தமிழகத்தில் மிக மிக மோசமான சூழலில் இருக்கும் மற்றொரு துறை, கட்டுமானத் துறை. தமிழகத்தில் இந்த கட்டுமானத் தொழில் ஏறக்குறைய தேக்க நிலையை அடைந்துள்ளது.
உலகெங்கும் அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் என்னவென்றால், பொருளாதரத்தை நகர்த்தும் ஒரு முக்கிய தொழிலாக கட்டுமானத் தொழில் இருந்து வருகிறது என்பதையே. கட்டுமானத் தொழிலில் சிமென்ட் மற்றும் இரும்பு ஏராளமாக பயன்படுத்தப்படுவதால், கட்டுமானத் தொழில் வளர்ந்தால் உற்பத்தித் தொழிலும் வளரும். மேலும் கட்டுமானத் தொழிலால் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதாலும் இத்தொழில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட முக்கியமான தொழிலை வளர்ப்பதற்கு ஜெயலலிதா என்ன செய்தார் ? இத்தொழிலை வளர்ப்பதற்கு ஜெயலலிதா மற்ற எந்த அரசுகளும் செய்யாத ஒரு முக்கிய காரியத்தை செய்தார். காரியம்தான். கிட்டத்தட்ட இறந்தபின் செய்யும் “காரியத்தை” செய்து, இத்தொழிலை முடித்து வைத்தார் ஜெயலலிதா என்றால் மிகையாகாது. திமுக ஆட்சிக்காலத்தில் அரசின் ஒப்புதல் பெற ஒரு சதுர அடிக்கு 10 ரூபாய் இருந்த கமிஷன் அளவை, ஒரு சதுர அடிக்கு 75 ரூபாய் என்று உயர்த்தினார் ஜெயலலிதா. அரண்டு போன கட்டுமான தொழிலதிபர்கள், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து, இந்தத் தொகை 50 ரூபாயாக குறைக்கப்பட்டது. இந்தத் தொகை கொடுக்கப்படாவிட்டால், கட்டிடங்களுக்கான ஒப்புதலை மறந்து விட வேண்டியதுதான். கோடிக்கணக்கில் முதலீடு செய்து, கட்டுமானத்தை தொடங்கிய தொழிலதிபர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். அவர்களும், இந்த லஞ்சத் தொகையை தங்கள் கையிலிருந்து தரப்போவதில்லை. இந்தத் தொகை இறுதியாக வீடு வாங்கும் வாடிக்கையாளரின் தலையில்தான் விடியும்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது முதலாக, சென்னை மற்றும் புறநகர்களில் நடந்து வந்த பல்வேறு கட்டுமானப் பணிகள் அப்படியே நின்று போயின. இந்தக் கொள்ளையின் காரணமாக ஆகும் செலவை உடனடியாக வாடிக்கையாளர்களிடம் வசூலிப்பதில் இருந்த சிரமம், கட்டுமானத்தை எப்படி மேற்கொள்வது என்ற மலைப்பு, நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கட்டுமானத் தொழில் உடனடியாக தேக்க நிலையை அடைந்தது.
கட்டுமானத் தொழிலுக்கு மற்றொரு அடிப்படையான விஷயம் மணல். இந்த மணல் தொழில் முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் எடுத்து வரப்பட்டது. இந்த ஆடசி வந்ததும், ஜெயலலிதா தனது பங்கை 75 கோடி முதல் 100 கோடியாக மணல் அள்ளுபவர்களிடம் உயர்த்தினார். திமுக காலத்தில் கோவையைச் சேர்ந்த ஆறுமுகசாமியிடம் இருந்து வந்த இந்த மணல், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, வேலூரைச் சேர்ந்த சேகர் ரெட்டி மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சமீப காலமாக, மன்னார்குடியைச் சேர்ந்த வினு பாலன் என்பவரும் இதில் சேர்ந்துள்ளார். மணல் கடத்தலில் ஈடுபட்டு எதிர்பாராத விதமாக வருவாய் அல்லது காவல்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் சிக்கிய பல்வேறு வாகனங்களை விடுவிக்கக் கோரி, முதல்வர் அலுவலகத்தில் இருந்தே உத்தரவுகள் வந்துள்ளன என்று தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள்.
மாதா மாதம் சராசரியாக 600 கோடிக்கும் குறையாமல் ஜெயலலிதாவுக்கு வசூல் செய்து தரப்படுகிறது என்பது, ஏற்கனவே சவுக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுமானத் தொழிலில் உள்ள ஒரு தொழிலதிபர் இது குறித்து கூறுகையில், “கட்டுமானத் தொழிலில் ஏன் இறங்கினோம் என்று நினைத்து நினைத்து வேதனைப்படும் நிலையில் இருக்கிறோம். ஒவ்வொரு கட்டத்திலும் பணம் தர வேண்டியதாக இருக்கிறது. வரைபடத்துக்கான ஒப்புதல் கிடைக்க, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் ஒவ்வொரு செங்கலுக்கும் பணம் தர வேண்டும். இதைத் தவிர்த்து, உள்ளுர் நிர்வாக அமைப்புகள் தங்கள் பங்குக்கு தனியாக வசூல் செய்கின்றன. செங்கல், மணல் மற்றும் சிமென்டுக்கு படாத பாடு படுகிறோம். இவற்றையெல்லாம் கடந்து, அடுக்கு மாடி குடியிருப்பை கட்டி முடித்தாலும், நிறைவு சான்றிதழ் (completion certificate) தருவதற்கு அலைக்கழிக்கப்படுகிறோம்.
இந்தத் தொல்லைகள் ஒரு புறம் என்றால் கட்டுமானப் பணிகள் நடந்து வருகையில் கவுன்சிலர்கள் தரும் தொல்லை சொல்லி மாளாது. கல் இறக்கினால் பணம், செங்கல் இறக்கினால் பணம், மணல் இறக்கினால் பணம். இவற்றையெல்லாம் தாண்டித்தான், இந்தத் தொழிலை தொடர்ந்து செய்து வருகிறோம்.” என்றார்.
கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தபோது, நிதித்துறை செயலர் சண்முகம், ரியல் எஸ்டேட் துறை சரிவடைந்திருப்பதற்கு, அரசின் முத்திரைத்தாள் கட்டணத்தில் 10 சதவிகிதம் குறைந்துள்ளதே சான்று என்றார்.
சென்னையின் பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனமான, அக்ஷயா நிறுகூனம், தற்போது மிக மிக மோசமான சூழலில் இருக்கிறது. பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்குக் கடற்கரையில் தொடங்கப்பட்ட அதன் பல்வேறு திட்டங்கள் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக முடங்கிய சூழலில் உள்ளன. பல்வேறு சப்ளையர்களுக்கு நிதி வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது அக்ஷயா.
மற்றொரு பெரிய நிறுவனமான, ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் எனப்படும் டிவிஎச் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இதில் பெரும் முதலீட்டை செய்திருந்த கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் அவர்களது பங்கை 2009ம் ஆண்டு வாக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த சிங்கப்பூர் டெமாசாக் என்ற நிறுவனத்துக்கு விற்று விட்டார்கள். இந்நிறுவனத்தை நிதி நெருக்கடியிலிருந்து எச்டிஎப்சி 900 கோடிகளை முதலீடு செய்து காப்பாற்றியது. இந்நிறுவனத்தின் அடையாறு க்வாட்ரண்ட் என்ற திட்டம் நல்ல முறையில் விற்பனை ஆனதால், எச்டிஎப்சி நிறுவனத்தின் முதலீடு காப்பாற்றப்பட்டது.
ரமணீயம் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் ஜெகந்நாதன், சோவின் மூலமாக, மன்னார்குடி மாபியா வெளியேறிய சமயத்தில், ஜெயலலிதாவின் பணத்தை கட்டுமானத் தொழிலில் முதலீடு செய்தார். இப்போது இவரும் ஒரு பெரிய திட்டத்தில் முதலீடு செய்து, மூலதனத்தை எடுக்க முடியாமல் சிக்கலில் உள்ளார்.
