திமுகவின் உட்கட்சித் தேர்தல் நடந்து முடிந்து, மீண்டும் கருணாநிதி தலைவராகவும், பேராசிரியர் அன்பழகன் பொதுச் செயலாளராகவும், ஸ்டாலின் பொருளாராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மற்றபடி சில மாற்றங்கள் மட்டுமே நடந்துள்ளன.
ஆனால் இந்த தேர்தலுக்கு முன்னதாக, நடைபெற்ற பல்வேறு நாடகங்கள், தினசரிகளிலும், வாரமிருமுறை இதழ்களிலும் விலாவாரியாக விவாதிக்கப்பட்டுள்ளன. இன்று தனது முகநூல் பக்கத்தில் கருணாநிதி இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
“புளுகு மூட்டையை அவிழ்த்து விடுவோர்க்கு
‘திருவாரூர் கருணாநிதியாக’ நான் கூறுவது!
புளுகர்களால், பொய் மூட்டைகளால், கருணாநிதியும், ஸ்டாலினும் மோதிக் கொண்டார்கள் என்று பெரிய புளுகை மைலாப்பூர் மாங்கொல்லையில் அவிழ்த்து விடுவதால், உடனே நாங்கள் மோதிக் கொள்ள மாட்டோம். நாங்கள் யாரை மோத விட வேண்டுமோ, அவர்களை மோத விடுவதில் பல ஆண்டு காலமாக சமர்த்தர்கள். ஆகவே எங்களை மோத விட்டுப் பார்த்து இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி, எங்களைப் பற்றி, எங்களுடைய குடும்பத்தைப் பற்றி, எங்களுடைய நட்பைப் பற்றி, எங்களுடைய இயக்கத்தினுடைய உண்மையான தன்மையைப் பற்றித் திசை திருப்புகின்ற காரியத்திலே யார் ஈடுபட்டாலும் நான் அவர்களுக்குச் சொல்கிறேன்; இப்போது நான் மைலாப்பூர் கருணாநிதியாக அல்ல; அந்தக் காலத்து திருவாரூர் கருணா நிதியாக பதில் கூறுகிறேன். திருவாரூர் கருணாநிதி எப்படிப்பட்டவன் என்பதை அவர்களுக்கு நான் ஞாபகப்படுத்துவேன்.
திருவாரூர் கருணாநிதி, பட்டுக்கோட்டை அழகிரிசாமியிடத்தில் பயின்றவன். ஈரோடு பெரியாரிடம் பயின்றவன் மாத்திரமல்ல, பட்டுக்கோட்டை அழகிரியை முதல் தளபதியாக ஏற்றுக் கொண்டவன். அந்தத் தளபதி அழகிரியின் வழியில் இந்த இயக்கம் பீடு நடை போட்ட அந்தக் காலத்தை இவர்கள் எல்லாம் மறந்து போயிருப்பார்கள். எனவே புளுகி புளுகி, பத்திரிகைகளில் எதையெதையோ எழுதி எழுதி, திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்து விடுவோம். பத்திரிகைகளில் பொய்ச் செய்திகளை வெளியிட்டு வெளியிட்டு இந்தக் கழகத்தைப் பூண்டற்றுப் போகும்படியாகச் செய்திடுவோம் என்று சொல்வீர்களேயானால், நான் அவர்களுக்குச் சொல்வேன், இப்படியே தொடர்ந்தால் நாங்கள் உங்களை விட வல்லவர்களாக மாறவும் செய்வோம் என்பதை, அவர்களுக்கு சூளுரைத்துச் சொல்கிறேன்.”
தந்தையும் தனயனும் கூசாமல் பொய்யுரைப்பதில் சமர்த்தர்கள். கடந்த பதினைந்து நாட்களாக கோபாலபுரத்தில் என்ன நடந்தது என்பது ஊருக்கே தெரியும். ஆனால், கருணாநிதியும் ஸ்டாலினும், திமுக ஒரு கட்டுக்கோப்பான கட்சி என்பது போல நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கருணாநிதியைப் போன்ற ஒரு பழுத்த அரசியல்வாதியை இந்தியா அல்ல; உலகமே கண்டதில்லை. கருணாநிதியின் பேச்சு, மூச்சு, உணவு அனைத்துமே அரசியல்தான். ஒரு இயக்கத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதில் இருந்து எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்பது வரை, மாக்கியவல்லியின் ‘பிரின்ஸ்’ புத்தகத்தை கரைத்துக் குடித்தவர் போல நடத்துவார். அப்படித்தான் திமுக மிகப்பெரிய பிளவுகளை சந்தித்தபோதெல்லாம் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். ஆட்சியில் இருக்கையில் ஒரு அரசியல் கட்சியை நடத்துவது எளிது. பழத்தின் மீது மொய்க்கும் ஈக்களைப் போல வந்து ஒட்டிக் கொள்வார்கள். ஆனால், ஆட்சியில் இல்லாதபோது கட்சியை நடத்துவதுதான் திறமை. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. கட்சியை கருணாநிதியைப் போல திறமையாக நடத்த யாருமே கிடையாது. இந்த 92 வயதிலும், காலை 4 மணிக்கு எழுந்து, அனைத்து செய்தித்தாள்கள், வார இதழ்கள், வாரமிருமுறை இதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களையும் படித்து, அவற்றில் குறை கண்டு பிடித்து, நிறைகளை கோடிட்டு அறிக்கை வெளியிட்டு, தானே கேள்விகளை கேட்டு, அதற்குத்தானே பதில் சொல்லி அதை அறிக்கையாக முரசொலியில் வெளியிட்டு, இரண்டு குடும்பத்தின் பஞ்சாயத்துகளை தீர்த்து வைத்து, இரு குடும்பத்துக்கும் நேரத்தை சமமாக ஒதுக்கி, கட்சியினரை சந்தித்து, கட்சியினரோடு அளவளாவி…….. படிக்கவே மலைப்பாக இருக்கிறதல்லவா? இதுதான் கருணாநிதி.
