருப்பது, பத்திரிக்கை தொடங்குவது. செய்தித்தாளோ, வார இதழோ, புத்தகங்களோ அல்லது இதர வடிவிலான ஊடகமோ, தொடங்குவது. அது தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது. இது தொடர்பாக வெளிநாடுகளில் ஒப்பந்தம் செய்வது என்பது நோக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் 9 பிப்ரவரி 2004 அன்று புதிதாக மூன்று இயக்குநர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் யாரென்றால் கனிமக் கொள்ளையன் வைகுண்டராஜன், அவரது சகோதரர் ஜெகதீசன் மற்றும் இளவரசியின் மருமகள் விஎஸ்.சிவக்குமார் ஆகியோர். 10 பிப்ரவரி 2004 அன்று, இந்நிறுவனத்தை தொடங்கிய இரண்டு ஈஸ்வரன்களில் ஒருவரான ஹரி ஈஸ்வரன் ராஜினாமா செய்கிறார்
அதன் பின் இந்த நிறுவனம், வைகுண்டராஜன் சகோதரர்கள் மற்றும் சிவக்குமார் கைவசம் இருக்கிறது. நிறுவனத்தை தொடங்கிய மற்றொரு ஈஸ்வரனான ராஜ் எச் ஈஸ்வரன் மட்டும் இயக்குநராக தொடர்கிறார்.
29 மார்ச் 2008ல் நடந்த ஆண்டு கூட்டத்தில் ராஜ் எச். ஈஸ்வரன் மற்றும் வைகுண்டராஜன் ஆகியோர் ராஜினாமா செய்கின்றனர். வைகுண்டராஜனின் சகோதரர் ஜெகதீசன் மற்றும் இளவரசியின் மருமகன் விஎஸ் சிவக்குமார் ஆகியோர் தொடர்கின்றனர். மன்னார்குடி மாபியா வெளியேற்றப்பட்ட அந்த காலகட்டத்தில் ஜெகதீசன், விஎஸ். சிவக்குமார் ஆகிய அனைவரும் வெளியேற்றப்படுகின்றனர்.
அந்த நேரத்தில்தான் தமிழகம் சந்தித்திராத மிகப் பெரிய தொழில் அதிபரான பூங்குன்றன் இயக்குநராகிறார். அவர் தன் தொழில் திறமையால் இந்த நிறுவனத்தை நடத்தி வரும் நேரத்தில், பிரிந்த ஆடுகள் மீண்டும் இணைகின்றன. இணைந்ததும் 28 செப்டம்பர் 2012 அன்று மன்னார்குடியில் காகிதம் பொறுக்கிக் கொண்டிருந்து விட்டு, திடீர் தொழில் அதிபர்களான கார்த்திகேயன் கலியபெருமாள் மற்றும் கே.எஸ்.சிவக்குமார் ஆகியோர் இயக்குநர்களாகின்றனர். இந்த நிறுவனம் 31 மார்ச் 2013 வரை, ஆண்டு கணக்குகளை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தாக நாம் பார்க்கப்போகும் நிறுவனம் விறுவிறுப்பானது. இந்த நிறுவனத்தின் பெயர் ஜேசன் கோல்டன் ப்ரூவரிஸ். சந்தேகமே வேண்டாம். சாராய ஆலைதான். ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு சொந்தமாக உள்ள மிடாஸ் ஆலை போலவே மற்றொரு சாராய ஆலைதான் இது. மிடாஸ் ஆலையின் நிர்வாகியாக இருந்த அதே குலோத்துங்கன்தான் இதற்கு இயக்குநர். குலோத்துங்கள், சசிகலாவின் கணவர் நடராஜனின் சகோதரி மகன். குலோத்துங்கனோடு சேர்ந்து இளவரசியின் மருமகனாக இருக்கும் வி.எஸ்.சிவக்குமாரையும் இயக்குநராக கொண்டு, ஒரு கோடி ரூபாய் முதலீட்டில், 13 பிப்ரவரி 2008 ஆகிய ஒரு சுப நாளில் இந்த நிறுவனம் தொடங்கப்படுகிறது. அந்த நிறுவனத்தின் நோக்கமாக, பியர் உள்ளிட்ட அனைத்து வகையான மதுபானங்களையும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் பெயரில் தமிழகத்திலோ, அல்லது பிற மாநிலத்திலோ இவர்கள் நிலங்களை வாங்கிப்போட்டு, சாராய ஆலை தொடங்குவதற்கான பணிகளை தொடங்கியிருக்கக் கூடும். ஆனால் நம்மிடம் அதற்கான ஆதாரங்கள் இல்லை. மன்னார்குடியில் எருமை மாடு மேய்த்துக் கொண்டிருக்க வேண்டியவர்கள் இன்று சென்னையில் மிகப் பெரிய தொழில் அதிபர்களாக வலம் வருகிறார்கள் என்றால், இதற்கு முழு முதல் காரணம் ஜெயலலிதா மட்டுமே. மக்கள் பணத்தை 1991 முதல் 1996 வரை கொள்ளையடித்தார். மீண்டும் 2001 முதல் 2006 வரை கொள்ளையடித்தார். தற்போது, கடந்த இரண்டு ஆட்சிகளை விட, மிகமிக மோசமான கொள்ளைகளை அடித்துக் கொண்டிருக்கிறார். அந்த கொள்ளைகளின் விளைவே இது மற்றும் இது போன்ற நிறுவனங்கள்.
