“தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலம் ஆக்குவேன். தமிழகத்தை மின் மிகை மாநிலம் ஆக்குவேன்” இவையெல்லாம் ஜெயலலிதா ஒவ்வொரு தேர்தலிலும் விடுக்கும் சூளுரைகள். ஜெயலலிதா ஆதரவு சக்திகள், இந்த சூளுரைகளை அப்படியே எடுத்துக் கொண்டு, அம்மாவைப் போல இந்தியாவை முன்னேற்ற ஒருவருமே இல்லை என்று பரப்புரை செய்வார்கள்.
இது உண்மையா என்பதைப் பார்ப்பதே இந்த தொடர் கட்டுரைகளின் நோக்கம்.
ஒரு காலத்தில், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் தமிழகத்தைப் பார்த்து பொறாமை படும். சர்வ சாதாரணமாக தமிழகத்தில் முதலீடுகள் வந்து குவியும். தமிழகத்தின் பூகோள அமைப்பு, தமிழகத்தின் நிர்வாக அமைப்பு, தமிழக அரசின் கொள்கைகள், அருமையான அதிகாரிகள், ஆகியவை தமிழகத்தில் முதலீடுகள் வந்து குவிய ஏதுவான சூழலை ஏற்படுத்தியது. தொண்ணூறுகளின் மத்தி வரை, தமிழகம் பல்வேறு விவகாரங்களில் ஏராளமான தொழில் முதலீடுகளுக்கு ஏதுவான களமாக இருந்து வந்தது. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தாராளமயமாக்கல் கொள்கைகள் செயல்படுத்தப்பட்ட பிறகு, தமிழகத்துக்கு முதலீடுகள் ஏராளமாக வந்தன. ஆனால் இதெல்லாம் கடந்த காலம்.
2011ல் தமிழகத்துக்கு அதிமுக ஆட்சிக்கு வந்தது முதலாக, ஒரே ஒரு முதலீட்டைக் கூட பெற முடியாத அவல சூழலுக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. முதன்மை மாநிலம் முதன்மை மாநிலம் என்று இவர்கள் குரல் கொடுப்பதெல்லாம், முந்தைய திமுக ஆட்சியில் வந்த முதலீடுகளை வைத்தே.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, மகிந்திரா குழுமத்தைச் சேர்ந்த ஆனந்த் மகிந்திரா சென்னை வந்து ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால் வழக்கம் போல, அம்மணி சாவகாசமாக கிளம்பி வந்தார். 12 மணிக்கு மகிந்திராவை தலைமைச் செயலகத்தில் சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்த ஜெயலலிதா, 12 மணி வரை போயஸ் தோட்டத்திலேயே இருந்தார். அதன் பிறகு, மகிந்திராவை சந்தித்த ஜெயலலிதா, பத்தே நிமிடங்களில் அந்த சந்திப்பை முடித்துவிட்டு அவரை அனுப்பி வைத்து விட்டார்.
மகிந்திராவை காக்க வைத்ததும், அவரை பத்து நிமிடத்தில் அவமதித்து அனுப்பியதற்குமான காரணம் என்ன தெரியுமா ? ஆனந்த் மகிந்திரா ஜெயலலிதாவை சந்திப்பதற்கு முன்னதாகேவே அவர் பிரதிநிதி அவரை தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சந்தித்தார். அந்தப் பிரதிநிதியிடம் வேலுமணி, கட்சி நிதியாக 10 சதவிகிதத்தைத் தந்தால் மட்டுமே தமிழகத்தில் முதலீடு செய்ய முடியும். இல்லையென்றால் எந்தத் திட்டமும் நிறைவேறாது என்று கூறியிருந்தார். ஆனால் ஆனந்த் மகிந்திராவுக்கு இந்த அமைச்சர் பொய் சொல்கிறார் என்று ஒரு எண்ணம். நாம் எதற்கு இந்த அமைச்சரை நம்ப வேண்டும், நேரடியாக ஜெயலலிதாவிடமே பேசி விடலாம் என்று முடிவெடுக்கிறார். அப்படி நடந்ததுதான் அந்த சந்திப்பு. சந்திப்புக்கு பின், நொந்து போன மகிந்திரா, தமிழகத்தில் முதலீடு என்ற ஆணியே தேவையில்லை என்று முடிவெடுத்து, குஜராத் முதல்வர் மோடியை சந்தித்து நடந்ததைக் கூறுகிறார். எந்த கூட்டத்தால் ஜெயலலிதா இப்படி நடந்து கொள்கிறாரோ, அந்தக் கூட்டமே, ஜெயலலிதாவின் வீழ்ச்சிக்கு காரணமாக அமையும் என்று அவரிடம் மோடி கூறியதோடு, குஜராத்தில் எங்கு வேண்மானாலும் முதலீடு செய்ய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாக கூறியுள்ளார். இதுதான் தமிழகத்தை ஜெயலலிதா இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்க முயற்சி எடுத்து வரும் லட்சணம்.
