உலகில் எங்காவது, ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் படத்தை வைத்து, சுதந்திர தினமோ குடியரசு தினமோ கொண்டாடுவார்களா என்பது சந்தேகமே. ஆனால், ஊழல் செய்து தண்டிக்கப்பட்ட ஒரு அரசியல்வாதியின் படத்தை அலங்கரிக்கும் வாகன அணிவகுப்பு நடப்பதும், அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி உறுதிமொழி ஏற்ற அதிகாரிகளும், அமைச்சர்களும், நீதிபதிகளும், இந்த கேலிக்கூத்தை வேடிக்கை பார்ப்பதும், தமிழகத்தில் நடந்தேறியுள்ளது.
கடந்த வாரம் நடந்த அருண் ஜெய்ட்லி மற்றும் ஜெயலலிதா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே, மத்திய அரசு இயற்றிய அவசர சட்டங்கள், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிஜேபியின் எண்ணிக்கை போன்ற விபரங்களை, தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதா கேட்டுள்ளார். இந்த சந்திப்பு நடந்து முடிந்த பத்தாவது நிமிடத்தில், செய்தி ஊடகங்களுக்கு புகைப்படத்தோடு அதிமுக தரப்பிலிருந்து செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. ஜெயா தொலைக்காட்சியில் சந்திப்பு காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டன.
அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பலரால் இது எப்படி சாத்தியம் என்று நம்பவே முடியவில்லை. இந்தியாவின் நிதி அமைச்சர், அரசாங்கத்தில் மோடிக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருப்பவர். இவர் எப்படி ஜெயலலிதாவை சந்தித்தார் என்று பலருக்கும் குழப்பம்.
காப்பீட்டில் அந்நிய முதலீடு, நிலச் சீர்திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறது பாரதீய ஜனதா கட்சி. தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர சட்டத்தை நம்பி, வெளிநாட்டு முதலீடுகள் வருவதற்கான வாய்ப்பு இல்லை என்பது மோடிக்கு நன்றாகத் தெரியும். மேலும், குடியரசுத் தலைவரே, இந்த அவசர சட்டங்கள் குறித்து தனது அதிருப்தியை தெரிவித்திருக்கிறார். மேலும், இரண்டாவது முறை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டால், அது உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கின் மூலமாக சோதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. இதையெல்லாம் அறிந்தே, அதிமுகவின் 11 மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆதரவைக் கேட்டு ஜெய்ட்லி ஜெயலலிதாவை சந்தித்தார். அந்த நாற்பது நிமிட சந்திப்பில், சொத்துக் குவிப்பு வழக்கு விவாதிக்கப்பட்டிருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் நாங்கள் உதவுகிறோம் என்ற வாக்குறுதியை அருண் ஜெய்ட்லி அளித்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு. ஜெய்ட்லி சந்தித்த அதே நாளில், “நான் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்ய உள்ளேன்” என்ற ட்வீட்டும், இரண்டு நாட்கள் கழித்து, “உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியது அரசியல் நடத்தி டீல்களை முடிப்பதற்கு அல்ல” என்று மற்றொரு ட்வீட் செய்திருந்தார்.
ஸ்ரீரங்கத்தில் பிஜேபி வேட்பாளரை அறிவித்தது. மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றார். இவை அனைத்தும் உணர்த்துவது, ஜெயா ஜெய்ட்லி சந்திப்பால், ஜெயலலிதா காப்பாற்றப்படப் போகிறார் என்ற அதிமுக அடிமைகளின் கூற்று பொய் என்பதையே.
மேலும் ஜெயலலிதா இந்த வழக்கிலிருந்து விடுதலை பெற்றாரேயானால், அதற்குப் பிறகு அவரை கட்டுப்படுத்தவே முடியாது என்பது பிஜேபிக்கும் நன்றாகத் தெரியும். 13 மாதங்கள் நடத்திய வாஜ்பாய் அரசாங்கத்தை எப்படியெல்லாம் பாடாகப் படுத்தினார் ஜெயலலிதா என்பது அனைவருக்கும் தெரியும். ஆகையால் பிஜேபியினர் பழைய பாடத்தை அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். மேலும், ஜெயலலிதா இந்த வழக்கிலிருந்து விடுதலையாவாரேயானால், அடுத்த கட்டமாக அவர் மோடிக்குத்தான் சவாலாக இருப்பார். தற்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமாக உள்ள நிலையில், ஜெயலலிதாவின் பின்னால், மாநிலக் கட்சிகளும், இடதுசாரிகளும் அணி திரள வாய்ப்பு உள்ளது. இதை மோடி ஒரு நாளும் விரும்பமாட்டார்.
