சட்டப் பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு மார்ச் 1-ம் தேதி வெளியானது. அன்றைய தினம் தமிழக அரசு பி.ஏ. ராமய்யா, சி. மனோகரன், ஏ. ஆறுமுக நயினார் ஆகியோரை தமிழகத் தகவல் ஆணையர்களாக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தகவல் ஆணையர்கள் நியமனங்களில் விதி மீறல்கள் நிகழ்ந்துள்ளன. அவர்களின் நியமனங்கள் தொடர்பான நடைமுறையில் எதிர்க்கட்சித் தலைவரான ஜெ.ஜெயலலிதா ஓரங்கட்டப்பட்டுள்ளார். அந்த நியமனங்கள் ஜெயலலிதாவின் பரிந்துரை இல்லாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே, அந்த 3 நபர்களும் தகவல் ஆணையர்களாகச் செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும், அவர்களின் நியமனங்கள் தொடர்பான அரசாணையையும் ரத்து செய்ய வேண்டும் என விஜயலட்சுமி அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தகவல் ஆணையர்கள் நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்து இன்று உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பாக ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்புமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டன