“ஹலோ தலைவரே….. என்ன தலைவரே விசேஷம் ?”
“தேர்தல் முடிஞ்சா ரெண்டு மூடு விழா நடக்கும்னு சொல்றாங்க தலைவரே…“
“என்னப்பா அது ரெண்டு மூடு விழா“
“ஒன்னு கலைஞர் டிவி. அடுத்தது நம்ப நக்கீரன்“
“என்னப்பா குண்டத் தூக்கிப் போடுற ? “
“ஆமா தலைவரே…. இப்போ கலைஞர் டிவி ஓடுறதே புது சினிமா ரைட்ஸை வச்சுத்தான். ஆட்சி மாறுனா, புது சினிமாவுக்கு யாரும் ரைட்ஸ் குடுக்க மாட்டாங்க. அதனால, சினிமா கிடைக்காது. அடுத்து மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு ஜட்ஜா வர்றவங்க யாரும் வரமாட்டாங்க.. அப்புறம் அந்த சேனல யாருப்பா பாப்பாங்க. அது மட்டுமில்லாம விளம்பரம் வர்றது நின்னு போயிடும்ல பா ?
“ஆமா தலைவரே….“
“அதனால, அதுக்கு மூடுவிழா நடக்கறது நிச்சயம்னு சொல்றாங்கப்பா. அது மட்டுமில்லாம, கலைஞர் டிவி நடக்குறதே, ஸ்பெக்ட்ரம் பணத்துலதான்னு, சிபிஐக்கு ஏராளமான ஆதாரங்கள் கிடைச்சுருக்குதாம்பா. மொதல்ல 216 கோடி ரூபாய் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கிட்டேர்ந்து வாங்கிருக்காங்க. அடுத்து எஸ்டெல் நிறுவனத்துக்கிட்டேர்ந்து 100 கோடி வாங்கிருக்காங்க. இந்த ரெண்டு தொகையுமே, ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக சம்பந்தப் பட்ட கம்பேனிகள் கொடுத்த லஞ்சப் பணம்ன்ற முடிவுக்கு சிபிஐ வந்துருக்காம்பா.“
“அதுக்காகவா சேனல மூடிடுவாங்க ? “
“அது மட்டும் இல்லப்பா…. சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த உடனே, இந்த வழக்கில் சம்பந்தப் பட்ட சொத்துக்களை விற்க முடியாத வகையில நீதிமன்றத்துல ‘அட்டாச்மென்ட்’ ஆர்டர் வாங்குவாங்குவது வழக்கம். ஜெயலலிதாவோட சொத்துக் குவிப்பு வழக்குல கூட, இதே போல, லஞ்ச ஒழிப்புத் துறை, அந்த வழக்குல சம்பந்தப் பட்ட சொத்துக்களை அட்டாச் செய்து வைத்திருக்காங்க.”
“ஜெயலலிதா சொத்துக்களக் கூடவா அட்டாச் செய்திருக்காங்க ? “
“ஜெயலலிதான்னு சொன்ன உடனேதான் ஒன்னு ஞாபத்துக்கு வருது. 2001லேர்ந்து 2006 வரைக்கும் ஜெயலலிதா முதலமைச்சரா இருந்தப்போ, அட்டாச்மென்டுல இருக்கற இந்த சொத்துக்கள விடுவிக்கறதுக்கு ஒரு முயற்சி நடந்துச்சு. சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களுர்ல இருக்கும் போதே, சென்னை நீதிமன்றத்துல, இந்த சொத்துக்களோட அட்டாச்மென்ட் ஆர்டர நீக்கறதுக்கு ஒரு முயற்சி நடந்தது. அந்த முயற்சிய முன்னின்று செஞ்சவரு, இப்போ, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியா இருக்கற கே.ராதாகிருஷ்ணன். ஆனா அந்த முயற்சி நிறைவேறல… “
“ஏன் என்ன ஆச்சு ? “