2001ம் ஆண்டு மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருந்த காலம். ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக, கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்தார் ஜெயலலிதா. திமுகவோடு கூட்டணியில் இருந்த பிஜேபி அமைச்சரவையில் இருந்த மாறனும் கைது செய்யப்பட்டார். பிஜேபி அரசு கடுமையான கோபத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்த ஜெயலலிதா, தங்கள் தரப்பை விளக்குவதற்காக, தம்பிதுரை உள்ளிட்ட மூன்று எம்.பிக்களை டெல்லிக்கு அனுப்பி, அப்போது சட்டத்துறை அமைச்சராக இருந்த அருண் ஜெய்ட்லியை சந்திக்கிறார்கள். அப்போது, அவர்களிடம் ஜெய்ட்லி, கருணாநிதியை கைது செய்துள்ளது மோசமான செயல். உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் ஆட்சியை கலைக்க நேரிடும். ஆட்சியை கலைத்தால், இரு அவைகளிலும் பெரும்பான்மை வேண்டும் என்று நினைப்பீர்கள். தற்போது உங்கள் ஆட்சியை டிஸ்மிஸ் செய்தால் கூட பெரும்பான்மை இல்லாத காரணத்தால், இரண்டு மாதத்தில் மீண்டும் உங்கள் அரசு தானாகவே உயிர்பெறும் என்பதும் எங்களுக்குத் தெரியும். ஆனால் அந்த இரண்டு மாத காலத்தில் ஆளுனர் ஆட்சியில், உங்கள் தலைவி ஜெயலலிதா மீது 300 வழக்குகள் பதிவு செய்வோம். மீண்டும் தேர்தல் வந்தால், உங்கள் தலைவி போட்டியிட முடியாதபடி செய்வோம்’ என்று கூறினார். இந்தத் தகவல் தெரிந்த பிறகே, கருணாநிதியை அவசர அவசரமாக விடுவித்தார் ஜெயலலிதா.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தலையிட்டு, ஜெயலலிதாவை காப்பாற்ற முனையும் என்பது அதி தீவிர கற்பனை மட்டுமே.
மேலும், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தற்போது, ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்துக் கொண்டிருக்கும் நீதிபதி குமாரசாமி எதிர்பாராத விதமாக திடீரென்று நியமிக்கப்பட்டவர். இவரது நியமனத்தை எதிர்பார்க்காத காரணத்தாலேயே, 2 ஜனவரி அன்று வழக்கு விசாரணையின் முதல் நாளே ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் தகராறு செய்தனர். இனி தாமதிக்க முடியாது என்பது தெரிந்த பிறகுதான், வேறு வழியில்லாமல் மேல் முறையீட்டு வழக்கை நடத்தியிருக்கின்றனர் ஜெயலலிதா தரப்பில்.
வழக்கின் நிலை இவ்வாறு இருக்க, ஜெயலலிதாவோ, கொண்டாட்டத்தில் இருக்கிறார். அதிகாரிகளை வழக்கம் போல சந்திக்கிறார். மிகவும் தெம்பாக இருக்கிறார். அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திப் போடச் சொல்லியுள்ளார். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடத்தி 190க்கும் மேற்பட்ட இடத்தில் வெற்றி பெற்று விடலாம் என்ற கணிப்பில் இருக்கிறார். வழக்கு செலவு என்ற காரணத்தைக் கூறியே, வசூலை மிகத் தீவிரமாக நடத்தி வருகிறார். அனைத்து அமைச்சர்களும், வசூல் செய்வதை மட்டுமே தங்களது உயரிய நோக்கமாக கருதி செயல்பட்டு வருகிறார்கள். ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுவார் என்பதை மனதில் வைத்தே, முதலீட்டாளர்களின் சர்வதேச மாநாடு மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விடுதலையாவாரா, அல்லது தண்டனை பெற்று சிறைக்கு செல்வாரா என்பதற்கான விடையை காலம்தான் அளிக்க வேண்டும்.