மற்றொரு பெரிய நிறுவனமான ஜெயின் பில்டர்ஸ், செனட்டாப் சாலையில் நடக்கும் மற்றொரு திட்டத்தில் பெரும் முதலீடு செய்து சிக்கலில் மாட்டியுள்ளார்கள். விஜிஎன் நிறுவனத்தின் அனைத்து திட்டங்களும் நிதி நெருக்கடியில் ஆழ்ந்துள்ளன.
தொடக்க காலத்தில் அரசியல்வாதிகளின் கருப்புப் பண முதலீட்டோடு தொழிலை தொடங்கிய டிவிஎச், ரமனீயம், சைத்தன்யா, ஜெயின்ஸ், அக்ஷயா போன்ற நிறுவனங்கள், தங்களின் பல்வேறு திட்டங்களில் செய்த முதலீட்டை மீட்டெடுக்க முடியாமல், ஜெயலலிதா அரசின் நெருக்கடிகளால் முடங்கிப்போயுள்ளன. கட்டுமானத் தொழிலின் முடக்கத்தால், வங்கிகளுக்கு நெருக்கடி. இந்த நெருக்கடிகளால், நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு கனவும் பகல் கனவாகியுள்ளது.
தமிழகத்தின் ஜீவ நாடியையே ஆட்டி வைக்கும் அளவுக்கு மிக மிக மோசமாக தமிழகத்தை பீடித்துள்ள மற்றொரு விவகாரம் என்னவென்றால், மின்சாரம்.
மற்ற எந்த ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கும் முன்னதாக, மின்சாரத் துறையை பீடித்து வரும் ஊழலையும், தமிழகத்தின் மிக மிக மோசமான மின் உற்பத்தி நிலைமையையும், மின் துறையில் நிலவும் ஊழலையும் சவுக்கு மட்டுமே முதலில் அம்பலப்படுத்தியது. சவுக்கு பல்வேறு கட்டுரைகளின் மூலமாக அம்பலப்படுத்திய பிறகே, மற்ற ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் இவ்விவகாரம் குறித்து பேசத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையினால், பல்வேறு நிறுவனங்கள், தங்கள் கடையை சாத்தி விட்டு வேறு மாநிலங்களுக்கு சென்று வருகின்றன என்பது நிதர்சனமான உண்மை. தொடர்ச்சியான மின் சக்தியை, சரியான விலையில் வழங்க கையாலாகாத ஒரு அரசால், பல்வேறு நிறுவனங்கள், தொழில் முடக்கத்துக்கு ஆளாகியுள்ளன. ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் மின்வெட்டு நீக்கப்படும். மூன்று வருடங்களில் தமிழகம் மின் மிகை மாநிலமாக ஆகி விடும் என்று படோடபமாக அறிவிப்பு வெளியிட்டார்.
ஆனால் கடந்த 2011ம் ஆண்டு முதல், எண்ணூரில் வெறும் 660 மெகாவாட் மின் திட்டம் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டமும் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட 600 மெகாவாட் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 3200 மெகாவாட்டுக்கான பல்வேறு மின் திட்டங்கள், ஊழல் காரணமாகவும், அதிமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகள் காரணமாகவும், தலைமைச் செயலாளராக இருக்கும் ஞானதேசிகன் என்ற ஊழல் பேர்வழி காரணமாகவும் செயல்படுத்தப்படாமல் பல்வேறு நிலைகளில் தேங்கி நிற்கின்றன.
மின்சார அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் தலைமைச் செயலர் ஞானதேசிகன் இருவரும் சேர்ந்து தனியாரிடமிருந்து வாங்கும் மின்சாரத்தில் ஒரு யூனிட்டுக்கு 22 பைசா வீதம் வாங்கும் லஞ்சப் பணம் நின்று விடுமே என்ற ஆதங்கத்தில் எந்த மின் திட்டத்தையும் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இந்த குளறுபடிகள் ஒரு புறம் என்றால், அவ்வப்போது மின் கட்டணத்தை உயர்த்தி, அதன் மூலம், மக்களையும் வாட்டி வதைக்கிறது இந்த அரசு. அதிமுக அரசு பதவியேற்றது முதல், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 17 சதவிகிதம் மின் கட்டணங்களை உயர்த்தியே வந்துள்ளது. ஆனால் இவ்வாறு கட்டணங்களை உயர்த்திய பிறகும் கூட, மின் வாரியத்தின் மொத்த கடன், இந்த ஆண்டு 72 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. கட்டண உயர்வுக்கு பின்னரும், மின் வாரியம் இத்தகைய கடுமையான கடன் சுமையில் தள்ளாடுவது ஏன் என்பதை தமிழக அரசுதான் விளக்க வேண்டும்.
மத்திய அரசின் நிதி உதவியோடு இயக்கப்படும் மின் உற்பத்தித் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து மின் உற்பத்தித் திட்டங்களும் தொடர்ந்து தாமதத்துக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த ஒரு பதில் மனுவில், தமிழக மின் வாரியம், தமிழகத்தின் மின் உற்பத்தித் திட்டங்களுக்கான தாமதத்துக்கு முக்கியமான காரணம், மத்திய அரசின் பிஎச்ஈஎல் நிறுவனமே என்று குற்றம் சாட்டியிருந்தது. ஆனால், இதே நிறுவனத்திடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டிய 3260 கோடி ரூபாய் அபராதத் தொகையையும், பிஜிஆர் நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய 1969 கோடி ரூபாய் அபராதத் தொகையையும், தமிழக மின் வாரியம் இது வரை ஏன் வசூலிக்க மறுக்கிறது என்பது தலைமைச் செயலாளர் ஞானதேசிகனுக்கே வெளிச்சம். இவ்வாறு அபராதத் தொகையை வசூலிக்கத் தவறியது ஏன் என்று மத்திய கணக்காயர் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியும், தமிழக மின் வாரியம் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 2012ல், ஜெயலலிதா, சூரிய ஒளி மின்சக்தி குறித்த தமிழக அரசின் கொள்கையை அறிவித்தார். இவ்வாறு அறிவிக்கையில், 2015ம் ஆண்டு தமிழகம், 3000 மெகாவாட் மின்சாரத்தை சூரிய ஒளி மூலமாக பெறும் என்றும் அறிவித்தார். அடுத்தபடியாக அவர் வெளியிட்ட விஷன் 2020 என்ற ஆவணத்தில் அடுத்த 11 வருடங்களில் தமிழகம் சூரிய ஒளி மூலமாக 11 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை பெறும் என்றும் அறிவித்தார். ஆனால், பிப்ரவரி 2015 வரை, இந்த திட்டத்தை நோக்கி துளி கூட முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை.
மாறாக, இந்த சூரிய ஒளி மின்சாரம் குறித்து தொடர்ந்து சர்ச்சைகளை எழும்பி வருகின்றன. குஜராத் மாநிலம் கையாண்டது போல, சூரிய ஒளி மின்சார உற்பத்தியாளர்களோடு ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருந்தால் எளிதாக வருடத்துக்கு 1000 மெகாவாட் கிடைத்திருக்கும். ஆனால், தமிழகம், குறைந்த விலைக்கு மின்சாரம் அளிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்ததன் மூலம், இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தத் தவறியது. இதன் காரணமாக சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டத் தவறியதால் இத்திட்டம் தோல்வியைத் தழுவியது.
இந்தியாவின் ஒட்டு மொத்த காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் 40 சதவிகிதத்தை வகிக்கிறது. கட்டாயமாக மின் உற்பத்தி செய்ய வேண்டும் (Must Run status) என்ற அந்தஸ்தை தமிழக அரசு, தமிழக காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்கத் தவறியது. மேலும், காற்றாலை மின் உற்பத்தி அதிகமாக இருக்கக்கூடிய மாதங்களான ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், தமிழக காற்றாலை மின் உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சாரம் வாங்குவதை தவிர்த்து, தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கியதை எதிர்த்து, தமிழக காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இணைப்பு . தமிழகத்தை மிக மோசமான மின் தட்டுப்பாட்டிலிருந்து காப்பாற்றிய காற்றாலை மின் உற்பத்தியாளர்களை புறந்தள்ளி விட்டு, தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குகிறது தமிழக அரசு என்று மின் உற்பத்தியாளர்கள் வெளிப்படையாக குற்றம் சாட்டினர். இறுதியாக ஜுன் 2014ல், கட்டாயமாக உற்பத்தி செய்ய வேண்டும் (Must Run status) என்ற தகுதியை காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு வழங்கியது. ஆனால், 2012, 2013 ஆகிய காலகட்டங்களில், தமிழக காற்றாலை மின் உற்பத்தியாளர்களை புறந்தள்ளியதால், பல மின் உற்பத்தியாளர்கள் அண்டை மாநிலங்களுக்குச் சென்று விட்டனர். அரசின் நிலையில்லாத கொள்கை, எளிதில் அணுக முடியாத நிலை, இவர்களை அண்டை மாநிலத்துக்கு விரட்டியது.