தமிழக தொழில்துறை “கட்சி நிதி” என்ற பெயரால் நடந்து வரும் வசூலை நினைத்து வேதனையில் இருக்கிறது. தற்போது கட்சி நிதி பெயர் மாற்றத்துக்குள்ளாகியிருக்கிறது. தற்போது வசூல் “வழக்கு நிதி” என்ற பெயரால் நடைபெறுவதாக கூறுகின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள். தமிழக தொழில் அதிபர்கள், தமிழகத்தில் ஏற்கனவே செய்துள்ள முதலீடு மற்றும், செய்ய உள்ள முதலீட்டை நினைத்து கடும் அச்சத்தில் உள்ளனர் என்றால் அது மிகையாகாது.
தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மே மாதம் நடைபெறுவதையொட்டி, இந்து நாளேடு டிசம்பர் 29 அன்று ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டிருந்தது. தமிழகத்தால் மீண்டு எழ முடியுமா என்ற தலைப்பிட்ட அந்த கட்டுரையில் 2011ல் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் நடந்த முதலீடுகள் குறித்து புள்ளி விபரங்களோடு குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புள்ளி விபரங்கள், தமிழகத்தில் முதலீடுகள் 2011 முதல் தொடர்ந்து சரிவில் உள்ளதை படம் போட்டுக் காட்டியிருந்தது.
2011ல் 73 ஆயிரத்து 348 கோடியாக இருந்த முதலீடு, 2012ம் ஆண்டில் 21 ஆயிரத்து 253 கோடியாகவும், 2013ல் 27 ஆயிரத்து 380 கோடியாகவும், 2014ல் வெறும் 14 ஆயிரத்து 349 கோடியாகவும் குறைந்துள்ளது. 2014ல் அதிகமாக குறைந்ததற்கு காரணம், 2014 ஜுலை முதலாகவே, வசூல் சதவிகிதம் இரண்டு மடங்கானதே. 2011ல் வந்த 73 ஆயிரத்து 348 கோடி கூட, முந்தைய திமுக அரசு தருவித்திருந்த முதலீடுகளே. ஒரே வருடத்தில் 50 ஆயிரம் கோடிகள் முதலீடு குறைந்துள்ளதே, மக்கள் முதல்வரின் அசாத்திய திறமையை படம் பிடித்துக் காட்டுகிறது.
ஏன் இப்படி திடீரென்று முதலீடு குறைந்தது. தமிழகத்தின் பூகோள நிலைமைகள் மாறி விட்டதா…. ?
உட்கட்டமைப்பு மற்றும் ஊழல் ஆகிய இரண்டும் சேர்ந்து தமிழகத்தை பிடித்து ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் இரண்டு பூதங்களாக மாறியுள்ளன. இந்த இரண்டு காரணங்களால், தமிழகத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயங்குகிறார்கள்.
2012ம் ஆண்டு தமிழக அரசு 12 நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் மொத்த மதிப்பீடு 20,925 கோடிகள். 2012ல் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டாலும், இந்த நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை ஏற்கனவே செய்து முடித்திருந்தன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தமிழக அரசின் தொழிற் கொள்கையின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகளை அனுபவிப்பதற்காகவே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.