இத்தனை நெருக்கடியான காலத்திலும், தனது கொள்ளையை ஜெயலலிதா நிறுத்தவேயில்லை என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் உண்மை. ஜெயலலிதா தனது உடன்பிறவா சகோதரி, சசிகலாவின் பெயரில், வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள தியேட்டர்களை ஜாஸ் சினிமாஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக விலைக்கு வாங்கி விட்டார் என்பதை சவுக்கு கட்டுரை “சிறை செல்லும் சீமாட்டி” கட்டுரையில் விளக்கியிருந்தோம். தங்கள் சினிமா தொழிலை விரிவடைய வைக்கும் வகையில், தற்போது மேலும் சில தியேட்டர்களை வாங்கும் முயற்சியில் மன்னார்குடி கும்பல் இறங்கியிருக்கிறது என்பது அதிர்ச்சியான செய்தி.
கடந்த டிசம்பர் மாதத்தில் ஊடகங்களில் ஒரு செய்தி வெளியானது. அது இந்தியாவின் மிகப்பெரிய மல்டிப்ளெக்ஸ்களை வைத்திருக்கும் பிவிஆர் நிறுவனம், தமிழகத்தின் சத்யம் குழுமத்தினரின் திரையரங்குகள் அனைத்தையும் வாங்க உள்ளது என்பதே அந்த செய்தி. 800 முதல் 1000 கோடி வரை இந்த பரிவர்த்தனை இருக்கும் என்று அந்த செய்தி மேலும் கூறியது. சத்யம் குழுமத்தினருக்கு சொந்தமாக தமிழகத்தில் 56 திரைகள் உள்ளன. இந்த திரையரங்கங்கள் 83 க்ரவுண்ட் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனைக்கான முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் டிசம்பர் மாதமே தொடங்கப்பட்டன. இணைப்பு. இந்த பரிமாற்றத்துக்கான மதிப்பீடுகளை கேபிஎம்ஜி (KPMG) என்ற நிறுவனம் செய்து வருகிறது.
இந்த நிலையில் இந்த பரிவர்த்தனை வெற்றி பெறக்கூடாது என்பதில் மன்னார்குடி மாபியா முயற்று வருவதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வந்துள்ளன.
சத்யம் நிறுவனத்தினர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். பெரும் நிலச் சுவான்தார்கள். இத்தனை பெரிய செல்வந்தர்களையே, நில அபகரிப்புப் புகாரில் கைது செய்து, வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் இருந்த தியேட்டர்களை மன்னார்குடி கும்பல் எப்படி மிரட்டி வாங்கியது என்பதை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். தற்போது சத்யம் குழுவினர் விற்பனை செய்வதற்கான காரணம், தொடர்ந்து மன்னார்குடி கும்பல் அளிக்கும் தொந்தரவுகளை சமாளிக்க முடியாததே.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஆம்ப்பா ஸ்கைவாக் என் மிகப் பெரிய மாலை பார்த்திராத சென்னைவாசிகள் இருக்கவே முடியாது. ஆறு மாடிகளோடு, 3 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடியில் இந்த மால் கட்டப்பட்டுள்ளது. செப்டம்பர் 2009ல் இந்த மால் திறக்கப்பட்டது. இந்த மாலில் மொத்தம் ஏழு தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்களை இந்தியாவின் மிகப் பெரும் திரையரங்க நிறுவனமான பிவிஆர் இத்திரையரங்கங்களை லீஸ் அடிப்படையில் நடத்தி வருகிறது.
2009 செப்டம்பரில் இந்த மால் தொடங்கப்பட்டபோது, சிஎம்டிஏ, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தடையில்லா சான்று பெற்ற பிறகே, இந்த மால் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் 2012ம் ஆண்டில், நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் அண்ணா நகர் சந்திப்பில் 117 கோடி ரூபாய் செலவில் ஒரு பாலம் அமைக்க அரசு முடிவெடுத்தது. இதற்கான நில ஆர்ஜித ஆணை, நவம்பர் 2012ல் வெளியிடப்படுகிறது. ஆம்பா ஸ்கை வாக்குக்கு சொந்தமான சில நிலங்களும் இந்த பாலத்துக்காக கையகப்படுத்தப்படுகிறது. நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு பாலத்துக்கான வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த பாலம் கட்டுகையில் எம்ஜிஆர் நினைவு வளைவை காப்பாற்றுவதற்காக ஜெயலலிதா எப்படிப்பட்ட முட்டாள்த்தனத்தில் ஈடுபட்டார் என்பதை சவுக்கில் வெளிவந்த முட்டாள் அரசு கட்டுரை விளக்கும்.