மாநில திட்டக்குழு, தமிழகம், 2012-2017 திட்டக் காலத்தில் 6000 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி செய்யும் என்றும், மத்திய மின்சார ஆணையம் தமிழகம் 4339 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் என்றும் மதிப்பிட்டுள்ளது. ஆனால், 2012-2014 ஆண்டு காலத்தில் தமிழகம் வெறும் 350 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி மட்டுமே செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக மின் திட்டங்களில் தொடர்ந்து செய்யப்படும் தாமதம், தனியார் மின் உற்பத்தியாளர்களை செல்வந்தர்கள் ஆக்கி வருகிறது. தமிழகத்தில் மின் பற்றாக்குறை தொடர்ந்து இருந்து வந்தாலும், இந்த நிலைமை தனியாரிடமிருந்து 11 முதல் 15 ரூபாய் வரை மின்சாரம் வாங்குவதால் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. தனியாரிடமிருந்து பெறப்படும் ஒரு மெகாவாட்டுக்கு சராசரியாக 1 லட்சத்து 92 ஆயிரம் செலவாகிறது. மின் வாரியம் வாங்கும் 3000 மெகாவாட்டுக்கு ஒரு நாளைக்கு 57 கோடியே 60 லட்சம் செலவிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதே நேரத்தில் தமிழக மின் வாரியத்தின் சொந்த மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாக தயாரிக்கப்படும் மின்சாரம் ஒரு யூனிட்டின் விலை என்ன தெரியுமா ? ரூபாய் 3.20. தமிழக மின் வாரியம், ஒரு நாளைக்கு 34 கோடியே 56 லட்சம் கூடுதல் விலை கொடுத்து தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கி வருகிறது. ஒரு மாதத்துக்கு 1036 கோடி ரூபாய் இவ்வாறு கூடுதலாக செலவு செய்தால், மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்காமல் வேறு எப்படி இயங்கும் ?
தனியாரிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 11.20க்கு வாங்குகிறோம் இதனால், இந்த நிதிச்சுமையை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூல் செய்ய வேண்டும் என்ற மின் வாரியத்தின் கோரிக்கையை, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை மீறியும், மின் கட்டணம், இதையே காரணம் காட்டி சமீபத்தில் கூட உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக மின் வாரியம் செயல்படுத்த வேண்டிய ஒவ்வொரு மின் உற்பத்தித் திட்டங்களிலும், தாமதம் மற்றும் குளறுபடிகள். இதன் காரணமாக ஒவ்வொரு மின் உற்பத்தித் திட்டமும், சகிக்க முடியாத தாமதத்தை சந்தித்து வருகின்றன. பிப்ரவரி 2014ல், எண்ணூரில் 1320 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டம் ஐதராபாத்தைச் சேர்ந்த லான்கோ இன்ப்ராடெக் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
இதில் நேர்ந்துள்ள தாமதத்தை மட்டும் பார்ப்போம். தமிழக அரசின் மின்சாரத்துறை இத்திட்டத்துக்கான ஒப்புதல் அளித்தது 30 மார்ச் 2012. தமிழக மின் வாரியம், இதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது 26 அக்டோபர் 2012. டெண்டர் வெளியிடப்பட்ட பிறகு, யாருக்கு இந்த டெண்டரை அளிப்பது என்று மின்வாரியம் எடுத்துக் கொண்ட கால அவகாசம் என்ன தெரியுமா ? 15 மாதங்கள். டெண்டர் என்பது என்ன ? ஒவ்வொரு நிறுவனமும், இத்திட்டத்தை இந்த காலத்துக்குள், இத்தனை விலையில் செயல்படுத்துவோம் என்று தங்களின் வரைவுத் திட்டத்தை அளிக்கும். ஒவ்வொரு நிறுவனமும் அளிக்கும் ஒப்பந்தப் புள்ளியை ஒரு எக்செல் கோப்பில் போட்டால் ஒரு மணி நேரத்தில் முடிவெடுத்து விடலாம். ஆனால் இதை முடிவெடுக்க எதற்கு 15 மாதங்கள். ? இப்படிப்பட்ட தாமதம் காரணமாக, திட்டங்கள் தொடங்குவதற்கே தாமதம் ஏற்பட்டு, அதன் காரணமாக புதிய மின் உற்பத்தி ஏறக்குறைய ஸ்தம்பிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதே போல தாமதத்துக்குள்ளாகியுள்ள மற்றொரு டெண்டர், எண்ணூர் இரண்டாவது 1320 மெகாவாட் திட்டம். 527 நாட்கள் தாமதத்துக்குப் பின், 27 செப்டம்பர் 2014ல், இத்திட்டம் பிஎச்ஈஎல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இத்திட்டம் குறித்த ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோதே, நீதிமன்றத்துக்கு தெரியாமலேயே, இத்திட்டத்தை பிஎச்ஈஎல் நிறுவனத்துக்கு வழங்கினார் ஞானதேசிகன். இதன் காரணமாக, இத்திட்டமும், நீதிமன்ற வழக்கில் முடங்கியுள்ளது. இதே போல, உடன்குடி அனல் மின் நிலையத் திட்டத்தின் டெண்டர்கள் திறக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்தும், எவ்வித முடிவும் எடுக்காமலேயே காரணமில்லாமல் காலந்தாழ்த்தி வருகிறது மின் வாரியம். இதற்கிடையே, இத்தனை தாமதத்துக்குப் பிறகும், உடன்குடி அனல் மின் திட்டத்துக்கு வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய கடும் முயற்சி எடுத்து வருகிறார் ஞானதேசிகன். இந்த உடன்குடி அனல் மின் நிலையத் திட்டத்துக்கான டெண்டரை ரத்து செய்ய ஞானதேசிகன் முயற்சி எடுத்து, சில நேர்மையான அதிகாரிகளின் தலையீடு காரமாக, அந்த டெண்டர் ரத்து செய்யாமல் தடுக்கப்பட்டது. இணைப்பு ரத்து செய்யும் முயற்சி தடுக்கப்பட்டாலும், உடன்குடி அனல் மின் நிலையம் தொடர்பாக எவ்வித முடிவையும் எடுக்க விடாமல் தடுத்து வருகிறார் ஞானதேசிகன்.
கடுமையான மின் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ள ஒரு மாநிலத்தில் இப்படி மின் உற்பத்தித் திட்டங்களை மாதக்கணக்கில் தாமதப்படுத்துவதற்கு என்ன காரணம் இருக்க முடியும், ஊழல் செய்து திளைப்பதை விட ? தமிழகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 800 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தேவைப்படுகிறது. புதிய மின் திட்டங்களை தொடர்ந்து தாமதமில்லாமல் செயல்படுத்தி வந்தால்தான், இந்தத் தேவையை சமாளிக்க முடியும் என்ற நிலையில், மின் வாரியம் அதன் திட்டங்களை ஏன் இப்படி தாமதப்படுத்த வேண்டும் ?
கடந்த பத்து வருடங்களாக சொல்லிக் கொள்ளும்படியான உருப்படியான எந்த மின்திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்பது கசக்கும் உண்மை. மத்திய மின் ஆணையத்தின் அறிக்கையின்படி, தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் உற்பத்தித் திறன், மே 2014ன் படி, 21,192 மெகாவாட். இதில் 7598.5 மெகாவாட், மின் வாரியத்தின் சொந்த மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வருகிறது. 4177 மெகா வாட் மத்திய தொகுப்பிலிருந்து வருகிறது. 9417.09 மெகாவாட் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகத்தின் மொத்த மின் பற்றாக்குறை 2500 மெகாவாட் முதல் 300 மெகாவாட் வரை. இந்தப் பற்றாக்குறை வருடந்தோறும், எட்டு சதவிகிதம் கூடிக்கொண்டே செல்கிறது.
