சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவில், சுனில் குமார் என்ற லஞ்ச ஒழிப்புத் துறையின் இணை இயக்குநராக இருக்கும் ஒரு அதிகாரி ஊழல் பேர்விழி என்றும், ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கிறார் என்றும் சவுக்கில் எழுதப் பட்டிருந்தது.
அந்தப் பதிவுக்குப் பிறகு, சவுக்குக்கு கடும் கண்டனங்கள். சுனில் குமார் ஒரு நேர்மையான அதிகாரி, அவரைப் பற்றி எப்படி எழுதலாம், வாய்க்கு வந்த படி ஒரு அதிகாரியைப் பற்றி எழுதவது தவறு, பிடிக்காத அதிகாரி என்றால் என்ன வேண்டுமானாலும் எழுதலாமா, என்றெல்லாம் கடும் கண்டனங்கள் எழுந்தன.
சவுக்குக்கு பிடித்த அதிகாரிகள், பிடிக்காத அதிகாரிகள் என்று யாரும் கிடையாது. வாய்க்கு வந்தபடி, விசாரணை நடத்தாமல், சவுக்கு என்றுமே எழுதியது கிடையாது. சவுக்குக்கு சாதி துவேஷமும் கிடையாது என்பது சவுக்கைப் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும்.
இந்த சுனில் குமார், ஒரு கபட வேடதாரி. மிக மிக கவனமாக, தான் ஒரு நேர்மையான அதிகாரி போன்ற வேடத்தை பல ஆண்டுகளாக பராமரித்து வருபவர். ஆனால் இவர் உண்மையில் நேர்மையான அதிகாரி இல்லை என்ற விபரத்தைத் தான் சவுக்கு பதிவு செய்திருந்தது.
சவுக்குக்கு வேண்டிய அதிகாரிகள், வேண்டாத அதிகாரிகள் என்ற பாகுபாடு எதுவுமே கிடையாது. சவுக்குக்கு வேண்டியதெல்லாம், அதிகாரிகள், நேர்மையாக மனசாட்சிப் படி நடந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே.
அதிகாரிகள் தவறு செய்தால் என்ன ஆகும் என்பதற்கு அயோத்தி வரலாறே ஒரு சான்று. அந்த டிசம்பர் மாத நள்ளிரவில், 1949ல், 50 பேர் கொண்ட ஒரு கும்பல், மசூதியின் உள்ளே புகுந்து, சிலைகளை வைக்கிறது. இந்தத் தகவலை கேள்விப் பட்ட நேரு, உள்துறை அமைச்சரை அழைத்து, உடனடியாக அந்த சிலைகளை அகற்ற உத்தரவிடுகிறார். அவரும், பைசாபாத் டெபுடி கமிஷனராக இருந்த கே.கே.நய்யாரிடம், சிலைகளை அகற்றுமாறு உத்தரவிடுகிறார். நேரு சிலைகளை அகற்ற உத்தரவிட, அவர் சொன்ன காரணம், “மிக மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான முன்னுதாரணம் இது“.
ஆனால், பைசாபாத் டெபுடி கமிஷனர் கே.கே.நய்யார், சிலைகளை அகற்ற மறுத்து விட்டார். அவர் சொன்ன காரணம், “சிலைகளை வைப்பதற்கு பின்னால் உள்ள உணர்வுகளை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது “ என்பதுதான் அது. இந்த கே.கே.நய்யார், பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின், பிஜேபியின் அப்போதைய வடிவமான ஜன் சங்கின் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் என்பது துணை செய்தி.
அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ளாமல் இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்று இப்போது உணர்கிறீர்களா ? அன்று, கே.கே.நய்யார் மனசாட்சிப் படி நடந்து கொண்டு, சிலைகளை அகற்றியிருந்தால், இன்று 60 ஆண்டுகளாக, இந்துக்களும், முஸ்லீம்களும் இப்படி எதிரும் புதிருமாக நின்று கொண்டிருப்பார்களா ? இந்த பிரச்சினைதான் இப்படி ஒரு வடிவத்தை பெற்றிருக்குமா ?