இந்த நேரத்தில், ஆம்பா ஸ்கைவாக் உரிமையாளர் வருடந்தோறும் வாங்க வேண்டிய தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்ற கேட்டு விண்ணப்பிக்கறார். 20 மார்ச் 2014 அன்று விண்ணப்பிக்கிறார். தீயணைப்புத் துறையின் இயக்குநர் 2 மே 2014 அன்று ஒரு பதில் எழுதுகிறார். அந்த பதிலில், “22 ஏப்ரல் 2014 அன்று, தீயணைப்புத் துறையின் குழு, ஸ்கை வாக் கட்டிடத்தை ஆய்வு செய்தது. அந்த ஆய்வின்போது, வடக்குப் பக்கத்தில் 2.85 மீட்டர் குறைகிறது, வடமேற்குப் பகுதியில் 4.5 மீட்டர் குறைகிறது, தெற்கு பகுதியில் முரண்பாடுகள் உள்ளது மற்றும் கிழக்குப் பகுதியில் குறைகள் உள்ளன, இதன் காரணமாக, தீவிபத்து ஏற்படும் நேரத்தில் உயரமான ஏணிகளை உடைய தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்த முடியாது என்ற காரணங்களை கூறி, தீயணைப்புத் துறை தடையில்லா சான்று மறுக்கப்படுகிறது.
நீங்கள் ஒரு வீடு கட்டுகிறீர்கள். அந்த வீட்டின் முன்பாக 100 மீட்டர் இடம் விட வேண்டும் என்று சிஎம்டிஏ விதி என்று வைத்துக் கொள்வோம். அதன்படி, 100 மீட்டர் இடம் விட்டு, கட்டிடத்தை கட்டி முடிக்கிறீர்கள். மாநகராட்சியோ, நெடுஞ்சாலைத் துறையோ, பாலம் கட்ட அல்லது சாலை விரிவாக்கத்துக்காக உங்கள் இடத்தில் இருந்து 50 மீட்டரை நில ஆர்ஜிதம் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சட்டபூர்வமாக ஒதுக்க வேண்டிய 100 மீட்டர் இடத்தை நீங்கள் ஒதுக்கத் தவறி விட்டீர்கள், ஆகையால் உங்கள் கட்டிடத்தை இடிக்கிறோம் என்று கூறினால் நீங்கள் என்ன செய்ய முடியும் ? 100 மீட்டர் இடத்தை நீங்களா ஒதுக்க மறுத்தீர்கள் ?
இதுதான் ஆம்பா ஸ்கை வாக் விவகாரத்தில் நடந்துள்ளது. இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, ஸ்கைவாக் நிர்வாகத்தினர், நுழைவு வாயிலை விரிவாக்கம் செய்து, தீயணைப்பு வாகனங்கள் நுழையும் வகையில் கட்டுமானமும் செய்து விட்டனர். ஆனால், இது வரை, தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று வழங்கப்படவில்லை. இது குறித்து ஆய்வு செய்த சிஎம்டிஏ, 24 டிசம்பர் 2014 அன்று ஒரு கடிதம் எழுதுகிறது. அந்த கடிதத்தில், நெடுஞ்சாலைத் துறை ஆர்ஜிதம் செய்தது போக, தற்போது எஞ்சியுள்ள இடத்தையே போதுமான இடமாக கருதிக் கொள்ளலாம் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிஎம்டிஏவின் இந்தக் கடிதத்துக்குப் பிறகும், ஏறக்குறைய ஒரு வருடமாக, தீயணைப்புத் துறை தடையல்லா சான்று வழங்காமல், இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
தலைமைச் செயலக வட்டாரங்களில் விசாரித்தபோது கிடைத்த தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. பான்டிட் குயின் என்று அழைக்கப்படும் ஷீலா பாலகிருஷ்ணன், தீயணைப்புத்துறை இயக்குநர் ரமேஷ் சந்திர குடாவ்லாவிடம், தடையில்லா சான்று வழங்க தடை பிறப்பித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஷீலா பாலகிருஷ்ணனுக்கு இந்த விவகாரத்தில் ஆர்வம் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. மேலும் இப்படி அப்பட்டமாக அதிகார துஷ்பிரயோகம் செய்து, பிவிஆர் தியேட்டர்களை கையகப்படுத்தும் அளவுக்கு ஷீலா துணிவு கொண்டவர் இல்லை.