ஆனால், இந்த பற்றாக்குறையை சரி செய்ய தேவையான திட்டங்களை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டிய ஜெயலலிதா, இன்னமும், முந்தைய திமுக அரசையே குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். தமிழக மின் வாரியத்தின் ஒட்டு மொத்த மின் உற்பத்தித் திறனை விட அதிகமாக தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யும் அவல நிலையில் தமிழகம் இருந்து வருகிறது.
தனியார் மின் கொள்முதலில் நடக்கும் ஊழல்கள் குறித்து சவுக்கு தளத்தில் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளது. 22 பிப்ரவரி 2015 அன்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் வந்துள்ள செய்தி இதை உறுதிப்படுத்துகிறது. ஜிஎம்ஆர் நிறுவனத்திடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தை, இந்த ஆண்டு புதுப்பிப்பதில்லை என்று தமிழக மின் வாரியம் முடிவெடுத்துள்ளது என்று அந்த செய்தி குறிப்பிடுகிறது. தமிழக மின்வாரியத்தின் ஒப்புதல் கூட இல்லாமலேயே, ஜிஎம்ஆரிடமிருந்து மின்சாரம் வாங்க கடந்த ஆண்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இணைப்பு
தமிழக மின் வாரியத்தின் சீரழிவுகள், ஊழல்கள், முறைகேடுகள் அத்தனைக்கும் காரணம் ஒரே ஒரு நபர் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும் அல்லவா ? ஆனால் அதுதான் உண்மை.
ஞானதேசிகன், 1 மே 2001 முதல் 29 டிசம்பர் 2003 வரை, தமிழக மின் வாரியத்தின் தலைவராக இருந்தார். 30 மே 2005 அன்று நிதிச் செயலரானார். நிதிச் செயலர் என்ற தகுதியில், மின் வாரியத்தின் நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்தார். நிதிச் செயலர் பதவி என்பது, மின் வாரியத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பதவியாகும். இப்பதவியில் இவர் 18 மே 2010 வரை தொடர்ந்தார். 28 செப்டம்பர் 2012 அன்று மீண்டும் மின் வாரியத்தின் தலைவராகி, டிசம்பர் 2014 வரை அப்பதவியில் தொடர்ந்தார்.
ஞானதேசிகன், மின் வாரியத் தலைவராக இருந்த போதும், நிதித்துறை செயலாளராக இருந்தபோதும்தான், தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் தொடங்கப்பட்டது. ஞானதேசிகன் செப்டம்பர் 2012ல் மின் வாரியத் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றபோதுதான், மின் கட்டணம் 37 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக, மின் வாரியத் திட்டங்கள் அனைத்தும் தாமதப்படுத்தப்பட்டதற்கும், நிர்வாகச் சீர்கேடுகளுக்கும், ஞானதேசிகன், மின் வாரியத் தலைவர் என்ற வகையிலும், நிதிச் செயலர் என்ற வகையிலும், நேரடியாக பொறுப்பானவர் ஆவார்.
பல்வேறு திட்டங்களை இவ்வாறு கிடப்பில் போட்டும், முடக்கியும், தாமதப்படுத்தியும் மின் வாரியத்தை சீரழிக்கும் வேலைகளில் ஞானதேசிகன் தொடர்ந்து இயங்குவதற்கான காரணம் என்ன ? வேறு எந்தக் காரணமும் கிடையாது. புதிய மின் திட்டங்கள் தொடங்கினால் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்க முடியாது. தனியார் மின் கொள்முதல் நின்றுபோனால், ஒரு யூனிட்டுக்கு 22 பைசா வீதம், நத்தம் விஸ்வநாதனும், ஞானதேசிகனும் அடிக்கும் கொள்ளை நின்று போய் விடும். இந்த காரணத்தினாலேதான் மின்வாரியத்தின் திட்டங்களை முடக்குவதில் முழு முனைப்போடு இருக்கிறார் ஞானதேசிகன்.
இது மட்டுமல்ல. ஜெயலலிதா அரசின் பிரத்யேக குணநலனான ஓய்வுபெற்றவர்களை நியமிக்கும் வழக்கம் மற்ற துறைகளை விட, மின் வாரியத்தில் மிக மிக அதிகமாக இருக்கிறது. ஓய்வு பெற்றவர்களை சிறப்பு அதிகாரிகள் என்ற அடிப்படையில் நியமித்தால் அவர்களுக்கு எவ்வித பொறுப்பும் இருக்காது. அவர்களுக்கு நடத்தை விதிகள் பொருந்தாது. மேலும், ஓய்வு பெற்ற பிறகு இந்த வேலை கிடைத்துள்ளதால், இந்த வேலையை அவர்களுக்கு பெற்றுத்தந்தவருக்கு தங்களின் விசுவாசத்தைக் காட்டுவார்கள். அரசுக்கு அல்ல. அப்படி பலரை ஓய்வு பெற்ற பிறகு வேலைக்கு நியமித்தவர்தான், ஞானதேசிகன்.
இப்படி நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்றவர்களுக்கு மட்டும், தமிழக மின்வாரியம் ஆண்டுதோறும் செலவழிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா ? 12 கோடி. இணைப்பு
மின் வாரிய சிஐடியு தொழிற்சங்கத் தலைவர் ரத்தினசபாபதி, இது குறித்து பேசுகையில், 19 தலைமைப் பொறியாளர்கள் இது போல நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் 75 ஆயிரத்துக்கும் அதிகமான ஊதியம். இதைத் தவிர்த்து, அரசு அதிகாரிகளுக்கு உள்ளது போலவே வாகனங்கள், பணியாட்கள் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படுகின்றன. இது போன்ற ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு செலவிடப்படும் 12 கோடியை, புதிய பணியாளர்களை நியமிக்க செலவிடலாம்” என்றார். அவர் மேலும், தமிழகம் முழுக்க பல்வேறு தலைமைப் பொறியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஆனால் அவர்கள் பணியாற்றும் இடத்திலேயே, ஓய்வு பெற்ற அதிகாரிகளை சிறப்பு அதிகாரிகளாக நியமித்துள்ளது மின் வாரியம். நியமன சமயத்தில் வெறும் ஒரு வருடத்துக்குத்தான் இந்த அதிகாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது. ஆனால், அது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற பிறகு ஐந்து வருடங்களுக்கு பணியாற்றும் அதிகாரிகள் கூட மின் வாரியத்தில் இருக்கின்றனர். ஓய்வு பெற்றவர்கள் தலைமைப் பொறியாளர்களின் பணியை செய்தால், தலைமைப் பொறியாளர்கள் என்ன செய்வார்கள் ” என்றார் அவர்.
பணியில் இருப்பவர்களை புறந்தள்ளி விட்டு, அவர்கள் பணியை ஓய்வு பெற்றவர்களை செய்யச் சொல்லி முடிவெடுக்கும் ஒரு கேவலமான நிர்வாகத்தைப் பார்த்திருக்கிறீர்களா ? இப்படிப்பட்ட நிர்வாகத்தை நடத்தி வருபவர்தான் ஞானதேசிகன்.
இவரால் மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கும், தமிழக மக்களுக்கு ஏற்பட்ட கடும் சோதனைகளுக்கும், ஞானதேசிகனை பொறுப்பாக்கி, இவரை கைது செய்து, புழல் சிறையில் ஐந்தாம் ப்ளாக்கில் அடைத்து, (ஐந்தாம் ப்ளாக்கில், பிக் பாக்கெட் கைதிகள் நிறைய்ய இருப்பார்கள். ஞானதேசிகனை உரித்து விடுவார்கள்) வழக்கை சந்திக்க வைத்திருக்க வேண்டுமா இல்லையா ?
