கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? என்று சவுக்கில் கேடி சகோதரர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அந்த கட்டுரையில் சற்றும் மிகைப்படுத்தல் இல்லை என்ற அளவுக்கே, இன்று வரை கேடி சகோதரர்களுடைய நடத்தை இருந்து வருகிறது. அடுத்ததாக, கேடி சகோதரர்களின் முடிவின் ஆரம்பம் என்று ஒரு விரிவான கட்டுரை சவுக்கில் வெளி வந்திருந்தது.
இதோ அதோ என்று போக்குக் காட்டிக் கொண்டிருந்த கேடி சகோதரர்களின் கைது விரைவில் நடக்கப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டு விட்டன. சன் டிவியின் தொழில்நுட்பப் பிரிவின் முதுகெலும்பு என்று கருதப்படும் சன் டிவியின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான கண்ணன், முரசொலி மாறனுக்கு உதவியாளராக இருந்து, பின்னாளில் தயாநிதிக்கு உதவியாளராக இருந்த கவுதம் மற்றும் எலக்ட்ரீசியன் ரவி ஆகியோரை, சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த, தொலைபேசி எக்சேஞ்ச் விவகாரத்தில் சிபிஐ கைது செய்துள்ளது.
இந்தக் கைது அரசியல் வட்டாரத்தில் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. அந்த ஆச்சர்யத்துக்கான காரணங்கள் என்னவென்பதை முதலில் பார்த்து விடுவோம்.
2009 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் இருந்தது. மதுரை தினகரன் எரிப்பு விவகாரத்திற்கு பிறகு, குடும்பம் பிரிந்து, கருணாநிதியின் ‘இதயம் இனித்து, கண்கள் பனித்த’ நேரம். இறந்து போன மூன்று உயிர்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல், கருணாநிதியும் அவர் குடும்பமும் மகிழ்ச்சியாக இருப்பது போல பொதுவெளியில் நடித்துக் கொண்டிருந்த நேரம். மீண்டும் மாறனை மத்திய சென்னை தொகுதியில் வேட்பாளராக்கினார் கருணாநிதி. நேற்று கட்சியில் சேர்ந்து இன்று வேட்பாளராக்கி விட்டீர்களே என்று கேட்டதற்கு கருணாநிதி அளித்த விளக்கம் “விளையும் பயிர் முளையிலேயே தெரியும்”. மேலும், தயாநிதி மாறனுக்கு இந்தி நன்றாகத் தெரியுமாம். இப்படியெல்லாம் கருணாநிதி கதையை அள்ளி விட்டு, தயாநிதி மாறனை எடுத்த எடுப்பிலேயே கேபினெட் அமைச்சராக்கினார். அதற்கான பலனை பின்னாளில் பலமாக அனுபவித்தார் கருணாநிதி.
2ஜி ஊழல் பரபரப்பாக பேசப்பட்டு, ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்ற எண்ணிக்கையை கணக்காயர் வெளியிட்டதும் விவகாரம் பற்றி எரிந்தது. குறுகிய காலத்தில் ஆ.ராசா கைது செய்யப்பட்டார். குற்றப்பத்திரிக்கையும் விரைவாக தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றமே மேற்பார்வை செய்திருந்தும், கேடி சகோதரர்கள் மீதான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் பல ஆண்டுகளாக தாமதம் செய்யப்பட்டு வந்தது.
ஆ.ராசா உள்ளிட்டோர் மீதான வழக்கு முடியும் தருவாயில் இருக்கிறது. ஆனால் கேடி சகோதரர்கள் மீதான வழக்கோ இன்னும் தொடங்கவேயில்லை. மார்ச் 8ம் தேதிதான் முதல் கட்ட விசாரணை.
ஆனால், இந்த 2ஜி அலைக்கற்றையில் ஊழலை தொடங்கி வைத்ததே கேடி சகோதரர்கள்தான். ஆ.ராசா வழக்கில், மிகப்பெரிய ஊழல் நடந்திருந்தாலும், அந்த வழக்கில் லஞ்சமாக கண்டுபிடிக்கப்பட்ட தொகை கலைஞர் டிவிக்கு கொடுத்த வெறும் 200 கோடி ரூபாய் மட்டுமே. இதைத் தவிர்த்து, அந்த வழக்கில் லஞ்ச பரிவர்த்தனையாக எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு புனைகையில் சிபிஐ சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அறுதியிட்டு கூறினார்.
