Category: #PackUpModi 2019 தேர்தல்

3

10 சதவீத இட ஒதுக்கீடு – அரசமைப்பு சாசனத்திற்கு எதிரான மோசடி

இப்படி நடக்கும் எனக் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் இருந்த நாட்டின் மீது 124ஆவது அரசமைப்பு சாசன சட்டத் திருத்த முன்வரைவைத் தூக்கிப்போட்ட மத்திய அரசாங்கம், இரண்டே நாட்களில் அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கிட்டத்தட்ட ஏகமனதாக, நிறைவேற்றச் செய்திருக்கிறது. ஓரிரு நாட்களில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட, அது அரசமைப்பு...

0

2019 தேர்தலுக்கு மோடி அரசு செலவிட உள்ள ஒரு லட்சம் கோடி

கடந்த வெள்ளியன்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி ஒன்றில், வரும் மக்களவைத் தேர்தல்களில் இவ்வளவு பெரிய செலவானது பெரும்பாலும் அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 2019 மக்களவைத் தேர்தலில் ஓட்டுக்களைப் பெற்றுத் தரக்கூடிய பல நடவடிக்கைகளை அறிவிக்கலாம்....

0

ரஃபேல் விவாதம், நிர்மலா சீதாரமன் உரை: ஒரு நாடகமன்றோ நடக்குது!

கடந்த வெள்ளியன்று மக்களவையில் ரஃபேல் பேரம் மீதான விவாதத்திற்கு 150 நிமிட நேரம் பதிலளித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரது கட்சி எம்.பி.க்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். அனைவரும் ’கட்டாயம்’ பார்க்க வேண்டிய காணொளிக் காட்சி என்று ட்விட்டரில் கூறியுள்ள பிரதமர் மோடி...

0

மோடிக்கு எதிரான கூட்டணி புனிதமில்லாக் கூட்டணியா?

2019ல் நாம், ‘புனிதமில்லாக் கூட்டணி’ பற்றி நிறையவே கேள்விப்பட இருக்கிறோம். ஏற்கனவே சிலவற்றைக் கேட்டிருந்தாலும், இன்னும் பெரியவை காத்திருக்கின்றன. பாஜக தலைவர்கள் மற்றும் அரசுக்கு நட்பான அதிகாரிகள் எதிர்கட்சிகளின் சுயநல அரசியலைக் குற்றம்சாட்டக் கடந்த ஆண்டு இந்தப் பதத்தை உருவாக்கினர். நாடு முழுவதும், தீவிர எதிரிகள் தங்கள்...

1

மோடி அரசின் ரிப்போர்ட் கார்டு: ரிசல்ட் ‘ஃபெயில்’

இக்கட்டுரையை வெள்ளிக்கிழமை நான் எழுதிக்கொண்டிருக்கும்போதே, வட்டியில்லா பயிர்க்கடன், சிறு – நடுத்தர விவசாயிகளது வங்கிக் கணக்குகளில் பணம் போடுதல் போன்ற நடவடிக்கைகள் பற்றிப் பேச்சு அடிபடுகிறது. பயிர்க்கடன் வழங்குமாறு பொதுத்துறை வங்கிகளை மத்திய அரசு அறிவுறுத்தினாலும், வங்கிக்கணக்குகளில் போடத் தேவையான பணத்துக்கு அது எங்கே போகும்? 2018...

2

மோடியின் பேட்டி எப்படி இருந்திருக்க வேண்டும்?

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு மோடி அளித்த பேட்டியின் போது தீவிரமான கேள்விகளோ குறுக்குக் கேள்விகளோ எழுப்பபடவில்லை என்பதோடு, முக்கியமன பல கேள்விகள் பதில் அளிக்கப்படாமல் இருக்கின்றன. பெரும் செல்வாக்கு பெற்ற இந்தியத் தலைவர்களுக்கு யதார்த்தத்தைப் புரியவைப்பதில் இந்திய ஜனநாயகம் தனித்துவமான வழியைப் பெற்றுள்ளது. அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியதும்...