ஊரான் சொத்தை அடித்து உலையில் போட்டு, சம்பல் கொள்ளையர்களை விட மோசமாக கொள்ளையடித்ததற்காக, 18 ஆண்டுகளாக ஒரு வழக்கை சந்தித்து வந்தும், அது குறித்து சற்றும் கவலைப்படாமல், அதே தவறை மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறார் ஜெயலலிதா என்றால், இவரை விட ஒரு மோசமான சாபக்கேடு தமிழகத்திற்கு இருக்க முடியுமா ?
1988ம் ஆண்டு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறார் ஜெயலலிதா. அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எனக்கு மூட்டு வலி இருக்கிறது. அதற்கு அமெரிக்காவில் நல்ல சிகிச்சை இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் நான் தேவைப்பட்டால் செல்வேன். இல்லையென்றால் இங்கேயே சிசிக்சை எடுத்துக் கொள்வேன் என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறுகிறார்.
தமிழகத்தில் இப்போது வெளிவரும் மக்கள் குரல் என்ற பத்திரிக்கை ஆங்கிலத்தில் News Today என்ற பெயரில் வெளிவந்தது. அதன் ஆசிரியராக இருந்தவர் டிஆர்ஆர் என்று அழைக்கப்பட்ட டி.ஆர்.ராமசாமி. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மிக மிக சரளமாக எழுதக் கூடியவர். அவர் தமிழில் “அறிவார்ந்த நண்பர்களே” என்ற தலைப்பில் எழுதும் கட்டுரைகள் மிகப் பிரசித்தம். எந்த அளவுக்கு அவர் செல்வாக்கு மிக்க பத்திரிக்கையாளர் என்றால் 1972ம் ஆண்டு எம்ஜிஆர் திமுகவிலிருந்து வெளியேறிய கால கட்டத்தில் அவர்தான் எம்.ஜி.ஆரை இந்திரா காந்தியிடம் சென்ற அறிமுகப்படுத்தியவர். பிறப்பால் பிராமணராக இருந்தாலும், அறுபதுகளிலேயே பஞ்சமி நிலங்கள் குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்து எழுதியவர். 1972ம் ஆண்டில் மக்கள் குரல் என்ற பத்திரிக்கையை மற்றொருவரோடு சேர்ந்து தொடங்குகிறார். 1980ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்வரானதும், அவருக்கு நம்மை புகழ்ந்து ஆங்கிலத்தில் வரவேண்டும் என்ற அற்ப ஆசை. அதன் அடிப்படையில் டி.ஆர்.ராமசாமியை அழைத்து ஆங்கில நாளிதழ் ஒன்று தொடங்குங்கள் என்று கூறவும் அப்படி தொடங்கப்பட்டதுதான் NEWS TODAY.
ஜெயலலிதாவின் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு, மக்கள் குரலின் நிருபர் மட்டுமே சென்றிருக்கிறார். நியூஸ் டுடே நிருபர் செல்லவில்லை. மக்கள் குரல் நிருபர், ஜெயலலிதா மூட்டு வலிக்கு இந்தியாவில்தான் சிகிச்சை எடுக்க இருக்கிறார் என்று செய்தி போடுகிறார். ஆனால் செய்தி நிறுவனங்களுக்கு செய்தி அளிக்கும் செய்தி ஏஜென்சியான யுஎன்ஐ ஜெயலலிதா மூட்டு வலிக்காக அமெரிக்க செல்கிறார் என்று அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி விட்டது. டிஆர்ஆருக்கு சந்தேகம். எதை நம்புவது என்று. இறுதியாக, யுஎன்ஐ செய்தி நிறுவனம் அனுப்பிய வையர் செய்தியின் அடிப்படையில் JAYA LEAVES TO US FOR TREATMENT என்று செய்தி வெளியிட்டு விடுகிறார்.
மறுநாள் காலை 10 மணிக்கு, மதுசூதனன் தலைமையில் 80 பெண்கள் திரண்டு நியூஸ் டுடே அலுவலகம் முன்பாக, புடவையை தூக்கிக் காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மனம் வெறுத்து அருவருப்படைந்த டி.ஆர்.ராமசாமி அன்று மாலை மக்கள் குரலில் எழுதிய கட்டுரையின் தலைப்பு என்ன தெரியுமா ? “தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்தியே தீர வேண்டிய அசிங்கம்”. இது நடந்த ஆண்டு 1988.