பிறகு, எதற்காக இந்த தாமதம் ? இந்த தாமதத்துக்கு ஒரே காரணம், தொழில்துறை அமைச்சர் கைதி எண் 7402வுக்கும், தனக்கும், கட்சிக்குமான கமிஷன் குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். மகிந்திரா குழுமத்தின் உரிமையாளர் ஆனந்த் மகிந்திராவே விட்டு வைக்கப்படவில்லையென்றால் மற்றவர்கள் எம்மாத்திரம் ?
மகிந்திரா போலவே மற்றொரு உதாரணம், ஃபோர்டு மோட்டார் நிறுவனம். அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகளும், ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தாரும், அவர்களுக்கு வர வேண்டிய மதிப்புக் கூட்டு வரியின் பங்கை பெறுவதற்காக, தமிழக அரசின் முக்கிய அதிகாரிகளை, குறிப்பாக தலைமைச் செயலர், நிதித்துறை செயலர் மற்றும் தொழில் துறை செயலரை தொடர்ந்து சந்தித்து வந்தனர். அந்த பங்கை திருப்பித் தருவதற்கு அதில் ஐந்து சதவிகிதத்தை தந்தே ஆக வேண்டும் இல்லையென்றால் உங்களுக்கு வர வேண்டிய தொகை வராது என்று தெளிவாக கூறி விட்டனர். பல முறை, அதிகாரிகளை சந்தித்து, அலைந்து நொந்து போன ஃபோர்டு நிர்வாகம், இனி தமிழகத்தில் முதலீடு செய்வதில்லை என்று முடிவு செய்து, அதன் விரிவாக்கத்தை குஜராத் மாநிலத்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளது.
இதே போல மதிப்புக் கூட்டு வரியை மீளப்பெற முயற்சி செய்து, மனமுடைந்த மற்றொரு நிறுவனம் ஹ்யுண்டாய் கார் நிறுவனம். இந்த நிறுவனமும், தனது விரிவாக்கத்துக்கு குஜராத் அல்லது ராஜஸ்தான் என்று முடிவெடுத்துள்ளது. புதிதாக தமிழகம் வந்த ஃபோர்டு, ஹ்யுண்டாய் நிறுவனங்களுக்குத்தான் இந்த கதியென்றால், தமிழகத்திலிருந்து உருவான டிவிஎஸ், முருகப்பா போன்ற நிறுவனங்களும் நிம்மதியாக இல்லை. அதிமுக அரசின் வசூல் வேட்டைக்கு, இவர்களும் தப்பவில்லை. ஆனாலும், தமிழகத்தின் பூர்வாங்க தொழில் நிறுவனங்கள் என்பதால் இவர்கள் தமிழகத்தை விட்டு வேறு எங்கும் செல்ல முடியாத நெருக்கடியில் பல்லைக் கடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தொழில் நிறுவனங்களிடம் சதவிகித அடிப்படையில் கமிஷன் பார்ப்பதை தவிர்த்து, மற்றொரு வகையில் வசூல் வேட்டை நடந்து கெண்டிருக்கிறது. பெரிய நிறுவனங்களிடம் கமிஷன். சிறு நிறுவனங்கள், ஜெயா டிவியில் விளம்பரம் தரும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றன. ஜெயா டிவியில் விளம்பரம் செய்வதால் எந்த விதத்திலும் வியாபாரம் முன்னேற்றம் அடையாது என்பதை இந்த தொழில் நிறுவனங்கள் அறிந்திருந்தாலும், மிரட்டப்பட்டும் கட்டாயப்படுத்தப்பட்டும் விளம்பரங்கள் செய்ய வைத்தனர். சன் டிவியை விட மிக அதிக விலைக்கு விளம்பரங்கள் விற்கப்படுகின்றன. ஜெயா டிவியின் 2007-2008 ஆண்டு வருமானம் 36.19 கோடி. 2008-2009 ஆண்டு வருமானம் 46.15 கோடி, 2009-2010 ஆண்டு வருமானம் 45.07 கோடி. 2010-2011 ஆண்டு வருமானம் 50.38 கோடி. 2011.2012 90.97 கோடி. 2012-2013ம் ஆண்டு வருமானம் 114.83 கோடி என்று கம்பெனி பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அப்படி என்ன ஜெயா டிவி உலகத்தில் இல்லாத சிறப்பான நிகழ்ச்சிகளை அளித்து விட்டது ? எதற்காக இந்த திடீர் வளர்ச்சி ? அதிமுக ஆட்சிக்கு வந்ததை விட வேறு என்ன காரணம் இருக்க முடியும் ? ஆனால், ஜெயலலிதாவைக் கேட்டால், எனக்கும் ஜெயா டிவிக்கும் சம்பந்தமே இல்லை என்று பச்சைப் பொய்யை சொல்லுவார். இப்படி சிறு நிறுவனங்களை கட்டாயப்படுத்தவது, அமைச்சர்கள் மட்டுமில்லை. அரசு அதிகாரிகளும், ஜெயா டிவியின் விளம்பர விற்பனையாளர்களாகவே செயல்படுகின்றனர்.