ஆனால், மாறன்கள் குற்றவாளிகளாக உள்ள 2ஜி வழக்கில் லஞ்சத் தொகையாக மட்டும் 20 ஆயிரம் கோடிகளுக்கு மேல் மேக்சிஸ் நிறுவனத்தால், சன் டிடிஎச் பங்குகளை வாங்கியதன் மூலமாகவும், எஃப் எம் பங்குகளை வாங்கியதன் மூலமாகவும், வழங்கப்பட்டுள்ளது குற்றப்பத்திரிக்கையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்படிப்பட்ட ஒரு வழக்கில், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க எவ்விதமான முகாந்திரமும் இல்லை என்று சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவையே சொல்ல வைக்கும் அளவுக்கு திறன் படைத்தவர்கள்தான் இந்த கேடிகள்.
ஆனால் தற்போது கேடி சகோதரர்களின் மூளையாகவும், முக்கிய புள்ளியாகவும் கருதப்படும் சன் டிவியின் தொழில்நுட்ப பிரிவு தலைமை அதிகாரி, கண்ணன், கேடிகளின் உதவியாளர் கவுதம் மற்றும் எலக்ட்ரிசியன் ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருந்து வருகின்றனர். சன் டிவியில் ஆரம்ப காலம் முதலாகவே இருந்து வருபவர் கண்ணன். வெளிநாட்டில் தயாராகும் லேட்டஸ்ட் உபகரணங்கள் முதற்கொண்டு தொழில்நுட்பத்தின் அத்தனை முன்னேற்றங்களையும் தன் விரல் நுனியில் வைத்திருப்பவர். இதன் காரணமாக பெரிய கேடி கலாநிதி மாறனிடம் இவருக்கு அதிகப்படியான செல்வாக்கு உண்டு.
இவரைப்பற்றி சன் டிவி ஊழியர்கள் ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார்கள். சன் டிவி தொடங்கப்பட்ட காலத்தில் அந்த அலுவலகத்தில் அடிக்கடி ரிமோட்டுகள் தொலைந்து போகும். இதை எப்படியாவது கண்டு பிடிக்க வேண்டும் என்று முயற்சி செய்த கண்ணன் ஒரு ஊழியர் மீது சந்தேகப்பட்டார். சந்தேகப்பட்ட கண்ணன், சன் டிவி அலுவலகத்தின் ரிசப்சனிலேயே வைத்து, அந்த ஊழியரை எல்லோர் முன்பும் அவரை அடித்து உதைத்ததோடு, கையில் தொட்டால் ஷாக் அடிக்கும் ஒரு உபகரணத்தை வைத்து, அனைவர் முன்பாகவும், அவரின் கை கால்கள் மற்றும் ஆணுறுப்பில் ஷாக் வைத்து “சொல்லுடா, சொல்லு” என்று மிரட்டியிருக்கிறார். இது கலாநிதி மாறனுக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் கண்டுகொள்ளவில்லை. இறுதியாக, சன் டிவியின் மூத்த ஊழியர் ஒருவரும், கலாநிதி மாறனின் மனைவியும் தலையிட்ட பிறகே, அந்த ஊழியர் விடுவிக்கப்பட்டுள்ளார். பின்னாளில், காணாமல் போன அந்த ரிமோட்டை, யாரோ ஒருவர், மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டிருந்தார்கள் என்பது தெரிய வந்தது. அந்த அளவுக்கு அகங்காரம் பிடித்து அலைந்தார்கள் மாறன் சகோதரர்களும், அவர்களின் எடுப்புகளும்.