அதனால்தான் சவுக்கு, அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.
இப்போது மீண்டும் சுனில் குமாருக்கு வருவோம்.
சுனில் குமாருக்கு நெருக்கமான ஒரு உயர் அதிகாரி, சவுக்கிடம், சுனில் குமார் ஊழல் செய்துதான் இவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என்று சொல்ல முடியாதே, அவருடைய தகப்பனார் ஒரு ஓய்வு பெற்ற டிஜிபி. அதனால், அவர் இயல்பாகவே செல்வந்தராக இருக்கலாமே என்று ஒரு கேள்வி எழுப்பினார். சுனில் குமார் நேர்மையான அதிகாரி தானா, பரம்பரையாக வந்த சொத்தில் தான் அவர் இவ்வாறு சொத்து சேர்த்துள்ளாரா என்று சவுக்கு ஆராய்ந்த போது, சுனில் குமாரின் வசூல் வேட்டைகள், 2006ல் அவர் போக்குவரத்து கூடுதல் கமிஷனராக இருந்த பொழுது துவங்கியது என்று தெரிகிறது. இந்த வசூல் வேட்டைகள், அவர் கோவை மாநகரின் ஆணையராக ஆன பின், கொடி கட்டிப் பறந்தது என்று தகவல்கள் கூறுகின்றன.
அடுத்த விஷயத்துக்கு வருவோம். சவுக்கு, சுனில் குமாரைப் பற்றி ஆதாரங்கள் இல்லாமல் எழுதியதாக ஒரு புகார் எழுந்துள்ளது.
கீழே உள்ள இந்த ஆவணத்தை பாருங்கள்.
(வட்டமிட்டிருக்கும் இடத்தில் உள்ளதுதான் அனந்த் ராமின் இடம்)
இந்த ஆவணத்தின் படத்தில் உள்ளவர் பெயர் அனந்த் ராம். படத்தைப் பார்த்து விட்டு, உங்கள் வீட்டின் அருகில் உள்ள அடகுக் கடை மார்வாடி என்று நினைத்து விடாதீர்கள்.
இவர் சுனில் குமாரின் மாமனார். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். ஓய்வு பெற்று, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஊட்டியில் வந்து அரை ஏக்கர் வாங்க வேண்டிய அவசியம் என்ன ? அதுவும், சுனில் குமார் போக்குவரத்து கூடுதல் ஆணையராக ஆன மூன்றாவது மாதம் டெல்லியிலிருந்து வந்து வாங்க வேண்டிய அவசியம் என்ன ? இதற்கான விளக்கத்தையெல்லாம் சுனில் குமாரிடம், போலா நாத் கேட்டால் நன்றாக இருக்கும். மேலும் சொத்துக்களின் பட்டியலை சவுக்கு வெளியிட்டு விட்டது. எனக்கு சொத்தே இல்லை என்று சொல்லும் நபரின் மேல் சொத்துக் குவிப்பு வழக்கை தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை, இத்தனை சொத்துக்களை வைத்துக் கொண்டு இருக்கும் ஒரு நபரை, அந்த துறைக்கே இணை இயக்குநராக வைத்திருப்பது என்ன நியாயம் ?
சுனில் குமார், சவுக்கை, “This fellow, a bloody subordinate, is blasphemously bitching about senior officers” என்று கூறியிருக்கிறார்.