தொழில் நிறுவனங்களை மிரட்டுவதில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளோடு, ஜெயலலிதா பயன்படுத்தும் மற்றொரு துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை பயன்படுத்தி, சிறு தொழில்களை முடக்குவதாக மிரட்டி, அதன் மூலம தனியாக வசூலில் ஈடுபட்டு வருகிறது தமிழக அரசு. சமீபத்தில் தமிழக அரசு கார்த்திகேயன் என்பவரை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் இருக்கையிலேயே, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினராக நியமித்ததை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியம் தனது தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“இதன் மூலம் தெளிவாவது என்னவென்றால் கார்த்திகேயனை நியமிக்கும் அலுவலக குறிப்பு அவர் மீதான துறை நடவடிக்கையை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணையை மறைத்தோ அல்லது கண்டுகொள்ளாமலோ தயார் செய்யப்பட்டுள்ளது. சாதாரண பதவி உயர்வுகளில் கூட, துறை நடவடிக்கைகள் நிலுவையில் இருந்தால் அதைக் காரணம் காட்டி, பதவி உயர்வு மறுக்கப்படுகிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் பதவி போன்ற முக்கியமான பதவிக்கான நியமனத்தின்போது, நிலுவையில் உள்ள துறை நடவவடிக்கையை அரசு கவனத்தில் கொள்ளாதது வியப்பை அளிக்கிறது. இது வேண்டுமென்றே செய்ததா, அல்லது தவறுதலாக நடந்ததா என்பதை கணிக்க முடியவில்லை.
இந்த விவகாரம் நீதிமன்றத்தின் வந்த பிறகு, அரசின் எதிர்வினையும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது. இந்த நியமனத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக கார்த்திகேயன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அரசு கைவிட்டது. என் முன்பாக சமர்ப்பிக்கப்ப்டட ரகசிய கோப்பை ஆய்வு செய்ததில் 1 ஆகஸ்ட் 2014 அன்று லஞ்ச ஒழிப்புத் துறை அனுப்பிய இறுதி அறிக்கை விழிப்புப் பணி ஆணையருக்கு அனுப்பப்பட்டது. பின்னர் அது அரசுக்கு அனுப்பப்பட்ள்ளது. 1 அக்டோபர் 2014 நாளிட்ட கடிதத்தில் அரசு, எடுத்துள்ள நிலைபாடு என்னவென்றால், ஏற்கனவே கார்த்திகேயன் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டு விட்டதால், அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இறுதி அறிக்கை பிறப்பிக்கும் அதிகாரம் அரசிடமே உள்ளது, மேலும், கார்த்திகேயன் மீதான துறை நடவடிக்கை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை ஆகிய இரண்டுமே ஒரே விவகாரங்களின் அடிப்படையிலானது என்பதாலும், இறுதி விசாணையை அரசே எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மீதான லஞ்ச ஒழிப்புத் துறையின் கருத்து கேட்கப்பட்டது. 26 நவம்பர் 2014 நாளிட்ட கடிதத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை, துறை அதிகாரியின் விசாரணை அறிக்கையின்படி மேல் நடவடிக்கை எடுக்கலாம் என்று பரிந்துரை செய்தது. இதன் பிறகு, அரசு அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிட உத்தரவு பிறப்பித்தது. இவை அனைத்தும் எப்போது நடக்கிறது என்றால், கார்த்திகேயன் நியமனம் குறித்து பொதுநல வழக்கு தொடரப்பட்ட பிறகு, அதில் நோட்டீஸ் உத்தரவிடப்பட்ட பிறகு நடக்கிறது. நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும், மனுதாரர் என்ன நடக்கும் என்று அஞ்சினாரோ, அப்படியேதான் நடந்துள்ளன. இரண்டு விசாரணைகளை மறைத்து, நடந்த இந்த நியமனத்தை காப்பாற்றுவதற்காக, அரசு, அத்தனையையும் மூடி மறைத்துள்ளது.