“சென்னை நீதிமன்றத்துல இதுக்கான ஏற்பாடுகள் நடந்துக்கிட்டிருக்கும் போதே, சென்னை உயர்நீதிமன்றத்துல, நம்ப பேராசிரியர் அன்பழகன் வழக்கு போட்டு, இதுக்கு தடை உத்தரவு வாங்கிட்டாரு.. ஆனா அந்த ராதாகிருஷ்ணனனோட மகன் சந்தீப்புக்கு, அண்ணா பல்கலைகழகத்துல கவர்மென்ட் கோட்டாவுல சீட் ஒதுக்குனாங்க ஜெயலலிதா கவர்மென்ட்டுல. சீட் கொடுக்கறதுல என்ன தப்புன்னு கேப்ப.. அந்தப் பையன் சந்தீப், ப்ளஸ்டூவுல 50% மார்க்குதான் வாங்கியிருந்தானாம். “
“நீங்க சொல்றத நம்ப முடியலையே… ஜெயலலிதாவுக்கு இவ்வளவு உதவி செஞ்சுருக்காரு.. ஆனா, திமுக அரசாங்கத்துலதான் சென்னை நகரத்து கமிஷனரா இருந்தாரு. இப்போ சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியா இருக்காரு.. “
“அதுதாம்பா அந்த அதிகாரியோட திறமை. கழுவற மீனுல நழுவற மீனுன்னு கேள்விப் பட்ருக்கல்ல.. ? அத வெட தெறமையான அதிகாரிப்பா இவரு ? “
“சரி விஷயத்துக்கு வாங்க. எங்கயோ ஆரம்பிச்சு. எங்கயோ போயிட்டீங்களே.. “
“ஆமாம்பா… அதே மாதிரி கலைஞர் டிவியையும், அதோட சொத்துக்களையும், சிபிஐ ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்துல தொடங்கப் பட்டதுன்னு உறுதியா ஆதாரங்கள் கிடைச்சதும், அட்டாச் பண்ணப் போறாங்களாம் பா“
“அதனால, கலைஞர் டிவியை மூடுவது உறுதின்னு நம்ப டெல்லி சோர்ஸ் சொல்லுது. “
“அடுத்த மேட்டருக்கு வாங்க…“
“அடுத்த மேட்டர் நம்ப நக்கீரன்தாம்பா… பாவம் பத்திரிக்கை ரொம்ப கஷ்ட நிலைல இருக்காம்பா…“
“என்ன கஷ்டம். அவங்கதான் கவர்மென்டுக்கு நெருக்கமாச்சே…?
“கவர்மென்டுக்கு நெருக்கமா இருந்தா மட்டும் போதுமாப்பா.. ? செய்தி போட வேண்டாமா ? வர வர நக்கீரன்ல வர்ற செய்திகள்ல பலது, பொய்ச் செய்தின்ற விஷயம் நல்லாவே பரவிப் போச்சுப்பா… அதனால பத்திரிக்கை சேல்ஸ் ரொம்ப மோசமா கொறஞ்சு போச்சாம்பா …. “
“அடக் கொடுமையே…“
“ஆமாம்பா… நித்யானந்தா விவகாரம் வெளி வந்தப்போ நக்கீரன் சேல்ஸ் ஒரு லட்சத்துக்கு மேல இருந்துச்சாம்பா…. இப்போ 45 ஆயிரம் தாண்டுறதே பெரிய சிரமமா இருக்குதுன்னு சொல்றாங்கப் பா.. “
“அடப்பாவமே…“
“ஆமாம்பா… சேல்ஸ் மட்டும் இல்லாம, இணைய தளத்துல பாக்குறவங்களோட எண்ணிக்கையும் கொறஞ்சு போச்சாம்பா.. தளத்துக்கு வர்றவங்களும் கொறஞ்சு போயிட்டதால, கோபால் அண்ணாச்சி வருத்தத்துல இருக்காறாம். “
“அப்புறம் இருக்காதா ? நக்கீரனோட இத்தனை கஷ்டத்துக்கும் காரணமான அந்த குருமாராஜை தொரத்த வேண்டியதுதானே… அவர இன்னும் எதுக்கு வச்சுக்கிட்ருக்காறாம் ? “
“அதுதாம்பா பல பேருக்கு புரியல… போன வாரம் நக்கீரன் இதழை எடுத்துக்கிட்டீன்னா கூட, காங்கிரஸ் திமுக கூட்டணி முறிவுன்னு கவர்ல எழுதியிருந்தாங்க… அந்தக் கவர் ஸ்டோரி வைக்கும்போதே, கோபால் குருமாராஜ கூப்பிட்டு, “தம்பி… கண்டிப்பா முறிஞ்சுடுமா தம்பி ன்னு கேட்டுருக்காரு. அவரு கண்டிப்பா முறிஞ்சுடும்னு சொல்லிருக்காரு.. நக்கீரன் இதழ் கடைக்கு வந்த புதன் கிழமை, நக்கீரன்ல கவர் ஸ்டோரியா “உடைகிறது காங்கிரஸ் திமுக கூட்டணி ன்னு“ போட்ருந்தாங்க.