சன் டிவி ஊழியர்கள் கைது செய்யப்பட்டதும், பத்திரிக்கையாளர்களை சந்தித்த சின்ன கேடி தயாநிதி மாறன், இது ஒரு சிவில் பிரச்சினை, தேவையில்லாமல் கிரிமினல் வழக்காக மாற்றப்பட்டு உள்ளது. இது உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்ட வழக்கு என்றார். சங் பரிவாரத்தின் சதி என்றார். ஒரு அமைச்சருக்கு உரிய வசதிகளை மட்டுமே பயன்படுத்தியதாக தெரிவித்தார். உண்மை என்னவென்பதை பார்த்து விடுவோம்.
மார்ச் 2007ம் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் 24371515 என்ற எண்ணில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. மூன்று நிமிடங்களுக்கு ஒரு அழைப்பு என்று வைத்துக் கொண்டால், மொத்தம் 1624009 நிமிடங்கள் ஆகின்றன. 27066.81 மணி நேரம் பேசியிருக்க வேண்டும். 24 மணி நேரக் கணக்கில் 1127 நாட்கள் தொடர்ந்து பேசியிருக்க வேண்டும். ஆனால் மார்ச் மாதத்தில் 30 நாட்கள்தானே இருக்கிறது. இப்படி பேசியிருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், மாறன் வெளிநாட்டு அழைப்புகள் பேசினாரா என்றால், ஒரு அமைச்சர் இப்படி 24 மணி நேரமும் வெளிநாட்டுக்கு தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்க முடியாது. அப்போது இந்த யூனிட்டுகள், உயர் அலைவரிசை இணைய பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்க முடியும் அல்லவா ?
இத குறித்து பூர்வாங்க விசாரணை நடத்திய சிபிஐ, டெல்லி தலைமையகத்துக்கு எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று அறிக்கை அனுப்பியது. ஆனால் அதற்கான உத்தரவை பிறப்பிப்பதற்கு பதிலாக, தலைமையகம் அந்த வழக்கை டெல்லிக்கு மாற்றியது. மாற்றி இரண்டு வருடங்கள் கழித்தும், வழக்கு பதிவு செய்யப்படவில்லை. குருமூர்த்தி இது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்ததும், மூன்று மாதங்கள் கழித்து, வழக்கு பதிவு செய்தது சிபிஐ. ஆனாலும், புலன் விசாரணை நடைபெறவில்லை. மீளா உறக்கத்தில் ஆழ்ந்திருந்த இந்த வழக்கு, மோடி அரசு பதவியேற்ற பிறகுதான் சூடு பிடித்தது.
சிபிஐ விசாரணையில் தெரிய வந்த விபரங்கள் என்ன தெரியுமா. 2437 என்று தொடங்கும் எண்ணில் 23 லைன்கள் வேலை பார்த்தன. 24372211 முதல் 2213, 24372222, 24372233, 24372244 முதல் 2246 என்று மொத்தம் 23 லைன்களும், 24371500 முதல் 24371799 என்ற 300 லைன்களும் இந்த எக்சேஞ்சில் செயல்பட்டன. ஒரு எக்சேஞ்ச் என்றால் அதில் பலருக்கும் இணைப்பு இருக்கும்தானே ? ஆனால் இப்படியொரு எக்சேஞ்ச் செயல்படுவது தொலைபேசித் துறைக்கே தெரியாது. பிஎஸ்என்எல்லின் தலைமைப் பொது மேலாளரைத் தவிர வேறு யாருக்குமே இந்த 323 இணைப்புகள் இருந்தது தெரியாது. 28 மே 2007ல் மாறன் பதவியை ராஜினாமா செய்ததும், 24371515 மற்றும் 24371616 ஆகிய இரண்டு எண்களை மட்டும் எம்.பி ஒதுக்கீட்டின் கீழ் தனக்கு ஒதுக்குமாறு தயாநிதி மாறன் வேண்டுகோள் விடுத்தபிறகே, இந்த 323 இணைப்புகள் குறித்த விபரங்கள் வெளி வந்தன. இந்த இரண்டு எண்கள் பிஎஸ்எஎன்னில் கிடையாது. மாம்பலம் இணைப்பகத்தை தொடர்பு கொள்ளவும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கே தெரியாத ஒரு எண், மாறனின் வீட்டில் எதற்காக செயல்பட வேண்டும் ? 24371500 என்ற எண், 3/1 போட் கிளப் சாலை என்ற முகவரியில் தலைமைப் பொது மேலாளர் பெயரில் 300 துணை இணைப்புகளோடு செயல்பட்டு வந்ததே அப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்தது. சின்ன கேடி தயாநிதி மாறன் ராஜினாமா செய்த ஐந்து வாரத்துக்கு இந்த சட்டவிரோத இணைப்புகள் செயல்பட்டு வந்தது கவனத்துக்கு வந்தது.