கருணாநிதியின் இந்தத் தகுதிகளில் இரண்டு சதவிகிதம் கூட ஸ்டாலினுக்கு கிடையாது. கட்சியினரை அரவணைத்துச் செல்வதோ, உட்கட்சிப் பூசல்களை சமாளிக்கும் திறனோ, பேச்சுத் திறனோ, எழுத்துத் திறனோ அறவே கிடையாது. ஆனால், ஆசை மட்டும் மலையளவு இருக்கிறது. எதிர்த்துக் கேள்வி கேட்க யாருமே இல்லாமல், ஜெயலலிதாவைப் போல கட்சியை நடத்த வேண்டும் என்று நினைக்கிறார் ஸ்டாலின். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம், அதிமுகவைப் போன்ற அடிமைகளின் கட்சி அல்ல. திமுக ஆட்சி நடக்கையில், அமைச்சரவைக் கூட்டங்களில் சண்டை போடுவது போல கருணாநிதியிடம் மூத்த அமைச்சர்கள் விவாதம் செய்வர். அதிமுகவில் என்ன நடக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை. ஆனால், அதிமுக போலவே, திமுகவை நடத்த வேண்டும் என்றே விழைகிறார் ஸ்டாலின். ஸ்டாலினிடம் முழுமையாக கட்சி ஒப்படைக்கப்பட்டு, ஸ்டாலின் தலைமையில் திமுக சந்தித்த இரண்டு தேர்தல்களில் படு தோல்வி அடைந்திருக்கிறது. இதற்குப் பிறகே, கடிவாளத்தை கையில் எடுத்தார் கருணாநிதி.
1996-ல் ஆட்சிக்கு வந்த திமுக, பெரிதாக குறைகள் இல்லாதவகையிலேயே ஆட்சியை நடத்தியது. ஏராளமான கட்டுமானப்பணிகள், உள்கட்டமைப்புகள் என்று நன்றாகவே இருந்தன. ஆனால், அந்த நற்பெயரை அறுவடை செய்ய திமுகவால் இயலாமல் போனதற்கு காரணம், ஸ்டாலின் வகுத்த கூட்டணி தந்திரங்களே. அரசியல் கட்சிகளையெல்லாம் ஒதுக்கி விட்டு, நேற்று முளைத்த ஜாதிக் கட்சிகளை உடன் வைத்துக் கொண்டு தேர்தலை சந்தித்தார் ஸ்டாலின். படுதோல்வி அடைந்தது திமுக.
அதற்குப் பிறகு, சமீபத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக தன் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பெரும் தோல்வியை சந்தித்தது. 2014-ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து முடிவுகளையும் எடுத்தது ஸ்டாலின் மட்டுமே. திமுகவின் அனைத்து வேட்பாளர்களும் ஸ்டாலினால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அழகிரி ஓரங்கட்டப்பட்டிருந்ததால் அவரிடம் இருந்து எந்தப் போட்டியும் இல்லை. கனிமொழி தனது ஆதரவாளர்கள் என்று சொல்லி, இரண்டே இரண்டு பேருக்கு சீட் கேட்டதையும் பிடிவாதமாக மறுத்தார் ஸ்டாலின். அவ்வளவு ஏன்…. கருணாநிதிக்கே ஒரு சீட் தர மறுத்தார் ஸ்டாலின். அதன் விளைவே குஷ்பு விலகல்.
கட்சியையாவது அவரே வழிநடத்துகிறாரா என்றால் அதுவும் இல்லை. மனைவி, மகன் மற்றும் மருமகன் சொல்படி பல நியமனங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த உட்கட்சித் தேர்தலில், புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்துக்கு அப்துல்லா என்பவரை மாவட்டச் செயலாளராக்க வேண்டும் என்றும், அவரை முன்மொழியவும் வழிமொழியவும் ஆட்களைத் தயார் செய்யுங்கள் என்று உத்தரவிடுகிறார். அந்த அப்துல்லா யார் என்பதே கட்சியில் யாருக்கும் தெரியாது. எரிச்சலடைந்த புதுக்கோட்டை மாவட்ட திமுகவினர், செல்போனையே சுவிட்ச் ஆப் செய்து விடுகின்றனர். அதுசரி, அப்துல்லா யார்? அவருக்கு சீட் கொடுக்க ஸ்டாலின் ஏன் இப்படித் துடியாய்த் துடிக்க வேண்டும்? என்ற கேள்வி எழுகிறதல்லவா!
மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியின் மனைவி கிருத்திகாவுக்கு ஒரு வகுப்புத் தோழி இருந்தார். அந்த வகுப்புத் தோழியின் கணவர்தான் அப்துல்லா. அதனால், அந்த வகுப்புத்தோழி தன்னுடைய கணவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி வேண்டும் என்று கிருத்திகாவிடம் கேட்க, கிருத்திகா உதயநிதியிடம் சொல்ல, உதயநிதி தன் அப்பாவிடம் விஷயத்தைச் சொன்னதும் தான் அப்துல்லா பெயரை பரிந்துரைக்கிறார் ஸ்டாலின். கட்சியில் ஆண்டுக்கணக்கில் உழைத்தவனை விட்டு விட்டு, மாவட்டச் செயலாளர் பதவிக்கு ஸ்டாலின் யாரை பரிந்துரைக்கிறார் பார்த்தீர்களா!
கருணாநிதியின் மகன் என்ற ஒரே தகுதியில் தலைவராகி விடலாம் என்று பார்க்கிறார் ஸ்டாலின். ஆனால், அதற்கான எந்தத் தகுதிகளையும் அவர் வளர்த்துக் கொள்ளவில்லை என்றே கூறுகிறார்கள் விபரமறிந்தவர்கள். திமுக பொருளாராக பொறுப்பேற்ற பிறகும்கூட, இளைஞர் அணியை இன்னும் விட்டுக் கொடுக்காமல் தன்னிடத்திலேயே வைத்திருக்கிறார் ஸ்டாலின். அதற்கு காரணம், அவர் யாரையும் நம்பத்தயாராக இல்லை என்பதே. கட்சிக்காக காலம்காலமாக உழைத்தவர்களை உதாசீனப்படுத்தி விட்டு, பணம் வைத்திருப்பவர்களை மட்டுமே தன் அருகே வைத்துள்ளார் ஸ்டாலின். திருவண்ணாமலை மாவட்டம் என்றாலே, முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டியின் பெயர்தான் நினைவுக்கு வரும். ஆனால், இன்று அவரை ஒதுக்கி விட்டு, அதிமுகவிலிருந்து கட்சிக்கு வந்த எ.வ.வேலுவைத்தான் அருகே வைத்துள்ளார் ஸ்டாலின்.