ஆனால், இப்படிப்பட்ட ஒரு கொள்ளைக்காரனை, 12 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை உதாசீனப்படுத்தி விட்டு, ஞானதேசிகனை தலைமைச் செயலாளராக்கியுள்ளார் ஜெயலலிதா. தமிழக அரசின் கொள்ளைகளுக்கெல்லாம் தலைமை வகிக்கும் சம்பல் ராணி வேறு யாரை தலைமைச் செயலாளராக நியமிப்பார் ? தன்னைப் போலவே கொள்ளையடிக்கும் மற்றொரு கொள்ளையனைத்தானே…. ?
இதற்கெல்லாம் விடிவுகாலம், ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்படுவது மட்டுமே.
தொடரும்
உமது குரானை அனைவரும் படிக்க வேண்டும். குறிப்பாக முஸ்லிம்கள் படிக்க வேண்டும். அப்போது தான் எப்படிப் பட்ட போதகனை நாம் பின் பற்றுகிறோம் என்றும் குரான் எப்படி வன்முறையைத் தூண்டுகிறது என்றும் புரியும்.
ஏன் முஸ்லிம்களிடமிருந்து மற்றவர்கள் அஞ்சி ஒதுங்கிறார்கள் என்று அப்போது தான் அவர்களுக்குப் புரியும்.
குரானை மனசாட்சியோடு படிக்கும் முஸ்லிம்கள் உடனடியாக மனதளவில் இஸ்லாமை விட்டு விலகி விடுவார்கள்.
உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் ஒரு படம் எடுக்கப்பட்டுள்ளது. அப்படத்தின் பெயர்: Stoning of Soraya M
இப்படத்தை கட்டாயம் பாருங்கள். youtube இல் உள்ளது.
on a unrelated note, wanted to direct the people to this possible fraud played on them by the central government.
The DBTL scheme (PAHAL) was created to transfer the subsidy directly to consumer’s bank account.
In January for instance, I paid Rs.705 for a cylinder. Few days later, I got Rs.300 transferred to my bank account. Hence, government was giving a subsidy of Rs.300 per cylinder and the actual cost I incurred was Rs. 405.
But the gas companies reduced their price of a cylinder to Rs.605 on 28th February. I happily paid only Rs. 605 last week, thinking I have saved Rs.100.
But, when I looked at the subsidy amount transferred to my bank account yesterday, I got a shock!
This time, only 200 Rs. is transferred to my account as subsidy. This means, though the oil company reduced gas price by 100 Rs., I still paid 405 Rs.!
So, the consumer is not getting the benefit of LPG price reduction and the government is enjoying this benefit! And, to keep this scam away from public, there was no announcement in Press about the priced reduction…though the amount reduced was HUGE! (100 rupees!!)
Does this mean, in future, we will always be paying 405 rs, even if the price of LPG cylinder keeps going down!!!
What a scam by the government!
school education scam when will come
சசி கும்பல் ஜெயாவோட பினாமியா என்றால் எனக்கு தெரியாது. ஆனால் நிச்சயம் முக குடும்பத்துக்கும், சசிக்கும் நெருக்கமான உறவு உள்ளது. மறைமுகமாக ஜெயாவுக்கு நெருக்குதல் தர சசியை முக பயன்படுத்தி கொண்டிருக்கிறார். ஜெயா விடுதலை ஆகிவிட்டால் பாதிப்பு முகவுக்கு மட்டும் இல்லை. சசி கும்பலுக்கும் சேர்த்துதான் என்பது அறிவார்ந்தவர்களுக்கு அறியும். குறிப்பாக சசி கும்பலுக்கு மிக நன்றாக அறியும். ஜெயாவின் குணத்தை மற்றவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ ஆனால் சசிக்கு நன்றாக தெரியும். எனவே இந்த வழக்கை முடிக்காமல் இருப்பதே நல்லது என சசியும், முகவும் நினைக்கிறார்கள். ஆனால் உச்ச நீதிமன்றம் அவ்வாறு நினைக்கவில்லை. ஊழல் குற்றசாட்டுகளை கூறி ஜெயாவை முடக்கிவிட்டு தமிழகத்தை மேயந்துவிடலாம் என்று சசிகும்பலும்,முக கும்பலும் நினைப்பது நடக்காது. தீர்ப்புக்கு பிறகு மிக பெரிய அரசியல் புயல் தமிழகத்தை தாக்கும். பொறுத்திருந்து பாருங்கள். அந்த புழுதி புயலில் சவுக்கு, சங்கர் எல்லாம் வெறும் தூசுகள் என்பது நிருபனமாகும்.
1000 பக்கம் தீர்ப்பு எழுதுன குன்கா(குட்கா), அதற்கான ஆதாரங்களை தீர்ப்புடன் இணைக்கவில்லை. மாறாக சுதாகரன், இளவரசி, சசி இவர்களின் சொத்துக்களை ஜெயா கணக்குடன் சேர்த்து விட்டார்கள். ஜெயா மீதான சொத்தின் 66 கோடிக்கு ஆதாரம் எங்கே என்று கேட்டால் 10 கோடி இளவரசியிடம் உள்ளது, 20 கோடி சசியிடம் உள்ளது, 15 கோடி சுதாகரனிடம் உள்ளது என்று குன்கா கணக்கு எழுதி உள்ளார். இதற்கான பண பரிவர்த்தனை எங்கு என்று கேட்டால் அப்படி ஏதும் இல்லை என்கிறார். கூட்டு சதியில் ஈடுபட்டதற்கான விவரமும் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. இவர்கள் பினாமி என்றே வைத்துகொண்டால் ஊழல் பிரிவில் தண்டனை வழங்கமுடியாது. பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கி இருக்கவேண்டும். எது எப்படியோ! குன்கா தீர்ப்பு மிக பெரிய வரலாற்று பிழை. அந்த தீர்ப்புக்கு பிறகும் ஜெயா கவலை கொள்ளவில்லை.தையிரியமாகதான் உள்ளார். ஜெயா மீது குறைகள் இருந்தாலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்பட்ட தீர்ப்பை ஏற்றுகொள்ள இயலாது. மேல் முறையீட்டு தீர்ப்பு நீதியை நிலைநாட்டுவதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
யோவ்!ஷங்கர்! 100 கோடி போட்டு படம் எடுக்கும் முக பேரன்களை கூட மன்னித்து விடலாம். ஆனால் அவர்களே நடிப்பதை பார்க்க சகிக்கல. அதனுடன் ஒப்பிடும்போது இந்த கட்டுரை பெரிய பாதிப்பை என் மனதுக்கு ஏற்படுத்தவில்லை.