பிறகு யாருடைய உத்தரவின்பேரில், தடையில்லா சான்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சவுக்கில் சிறை செல்லும் சீமாட்டி முதல் பாகத்தில் குறிப்பிட்டுள்ளது போல, 17 ஜுலை 2014 அன்று, ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தின் சிறப்பு கூட்டம், மக்கள் துணை முதல்வர் சசிகலா தலைமையில் நடந்தது. அந்த கூட்டம் நடந்த இடம் ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தின் அலுவலகம் ப்ளாட் எண் 12, நாலாவது தளம், க்யான் அபார்ட்மென்ட்ஸ், பழைய எண் 19 மற்றும் 20/12, புதிய எண் 38/12, வெங்கட்ராமன் தெரு, தியாகராய நகர், சென்னை 17ல், இந்த கூட்டம் நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகவரியில், இந்த ஹாட் வீல்ஸ் மற்றும் ஜாஸ் சினிமாஸ் தவிர, குறைந்தது 15 நிறுவனங்களுக்கு மேல் செயல்பட்டு வருவதாக, பதிவாளர் அலுவலக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 15 நிறுவனங்கள் செயல்படும் அந்த இடம் எப்படித்தான் இருக்கிறது என்ற நேரில் சென்று பார்த்தால், அந்த இடம், சசிகலாவின் கணவர் நடராஜனின் தங்கை மகன் குலோத்துங்கனின் வீடு.
அங்கே கம்பெனியும் நடக்கவில்லை, ஒரு புடலங்காயும் நடக்கவில்லை. சவுக்கில் சிறை செல்லும் சீமாட்டி தொடர் கட்டுரைகளில் அம்பலப்படுத்துவது போல, இந்த அனைத்து நிறுவனங்களும் ஜெயலலிதாவின் பினாமி நிறுவனங்கள். வெறும் காகிதத்தில் மட்டுமே இயங்கும் நிறுவனங்கள். ஜெயலலிதா சட்டவிரேதமாக வசூல் செய்யும் லஞ்சப்பணத்தை வெள்ளையாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட நிறுவனங்களே இவை.
தற்போது ஸ்கைவாக் நிறவனத்துக்கான அனுமதியை எதற்காக மறுக்க வேண்டும் ?
பிவிஆர் குழுமம் சத்யம் திரையரங்கங்களை வாங்கினால், பீனிக்ஸ் மாலில் உள்ள 11 திரையரங்குகளையும் சேர்த்தே வாங்கும். அந்த 11 திரையரங்குகளும், சசிகலாவின் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்துக்கு சொந்தமானவை. அந்த திரையரங்குகளை சத்யம் சினிமாஸ் லீஸ் அடிப்படையில் நடத்தி வருகின்றனர். அதே போல, ஆம்பா ஸ்கைவாக்கில் உள்ள 7 திரையரங்குகளையும் பிவிஆர் சினிமாஸ் லீஸ் அடிப்படையில் நடத்தி வருகின்றனர். பிவிஆர் தற்போது லீஸ் முறையில் நடத்தி வரும் ஆம்பா ஸ்கைவாக் திரையரங்கங்களின் லீஸ் உரிமையை ரத்து செய்ய வைத்து, அதை ஜாஸ் சினிமாஸ் பெற்றுக் கொண்டால், சத்யம் திரையரங்கங்களை வாங்கும் திட்டம் நிறைவேறாது அல்லவா ? முதலுக்கே மோசம் என்று பிவிஆர் துண்டை காணோம், துணியைக் காணோம் என்று ஓடுமா இல்லையா ? இதுதான் மக்கள் துணை முதல்வர் சசிகலாவின் திட்டம்.