ஸ்டாலின் எடுக்கும் எந்த முடிவிலுமே உறுதியாக இருப்பதில்லை என்கிறார் திமுகவின் மூத்த தலைவர் ஒருவர். கட்சியில் வாரிசுகளுக்கு பதவியில்லை என்று ஒரு கொள்கை முடிவை அறிவித்தார் ஸ்டாலின். இந்த அடிப்படையிலேயே, என்.பெரியசாமி, பொன்முடி, துரைமுருகன் மற்றும் பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோரின் வாரிசுகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆனால், ஐ.பெரியசாமிக்கு இந்தக் கொள்கையை மீறி பதவி வழங்கப்பட்டுள்ளது. ஐ.பெரியசாமி எம்.எல்.ஏவாக இருக்கிறார். அவர் மகன் மாவட்டச் செயலாளர். தற்போது, ஐ.பெரியசாமி துணைப் பொதுச் செயலாளராக ஆக்கப்பட்டுள்ளார். இது கட்சியின் மற்ற தலைவர்களை வேதனையும் எரிச்சலும் அடையவைத்துள்ளது.
திமுகவை நீண்ட நாட்களாக கவனித்து வரும் ஒரு பத்திரிக்கையாளர், “ஸ்டாலின் தொண்டர்களை மதிப்பதே கிடையாது. அன்போடு சால்வை அணிவிக்க வருபவர்களிடம் புன்னகை செய்வது கூட கிடையாது. அவர்களை எரிச்சலோடு பார்க்கிறார். சால்வைகளை இடது கையால் அலட்சியமாக வாங்குகிறார். யாரையும் மதிப்பதேயில்லை” என்கிறார். அவர் மேலும் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார். “திருச்சியில் திமுகவில் மிகப் பெரிய பிரமுகராக இருந்தவர் பழனியான்டி. பெரும் செல்வந்தர். அவருக்கும் கே.என்.நேருவுக்கும் மோதல் உருவாகிறது. அப்போது ஸ்டாலினிடம் நேருவைப் பற்றி புகார் தெரிவிப்பதற்காக, சென்னைக்கு வந்து ஸ்டாலினின் இல்லத்துக்கு செல்கிறார் பழனியாண்டி. நேரு, ஸ்டாலினுடைய ஆள் என்பதால், அவரை வாசலிலேயே வைத்து, ‘உன்னை யார் இங்க வரச்சொன்னது’ என்று முகத்திலடித்ததுபோலப் பேசி திருப்பி அனுப்பினார் ஸ்டாலின் என்கிறார் அந்தப் பத்திரிகையாளர்.
தஞ்சாவூரில் மன்னை நாராயணசாமிக்கும் கோ.சி.மணிக்கும் ஏழாம் பொருத்தம். எப்போதும் இருவருக்கும் மோதல். ஆனால், கருணாநிதி எப்போது தஞ்சைக்குச் சென்றாலும், இருவரையும் தன்னுடைய காரில் அமரச் செய்து அழைத்துச் செல்லுவார். இதன் மூலமாக கட்சியினருக்கு கருணாநிதி உணர்த்தும் செய்தி என்னவென்றால், நான் கோ.சி மணியையும் ஆதரிக்கவில்லை. மன்னை நாராயணசாமியையும் ஆதரிக்கவில்லை. இருவரையும் சமமாகவே பாவிக்கிறேன் என்பதே.
ஆனால் ஸ்டாலின் அப்படியல்ல. தன்னுடைய ஆதரவாளருக்கு எதிரானவர்களை எதிரியாகவே பார்க்கிறார். குறிப்பாக, கனிமொழியை தனக்கு மிகப்பெரிய எதிரியாக பார்க்கிறார். ஒவ்வொரு கட்டத்திலும், கனிமொழிக்கு எதிராகவே காய் நகர்த்துகிறார். கனிமொழி தலைவராக இருக்கும் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பு வளர்ந்து விடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கூட தேர்தல் பிரச்சாரத்துக்கு கனிமொழி வரக்கூடாது. கனிமொழி வந்தால் மக்கள் 2ஜியைப் பற்றிப் பேசுவார்கள் என்று என்னமோ 2ஜி ஊழலுக்கும் ஸ்டாலினுக்கும் சம்பந்தமே இல்லாதது போல கூறினார்.
அமலாக்கப் பிரிவின் குற்றப்பத்திரிக்கை என்ன கூறுகிறது தெரியுமா ?
Shri A.M. Sadhick Batcha further stated that he knew Shri A. Raja since 1993-1994; that he worked for Shri A. Raja in his election from the year 1996; that he used to visit the house of Shri A. Raja in Delhi and regularly met him at State Guest House, Chennai; that he met Shri R.K. Chandolia in Delhi for transfer of some officials of BSNL working at Chennai and Coimbatore. He further stated that he met Shri Vinod K. Goenka and Shri Shahid Usman Balwa of STPL in the office of Enviornment Ministry who came to meet Shri A. Raja; that he met them once in Mumbai and two or three times in Chennai; that around one year back, Shri Shahid Usman Balwa came to Chennai and had a meeting with Shri Stalin, Deputy C.M. at his residence and at that time, Shri A. Raja was present there.
மற்றொரு இடத்தில், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Shri A. Manohar Prasad vide letter dated 29.05.2013 submitted that he was well acquainted with Shri Sharad Kumar since Shri Sharad Kumar was Director in Gemini Television; that during the month of December, 2010, Shri Sharad Kumar, Managing Director of KTV along with Shri Raja Shankar, Personal Assistant of Shri M.K. Stalin and their Auditor Shri Siva Subramanian approached Shri Manohar Prasad, Joint Managing Director of Gemini Group of companies and expressed the desire for acquiring SMIL. It was agreed in principle to sell the SMIL for a consideration of Rs. 50 lakhs but the payment was not made.