இந்த நியமனம் நடைபெற்றதற்கு இரண்டே இரண்டு சாத்தியக்கூறுகள்தான் இருக்க முடியும். ஒன்று, மனுதாரர் தனது 5 ஜுலை 2014 நாளிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி, அரசு ஏற்கனவே கார்த்திகேயனை நியமிப்பது என்று முடிவு செய்து விட்டு, அதன் காரணமாக நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகளை புறந்தள்ளியுள்ளது. இரண்டாவது சாத்தியக்கூறு அந்தக் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பது தெரியாமல் நியமனம் செய்து விட்டு, பின்னர் தெரிந்ததும், அதை மூடி மறைத்து நியமனத்தை நியாயப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். எப்படி இருந்தாலும் இது சரி அல்ல.”
இதுதான் நீதியரசர் ராமசுப்ரமணியத்தின் தீர்ப்பு. எதற்காக இப்படியொரு ஊழல் பேர்வழியை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினராக நியமிக்க வேண்டும் ?
இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பத்திரிக்கையாளர் அன்பழகன் இது குறித்து கூறுகையில், “மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை பணம் அறுவடை செய்யும் இயந்திரமாகவே பார்த்தது தமிழக அரசு. ஒரு தொழிற்சாலை மாசுபடுத்துகிறதோ இல்லையோ. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்கு சென்று, கேட்கும் தொகையை கொடுக்காவிட்டால், அந்த தொழிற்சாலை சீல் வைக்கப்படும். சீல் வைத்த பிறகு, தொழிற்சாலை பல மாதங்கள் மூடிக்கிடக்கும் அபாயத்தை உணர்ந்து, அனைத்து தொழில் நிறுவனங்களும் மண்டியிடுகின்றன. அவர்களுக்கு வேறு வழியே இல்லை. மாசுக்கட்டுப்பாட்டு நிறுவனத்தை பகைத்துக் கொண்டால், தொழிலே நடத்த முடியாது என்பது, தொழில் நடத்தும் அனைவருக்கும் நன்கு தெரியும்.
கார்த்திகேயனை அரசு நியமிக்கப் போகிறது என்பதை அறிந்து, 5 ஜுலை 2014 அன்று நான் அரசுக்கு ஒரு புகார் கடிதத்தை அனுப்பினேன். ஆனால் அந்த கடிதத்தை உதாசீனப்படுத்தி விட்டு, அரசு கார்திகேயன் நியமனத்தில் மும்முரமாக இருப்பதை அறிந்து, 24 ஜுலை 2014 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தேன். ரிட் மனு தாக்கல் செய்ததற்கு அடுத்த நாளே, அவசர அவசரமாக 25 ஜுலை 2014 அன்று, கார்த்திகேயனுக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கையிலேயே, கார்த்திகேயன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதிமுக அரசின் அதிகார மையத்தின் ஆதரவு இல்லாமல் ஒருவருக்கு இப்படியொரு சலுகைகளை இந்த அரசு நிச்சயமாக வழங்க வாய்ப்பே இல்லை. இப்படி குற்றச்சாட்டுகள் உள்ள ஒருவரை சட்டவிரோதமாக நியமனம் செய்வதற்கு, வசூல் செய்வதைத் தவிர வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்” என்றார்.
