வேள்வி – 12
திடீரென்று தலையில் இடி இறங்கியது போலிருந்தது. என்னதான் தொழிற்சங்கம், போராட்டம் என்று பழக்கம் இருந்தாலும் கூட்டமாக போலீசைச் சந்திப்பதற்கும், தனியாக சந்திப்பதற்கும் நிறைய வேறுபாடு. யாருக்குத் தகவல் சொல்வது, தகவல் சொல்ல விடுவார்களா. வீட்டில் வேறு ஏதாவது ஆதாரங்கள் வைத்திருக்கிறோமா. அம்மா இச்செய்தியை எப்படித் தாங்கப்போகிறார்கள் என்று...