தன்னை விட்டு விட்டு பல ஆயிரம் கோடிகள் புழங்கும் 2ஜி ஊழலை மற்றவர்கள் செய்யவிட்டு வேடிக்கை பார்க்கும் நபரா ஸ்டாலின்? பல ஆயிரம் கோடிகளை வைத்திருக்கும் முரசொலி அறக்கட்டளை மற்றும் திமுக அறக்கட்டளையில் சத்தமே இல்லாமல் தன் மகன் உதயநிதியை உறுப்பினராக்கியிருக்கிறார். இப்படி உதயநிதியை அறக்கட்டளை உறுப்பினராக்கியதுதான் அழகிரிக்கு கோபம். “கட்சி குடும்பச் சொத்து என்றாகிவிட்டது. நான் மட்டும் கருணாநிதி மகன் இல்லையா? என் பங்கு எங்கே” என்று கேட்கிறார். நியாயமான கேள்விதானே? எந்தக் கலைஞர் டிவியால் கனிமொழி சிறை சென்றாரோ, இன்று அந்த கலைஞர் டிவியின் இயக்குநராக இருப்பது, ஸ்டாலினின் ஆதரவாளர் கல்யாணசுந்தரமே. இதே போல, சொத்துப் பாதுகாப்புக் குழுவிலும், ஸ்டாலினின் ஆதரவாளர் கல்யாணசுந்தரமே உறுப்பினராக உள்ளார். 2ஜி ஊழலில் ஸ்டாலின் பங்குத் தொகை 2000 கோடி. அதை ஷாஹீத் உஸ்மான் பல்வா நேரில் வந்து ஸ்டாலினிடமே வழங்கியதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2000 கோடி ஸ்டாலினுக்கு…! சிறை மட்டும் கனிமொழிக்கா…! என்று கனிமொழியின் தயார் எழுப்பும் கேள்வி நியாயமானதே. ஆறு மாதங்கள் சிறையில் இருந்த என் மகளுக்கு, கட்சியில் பதவி வேண்டும் என்று கேட்கிறார் ராசாத்தி அம்மாள். ஆனால், ஸ்டாலினோ, கனிமொழியையும் அவர் ஆதரவாளர்களையும் ஓரங்கட்டுவதிலேயே முனைப்பாக இருக்கிறார்.
ஒரு ஆண்டுக்கு முன்னதாக, விழுப்புரம் மாவட்டத்தில் கனிமொழி பேசும் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் நடக்கும் அன்று காலையில், பொன்முடி சென்னை வந்து ஸ்டாலினிடம் கோள் மூட்டினார். அவ்வளவுதான். தலைமைக் கழகத்தில் அனுமதி வாங்காமல் கூட்டம் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டார் ஸ்டாலின். திண்டிவனம் முதல், விழுப்புரம் வரை, வரிசையாக ப்ளெக்ஸ் போர்டுகள். மேடை அரங்கம் என்று கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு விட்டன. ஆனால், ஸ்டாலின் உறுதியாக கூட்டத்தை ரத்து செய்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். பஞ்சாயத்து கருணாநிதியிடம் செல்கிறது. அன்றுதான், வாக்குவாதம் முற்றி, ஸ்டாலின் கருணாநிதியை வண்டியோடு தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.
ஒரு பொதுக்கூட்டத்தில் கனிமொழி பேசினால், அவர் மிகப்பெரிய தலைவராகி விடுவாரா? அல்லது மொத்த திமுகவும் அவர் பின்னால் சென்றுவிடுமா? எதுவும் நடக்கப் போவதில்லை. ஆனால், இப்படி அற்பத்தனமாக ஸ்டாலின் நடந்து கொள்வதற்கு ஒரே காரணம், தன் மீதே அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதே. தன்னம்பிக்கை இல்லாத ஒரு கோழையின் நடவடிக்கைகளே ஸ்டாலினின் நடவடிக்கைகள்.
சமீபத்தில் நடந்த ராஜிநாமா நாடகத்தைப் பார்ப்போம். திமுக அமைப்புத் தேர்தல்கள் இறுதிக்கட்டத்தை எட்டவும், அடுத்து தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் முக்கிய பொறுப்புக்கான தேர்தல் நடக்க வேண்டும். ஸ்டாலினுக்கு பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்று ஆசை. இதற்கு அவர் என்ன செய்ய வேண்டும்? நேரடியாக கருணாநிதியிடம் பேச வேண்டும். ஆனால் அவர் என்ன செய்தார் தெரியுமா ? நடிகர் வாகை சந்திரசேகரை அவர் மனைவியோடு அனுப்பி பேராசிரியரை சந்தித்து, அவரை ராஜினாமா செய்யும்படி கேட்க வைத்துள்ளார். பேராசிரியர் அன்பழகன், திமுக மேடைகளில் பேசிக் கொண்டிருந்தபோது, கருணாநிதி போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தார் என்றால், அவர் கட்சியில் எவ்வளவு மூத்தவர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். வாகை சந்திரசேகர் இவ்வாறு கேட்டதும் கொதித்துப் போனார் பேராசிரியர். அவர் தன் வாழ்க்கையிலேயே அவ்வளவு கோபப்பட்டதில்லை என்று கூறுகிறார்கள். அதே கோபத்தில் விபரங்களை கருணாநிதியிடம் தெரிவிக்கிறார். கருணாநிதி நேரடியாக ஸ்டாலினை அழைத்து உனக்கு பதவி உயர்வு கிடையாது. நீ மீண்டும் பொருளாளராகத்தான் இருக்கப் போகிறாய் என்று தெரிவித்து விடுகிறார்.
இந்த விபரத்தை ஸ்டாலின் தன் மனைவி துர்க்காவிடம் தெரிவிக்கிறார். அதற்குப் பின் துர்க்கா பேசிய பல வார்த்தைகளை எழுத இயலாது. இறுதியாக துர்க்கா, தலைவரா ஆக முடியல…. இந்த பொருளாளர் பதவி இருந்தா என்ன இல்லாட்டி என்ன… அதையும் தூக்கி வீசுங்க என்று கூறுகிறார். இதையடுத்தே ஸ்டாலின் ராஜினாமா என்ற முடிவை அறிவிக்கிறார். ராஜினாமா கடிதம் கருணாநிதிக்கு அனுப்பப்படுகிறது. நள்ளிரவு 12 மணிக்கே, சென்னை மாவட்டச் செயலாளர்களுக்கு மறுநாள் காலை கணிசமான கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. காலை ஏழு மணியளவில் செய்தியாளர்களுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. ஆயிரம் பேர் ஸ்டாலின் வீட்டின் முன் கூடுகின்றனர். ஸ்டாலின் ராஜினாமா என்ற தகவல் கருணாநிதியை அடைகிறது. செய்தி கருணாநிதியை அடைந்ததும், என்ன சொன்னார் தெரியுமா ? “இந்த செய்தியை அவன் மறுக்கலன்னா, நான் ராஜினாமாக கடிதத்தை பத்திரிக்கைளுக்கு அனுப்புவேன்னு சொல்லு” என்று கூறுகிறார். (யாருக்கிட்ட….. ?) தகவல் அறிந்ததும், ஸ்டாலின் என்ன செய்வது என்று புரியாமல் விழிக்கிறார்.
