வேள்வி – 10
கதிரொளி செய்தியைப் பார்த்ததும் ஏற்பட்ட உற்சாகம் பதற்றமாக மாறியது. என்ன ஆகியிருக்கும்.. ? வம்பில் மாட்டி விட்டு விட்டோமோ…. அவர் பாட்டுக்கு நிம்மதியா இருந்திருப்பாரே… உடனே பூதலூர் கிளம்பலாமா ? பற்பல எண்ணங்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளவர்கள் யாரையாவது தொடர்பு கொண்டு போய்ப் பார்த்து வரச் சொல்லலாமா...