அதே புதன் கிழமை, எல்லா தினசரி பேப்பர்லையும், அழகிரி, தயாநிதி, குலாம் நபி ஆசாத்தோட போட்டோ போட்டு, கூட்டணி இணைந்தது ன்ற செய்தி வந்திருந்துச்சு. இதப் பாத்ததும் கோபால் குருமாராஜக் கூப்பிட்டு, என்னப்பா இது இப்படி ஆயிடுச்சு ன்னு கேட்டுட்டு, உனக்கு திமுகவோட, டிஸ்டன்ஸ் அதிகமா ஆயிடுச்சுப்பா…. இப்படியெல்லாம் வந்தா பத்திரிக்கை பேரு கெட்டுப் போயிடும் னு வருத்தப் பட்டுருக்காரு. “
“அந்தப் பத்திரிக்கைக்கு இன்னும் என்ன பேரு இருக்குன்னு கோபால் நெனச்சுக்கிட்டு இருக்காராம் ? “
“நீ சொல்றதும் ஒரு வகையில சரிதான். ராசா மேல ஊர் ஒலகமே புகார் பட்டியல் படிச்சுகிட்டும், ஆதாரங்கள வெளியிட்டுக்கிட்டும் இருக்கும் போது, குருமாராஜ் கருணாநிதிகிட்ட ஒரு பேட்டிய வாங்கிப் போட்டார்.. அந்தப் பேட்டியில, கருணாநிதிக்கு ஏத்த மாதிரி இவரே கேள்வி கேட்டுக்கிட்டு, இவரே பதிலும் சொல்லிக்கிட்டு ஒரு பேட்டியை வெளியிட்டாரு.. அத மக்கள் சுத்தமா ரசிக்கல.. அதற்கு அடுத்த வாரம் வந்த இதழ்ல நக்கீரன் பகுதில
“தலைவரே… ஸ்பெக்ட்ரம் விவகாரம் சம்பந்தமா ஒரு விஷயத்தை நாம சொல்லியே ஆகணும். இந்த விவகாரத்தில், வதந்திகளை எழுதாமல் உண்மையில் என்ன நடக்குது, என்ன நடக்கும்கிரதை முன் கூட்டியே எழுதுவது நம்ம நக்கீரன் தான். ஆ.ராசாவுக்கு சம்மன்னு போனமுறை நம்ன நக்கீரனில் அட்டைப் படச்செய்தியே வந்தது. இப்ப அதுதான் நடந்திருக்குது. ராசா தன் மந்திரி பதவியை ராஜினாமா செய்தப்ப, மீண்டும் அமைச்சர் பதவி – காங்கிரஸ் உறுதின்னு நம்ம நக்கீரன் அட்டைப்பட செய்தி வெளியிட்டதே.., அது நடந்துதான்னு சிலர் கேக்குறாங்க.”
“ஆமாப்பா”
“எந்த ஒரு செய்தியிலும் எக்ஸ்க்ளூசிவா என்ன இருக்குதோ அதைத் தருவதுதான் நம்ம நக்கீரனோட வழக்கம். அப்படித்தான், அப்பொது டெல்லிக்கும் சென்னைக்கும் நடந்த உரையாடல்களில் இருந்த பிரத்யேகமான தகவல்களை முன்னுரிமை கொடுத்து வெளியிட்டது….