இதற்குள், அழகிரி சென்னை வருகிறார் என்ற செய்தி பரவுகிறது. ஸ்டாலினின் ராஜினாமா ஏற்கப்பட்டு, அழகிரி புதிய பொருளாளர் என்றால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். “தளபதி வாழ்க” என்று தொண்டை கிழிய வாயிலில் கத்திக் கொண்டிருந்த கூட்டம், சத்தமே இல்லாமல் அறிவாலயம் போய் விடும். இதை உணர்ந்தே ஸ்டாலின் ராஜினாமா செய்தியை மறுத்தார். அப்படி மறுத்ததிலும் ஒரு தந்திரம் வேண்டாமா ? வாசலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருக்கிறார்கள். எ.வ.வேலு, ஆ.ராசா, மா.சுப்ரமணியம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஸ்டாலினோடு வீட்டில் இருக்கிறார்கள். திடீரென்று பத்திரிக்கையாகர்களை அழைத்தார் ஸ்டாலின். பத்திரிக்கையாளர்கள் உள்ளே நுழையும் சமயத்தில், எ.வ.வேலுவைப் பார்த்து, “என்ன ஆச்சு ? எதுக்கு இங்க இவ்வளவு கூட்டம். எதுக்கு மீடியா வந்திருக்காங்க ?” என்று ஒன்றுமே தெரியாதது போலக் கேட்டார். பத்திரிக்கையாளர்களுக்கு இந்த நாடகத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாதா என்ன ?
அவர்கள் சார் நீங்கள் ராஜினாமா என்று கூறுகிறார்களே… என்றனர். அப்படியா. அது முழுக்க முழுக்க பொய்ச் செய்தி. திமுகவின் உட்கட்சித் தேர்தல்கள் கட்டுக்கோப்பான முறையில் (??????) நடைபெற்று வருவதை விரும்பாத சில விஷமிகள் பரப்பிய வதந்தி இது என்றார். பத்திரிக்கையாளர்கள் விஷமிகள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்றதும், உங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்கள்தான் என்றார். நான் பொருளாளர் பதவியைத் தவிர வேறு எந்த பதவிக்கும் போட்டி போடவில்லை என்றார். சிறிது நேரத்தில் கிளம்பி, கோபாலபுரம் சென்றார்.
அவர் சென்றதும், கூடியிருந்த தொண்டர்கள் கலைந்து சென்றனர். அப்போது மகளிர் அணியைச் சேர்ந்த மூன்று பெண்கள், அங்கிருந்த கட்சிப் பிரமுகர் ஒருவரிடம் பேசினர். “அண்ணா, எல்லாம் முடிஞ்சுடுச்சு.. போகச் சொல்லிட்டாங்க அண்ணா. நாங்க கௌம்பறோம்” என்றனர். அந்த வார்த்தை அங்கே நடந்த நாடகத்தை மொத்தமாக விளக்கியது.
தன் மனைவியின் பேச்சைக் கேட்டு, இந்த கட்சியையே அழிக்கும் வேலையை ஸ்டாலின் தீவிரமாக பார்த்து வருகிறார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு சென்றபோது, நீலகிரி மாவட்டத்தில் ஒரு ஃபர்னிச்சர் கடைக்கு செல்கின்றனர் ஸ்டாலினும் துர்க்காவும். அப்போது அங்கே வைக்கப்பட்டிருந்த ஒரு வேலைபாடுகள் அடங்கிய ஊஞ்சலை பார்த்த துர்க்கா, இது அழகாக இருக்கிறதே என்ன விலை என்றதும் மூன்று லட்ச ரூபாய் என்று கூறியிருக்கின்றனர். நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் அந்த ஊஞ்சலுக்கான விலையை கொடுத்தார். கடையை விட்டு வெளியே வந்த துர்கா, இந்த ஊஞ்சல் இன்னொன்று இருக்கிறதா என்று கேட்கிறார். கடைக்காரர் இன்னும் ஒன்றே ஒன்று இருக்கிறது என்றதும், அதையும் வாங்குங்கள் என்று கூறுகிறார். இன்னொன்று எதற்கு அம்மா என்று கேட்டதும், அது என் தங்கை வீட்டுக்கு என்கிறார். ஆறு லட்ச ரூபாயை அழுத அந்த மாவட்டச் செயலாளர், ஸ்டாலின் மனைவிக்கு வாங்கித் தரலாம். அவர் குடும்பத்துக்கேவா என்று புலம்புகிறார்.
சரியோ தவறோ… தமிழக அரசியல் சினிமா நட்சத்திரங்களை பெரிய அளவில் நம்பியிருக்கிறது. குஷ்பு தமிழாய்ந்த அறிஞராக இல்லாவிடினும், சினிமா மோகத்தால் அவரது பொதுக் கூட்டங்களுக்கு மக்கள் பெருமளவில் வந்தனர். அவர் எதிர்ப்பார்த்தது மக்களவையில் ஒரு எம்.பி சீட் மட்டுமே. ஆனால், துர்காவால் குஷ்பு வெளியேறினார். திமுகவில் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்பதை நன்கு உணர்ந்த குஷ்பு, எப்போது ஸ்டாலின் வீட்டுக்கு சென்றாலும், அவர் பேரக்குழந்தைகளுக்கு, வைர மூக்குத்தி, நகைகள் என்று வாங்கித் தருவார். இது தொடக்கம் முதலே துர்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஆரம்பம் முதலே குஷ்பூவை வெறுப்போடுதான் அணுகினார்.
குஷ்பு கட்சியில் இணைந்த போது, ஸ்டாலினின் பேனாவை வாங்கித்தான் உறுப்பினர் படிவத்தை நிரப்பினார். ஸ்டாலின்தான், குஷ்புவுக்காக உறுப்பினர் கட்டணம் செலுத்தினார். ஆனால், தன் மனைவியின் பேச்சை மீற முடியாமல், கருணாநிதி தீவிரமாக வலியுறுத்தியும் கூட மக்களவை தேர்தலில் சீட் வழங்க மறுத்தார் ஸ்டாலின்.