மாறன் 24371515 மற்றும் 24371616 ஆகிய எண்களை தனக்கு வேண்டும் என்று கேட்டபடி, அதைஒதுக்க வேண்டுமென்றால் 24371500 என்ற எண் செயல்பட்டு வந்ததை மறைத்தே ஆக வேண்டும். ஏனென்றால் அதன் துணை இணைப்புகளான 300 எண்கள் இருந்தது தெரிய வரும் என்று பிஎஸ்என்எல் ன் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 300ஐ தவிர்த்து மேலும் 23 இணைப்புகள் தலைமைப் பொது மேலாளரின் பெயரில் மாறன் வீட்டில் செயல்பட்டு வந்தன. அந்த 23ல் 2 சாதாரண எண்கள். அவற்றில் 7 எண்கள் உயர் அழுத்த இணைப்பு எண்கள். அந்த ஏழு எண்களுக்கும் தனித்தனியாக மூன்று மூன்று துணை இணைப்புகள் உள்ளன என்று சிபிஐ கண்டுபிடித்துள்ளது. இதன் அடிப்படையிலேயே தற்போது சன் டிவி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்போது சின்ன கேடி தயாநிதி மாறனின் பேட்டியை பாருங்கள்.
எத்தனை தடுமாற்றம் பார்த்தீர்களா ? எப்படி கூசாமல் புளுகுகிறான் பார்த்தீர்களா ? எத்தனை கேவலமானவர்கள் பார்த்தீர்களா ? சன் டிவிக்கு இல்லாத வருமானமா ? 2007ல், தமிழகத்தின் மொத்த கேபிள் நெட்வொர்க்கையும் இவர்கள்தானே வைத்திருந்தார்கள். தமிழ் சேனல்களிலேயே முதலிடத்தில் இருந்தது சன் டிவிதானே. வருமானம் கொட்டோ கொட்டு என்று கொட்டியதே. அப்படி இருந்தும் எதற்காக இந்த திருட்டுத்தனம் ? அதற்கு காரணம், திருட்டுத்தனம் இவர்கள் ரத்தத்திலேயே ஓடுகிறது. அம்பானி, ரத்தன் டாட்டா போன்றவர்கள் நிச்சயம் கொள்ளையடிப்பவர்கள்தான். ஆனால் அவர்கள் இயற்கை வளத்தை கொள்ளையடிப்பார்கள். பல கோடி ரூபாய்கள் திருடுவார்கள். ஆனால், இது போன்ற சில்லரைத் திருட்டுக்களில் ஈடுபடமாட்டார்கள். தொலைபேசி இணைப்பை திருடுகிறார்கள் என்றால் இவர்கள் எப்படிப்பட்ட கேவலமானவர்கள் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த கேவலமானவர்களை ஆதரித்து, தொலைக்காட்சியில் பேட்டியளிக்கும், தொல்.திருமாவளவன், வைகோ, கிருஷ்ணசாமி, ஜி.கே.வாசன், மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் எவ்வளவு கேவலமானவர்கள் என்பதை நான் உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.
சரி. கேடி சகோதரர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பதை பார்த்து விட்டோம். கேடி சகோதரர்களை விட கேவலமானவர்கள் யாராவது இருக்க முடியுமா ? ஒருவர் இருக்கிறார்.