நக்கீரன் நம்பகமான தகவல்களைத்தான் தரும்கிறது மக்களுக்கும் வாகசர்களுக்கும் நல்லாவே தெரியும்பா.. “
இதையும் பாத்துட்டு, மக்கள் காறித்துப்பறாங்கப் பா. ராசா, இப்போதைக்கு ஜெயிலை விட்டு வெளியில வர்றதுக்கு வாய்ப்பே இல்லை…. அவர் மேல தேசிய பாதுகாப்புச் சட்டம் போடறதா இல்லையான்னு யோசிச்சுக்கிட்டு இருக்காங்க. 90 நாளைக்குள்ள, சிபிஐ மார்ச் 31 குற்றப் பத்திரிக்கை தாக்கல் செஞ்சுடுச்சுன்னா, ராசா வெளியில வர்றது கஷ்டம். இது தெரியாம, ராசா மீண்டும் மந்திரியாகிறார் என்று நக்கீரன்ல போட்ட செய்தி, ராசாகிட்ட வாங்குன காசுக்காக குருமாராஜ் எழுதுனதுன்னு மக்கள் பேச ஆரம்பிச்சுட்டாங்களேப்பா…. “
ராசாவ கைது செய்யாமல் இருக்கறதுக்கு காங்கிரசை மிரட்டுறதுக்காக, அதே இதழ் நக்கீரன்ல போல்ட் ஃபான்ட்டுல இப்படி ஒரு செய்தியை எழுதியிருந்தாங்கப் பா.
“இன்னொரு கேள்வியும் டெல்லி வட்டாரத்தில் அடிபடுது. அதைப் பற்றி நான் சொல்றேன். காங்கிரஸ் சிபாரிசிலும் பல கம்பெனிகளுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப் பட்டிருக்கு. சோனியா, மன்மோகன்சிங், அகமதுபடேல், பிரணாப் முகர்ஜி, இவங்களெல்லாம் சிபாரிசு செய்த கம்பெனிகள் இதில் அடங்கும். புது எஃப்ஐஆர், விசாரணைன்னு சிபிஐ நியாயமான ரூட்டில் போனால் இந்த விஷயங்களும் விசாரணைக்குள் வரும். அந்தக் கம்பெனிகளின் சார்பில் யார் யாரை சந்தித்தாங்கங்கிற விபரமெல்லாம் தேண்டியெடுக்க வேண்டியிருக்குமாம்“
“இந்த செய்தி கருணாநிதி காங்கிரஸுக்கு விடுற நேரடி மிரட்டல் இல்லையா ? இது மாதிரி செய்தி போட்றத வாசகர்கள் கண்டுபிடிக்காமலா போயிடுவாங்க ? அதனாலதாம்பா மக்கள் நக்கீரன நிராகரிக்க ஆரம்பிச்சுட்டாங்க….“
“ஆமா தலைவரே…. குருமாராஜ் வீட்டுல சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்துன பிறகு, “சோதனைகளை வெல்வோம் ன்ற தலைப்புல கோபால், நக்கீரன்ல எழுதுன கட்டுரையும், கோபாலுக்கும், ஸ்பெக்ட்ரம் ஊழல்ல பங்கு இருக்கோன்ற சந்தேகத்தை மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கு…“
“என்ன தலைவரே எழுதியிருந்தார் கோபால் ? “
“முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவும் தம்பியும் ஒரே ஊர்க்காரர்கள். அந்த அடிப்படையில் நண்பர்கள். ஓர் அரசியல்வாதிக்கும் பத்திரிக்கையாளருக்குமான நட்பு மட்டுமே அவர்களுக்கிடையில் இருந்து வருகிறது. ராசாவின் நண்பர்கள் வீடுகளில் சேதனை என்ற அடிப்படையில் தம்பியின் வீட்டிலும் சிபிஐ புகுந்ததே தவிர, அங்கு அவர்கள் எந்தவொரு முறைக்கேட்டையும் காணவில்லை…..