ஜெயாவின் சொத்து குவிப்பு வழக்கில், கீழ்மை நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பில் மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது என்பது தற்போது நடந்து வரும் மேல்முறையீட்டு விசாரணையில் தெரிய வருகிறது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வரும் நீதிபதி குமாரசாமி, “தீர்ப்பு வழங்கப்பட்ட 1000 பக்கங்களில் ஒரு இடத்தில் கூட ஜெயா கூட்டு சதியில் ஈடுபட்டார் என ஒரு வரி கூட இல்லை. மேலும், முறையற்ற வழியில் 66 கோடி சொத்து சேர்த்ததற்கான வலுவான் ஆதாரங்கள் பற்றி எதுவும் குறிப்பிடப் படவில்லையே” என பவானி சிங்கிடம் கேட்டிருக்கிறார். எனவே, நமக்கும் கீழ்காணும் சந்தேகங்கள் எழுகிறது என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியாதே: 1. குன்ஹா அப்படி ஒரு கடுமையான தீர்ப்பு வழங்க யார் அவரை நிர்பந்தித்தது?? ஏதோ ஒரு உந்துதல் அவரை இயக்கியிருக்க வேண்டும். உந்துதல் என்பது பண பரிமாற்றம் மூலமாகவோ, பலமான் அச்சுறுத்தல் காரணமாகவோ நடந்திருக்கலாம்??? 2. காவேரி நடுவர் மன்ற தீர்ப்பை, மத்திய அரசிதழில் உச்சநீதிமன்ற மூலமாக வெளியிட செய்தது கூட மூலக் காரணமாக இருந்திருக்கலாம்??? 3. அல்லது, குன்ஹாவும் ஒரு கன்னடத்துக்காரர் என்ற முறையில், ஜெயாவை பழி தீர்த்து கொண்டிருக்கலாம்??? 4. கர்நாடகத்தில் நடப்பது காங்கிரஸ் அரசு என்பதால், அதுவும் வழக்கு நடைபெற்றது ஒரு கீழ்மை நீதிமன்றம் என்பதால், சோனியா காந்தியின் மறைமுக தலையீடு காரணமாக இருந்ததோ??? சோனியா பழி வாங்க காரணம், இங்கு தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், காங்கிரசை டெபாசிட் கூட வாங்க விடாமல் துடைத்து எடுத்தது ஜெயா தான், என்கிற கோபமாகக் கூட இருந்திருக்கலாம்??? 5. திமுக தலைமை சோனியாவை நிர்பந்தித்து {ஏற்கனவே 1980ல் இவ்வாறு இந்திரா காந்தியை நிர்பந்தித்து அதிமுக அரசை கலைத்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்} ஜெயாவுக்கு இப்படி ஒரு கடுமையான தீர்ப்பு கொடுக்கப்பட வேண்டும், இல்லையென்றால் ஸ்பெக்ட்ரம் வழக்கில் யார் யார் கையூட்டு பெற்றது என்கிற விவரங்களை நீதிமன்றத்தில் சொல்ல நேரிடும் என்கிற அச்சுறுத்தல் கூட காரணமாக இருந்திருக்கலாம்??? 6. மேல்முறையீட்டு மனு மீது விசாரணை துவங்கப்பட்ட நாள் முதலாகவே, திமுக தலைமை அன்பழகனை வைத்து, ஏதாவது ஒரு காரணத்தை காட்டி வழக்கை தள்ளி வைக்க தொடர்ந்து முயற்சித்து வருவதும் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறதே??? எங்கே நம் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று திமுக தலைமை அஞ்சுவதை போலவும் இருக்கிறதே?? 7. அரசு தரப்பு வாதத்தில் பவானி சிங்கும், “இந்த வழக்கில் போலீஸ் விசாரணை சரியாக நடத்தப்படவில்லை எனனவே, என்னிடம் வழக்கிற்கான பல ஆதாரங்கள் இல்லை இருப்பதை கொண்டு வாதிடுகிறேன்” என்று சொல்லியிருக்கிறாரே?? அப்படியென்றால், இது அப்பட்டமான புனையப்பட்ட வழக்குதான் என்பதும் நிரூபணம் ஆகிறதே??? இப்படி ஏராளமான சந்தேகங்கள், சாதாரணமாக நமக்கே எழும் போது, தீர்ப்பில் “ஜெயா குற்றவாளியில்லை” என்று வந்தால் இன்னும் திமுக செய்த தகிடுதத்தங்கள் என்னென்ன வெளிவருமோ??? எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டியது அவசியம்: அதாவது, வழக்கு ஆரம்பித்த காலம் தொட்டு, ஜெயலலிதா இவ்வளவு உறுதியாக இருப்பதை பார்த்தாலே தெரியும் தன் மீது குற்றமில்லை என்று நம்புகிறார் இவர் நினைத்திருந்தால், இந்த வழக்கை எப்போதோ ஒன்றுமில்லாமல் செய்திருக்க முடியும் அதற்கு நிறைய வழிமுறைகளும் இருந்தன ‘நான் இந்த வழக்கை சட்டப்படி சந்தித்து கொள்கிறேன்’ என்று தான், ஆரம்பம் முதலே சொல்லி வந்திருக்கிறார் இவர் மனதுக்கு, ஏதோ ஒரு [intuition], நியாயமான காரணம் ‘தான் குற்றவாளியில்லை’ என உணர்த்தியதால் தான் இந்த அளவிற்கு தைரியமாக இருக்கிறார், என்றே நான் எண்ணுகிறேன் மறுதீர்ப்பு, ஜெயாவுக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகத்தையும், தெம்பையும் கொடுக்கும் என்பதில் ஐயப்பாடு இல்லை
no matter what happen to TN.. we dont want thirttu munnetra kazhalagam. DMK. TN will get to stone age if this looters comes to power. atleast now people are safe from peoples who occupy others land, small kings atrocities (kn nehru, ponmudi, raja etc) and family corruption. we will elect AIADMK thousand times to kill the evil DMK
சரியா சொன்னீங்க.. ரெண்டு கட்சிகல்லயும் திருடர்கள் இருந்தாலும் திமுக அடாவடி அதிகம்.. பல குட்டி அரசர்கள்.. நிலத்த அடுச்சு புடுங்கரதுல பெரிய ஆளுங்க..
Is the appeal in the Karnataka High Court going in correct direction? What will be your analysis on the appeal ?
dsfdfdafdfdfdfdfdf
Ita kekke yarume illaya
all musilms should convert into hindu and that too with DEVAR Community. DEVAR’s are verra paramparai.. not like muslim vedikundu KOLAIGAL
The so called Brahmins should basically adhere to the principles of the Vedas, related to the texts of the Sruti and Smriti which are some of the foundations of Hinduism, and practice Sanatana Dharma. Brāhma/iṇas have six occupational duties, of which three are compulsory — studying the Vedas, performing Vedic rituals and practicing dharma. Brahmin priests and teachers (acharya) should be engaged in attaining the highest spiritual knowledge (brahmavidya) of Brahman and not other wordly greed or lust. Male members of all Brahmin sects wear the Yagnopaveetham (sacred thread) that is a symbol of initiation to the Gayatri recital. Yes a currently living devar cannot convert to a thread wearing dharmaless Brahmin since he is far better in his own clan.
Every religion or caste has its own merits and demerits. Read your own religious philosophy before trying to convert anyone. Otherwise your conversion will be similar to the following quote by Avaiyar.
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி A turkey staring at a dancing peacock
தானும் அதுவாகப் பாவித்துத் – தானும் தன் fancied itself like the other
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே spread its wicked wings and tried matching the unequal dance!
கல்லாதான் கற்ற கவி So is unlearned pretending to be learned
Also another quote of Avaiyar from Verse 4, Moothurai says:
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய் Even if you boil milk, it won’t diminish in taste
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர் Those who are not friends won’t be friends however close one would moves with them.
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு Those who are endowed with high qualities will not loose their good and valuable character even if they become poor and penniless.
சுட்டாலும் வெண்மை தரும். The character of good men whichever religion or caste they belong to is likened to that of a conch shell that remains as white as it was before, even after it is burnt and reduced to ashes .
The character of good people also remains the same even if they wear a cross, beard, sacred thread or skull cap and also unchanged even when they are in distress and penury. Show a life dharma following Brahmin/Acharya or any other religious character (Priest, Pope or Imam) and then we can show you how to convert a Devar to Brahmin and then to a Shankaracharya.
“ஜாதியை விட்டு வெளியேற ஒரே வழி இஸ்லாம்தான். நீங்கள் இன்றைக்கு இஸ்லாத்தை தழுவினால், உங்களை சகோதரா என்றுதான் நாங்கள் வரவேற்போம். என்ன ஜாதியென்று எங்களுக்கு தெரியாது. பறையன் முதல் பார்ப்பான் வரை திருக்குரானை எடுக்கலாம். ஒன்றாக சேர்ந்து, ஒரே கோப்பையில் நோன்பு கஞ்சி குடிக்கலாம். இமாமாக முன்னின்று தொழுகை நடத்தலாம். அப்துல் கலாம் கூட அவர் பின்னால் நின்றுதான் தொழவேண்டும்.”
We feel pity and sadness for our fellow brother who lives in glass houses and he always tries to pelt stones at others by the above ignorant comment regarding the caste system in his religion. Within Islam among all regions in the world, there is both sectarian identity (Shia or Sunni) and religious orientation within the sects ( Twelvers, Ismailis and Zaidis for Shia/Hanafi, Ẓāhirī, Maliki, Shafi’i and Hanbali for Sunni).