விபரமாக பார்ப்போம். 2 டிசம்பர் 2008 அன்று கேடி சகோதரர்களுக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் இணைப்பு ஏற்பட்டது. கருணாநிதியின் இதயம் இனித்து, கண்கள் பனித்தன. ஆனால் கேடி சகோதரர்களின் வேலைகள் தமிழக அரசில் தங்கு தடையின்றியே நடந்து கொண்டிருந்தது. மார்ச் 2008ல், சென்னை நகரெங்கும் கல் கேபிள்ஸ் சார்பாக ஆப்டிக் ஃபைபர் கேபிள் பதிக்க அனுமதி கேட்டு, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு விண்ணப்பம் அளிக்கின்றனர் கேடி சகோதரர்கள். உள்ளே நுழைவதற்கு முன், கல் கேபிள்ஸ் யாருடைய நிறுவனம் என்பதை பார்த்து விடுவோம்.
கல் கேபிள்ஸ் நிறுவனத்தில் 75 சதவிகித பங்குகளை வைத்திருப்பது பெரிய கேடி கலாநிதி மாறன். மீதம் உள்ள 25 சதவிகித பங்குகள் டி.கே என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் உள்ளது. அந்த டி.கே என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 91 சதவிகித பங்குகளை வைத்திருப்பது சின்ன கேடி தயாநிதிமாறன். 9 சதவிகித பங்குகளை வைத்திருப்பது தயாநிதியின் மனைவி ப்ரியா தயாநிதி. டிகே என்டர்பிரைசஸ் என்பதன் விரிவாக்கம் என்ன தெரியுமா ? டி என்றால் தயாநிதி கே என்றால் கலாநிதி.
வெளியுலகத்துக்கு கேடிகளும், கருணாநிதி குடும்பமும் கடும் மோதலில் இறங்கியிருப்பதாக காண்பித்துக் கொண்டாலும், கல் கேபிள்ஸ் நிறுவனம் சென்னை நகர் முழுக்க ஒளி வட இழைகள் பதிப்பதற்கு அனுமதி கேட்டு தலைமைச் செயலகத்துக்கு அளித்த விண்ணப்பம் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. அந்த உத்தரவில் இரண்டு நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஒரு நிபந்தனை, தமிழக அரசு நிறுவனமான எல்காட் செயல்படுத்தி வரும் மாநிலம் தழுவிய திட்டடத்துக்கு Tamil Nadu State Wide Area Network 2 எம்பிபிஎஸ் அளவுக்கு இலவசமாக இணைப்பு வழங்க வேண்டும் என்பதே. இரண்டாவது நிபந்தனை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும், மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற்று, அதற்குரிய கட்டணம் செலுத்த வேண்டும் என்பதே. இதன்படி, 2008 முதல் திமுக ஆட்சி முடியும் வரையில் சென்னை நகர் முழுக்க கல் கேபிள்ஸ் சார்பாக ஒளி வட இழைகள் பதிப்பிக்கப்படுகின்றன.
முறைப்படி சென்னை மாநகராட்சிக்கு விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தி கேபிள் பதிப்பித்திருக்க வேண்டிய கேடி சகோதரர்கள் எனன செய்தார்கள் தெரியுமா ? 18 பிப்ரவரி 2011 அன்று பழைய தேதியிட்டு ஒரு இருபது கடிதங்களை சென்னை மாநகராட்சிக்கு அளிக்கிறார்கள். அந்த கடிதத்தில் சென்னை நகரில் 51.66 கிலோ மீட்டருக்கு கேபிள் பதிப்பிக்க அனுமதி கோரப்பட்டு இருந்தது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்தபோது அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. மாநகராட்சி உள்ளிட்ட எந்த அமைப்புகளிடமும் அனுமதி பெறாமலும், உரிய கட்டணத்தை செலுத்தாமலும், சென்னை நகர் முழுவதும் கேபிள் பதிப்பிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. சென்னை மாநகராட்சியின் கண்காணிப்புப் பொறியாளர் ராமமூர்த்தி என்பவர் சென்னை மாநகர ஆணையருக்கு ஒரு புகார் ஒன்றை அனுப்புகிறார். அந்தப் புகாரில் சென்னை மாநகராட்சிக்கு ஒரு கோடிக்கும் மேல் நிதி இழப்பு ஏற்படுத்தியிருப்பதோடு, அனுமதி இல்லாமல் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சாலைகளை தோண்டியதன் மூலமாக பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வகையில் ஒரு கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். மேலும், இவ்வாறு பதிப்பிக்கப்பட்ட கேபிள்களில் அனுமதி இல்லாமல், மாறன்களின் வீடுகளில் இருந்து சன் டிவிக்கு பல்வேறு கேபிள்கள் பதிப்பிக்கப்பட்டுள்ன என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரையடுத்து, சென்னை மத்திய குற்றப்பபிரிவு குற்ற எண் 294/2011ல், ஏமாற்றுதல், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ், கல் கேபிள்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விட்டல் சம்பத்குமார் மற்றும் இயக்குநர் பாலசுப்ரமணியம் சிவனேசன் ஆகிய இருவரின் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதன் மீது உரிய புலனாய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா ? சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா ? மேலும், கல் கேபிள்ஸ் நிறுவனத்தின் சார்பாக இப்படி சட்டவிரோதமாக பதிவுசெய்யப்பட்ட கேபிள்களால் பயன்பெற்ற அதன் பங்குதாரர்களையும் கைது செய்திருக்க வேண்டுமா இல்லையா ?