இந்த பரிவர்த்தனைகளையெல்லாம் முன்னின்று நடத்துபவர் என்று கருதப்படும் ஒரு அதிமுக வழக்கறிஞரை இது குறித்து தொடர்பு கொண்டு பேசினோம். ஜெயலலிதாவி மேல் முறையீடு தவிர வேறு எந்த வேலையையும் பார்ப்பதற்கு தனக்கு நேரமில்லை என்றும், ஸ்கைவாக் குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று மறுத்தார். சசிகலாவின் தொலைபேசி எண் தெரியாததால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ஒரே ஒரு செய்தி அனுப்பியதை அடுத்து, வாட்ஸப், டெலிகிராம் இரண்டிலிருந்தும் வெளியேறி விட்டார். வேறு வழியே இல்லாத காரணத்தால், மக்கள் துணை முதல்வர் தரப்பின் கருத்து இல்லாமலேயே இந்தக் கட்டுரை முடிக்கப்படுகிறது.
ஊழல் வழக்கில் தண்டனை என்ற கத்தி தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கையிலேயே இத்தனை அயோக்கியத்தனங்களை அரங்கேற்றுகிறார்கள் என்றால், அந்த கத்தியும் இல்லாமல் போனால், தமிழகத்தின் நிலை என்ன என்பதை சற்றே யோசித்துப் பாருங்கள் தோழர்களே….
தமிழகம் இது வரை சந்தித்திராத மிக மிக மோசமான கொள்ளைக்கூட்டம், தற்போது தமிழகத்தை ஆண்டு வருகிறது. இந்தக் கொள்ளைக் கூட்டம் ஒழித்துக் கட்டப்படாவிட்டால், தமிழகம் மிக மிக மோசமான இருண்ட காலத்தை நோக்கிச் செல்வதை தடுக்க முடியாது. ஜெயலலிதா, சசிகலா என்ற சம்பல் கொள்ளைக் கூட்டத்திடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற, தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று கூட வேண்டிய தருணம் இது.
True to the core! These LOUSY QUEENS are known for their stupid but tricky attitude of total ignorance and deliberate indifference when comes to the welfare of the people. They have a set of goons installed at every place and unit of their malicious activities. Right from the Secretariat to their frustrating Television Channels, these goons are roaming under the cover and name of OFFICIALS. They know how to humiliate, find fault on innocent – loyal people, loiter around with that highly irritating ‘TONGUE-IN-CHEEK’ attitude. Our MOTHERLAND – TAMILNADU must be protected from their GREEDY clasps. I sincerely hope that dynamic and dependable forces like SAVUKKU only can stand to save the people of Tamilnadu.
இந்த கட்டுரைக்கு நேற்று நான் எழுதிய பின்னூட்டம் “கொமன்ற்” நிராகரித்து அழிக்கப்பட்டுவிட்டது அது ஏனென்று தெரியவில்லை.
///தமிழகம் இது வரை சந்தித்திராத மிக மிக மோசமான கொள்ளைக்கூட்டம், தற்போது தமிழகத்தை ஆண்டு வருகிறது. இந்தக் கொள்ளைக் கூட்டம் ஒழித்துக் கட்டப்படாவிட்டால், தமிழகம் மிக மிக மோசமான இருண்ட காலத்தை நோக்கிச் செல்வதை தடுக்க முடியாது.///
நியாயமான ஆதங்கம்தான். ஆனால் ஆனால் “”தமிழகம் இது வரை சந்தித்திராத மிக மிக மோசமான கொள்ளைக்கூட்டம்”” என்று விளித்திருப்பது தப்பு.
பறந்தடித்து ஊழல் செய்து மாட்டியவர் செயலலிதா, அமசடக்கமா அசையாமல் ஆமைபோல ஊழல் செய்துவிட்டு பதுங்கி கிடப்பவர் கட்டுமரம் கருணாநிதி.
அதுசம்பந்தமா ஒரு பழமொழி உண்டு, கோழி ஒரு முட்டையை இட்டுவிட்டு ஊர் எடுபட கொக்கரித்து ஆர்ப்பாட்டம் செய்யுமாம் ஆனால் ஆமை ஆயிரம் முட்டையை இட்டு மண்ணுள் மூடிவிட்டு அசையாமல் போகுமாம்.
கோழி செயலலிதா என்றால் ஆமை அதிலும் கடல் ஆமை கட்டுமரம் கருணாநிதி.
ஒரு சனியனை காட்டிக்குடுத்து தலை முழுகினால் மற்றொரு தரித்திரிய சனியன் தலையெடுக்கும் பேரபாயம் உண்டு. அதற்கு சனியனே பரவாயில்லை என்பதுபோல படுகிறது.