Middle East & North Africa Islamic caste systems: Caste systems in North Africa include the Tuareg social stratification. The Tuareg population resides mostly in Libya, Niger, Mali, Morocco and Tunisia. Traditional caste relationships have continued in many places, including the institution of slavery. In Algeria, Desert Berbers and Arabs usually have a rigid caste or class system, having social ranks ranging from nobles to an underclass of menial workers (commonly ethnic Africans).
In Yemen, Al-Akhdam also known as Al-Muhamasheen, “the marginalized ones”. They are a social group in Yemen, distinguished from the majority by its members’ Negrito-like physical features and stature. They are considered to be at the very bottom of the societal ladder and are mostly confined to menial jobs in the country’s major cities. The Akhdam — who prefer to be known as “Al Muhamasheen,” or the marginalized ones — may have been in this southern corner of the Arabian Peninsula for as long as anyone, and their ethnic origins are unclear. Their debased status is a remnant of Yemen’s old social hierarchy, which collapsed after the 1962 revolution struck down the thousand-year-old Imamate.
But where Yemen’s other hereditary social classes, the sayyids and the judges and the sheiks, and even the lower orders like butchers and ironworkers, slowly dissolved, the Akhdam retained their separate position. There are more than a million of them among Yemen’s fast-growing population of 22 million, concentrated in segregated slums in the major cities. The Akhdam who work as street sweepers, for instance, are rarely granted contracts even after decades of work, despite the fact that all Yemeni civil servants are supposed to be granted contracts after six months, said Suha Bashren, a relief official. They receive no benefits, and almost no time off. The living conditions of the Akhdam are appalling, even by the standards of Yemen, one of the poorest countries in the Arab world. In one Akhdam shantytown on the edge of Sana, more than 7,000 people live crammed into a stinking warren of low concrete blocks next to a mountain of trash. Young children, many of them barefoot, run through narrow, muddy lanes full of human waste and garbage.
Castes in Pakistan: The social stratification among Muslims in the “Swat” area of North Pakistan has been meaningfully compared to the Caste system in India. The society is rigidly divided into subgroups where each Quom is assigned a profession. Different Quoms are not permitted to intermarry or live in the same community. These Muslims practice a ritual-based system of social stratification. The Quoms who deal with human emissions are ranked the lowest.
South Asia Indian Islamic caste system
In India, the Muslims are divided as Ashrafs and Ajlafs. Ashrafs claim a superior status derived from their foreign ancestry. In South Asian Muslim society a distinction is made between the ashrāf (Arabic, plural of shārīf, “nobleman”), who are supposedly descendants of Muslim Arab immigrants, and the non-ashrāf, who are Hindu converts. The ashrāf group is further divided into four subgroups: (1) Sayyids, originally a designation of descendants of Muhammad through his daughter Fāṭimah and son-in-law ʿAlī, (2) Shaykhs/Sheiks (Arabic: “Chiefs”), mainly descendants of Arab or Persian immigrants but also including some converted Rājputs, (3) Pashtuns/Pathans, members of Pashto/Pathan-speaking tribes in Afghanistan and northwestern Pakistan, and (4) Mughals, persons of Turkish origin, who came into India with the Mughal armies similar to the four varnas of the Hindu system.
The non-ashrāf Muslim castes are of three levels of status: at the top, converts from high Hindu castes, mainly Rājputs, insofar as they have not been absorbed into the Shaykh/Sheik castes; next, the artisan caste groups, such as the Julāhās, originally weavers; and lowest, the converted untouchables, who have continued their old occupations. These converts of Hinduism observe endogamy in a manner close to that of their Hindu counterparts.
This experience among Indian Muslims illustrates the basic truths in the seminal study “Hindustan Mein Zaat-Paat Aur Musalman” (Casteism in India and Muslims) written by the Lucknow-based scholar Masood Alam Falahi in 2008. Falahi traced the origin of caste practices among Muslims and named the noted ulema who winked at it. He said the caste system took root among Indian Muslims after Qutbuddin Aibak founded the Delhi Sultanate in the 13th century. Sultanate scholars divided Muslims into Ashraaf and Ajlaaf. The Ashraaf are Syed, Shaikh, Mughal and Pathan and the Ajlaaf are Qasai (butcher), Nai (barber), Julaha (weaver). The very lowest Ajlaafs were Arzaals (sweepers, shoe-makers, etc). Hundreds of years later, the Sultanate’s categorization would be given extra legitimacy by respected 20th century clerics such as Maulana Ashraf Ali Thanvi, who extolled the supremacy of Syeds.
In fact, Muslims’ caste-consciousness runs so deep Allama Iqbal reprimanded them in a couplet: “Yun to Syed bhi ho, Mirza bhi ho Afghan bhi ho/Tum sabhi kuchch ho batao ke Musalman bhi ho (You are Syed, Mirza and Afghan/You are everything but Muslim)”. The Muslims of India adopted the Hindu caste system with all its disabilities in spite of the egalitarian and Islamic principles of equality. Thus, two main castes took birth among Muslims of India the Ashraf (the noble class) and Ajlaf (the low class). The Ajlaf were mainly the Hindus who had converted to Islam. They had belonged to the lower castes among the Hindus and taken refuge in Islam to escape discrimination they faced in the Hindu caste system. But what can be more ironical than the fact that the very caste tag they wanted to discard by embracing the new religion stayed with them with all its evil manifestations. It still stuck to them in spite of them being Muslims.
Sections of the ulema (scholars of Islamic jurisprudence) provide religious legitimacy to caste with the help of the concept of kafa’a. A classical example of scholarly declaration of the Muslim caste system is the Fatawa-i-Jahandari, written by the fourteenth century Turkish scholar, Ziauddin Barani Barani who was known for his intensely casteist views, and he regarded the Ashraf Muslims as racially superior to the Ajlaf Muslims. He divided the Muslims into grades and sub-grades. In his scheme, all high positions and privileges were to be a monopoly of the high born Turks, not the Indian Muslims.
Even in his interpretation of the Koranic verse “Indeed, the pious amongst you are most honored by Allah”, he considered piety to be associated with noble birth. Barani was specific in his recommendation that the “sons of Mohamed” [i.e. Ashrafs] “be given a higher social status than the low-born [i.e. Ajlaf]. His most significant contribution in the fatwa was his analysis of the castes with respect to Islam. His assertion was that castes would be mandated through state laws or “Zawabi” and would carry precedence over Sharia law whenever they were in conflict. In the Fatwa-i-Jahandari (advice XXI), he wrote about the “qualities of the high-born” as being “virtuous” and the “low-born” being the “custodian of vices”. Every act which is “contaminated with meanness and based on ignominity, comes elegantly [from the Ajlaf]”. Barani had a clear disdain for the Ajlaf and strongly recommended that they be denied education, lest they usurp the Ashraf masters. He sought appropriate religious sanction to that effect. Barani also developed an elaborate system of promotion and demotion of Imperial officers (“Wazirs”) that was primarily on the basis of their caste.
In addition to the Ashraf/Ajlaf divide, there is also the Arzal caste among Muslims, who were regarded by anti-Caste activists like as the equivalent of untouchables. The term “Arzal” stands for “degraded” and the Arzal castes are further subdivided into Bhanar, Halalkhor, Hijra, Kasbi, Lalbegi, Maugta, Mehtar etc. The Arzal group was recorded in the 1901 census in India and are also called Muslims “with whom no other Muhammadan would associate, and who are forbidden to enter the mosque or to use the public burial ground”. They are relegated to “menial” professions such as scavenging and carrying night soil. Interactions between the oonchi zat (upper caste) and neechi zat (lower caste) are regulated by established patron-client relationships of the jajmani system, the upper castes being referred to as the ‘Jajmans’, and the lower caste as ‘Kamin’. Some of the backward or lower-caste Muslim caste include Kunjra, Dhobi and Halalkhor. The upper caste Muslim caste include Qureshi, Shaikh Ansari, Shah, Syed, Iraqi, Pathan, Turk, Sheikh and Malik.