மீண்டும் 1994ம் ஆண்டு, சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக இதே போராட்டத்தைத்தான் கையாண்டார் ஜெயலலிதா என்பதை மறந்து விடாதீர்கள் தோழர்களே.
ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இப்படி ஒரு போராட்டத்தை தூண்டி விட ஜெயலலிதா உடம்பெல்லாம் கூச வேண்டாமா ? ஆனால் செய்தார் ஜெயலலிதா. இனியும் செய்ய மாட்டார் என்பதற்கான உத்தரவாதம் இல்லை.
இந்த சீமாட்டி இருக்க வேண்டிய இடம் சிறையா இல்லையா ?
Show me a politician in the country who doesn’t do such things to make money. Is our country so pure that we have to look at what Jayalalitha does with awe and disbelief? We all know very well everybody right from municipal councilors to the prime minister do loot and plunder people’s money. So what you have written in your post doesn’t give us any news value. It may at best serve your efforts to portray your neutrality between political parties in TN!
Forget corruption issues, they are old stories including the himalayan 2G and granite. We are only concerned with the character of the leaders – who possesses strong leadership qualities and who can stand firm against attempts to rob state’s interests. People like Karuna have proved to be sheer traitors in this regard. Other politicians like Vaiko or VKant have become such jokers that they can’t be counted in politics at all. Same goes with anti social elements like Ramdoss who you refer to with respect here!!
We still see in JJ a strong leader and a person who will stand firm on issues affecting the state. Further, she is the only leader who is liked by all sections of the society overwhelmingly . It is not possible to create another leader like her in 100 years – who has her party in grip even when she is not in power and an ever growing popular support even after a court conviction. Please think what is the message conveyed by allthese. People have come to a stage where nobody is able to avoid corruption and so the one who is sincere and strong is being supported wholeheartedly.
I bet AIADMK will win 200+ seats if assembly elections are held today or in 2016. Is anyone ready to challenge the bet?
Persons who don’t have public support – please stop your murmurs and moaning. Accept reality.
Great Work Shankar…
I used to think couple of years back you are only against DMK and an ADMK sombhu but you proved me wrong…
I was motivated to join politics in 2001 by none other than former social welfare minister Ms. P.T.Saraswathy, close associate of MGR. Another person instrumental in my joining AIADMK was senior advocate and editor and journalist of closed magazine ‘Navamani” Shri.MVL. Narasimhan. This is what he told me., “Jayalalitha is somewhat related to us. She asked my niece who is a physiotherapist to stay with her for moral support since she is alone. This niece of mine refused saying that she was professionally busy. Only after this Jayalalitha was looking for somebody and this wretched lady Sasikala utilised this opportunity for her personal and family gains. If a person like you join, it will help her deliver better to the society with your suppport”. There I took a decision and joined. Thinking that I would be able to do some service to the society, I joined. I was introduced to Jayalalitha by Ms. PTS and met her thrice. Not a word she uttered to me. She didn’t seem happy at my presence. When there was by-election in Tamil Nadu for Saidapet, Vaniambadi and Achirappakkam constituency, I applied for MLA seat in Saidapet constituency. The other candidates for Saidapet were Saidai Duraisamy, present MLA Senthamizhan, Radha Ravi, Kalai Rajan and so on. I was the only lady in Tamil Nadu for applying for a seat in by-election. I thought at least I would be interviewed by her. I was not called. Radha Ravi got the seat and we worked for his victory. There is a Greek proverb “You tell me who your friend is, I shall tell you who you are”.. She is somuch cornered by this wrong friendship. More than the culprit, the person instrumental in making wrong decisions is also a culprit. Tamil Nadu is irreversibly swindled. AIADMK has set the trend. The judiciary should surely look into the criminal conspiracies and give punishment. Then only people will have faith in the legal system. The lofty judiciary is upholding the constitution of the country. Seeing that there is no place of politics for me, I left the party in 2003. In 2009 PTS passed away and I conducted her burial and sent invitation to Jayalalitha also. She had sent her ministers for the funeral. In 2012 MVL sir passed away. Alas, people who supported me are gone. But I vow to fight against corruption at any cost. I salute Savukku for its yeomen service.
I salute you too! At the age of 70 and hostel mate of Mr.(sasikala) Natarjan,I am praying for a CORRUPT FREE C.M for our State atleast in 2016.I do accept that the probablity is .001.
Everyone has an off the screen story like this. What you are going to do the rest of the others.
Boss, please change the title to Siraikea sella vendeya sematti..
Why Jayalalitha is doing all this nonsense, since she doesn’t have children/family/relatives. Why should she trust Sasikala and her relatives. Is there any secrets.
Nice info with evidence