அப்படி எதுவுமே நடக்கவில்லை. என்ன நடந்தது தெரியுமா ? 29 மார்ச் 2012 அன்று, எந்த கண்காணிப்பு பொறியாளர் கல் கேபிள்ஸ் மீது புகார் அளித்தாரோ, அதே கண்காணிப்பு பொறியாளர் கல் கேபிள்ஸ் நிறுவனத்துக்கு ஒரு கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அந்த கடிதத்தில் சட்டவிரோதமாக பதிக்கப்பட்ட கேபிள்களை வரண்முறை செய்ய வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டது. இதற்கான கட்டணமாக ரூபாய் 25 லட்சத்து 37 ஆயிரத்து, 653 ரூபாய் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கூறுகிறார். அதன்படி, கல் கேபிள்ஸ் நிறுவனம் இதற்குரிய கட்டணத்தை செலுத்தி விடுகிறது.
இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கு என்ன ஆனதென்றே தெரியவில்லை.
சரி. எல்காட் நிறுவனத்தின் அந்த இணைப்பு ப்ராஜெக்டுக்கு இலவசமாக 2 எம்பிபிஎஸ் வழங்கவும் இல்லையே… அதற்கு என்ன நடவடிக்கை என்பதும் தெரியவில்லை.
கேடி சகோதரர்களே கேவலமானவர்கள். இந்த கேவலமானவர்களிடம் பொறுக்கித் தின்னும் சைதை துரைசாமி அதை விட கேவலமான நபரா இல்லையா ?
இது குறித்து சவுக்கிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர், “இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. 96ல் ஜெயலலிதாவை கருணாநிதி கைது செய்த பிறகு, 2001ல் ஜெயலலிதா கருணாநிதியை கைது செய்த பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் நேரடியாக தொடுவதில்லை என்று முடிவெடுத்தது போலத்தான் இருக்கிறது.
சசிகலாவின் சம்மதமும் அனுமதியும் இல்லாமல், சைதை துரைசாமி இப்படியொரு முடிவை எடுத்திருக்க வாய்ப்பே இல்லை. அதிமுகவில் சசிகலாவின் நம்பிக்கையை பெற்றவர்கள் மட்டுமே இருக்க முடியும். ஜெயலலிதாவின் நம்பிக்கையை மட்டும் பெற்றவர்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் வெளியேற்றப்பட்டே இருந்திருக்கிறார்கள். பல்வேறு புகார்களுக்கு ஆளாகி, சென்னை மாநகராட்சியையே ஏலம் போட்டு விற்றுக் கொண்டிருக்கும் சைதை துரைசாமி சசிகலாவின் ஆதரவு இல்லாமல், கேடி சகோதரர்களோடு இப்படி ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை. ஜெயலலிதாவைப் போல சசிகலாவுக்கு பிடிவாதெமெல்லாம் கிடையாது. யாரோடு வேண்டுமானாலும் கை கோர்ப்பார்.