திமுகவின் பலமே, தீவிரமான பிரச்சார யுக்திதான். தெருவுக்கு தெரு மேடை போட்டு, பல நட்சத்திர பேச்சாளர்களை வைத்து, பல்வேறு விஷயங்களை பிரச்சாரம் செய்வது திமுகவின் பலம். இன்று அத்தகைய பிரபல பேச்சாளர்கள் கட்சியில் இல்லை. அதை ஈடு செய்யும் விதமாகத்தான் குஷ்புவின் வருகை இருந்தது. ஆனால் அதையும் கெடுத்தார் ஸ்டாலின். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மாவட்டங்களுக்கு செல்கிறார் ஸ்டாலின். ஸ்டாலின் அவ்வாறு செல்லும்போதெல்லாம், அந்த மாவட்டச் செயலாளர்கள் ஸ்டாலின் மற்றும் அவர் பரிவாரங்களை ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்க வேண்டும். பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். எப்படிப் பார்த்தாலும் 50 லட்சம் வரை செலவாகிறது. ஆட்சியில் இல்லாத போது, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை 50 லட்சத்துக்கு எங்கே போவோம் என்று புலம்புகிறார்கள் கட்சியினர். ஆனால், இதைப்பற்றி சற்றும் கவலைப்படாமல், அவர் இஷ்டத்துக்கு நடந்து கொள்கிறார் ஸ்டாலின்.
ஸ்டாலினுடைய ஆதரவாளர்களாக இருப்பவர்களே புலம்புகிறார்கள். ஸ்டாலின் மனைவி குறித்து, ஜுனியர் விகடனில் வந்தது வெறும் 50 சதவிகிதம்தான் என்று கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர். ஜுனியர் விகடன் இதழ், துர்கா குறித்து இவ்வாறு எழுதியிருந்தது.
“திருச்சியில் குஷ்புவை கட்சிக்காரர்கள் சிலர் ஓட ஓட விரட்டியடித்த விஷயத்தை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா? குஷ்பு கட்சியைவிட்டு வெளியேற முக்கிய காரணம் துர்க்காதான் என்று கட்சியின் ஒரு சாரார் வெளிப்படையாக விமர்சித்த காலமும் உண்டு. அன்பில் பொய்யாமொழி இருந்தவரைக்கும் ஸ்டாலின்கூடவே இருந்தாரு. அவரோட மறைவுக்குப் பிறகு, அதாவது 1999-க்குப் பிறகு ஸ்டாலின் எங்கே சென்றாலும் கூடவே துர்க்காவும் போக ஆரம்பித்தார். தமிழ்நாட்டில் இவர் போகாத ஊரே இல்லை. கட்சியில் ஒன்றியச் செயலாளர் வரை துர்க்காவுக்கு ஆளையும் தெரியும்… பெயரையும் தெரியும். எந்த ஊருக்குச் சென்றாலும் நிர்வாகிகளை பெயர் சொல்லிக் கூப்பிட்டு குடும்ப நலம் விசாரிப்பது துர்க்காவின் ஸ்டைல். அந்த ஊரில் ஏதாவது முக்கிய கோயில் இருக்கிறதா என்றும் தவறாமல் விசாரிப்பார். அப்படி இருந்தால், அந்தக் கோயிலுக்கு கட்சி நிர்வாகிகள் சகிதமாக கிளம்பிவிடுவார். இந்த வகையில் கட்சிக்காரர்கள் மத்தியில் துர்க்கா ரொம்பவே பிரபலம். ஒவ்வொரு மாவட்டத்திலும் உட்கட்சிக்குள் நடக்கும் பாலிட்டிக்ஸ் துர்க்காவுக்கு அத்துபடி. எந்த உட்கட்சி விவகாரமாக இருந்தாலும் துர்க்காவுக்கு தனி சேனலில் தகவல் வந்துவிடும். சத்தமே இல்லாமல் கட்சிக்குள் தனி அந்தஸ்து துர்க்காவுக்கு வளர ஆரம்பித்தது.
தென்மாவட்டங்களைப் பொறுத்தவரை துர்க்காவுக்கு தகவல் தரும் சோர்ஸ்கள் பல இருந்தாலும், அதில் முக்கியமானவர் அருள் மெர்ஸி. இவர், திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் மருமகள். ஒருவருக்கு இரண்டு பதவிகள் கொடுக்க மாட்டோம் என்று சொல்லி வந்த நிலையில், எம்.எல்.ஏவாக இருக்கும் ஐ.பெரியசாமிக்கு தற்போது துணைப் பொதுச்செயலாளர் பட்டியலிலும் பெயர் இருக்கிறது. அது மட்டுமல்ல… ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில்குமார்தான் தற்போது திண்டுக்கல் மாவட்டச் செயலாளர். அதாவது அருள் மெர்ஸியின் கணவர். அண்மையில் துர்க்காவும், அவரது சகோதரிகளும் தேக்கடிக்கு சுற்றுலா போனார்களாம். அப்போது அருள் மெர்ஸிதான் உடனிருந்து கவனித்துக் கொண்டதாகச் சொல்கிறார்கள். தேக்கடியில் வைத்துத்தான் கட்சியின் லேட்டஸ்ட் மூவ்களை விவாதித்தார்களாம். அதன் பிறகு ஒரு முடிவோடுதான் துர்க்கா சென்னை வந்ததாகச் சொல்கிறார்கள்!
துர்க்காவின் தோழிகளில் மிக முக்கியமானவர் சேலம் உமாராணி. நாடாளுமன்றத் தேர்தலில் துர்க்காவின் கோட்டாவில்தான் உமாராணிக்கு ஸீட் கிடைத்தது. மாவட்டச் செயலாளர் அறிவிக்காமல் சிக்கலில் இருக்கும் இரண்டு மாவட்டங்களில் சேலமும் ஒன்று. சேலத்தில் பல கோஷ்டிகள் இருந்தாலும், துர்க்காவின் சாய்ஸ் உமாராணிதான்! ஒருவேளை மாவட்டச் செயலாளர் பதவி உமாராணிக்கு கொடுக்கவில்லை என்றாலும், மாநில அளவில் மகளிர் அணியில் முக்கியப் பொறுப்பு அவருக்கு கொடுத்தே ஆக வேண்டும் என்று உறுதியாக இருக்கிறாராம் துர்க்கா”
கருணாநிதியை விட சிறந்த அரசியல் ஆசான் இருக்க முடியாது. அவரின் நிழலில் வளர்ந்த ஸ்டாலின், அவரின் அரசியல் கூர்மையில் பத்து சதவிகிதத்தைக் கூட கற்றுக் கொள்ளவில்லை என்பதே வேதனையான உண்மை.