Indian Dalit leader, Babasaheb Ambedkar , the chief architect of the Indian Constitution who was looking for a religion to mass convert with his followers was extremely critical of the Muslim Caste System and their practices, quoting that “Within these groups there are castes with social precedence of exactly the same nature as one finds among the Hindus but worse in numerous ways”. He was critical of how the Ashrafs regarded the Ajlaf and Arzal as “worthless” and the fact that Muslims tried to sugarcoat the sectarian divisions by using euphemisms like “brotherhood” to describe them. He was also critical of the precept of literalism of scripture among Indian Muslims that led them to keep the Muslim Caste system rigid and discriminatory. He decried against the approval of Shariah to Muslim casteism. It was based on superiority of foreign elements in society which would ultimately lead to downfall of local Dalits. This tragedy would be much more harsher than Hindus who are ethnically related to and supportive of Dalits. This Arabian supremacy in Indian Muslims accounted for its equal disapproval by high and low caste Hindus during 1300 years of Islamic presence in India. He condemned the Indian Muslim Community of being unable to reform like Muslims in other countries like Turkey did during the early decades of the twentieth century.
lslamic caste along with its units of social stratification developed among Muslims in India and Pakistan as a result of the proximity of Hindu culture. Most of the South Asian Muslims were recruited from the Hindu population; despite the egalitarian tenets of Islam, the Muslim converts persisted in their Hindu social habits. Hindus, in turn, accommodated the Muslim ruling class by giving it a status of its own.
Two of the principal indexes of Hindu caste, commensality and endogamy (principles governing eating and marital arrangements), do not appear as strongly in Islamic castes. Commensality is prohibited between ashrāf and non-ashrāf, between Muslim and Hindu, and between the various castes of the non-ashrāf. The principle of endogamy is altered by the Muslim preference of marriage within very narrow limits (e.g., to the daughter of the father’s brother), which in South Asia is known as biyāhdārī.
The Indian Government sponsored Sachar Committee Report, on the existence of castes among Indian Muslims, says: “the present day Muslim society is divided into four major groups (i) the ashrafs, who trace their origins to foreign lands, (ii) the upper caste Hindus who converted to Islam, (iii) the middle caste converts whose occupations are ritually clean, (iv) the converts from the erstwhile Untouchable castes – Bhangi (scavengers), Mehtar (sweeper), Chamar (tanner), Halalkhor (Dom) and so on” There are also Dalit Muslims.
If our brother claims Islam provides equal treatment to all Muslims converted or by birth,then why this caste system? The very presence of caste in the Indian Muslims society within these above mentioned classes can’t be denied by looking at the practice of endogamy within caste, nature of social interaction and representation at religious, social and power places. Studies suggest that backward caste Muslims are highly under-represented in legislature. Empirically it can also be observed that at other institutions like executive, judiciary, and media etc. where backward caste Muslims are almost absent. At very few pockets of northern belt where backward caste Muslims are in majority and are economically sound (for e.g. some pockets in eastern and western UP), they do exercise some amount of influence. But such influence and visibility is not only local in nature but also non-interventionist in effects at decision-making levels.
Systemic backwardness demands systemic justice. Political dynamics of caste across religion has its own merit. Differentiated social reality needs different state intervention in a secular polity. Similarly situated socio-educational status needs to be clubbed together for preferential treatment, as a matter of state policy, irrespective of the faith they follow. In this sense, much politically exploited terms like ‘minority’ and ‘majority’ become redudant and misnomer. In the larger setup of state intervention will not, then, be treated as ‘minority against majority’ or ‘majority for minority’. If the backwards and Dalits comes together irrespective of religion Hindu, Muslim or Christian, such ‘social engineering’ has potential to change the arithmetic of currently prevailing sectarian, communal and status quoits political scenario, by breaking the myth of minority and majority. Unity among Dalits and backwards is the need of the hour and not the conversion to any majority or minority religion.
My brother, try to tell to your fellow Indian Muslim brother about your innocent prophet’s comment ‘”O people! Indeed, your Lord is one and your father is one. Indeed, there is no superiority of an Arab over a non-Arab, nor of a non-Arab over an Arab, nor of a white over a black, nor a black over a white” and also make a Qureshi or Shaikh or Ansari or Shah or Syed or Iraqi or Pathan or Turk or Sheikh or Malik to dine in the same table and eat from the same plate/or do community service with Bhanar, Halalkhor, Hijra, Kasbi, Lalbegi, Maugta, Mehtar people and give your daughters or sons in marriage among them. Then try to talk or comment about the caste system among our Hindu/other religion brothers.
thulukkana kun di addikka mudiyum. veerrangal.. idhu podhuma!
இந்த கட்டுரை நிறைய உண்மைகளை சொல்லியிருக்கிறது ஈற்றில் “இதற்கெல்லாம் விடிவுகாலம், ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்படுவது மட்டுமே”. என்று கட்டுரை முடிகிறது.
ஒரு கட்டுக்கடங்காத ஊழல்வாதி ஜெயலலிதா சிறையில் அடைபட்டால் அடுத்து தமிழ் நாட்டை கைப்பற்றி ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற கேள்வியும் எழும்புவதை எவரும் மறுக்க முடியாது.
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டால் தலையெடுக்கப்போவது மதிமுகவோ தேமுதிகவோ விடுதலை சிறுத்தைகளோ அல்ல திருடர் முன்னேற்றக்கழகம் என்று அழைக்கப்படும் கட்டுமரம் கருணாநிதி என்ற கடைந்தெடுத்த ஊழல் ஊமை புலி சாவின் கடைசி புள்ளியிலிருந்து தலை தூக்கி சப்பாணியிலிருந்து சகடைக்கு மாறி பாடையில்க்கிடந்து அரசிய செய்ய முன்வரும் அப்போ மின்சாரம் மட்டுமல்ல அனைத்து துறைகளும் மன்னார்குடியிடமிருந்து திருவாரூர் திருடர்களின் கைகளுக்குள் கச்சிதமாக சிக்கிக்கொள்ளும்.
ஜெயலலிதா கண்டுபிடிக்கக்கூடிய வகையில் ஊழல் செய்யக்கூடிய சித்தாந்தத்தை கொண்ட ஒரு பேர்வழி. ஆனால் அண்டங்காகம் கருணாநிதி எவராலும் கண்டுபிடிக்க முடியாத வித்தையை செயற்படுத்தசொற்றை பகலில் ஊரை உலையில்போடும் கொடுங்கோலன்.
ஐந்து ஆண்டுகள் காலை ஆகாரமாக முலைப்பாலை மட்டும் உண்டு நோய் அணுகாமல் தமிழ்நாட்டை கௌவுவதற்காக காத்திருக்கும் கொடிய பிறப்பு,
எனவே இருமலை விரட்டுவதாக எண்ணி ஈரல் குலையை இழந்துவிடுவோமோ என்ற மக்களின் இயல்பான பயத்தையும் புறம் தளளமுடியாது.
ஊழல் வியாதிகளுடமிருந்து நாடு + மக்கள் விடுதலை பெறவேண்டும் அதற்கான அரசியலை எப்படி தெரிவு செய்யலாம் என்பதையும் ஒரு கட்டுரையில் தொலை நோக்கு சிந்தனையுடன் புள்ளி ஒன்றை போட்டுவிட்டால் சிறிதாக மக்களுக்கு மனமாற்றம் நிகழ வாய்ப்பு இருக்கிறது
அப்படி ஒரு கட்டுரையை எதிர்பார்ப்போம்.
ஐந்து ஆண்டுகள் காலை ஆகாரமாக முலைப்பாலை மட்டும் உண்டு நோய் அணுகாமல் தமிழ்நாட்டை கௌவுவதற்காக காத்திருக்கும் கொடிய பிறப்பு கருணாநிதி
————————————-
what a amazing line
திருடர்கள்…… வெட்கபட மாட்டார்களா …….
My god, please bless me a gun to kill these corrupted peoples.
கட்டுமானத்துறை பற்றி நிறைய எதிா்பாா்த்தோம்…….?
சொர்னை கெட்ட ஜென்மங்கள் .
நாம் பாவப்பட்ட ஜென்மங்கள் .
இத மாத்தவே, முடியாதா…
பில்டிங் ஸ்டராங்க்..
ஆனா………. பவுண்டேஷன் வீக்
மெளலிவாக்கம் கட்டிடம் மாதிரி
super
கைதி என் 7402 க்கு ஆப்பு நிச்சயமானால் தமிழகம் உருப்படுமோ?