தொழில் துறை, வணிக வரித்துறை, சுற்றுச் சூழல் துறை, வருவாய்த்துறை என்று அனைத்துத் துறைகளையும் பயன்படுத்தி, தொழில் முனைவோரை நெருக்குவதுதான், தமிழகத்தை முதன்மை மாநிலம் ஆக்கும் லட்சணமா…. ?
இந்த சீரழிவு இத்தோடு முடிவடையவில்லை. அடுத்த பகுதியில் மேலும் பார்ப்போம்.
தொடரும்
தமிழ்நாட்டில் 4,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் மஹிந்திரா!!
Read more at: http://tamil.goodreturns.in/news/2015/02/16/mahindra-invest-rs-4-000-crore-on-new-plant-tamil-nadu-003712.html
dear savukku ,…based on your report I commented “industries minister and others in the govt demanding 10% ” for starting industries in tn …for a news in a news paper which reported the industrialist meeting convened by the cm is failed ..but the same mahendra group ,which u refered above announced today that they r going to start a factory at cheyyar for rs.4000 cr /which news is correct I didn’t expect sucfrom u .h report
மோடி போல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி இல்லாமல்…. செய்த அம்மா அவர்கள் வாழ்க… என்ன சவுக்கு சார்… மோடி ஒரு கார்ப்பரேட் கைகூலின்னு சொல்லுறிங்க… தமிழ்நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுடைய சுரண்டல் இருக்காதுல்ல… சந்தோஷ படுவோம்…
Dai Mutta payale Sathya,
Unakku soru sapida paisa veendama, padicha and padikira pasangalukku veelai veendama, Nee pee ya than thimba veelai illatti. Kattupayale, mutta payale
There is no any good leader in DMK & ADMK.One among Thamizharuvi Manian,Thamizhisai saundararajan,Anbumani Ramadas(if come out of Vanniyar lable) can bring some changes.
தருதலை பயலுக. அவன்தான் குடும்பத்துக்காக திருடுரான்னா இவ எதுக்காக திருடுரானே தெரியலயே. யாருக்குதான் நல்லத செஞ்சாங்க இவுங்க. இவங்களுக்கு நல்லத பன்றதுக்கு. திருட்டுத்தேவ்
Rightly said.It is for the LARGER FAMILY OF FRIEND.
Savukku thalam will put the ADMK govt counting days ?
the biggest difference between DMK & ADMK is, if DMK is in power we will have visible development & corruption while when ADMK is in power we will only have visible corruption. The biggest let down of DMK is Karunanidhi’s family arrogance which always makes the people vote against him…. This is the irony of TN…
You are 100% correct. Corruption can’t be cleared fully as our political rules like that. In DMK’s rule we can expect some developments though corrupted. But, in Jayalalitha’s rule we can’t expect any development in Tamilnadu except corruption. She must be thrown away in this upcoming 2016 elections.
We have to prove all the above with out any fail who is the best administrator of tamilnadu. Any body can say anything if we have to save ourselves then we should have to fight for justice. By comments and jokes we cannot save the people . This kind of actions happens because ignorance of the people we most of the people require everything as free literate people will not vote,illiterate people vote for cash, nobody is perfect so we should have clear our side and we should have to nail down the fraud politician and bribery of the government employees this will be the only option.
You well said. This is the fact! People should start to think now itself for voting in 2016 polls and must throw away the corrupted politicians.
aayyyy. jolly .. jolly. if no industry then we will have 24×7 power/water. no issues.
we can drink whisky , beer in a/c bar, speak secularism, DK, DMK AIADMK vai ko etc then sleep in the a/c room.
Last govt threaten to TATA (savukku proved) and this govt Mahinthra. Next What????
Shankar Ji,
At least now you accept that DMK govt is far far better administrated and did a reasonable good governance..
Vijayji,
DMK looted at the national level.
Yes. Common people will agree that..