ஊடகங்களுக்கு பணம் கொடுத்து, தன்னைப் பற்றி எழுத வைப்பதால், மாபெரும் தலைவராகி விடலாம் என்று நினைத்தே, ஊடகங்களை வளைத்துப் போட்டு வருகிறார் ஸ்டாலின். ஆனால் அது ஒரு நாளும் வெற்றியைத் தேடித் தராது.
கண்ணதாசன் தலைவனுக்கான தகுதிகளை அழகாக சொல்லியிருப்பார்.
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
யாருக்கென்று அழுதபோதும் தலைவனாகலாம்
மனம் மனம் அது கோவிலாகலாம்
யாருக்கென்று அழும் மனம் வராவிட்டாலும், தன் கட்சியினருக்காகவாவது கவலைப்படும் மனதை ஸ்டாலின் பெறாவிட்டால், அவர் ஒரு நாளும் தலைவனாக முடியாது. கருணாநிதியின் மகன் என்ற ஒளி வட்டம், அவர் மறைவுக்குப் பின் மங்கி விடும் என்பதை ஸ்டாலின் உணர்ந்து கொள்ள வேண்டும். உணர மறுத்தால் அவர் அரசியல் தலைவராக முடியாது. குடும்பத் தலைவராக மட்டுமே இருக்க முடியும்.
குறளோவியம் படைத்த உங்கள் தந்தையிடம் இதற்கான முழுப் பொருளை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் ஸ்டாலின்.
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.
கலைஞர் உரை:
ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈ.டுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்.
True pa
Nonsense Article! Suddenly Karunanithi, Azhagiri, Kanimozhi have all become good. What a Joke! Looks like there is no other Sarakku for Savukku
ஈழத்தில் நமது தமிழ் இனத்தை அழித்த பாவத்திற்கு தான், திமுக கடந்த இரண்டு தேர்தலிலும் படு தோல்வி அடைந்தது.
அதனால் உலக தமிழ் இனமே திமுகவும் அதன் தலைவர்களும் அழியவேண்டும் என்று நினைக்கிறார்கள்
சவுக்கு உனக்கு மட்டும் திமுக வளரவேண்டும் என்கிற எண்ணம் எதற்கு.
உண்மையை உறைப்பது என்பது இனத்துரோகிகளையும் அடையாளம் காட்டுவதிலும் உனக்கு உண்மை தன்மை வேண்டும்.
ஈழத்தமிழர்களை அழித்து புதைக்கும் போதே திமுகவையும் சேர்த்தே புதைத்துவிட்டார்கள் அதன் தலைர்கள் அது மீண்டும் ஆட்சிக்கு எந்த காலத்திலும் வர முடியாது
சவுக்கு எந்த கட்டுரை எழுதினாலும் இனவுணரவோடு எழுதவேண்டும்
திமுக சொம்பு ஆகிவிட்டது சவுக்கு..
முன்னாடியெல்லாம் நீங்க ஏதாவது ஆங்கிலத்துல எழுதினா அதையே தமிழ்லயும் மொழிமாற்றி எழுதுவீங்க. அது புரிஞ்சுக்க ஈசியா இருக்கும். இப்போ நீங்க ஆங்கிலத்துல எழுதறது முழுசா புரிஞ்சிக்க முடியல. Athunaala marubatiyum aangila varikala thamizh-layum eluthnum.
Really interesting article. Didn’t feel any kind of boring while reading.
Hats off Savukku.
சவுக்கில் வெளிவரும் ஆய்வுகள் புலனாய்வு கருத்துக்கள் ஒன்றிரண்டு தவிர 98% எனக்கு உடன்பாடாக இருப்பதுண்டு ஆனால் இந்த கட்டுமரம் கருணாநிதியின் குடும்பம் சம்பந்தமான கட்டுரை ஆய்வு வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்குள் 100க்கு 100% என்னால் உடன்பட முடியவில்லை.
குறிப்பாக ஸ்ராலினுக்கு அரசியல் தெரியாது என்பது ஏற்றுக்கொள்ளுவதற்கில்லை.
100% சுயநலவாதியான கருணாநிதி பெருத்த அரசியல் சாணக்கியர் சிறந்த நிர்வாகி என்பதுபோல புனையப்பட்டிருப்பதும் தவறானது.
ஸ்ராலினுக்கு அரசியல் செய்யத்தெரியாது என்றால் உலகத்தரத்தில் தந்தரம் செய்யக்கூடிய (நீதிமன்றங்கள் காவல்துறை போன்றவற்றால் குற்றஞ்சாட்ட முடியாத)
கருணாநிதி என்ற ஒரு கடைந்தெடுத்து வடிகட்டிய சுயநலவாதி இவ்வளவு காலம் ஸ்ராலின் என்ற தற்குறியை தனது வாரிசாக அருகில் வைத்து அரசியல் செய்யமுடியாது,
கருணாநிதி என்ற சந்தற்பவாதி சந்தற்பங்களுக்கு ஏற்றவாறு தந்தரமாக காய் நகர்த்தும் சமர்த்தியன், தான் விரும்பும் ஒரு விடயத்தை மற்றவர்கள் மூலமாக நகர்த்தக்கூடிய நரியை ஒத்த கெட்டித்தனம் நிறைந்தவன்.இந்த தந்திரங்கள் சிலரது பார்வைக்கு சிறந்த நிர்வாகிபோல தோற்றமளிக்கலாம் ஆனால் அது சவுக்கு குறிப்பிட்டிருப்பதுபோல “சிறந்த நிர்வாகி” என்பதெல்லாம் இல்லை என்பதே எனது அனுமானம்.
உண்மை , சிறப்பான கட்டுரை
பதினோராவது முறை தலைவர் . எதற்காக தேர்தல் எல்லாம் ஏமாற்றுவேலை ?