செயலலிதாவுக்குப் பின்னால் மன்னார்குடி மாஃபியாக்கள் மட்டுமே அதிலும் தலையாரி சசிகலாவின் அசைவாக்கத்துக்குள்த்தான் மற்ற மாஃபியாக்களின் அசைவாக்கம் உள்ளது.
கட்டுமரம் திருடர் கொம்பனி அப்படிப்பட்டதல்ல ஸ்ராலின் பிரிவு, கனிமொழி பிரிவு, அழகிரி பிரிவு, உதயநிதி பிரிவி, துரை தயாநிதி பிரிவு, கேடி பிரதர்ஸ் பிரிவு, செல்வி பிரிவு. ராசாத்தி அம்மா பிரிவு, இது தவிர கிளைப்பிரிவுகள் நிறைய உண்டு.
தலைமை திருடன் கருணாநிதியால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அந்த கொள்ளைக்கூட்டம் விஸ்தரிக்கப்பட்டுவிட்டது. ஆனால் செயலலிதா சசியின் தொடர்பை துண்டிக்கும் வயரை புடுங்கிவிட்டாலே மன்னார்குடியின் ஆட்டம் நின்றுவிடும்.
கருணாநிதியை கட்டம் கட்டினால் மட்டும்தான் திருவாரூர் திருடர்கூட்டத்தை கொஞ்சமாவது கட்டுப்படுத்த முடியும் கட்டுமரத்தை எதிர்க்கக்கூடிய சக்தி இப்போதைக்கு அதிமுக என்ற அமைப்புக்கும் நான் என்ற முனைப்புடன் செயற்படும் செயலலிதாவுக்கும் மட்டுமே இருப்பதாக நான் உணருகிறேன்.
இப்போதைக்கு செயலலிதாவுக்கு ஷெக் வைத்தால் கட்டுகரம் என்ற வைரசு அசுரவேகத்தில் ராட்சத உருவை பெற்றுவிடும் அப்பொறம் என்ன செய்வீங்க என்பதுதான் என்னோட டவுட்.
fantastic logic!
அப்படியானால் இந்திய சட்டம் என்பது டொய்லெட் பேபர் மாதிரிதானா?
Savukku telling truth only
About Modi dress in website.
http://www.abplive.in/india/2015/01/27/article486403.ece/How-costly-is-Modis-personalised-suit
savukku sankar always wear only langodu only or like mahathma off dothi?
This is unwarrented comment.
DMK பக்கா திருடர்கள் என்பது எல்லாருக்கும் தெரியும் , ஆனால் இந்த திருட்டு கும்பல் பத்தி யாருக்கும் தெரியாது ,
இத எதுக்க மனசில்லா பயலுவ , சவுக்கு பத்தி தப்பா பேசறிங்க ,,
சவுக்கு தப்பா இருந்தாலும் , சொல்ற விசியம் கரெக்டா அப்படின்னு பர்ருங்க, அத விட்டுட்டு, இன்னும் எத்தன காலத்துக்கு , ஒருத்தவன வச்சி இன்னோர்த்தன நியபடுதிரிங்க ,,, வெக்கமா இர்ருக்கு , தூ .,,,,
savukku
un trouser romba kilyiuthu;
https://www.facebook.com/savukkunews/posts/1465357267053752
this is not good. once u away from people trust, even u say 100 truth no one listen.
Even though he is not perfect , the matter he published is always with the evidence,
Hope you are educated man and can distinguish the correct and incorrect matter very easily.
Simple, I know there are some area which can not accept in this article , specially the end of the article. If you think the total article is blind, just justify with the evidence as a common public we will aware what wrong in it.
yarau appa nee? do you read always main article or comment area? did you understand first what I meant on this matter?
Unga matter simple sir ellarukum, theriyum , AMMA valgaa dhana,,,
இவர்களை நினைத்தால் பீதியாக உள்ளது.
The ADMK opposite party of DMK also number 1 corruption party,
do not support to any political party. the ADMK is ten times better than DMK.
DMK is a one family party. Jayalalitha is a single women,
I like very much
savukku
adhu ellam viduppa. un trouser ippo kalandu poyitchaa. cho va varudhu eduthaa twitter ila . un moonjiya enga vaipa ippo
padi padi padi padi
http://www.dinamalar.com/news_detail.asp?id=1169450
M.Natarajan is the MASTER mind for these deal.