சோதனைக்கு வந்த அதிகாரிகளே, ‘எங்களுக்கு ஸ்ட்ராங் இன்பர்மேஷன் வந்ததால்தான் இங்கே வந்தோம். ஆனால், எந்தத் தொடர்புமில்லை. எந்த ஆவணமும் இல்லை’ என்று தம்பியிடம் சொல்லியிருக்கிறார்கள். “
“கோபால் இப்படி எழுதியிருந்ததே பச்சைப் பொய். சிபிஐ அதிகாரிகள், காமராஜோட பாஸ்போர்ட்ட எடுத்துட்டுப் போய், எத்தனை முறை வெளிநாடு போயிருக்கார். அந்த நேரங்கள்ல அந்த நாடுகளில் கருப்புப் பணம் எவ்வளவு முதலீடு செய்யப் பட்டிருக்குன்ற விபரங்களை அமலாக்கப் பிரிவு மூலமா விசாரிச்சுக்கிட்டு இருக்காங்க. சோதனைக்குப் பிறகு, அமலாக்கப் பிரிவு குருமாராஜை விசாரிச்சுருக்காங்க. இதையெல்லாம் மறைச்சு, கோபால் குருமாராஜுக்கு ஆதரவா இப்படி ஒரு கட்டுரையை எழுத வேண்டிய அவசியம் என்னன்ற கேள்வியும் எழுந்திருக்கு. “
“கோபால் சொல்ற மாதிரி, ராசாவுக்கும், குருமாராஜுக்கும், வெறும் பத்திரிக்கையாளர் அரசியல்வாதின்ற நட்பு மட்டும் தானா தலைவரே…“
“குருமாராஜ் பண்ண ஒரு வேலையைச் சொல்றேன். அது எப்படிப்பட்ட நட்புன்னு நீயே முடிவு பண்ணிக்க.
“ராசாவோட நண்பர், சாதிக் பாட்சா ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்துல சிங்கப்பூர்ல தொடங்குன ரியல் எஸ்டேட் கம்பேனி மூலமா பல கோடி ரூபாய் கருப்புப் பணத்தை பதுக்கியிருப்பது, அமலாக்கப் பிரிவுக்கு தகவல் தெரிஞ்சு, இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளியில வர்றதுக்கு முன்னாடியே விசாரணையை தொடங்கிட்டாங்க. அப்போ நிதித் துறை செயலாளரா இருந்தவர, இந்த விசாரணையை நிறுத்தறதுக்காக, குருமாராஜ் போயிப் பாத்துருக்காரு. “
“விசாரணையை நிறுத்தறதுக்காக போய் ஒரு பத்திரிக்கையாளர் பாக்கலாமா தலைவரே…?“
“இன்னும் கேளு… அந்த செயலாளர், குருமாராஜ் அவர வந்து பாத்தது, நக்கீரன் பேரச் சொன்னது, விசாரணையை நிறுத்துங்கன்னு சொன்னது, இதையெல்லாம், அந்த அதிகாரி கோப்புல பதிவு செஞ்சு வச்சுட்டாராம். இந்தக் கோப்பையும் சிபிஐ எடுத்து விசாரணை நடத்திக்கிட்டு இருக்காங்களாம்“
“இந்த குருமாராஜ் பத்திரிக்கையாளரா இருக்கறத தவிர்த்து மத்த எல்லா வேலையும் பண்ணிக்கிட்டு இருந்துருக்காருன்றது ஒன்னு ஒன்னா வெளில வருது போலருக்கே… ?“
“ராசா சுற்றுச் சூழல் அமைச்சரா இருந்தப்போ, திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியத்துல, டால்மியா சிமென்ட் பேக்டரி கட்றதுக்கு, அனுமதி வேணும்னு கேட்ட கோப்பு ராசாவிட்ட போகுது. அப்போ, இதுக்கு அனுமதி தர்றதுக்கு, ராசாவுக்கு 10% பங்கு வேணும்னு கேக்கறராரு… அதே மாவட்டத்து மந்திரியான கே.என்.நேரு, தன்னோட தம்பி ராமஜெயம் பேர்ல 10% பங்கு குடுங்கன்னு நெருக்கடி கொடுக்கறாரு… இதுல தலையிட்ட குருமாராஜ், நேருவுக்கு இந்தப் பங்கு கிடைக்காம, ராசாவுக்கு இதை வாங்கிக் கொடுத்துருக்காரு… இதுக்காக, ஒரு விழாவுல கலந்துகிட்ட, டால்மியா இயக்குநர், ராசாவுக்கு நன்றி தெரிவிச்சுருக்காரு“