சுனில் குமார் சார், உங்களைப் பற்றி புறம் பேசுவது சவுக்கின் வேலை அல்ல. அப்படிப் பேசுவதற்கு சவுக்குக்கு நேரமும் கிடையாது. மேலும் சீனியர் ஆபீசர் என்ற மரியாதை, உங்கள் நடத்தையை வைத்து வர வேண்டும். 20 வருடம் சர்வீஸ் ஆனால் நீங்கள் சீனியர் ஆபீசர் ஆகி விட மாட்டீர்கள். உங்கள் சொத்துக்களின் பட்டியலை சவுக்கு வெளியிட்டிருந்ததே.. அதை நீங்கள் இது வரை மறுக்கவில்லை. ஆனால், மற்ற அதிகாரிகளிடம், இல்லாததையும், பொல்லாததையும் எழுதியிருக்கிறார்கள் என்று கோபப் பட்டிருக்கிறீர்கள். உங்கள் சொத்துக்கள் என்று சவுக்கு வெளியிட்டிருந்த பட்டியல் இதோ.
- வேலூர் மாவட்டம் ஏலகிரியில் சுனில் குமார் பெயரில் ஒரு ஏக்கர் நிலம்.
- மணப்பாக்கத்தில் இரண்டு கிரவுண்டுகள் நிலம்.
- காஞ்சிபுரம் மாவட்டம் தையூர் கிராமத்தில் குடும்பத்தினர் பெயரில் ஒரு ஏக்கர் நிலம்.
- சோழிங்கநல்லூரில் குடும்பத்தினர் பெயரில் நாலு கிரவுண்டுகள் நிலம்.
- காரப்பாக்கத்தில் குடும்பத்தினர் பெயரில் நாலு கிரவுண்டுகள் நிலம்.
- ஊட்டியில் மூன்று இடங்களில் தலா அரை ஏக்கர் நிலம் சுனில் குமார் குடும்பத்தினர் பெயரில் (மொத்தம் ஒன்றரை ஏக்கர்)
- குற்றாலத்தில் குடும்பத்தினர் பெயரில் 25 சென்ட்டுகள் நிலம்.
- ஓசூர் அருகே குடும்பத்தினர் பெயரில் ஒரு ஏக்கர் நிலம்.
- கோவைப்புதூரில் குடும்பத்தினர் பெயரில் 20 சென்ட்டுகள் நிலம்
சுனில் குமார் சார், உங்களுக்காகவும், உள்துறை செயலாளர் ஞானதேசிகனுக்காகவும் (சார் நீங்க கூட புது போலீஸ் ட்ரெயினிங் ஸ்கூல் பக்கத்துல 1000 ஏக்கர் வாங்கியிருக்கீங்களாமே ?) தலைமைச் செயலாளர் மாலதிக்காகவும், (மேடம் உங்க மேல FIR போட சொல்லி DE 52/2001/PUB/HQ என்கொயரில, லஞ்ச ஒழிப்புத் துறை பரிந்துரை செய்திருந்ததாமே, அது என்ன மேடம் ஆச்சு ?) லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் போலாநாத்துக்காகவும், இந்த சொத்துக்களின் புகைப்படங்கள் வெளியிடப் படுகிறது. நீங்களே சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
(கோவைப்புதூரில் 20 சென்டுகள்)
(குற்றாலத்தில் 25 சென்டுகள்)
(ஓசூர் அருகே, ஒரு ஏக்கர் நிலம் )
(காரப்பாக்கத்தில் 4 கிரவுண்டுகள்)
(கோத்தகிரியில் அரை ஏக்கர்)
(ஊட்டியில் மற்றொரு அரை ஏக்கர்)
(சோழிங்கநல்லூரில் சிறப்பு சாலையோடு 4 கிரவுண்டுகள்)
(சிறப்பு தார்ச் சாலையோடு, தையூரில் ஒரு ஏக்கர் நிலம்)
சற்று முன் வந்த தகவல்
லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றும், செல்வநாயகி என்ற உதவியாளருக்கு, பேனல் எதுவும் இல்லாமலேயே, உரிய தகுதி இல்லாமலேயே, சிறப்பு உதவியாளராக சுனில் குமார் பதவி உயர்வு வழங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன
இப்போது சொல்லுங்கள், இவர் உத்தரப் பிரதேசத்தின் உத்தமப் புததிரன் தானே ?