கடந்த திமுக ஆட்சியில் ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒரு முறை சிறுதாவூர் பங்களாவுக்கு சென்றபோது, ட்ரான்ஸ்பார்மர் வெடித்து, மின்வெட்டு ஏற்பட்டது. எரிச்சலான ஜெயலலிதா, வா சசி போலாம் என்றார். உடனே சசி. சற்று பொறுங்கக்கா என்று கூறி விட்டு, ஆற்காடு வீராச்சாமிக்கு தொலைபேசியில் பேசினார். ஒரு வாரம் எடுக்க வேண்டிய வேலை, அரை மணி நேரத்தில் செய்யப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த சம்பவம், சசிகலா தன்னுடைய நலனுக்காக யாருடன் வேண்டுமானாலும் கை கோர்ப்பார் என்பதையே காட்டுகிறது.
கேடி சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமானால், தமிழக அரசு எப்போதோ நடவடிக்கை எடுத்திருக்க முடியும். அரசு கேபிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த இழைகளை அறுத்து எரிந்ததற்காக நூற்றுக்கும் மேற்பட்ட எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டன. அந்த எப்ஐஆர்களில் நடவடிக்கை எடுத்திருந்தாலே, கேடி சகோதரர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பபார்கள். ஆனால், அதிமுக அரசு எதுவுமே செய்யவில்லை.
இவர்கள் கூட்டுக் களவாணிகள். இந்த செய்தி எனக்கு பெரிய வியப்பை ஏற்படுத்தவில்லை” என்று கூறி முடித்தார்.
கேடி சகோதரர்களின் வண்டி இத்தனை நாள் வரை எப்படி நிம்மதியாக ஓடுகிறது என்று இப்போது புரிகிறதா ? எதிர் எதிர் முகாம்களில் இருப்பது போல வெளியில் நடித்துக் கொண்டு, எப்படி கூட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள் பார்த்தீர்களா ?
சன் டிவி தொடங்கிய பிறகு, ஐபிஎல் அணி வாங்குவது வரை, ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நிறுவனம் சொந்தமாக நடத்துவது வரை, கேடி சகோதரர்களிடம் பணம் கோடிகளில் கொட்டியது. கலாநிதி மாறனுக்கும் அவர் மனைவி காவேரி கலாநிதிக்கும் சட்டபூர்வமாக கிடைக்கும் ஆண்டு ஊதியம் தலா 59.89 கோடிகள். இந்தியாவிலேயே அதிகமாக ஊதியம் பெறும் நபர்கள் இவர்கள்தான். இணைப்பு
இதைத் தவிர்த்து இவர்களிடம் உள்ள கருப்புப் பணம் அளவிட முடியாதது. உலகின் பல நாடுகளில் இவர்களுக்கு சொத்துக்கள் உள்ளன. ஆனாலும், சன் டிவி கட்டிடத்துக்கு முத்திரைத் தாள் கட்டணம் ஏமாற்றுவது, தொலைபேசி இணைப்பை திருடுவது, மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்தாமல் திருட்டுத்தனமாக ஒளி இழை பதிப்பிப்பது என்று எத்தனை கேவலமான நடத்தை பார்த்தீர்களா ? சாலையில் நாம் பணத்தை நடக்கையில் தவற விட்டால் உடனடியாக நம்மை அழைத்து எடுத்துத் தரும் ஏழைகளை பார்திருக்கிறோம்.
சாலையில் காய்கறி கீரை விற்பனை செய்யும் நபரிடம் கூடுதலாக பணம் கொடுத்து விட்டோமென்றால், திருப்பித் தரும் மனிதர்களை சந்தித்திருக்கிறோம். அன்றாட வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் மனிதர்களிடம் இருக்கும் நேர்மை துளியும் இல்லாத இந்த பிச்சைக்கார மாறன்கள், கேவலமானவர்களா இல்லையா ?
நீங்களே கூறுங்கள்.
அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்
ஔவையார்
Air pollution,water pollution like these brothers are business pollutants so those peoples are removed or cleaned by the people.Right minded peoples are not participated or associated or supported their business
congrats Mr.sankar sir
Reply
இந்த கேடி கம்னாட்டிகள் விரைவில் சிறை செல்ல வேண்டும் என்பதே என் விருப்பமும். வழக்கம் போல உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துகள் சங்கர் சார் !