அருண் டால்மியாவோடு ஆ.ராசா
“குருமாராஜ் பத்திரிக்கையாளரா, ப்ரோக்கரா ? “
“இந்தக் கேள்விதாம்பா மத்த பத்திரிக்கையாளர்கள் மனசுலயும் இருக்கு. குருமாராஜ பத்திரிக்கையாளர்னு சொன்னா, நம்ப யாருன்னு கேக்கறாங்க“
“நக்கீரன் தொடர்ந்தும் பொய்ச் செய்திகளா வெளியிட்டுகிட்டு இருக்கே தலைவரே… ?“
“ஆமாம்பா… இப்போ கடையில விற்பனையில இருக்கற இதழ்ல கூட, “சீறிய சோனியா சீறிய சோனியா ! எகிறிய கலைஞர் !”ன்ற தலைப்புல கவர் ஸ்டோரி பண்ணிருக்காங்க… மற்ற பத்திரிக்கைகள் எல்லாத்துலயும், திமுகவை காங்கிரஸ் எப்படி பணிய வைத்தது, ஸ்பெக்ட்ரம் விசாரணையை நிறுத்தனும்னு திமுக வைத்த நிபந்தனை, அதுக்கு காங்கிரஸ் மறுத்தது ன்ற விபரங்களை எழுதியிருக்காங்க…. ஆனா நக்கீரன்ல மட்டும் உல்டாவா செய்தியை எழுதியிருக்காங்கன்னு மக்கள் பேசிக்கிறாங்கப் பா“
“நக்கீரன்ல கொஞ்சம் கூட பத்திரிக்கை தர்மத்த கடைபிடிக்க மாட்டாங்களா தலைவரே… ? “
“அது பத்திரிக்கையா இருந்தாத்தானேப்பா தர்மத்தை கடைபிடிப்பாங்க. புடிக்காதவங்களப் பத்தி தப்பா செய்தி போட்டு, மிரட்டி பணம் பறிக்கறது, சமூக சேவகர்ன்ற போர்வையில, வீடு ஒதுக்கீடு வாங்கி, அத பல கோடி ரூபாய்க்கு விக்கறது, திமுகவோட ஊழலை மறைச்சு அதுக்கு ஆதரவா செய்தி வெளியிடுறது.. இப்படி பண்ணிக்கிட்டு இருக்கறவங்கள எப்படிப்பா பத்திரிக்கைன்னு சொல்றது ? “
“அதுவும் சரிதான் தலைவரே.. “
மிஸ்டு கால்.
நக்கீரன்ல ரொம்ப வருஷம் வேலை பாத்து வேலைய விட்டுட்டு போன அன்பானவர் ஒருத்தர், இப்போ வேற பத்திரிக்கையில வேலை பாத்துக்கிட்டு இருக்கார். அவர் வருமான வரி ஏய்ப்பு செய்திருக்கறதா, நக்கீரன் லெட்டர் ஹெட்டுல, குருமாராஜ் புகார் அனுப்பியிருக்கார். அதையொட்டி அவரை வருமான வரித்துறை கூப்பிட்டு விசாரிச்சுருக்கு. உரிய ஆவணங்களையெல்லாம் காண்பித்த அவர், என் மீது என்ன புகார் என்று கேட்டிருக்கார். அப்போ, நக்கீரன் லெட்டர் ஹெட்டுல புகார் வந்துருக்கதால, உங்கள கூப்பிட்டோம் என்று கூறியிருக்கிறார்கள். இதனால, கடும் கோபமடைஞ்ச அவர், மிக காட்டமாக, கோபால் கைதான போது, அவர் செய்த உதவிகளையெல்லாம் குறிப்பிட்டு, நன்றி கெட்டவர்கள் என்று ஒரு கடிதத்தை எழுதி, கோபாலுக்கே அனுப்பிட்டாராம். அது மட்டுமில்லாம, குருமாராஜப் பத்தி தீவிரமா விசாரணையில இறங்கியிருக்காராம். ஸ்பெக்ட்ரம் விவகாரத்துல குருமாராஜை ஏன் கைது செய்யலன்னு, சுப்ரமணிய சுவாமி மூலமா, டெல்லி உயர்நீதிமன்றத்துலயும் மனு தாக்கல் செய்யறதுன்னு, முடிவெடுத்துருக்காறாம்.