14 வயதில் பள்ளி மாணவராக இருந்தபோது மு.க.ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. 1967 தேர்தலில் அவர் தி.மு.க.வுக்கு பிரச்சாரம் செய்தார். அவருக்குக் கீழ் குழந்தைகள் சீர்திருத்த சங்கம் உருவாயிற்று. ஒரு முடிதிருத்தும் கடையில் இளைஞர் அணியின் எளிமையான தொடக்கம் நடந்தது. மாணவர்களுக்கும் இளம் வயதினருக்குமான தெருமுனைக் கூட்டங்கள் பின்னாளில் தமிழ்நாட்டின் மிகவும் மதிக்கப்பட்ட கட்டுப்பாடான இளைஞர் அமைப்புகளில் ஒன்றாக உருவான அமைப்புக்கு அடித்தளமிட்டன.
உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் (மிசா) கீழ் 31 ஜனவரி 1976 அன்று அவர் கைது செய்யப்பட்டபோது மு.க.ஸ்டாலின் வயது 23. அப்போதைய அரசு அவரை அடித்து உதைத்து அடக்குவதற்கு செய்த அனைத்து முயற்சிகளையும் மீறி தனது கொள்கையில் உறுதியாக நின்றவராக மிசா சட்டத்தின் கீழ் அரசியல் கைதியாக அவரது பெயர் தேசிய நாளேடுகளில் தலைப்பு செய்தியாகியது.
1996 ஆம் ஆண்டில் சென்னை மேயராக பணியாற்றியபோது இவரது சிறப்பான பணிகளால் பெரிதும் கவரப்பட்ட மக்கள் இவரை “மாநகரத் தந்தை” என குறிப்பிடலாயினர். குப்பைகள் அகற்றுவதை தனியார்மயமாக்கினார். பொதுபோக்குவரத்து அமைப்பை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டார். சிறிய மற்றும் பெரும் மேம்பாலங்களை கட்டினார். மேயர் பதவி அவரை கட்சியின் திட்டமிட்ட செயல்வீரராகக் காட்டியது. மேலும், படித்த நடுத்தர மக்களின் கவனத்தையும் ஈர்த்தார். தி.மு.க.விற்கு இவரது எழுச்சியினாலும், அர்ப்பணிப்பாலும், உண்மையான உழைப்பாலும் நல்லதொரு தலைவரின் வருகையை உணர்த்தியது.
நான்காவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டபோது உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
உள்ளாட்சித் துறை அமைச்சராக திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறமையாகவும், வெளிப்படையாகவும் பணியாற்றி நிறைவேற்றிய குறிப்பிடத்தக்க திட்டங்கள்:
• தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்
• மகளிர் சுயஉதவிக் குழு
• கிராமப்புறங்களுக்கு குடிநீர் விநியோகத் திட்டம்
• ஊராட்சிப் பள்ளிகளை சீரமைக்கும் திட்டம்
• ஒருங்கிணைந்த குடிநீர் விநியோகத் திட்டம்
• நிலத்தடி கழிவுநீர் கால்வாய் திட்டம்
• கிராமப்புற வளர்ச்சியும், பஞ்சாயத்து ராஜ் அமைப்பும்
• பாதுகாப்பு சாதனங்கள் திட்டம்
• சென்னைப்பெருநகர் குடிநீர் விநியோகத் திட்டம்
• கிருஷ்ணா நதிநீர் திட்டம்
• திருமண வயதில் உள்ள பெண்களுக்கான சிறப்பு நலவாழ்வு திட்டம்
• சிறுதொழில் ஊக்குவிப்பு திட்டம்
• நகர மற்றும் கிராம அடிப்படை வசதிகள் முன்னேற்றத்திற்கான பெரும் திட்டங்கள்
• கிராமப்புற பஞ்சாயத்துகளை சரித்திரமாக்குதல்
Also write he killed a complete family, his name is Ramesh who was a driver when Stalin was in power and wife with his three kids)
Well said.
Excellent Article…. Kudos Savukku
Stupid article
savvuku ! your article doesn’t carry any substance ! i think the best politician is you and you only!
nothing like this has ever happened ! every party man know about stalin ! his dedication for the party ! his work as mayor of chennai !
Stalin is capable of leading the party – this has been accepted by his worst commentators Cho Ramaswmy and gnani shakar and so many others !
he won as an MLA in kolathur the largest constituency in tamil nadu ! pls check out his performance as an MLA in his constiuency !
to make it short you wanted to cook a story and you did it ! nothing else !
“இந்த செய்தியை அவன் மறுக்கலன்னா, நான் ராஜினாமாக கடிதத்தை பத்திரிக்கைளுக்கு அனுப்புவேன்னு சொல்லு” என்று கூறுகிறார். (யாருக்கிட்ட….. ?)
ஸ்டாலின் கர்வத்தாலும் திமிராலும் மோசமான அரசியலாலும் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சி ரஷ்யாவில் முடிவுக்கு வந்தது!
ஸ்டாலின் கர்வத்தாலும் திமிராலும் மோசமான அரசியலாலும் திமுக முடிவுக்கு வரும்??
//கனிமொழி தனது ஆதரவாளர்கள் என்று சொல்லி, இரண்டே இரண்டு பேருக்கு சீட் கேட்டதையும் பிடிவாதமாக மறுத்தார் ஸ்டாலின். அவ்வளவு ஏன்…. கருணாநிதிக்கே ஒரு சீட் தர மறுத்தார் ஸ்டாலின். அதன் விளைவே குஷ்பு விலகல்//
ஹா ஹா சீட்டு இல்லை என்றதும் சிட்டு பறந்துவிட்டது கட்சியில இத்தன பேரு இருந்தும் தலைவர் குஷ்புக்கு மட்டும் சீட்டு கேட்டதுல உள்குத்து இருக்கு..
//கனிமொழி தனது ஆதரவாளர்கள் என்று சொல்லி, இரண்டே இரண்டு பேருக்கு சீட் கேட்டதையும் பிடிவாதமாக மறுத்தார் ஸ்டாலின். அவ்வளவு ஏன்…. கருணாநிதிக்கே ஒரு சீட் தர மறுத்தார் ஸ்டாலின். அதன் விளைவே குஷ்பு விலகல்//
ஹா ஹா சீட்டு இல்லை என்றதும் சிட்டு பறந்துவிட்டது கட்சியில இத்தன பேரு இருந்தும் தலைவர் குஷ்புக்கு மட்டும் சீட்டு கேட்டதுல உள்குத்து இருக்கு
TRUE..TRUE..TRUE.
sabash unmaiela neethan thalaiva perungundai sarva sadharanamaga purium vagail solly kalakkiavar neeye kanimozhithan kalaignarukkupiragu leader