Reply
//புளுகுகிறான் “புளுகித்தள்ளுகிறான்”///
புளுகு என்பது வேறு பொய் என்பது வேறு புளுகு என்பது ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் ஆபத்தில்லாத ஒரு நல்லவிடயத்தை சோடித்து சிலாகித்து சொல்லுவதாகும் அதை புளுகு என்று பேச்சுவழக்கில் குறிப்பிடுவதுண்டு. இங்கே சின்ன கேடி சொல்லுவது அனைத்தும் வடிகட்டிய பொய். கிருமினல்த்தனமாக ஒரு நாட்டுக்கு விரோதமான பொய் என்று குறிப்பிடவேண்டும்.
சுட்டாலும் திருடன் வாய் அறமொழுகா- புறம்போக்கில்
நடு இரவில் பாய் விரித்து நட்ட மரமாகி
கிரந்தம் பாடி கெட்ட குழியில் துழியாகி
கேடிகளாய் உருவெருத்து சுற்றும் களவெடுத்து
கோடிகண்டு கட்டுமரத்தில் கடைக்கண்ணில்
கடை விரித்து மெத்தப்பொய் சொல்லி
மேடைகளில் மலங் கழித்து
நக்கி மலம் தின்னும் நாய்கள்போல் வாழ்ந்தாலும்
மக்கி எருவாவான் மண்ணுள் ஒருபொழுது- அப்பொழுதும்
குற்றப் பரம்பரையில் கொடியவனாய்
மண் சிரிக்கும்.
இந்த படுபாவிகளை என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து, மேலும் சிலது செய்து கொன்றொழிக்க வேண்டும்.
Yes, Mr. Kamalkanth… as you said, SAVUKKU says what is true.
Kindly tell me how to express my inputs here in TAMIL.
What’s expressed in SAVUKKU is simply captivating. SAVUKKU reveals the truth. SAVUKKU is unbiased. I have never seen a single report favouring some one in SAVUKKU. It brings out what is happening and how people of India are taken for granted. I can see the thirst and agony in every coverage of SAVUKKU to protect the rights of the people and let the people know how they are deceived by the so called Power Holders. HATSOFF, SAVUKKU! I salute with pride, as a citizen of India.
FULL CREDIT GOES TO AUDITOR GURUMURTHY ON THIS CASE. SAVUKKY AS ALWAYS ANTI BHRAMIN HE DOES NOT WANT TO GIVE ANY CREDIT AND MORE OVER NONE OF BHRAMINS AWAIT DESPARATELY FOR SAVUKKU CREDITS..
Savukku has exposed Karunanidhi, jayalalitha and host of criminals in Tamilnadu governments in past and present.
Gurumoorthy has exposed only KD Brothers. Ithukke intha scene podra.
In many ways, Brahmins and Dravidian Politicians are two sides of same coin. Both of them are selfish, capitalist and use Idealogy(Dravida idealogy for Dravidian Politicians and Hindu/Indian Patriotism for Brahmins) to instigate People to work for them.
No Atheism, No Brhaminism, No Capitalism, No comunism, No Socialism. We want only Humanism based on JUSTICE.
why elaborate with too much contents. simple say NGO Money. did savukku sankar has written anything related to NGO Money power? if not WHY?? WHY?? WHY??
Who is Brahmin? Uneducateds calling themselves Brahmins and educated are classified as non Brahmins. Just because you are Ayer by caste you can’t be Brahmin.
If you say Brahmins don’t expect credits then why you even write about it. It is oxymoron.
Brahmins even attempted to take credit for thiruvalluvar. Whole india know who Brahmins are.
Shankar is a Brahmin because he is educated. I have 25 year education. I’m a Brahmin too. Who are you Ayer?
இந்த கேடி கம்னாட்டிகள் விரைவில் சிறை செல்ல வேண்டும் என்பதே என் விருப்பமும். வழக்கம் போல உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துகள் சங்கர் சார் !
mudiyale, kd brothers ivlo fraud ah so sad… super shankar sir.