கசடற – 2
பாராளுமன்றத்தில் 1980ஆம் ஆண்டு ஜூன் மாதம் பல்ராம் ஜாகர் சஞ்சய் காந்தியின் மறைவை அறிவித்தபோது ஒட்டுமொத்தமாய் எல்லோரும் உறைந்து போனார்கள். உடனடியாக என்ன எதிர்வினை செய்ய வேண்டும் என யாருக்கும் தெரியவில்லை. சஞ்சய் காந்தி இந்திராகாந்தியின் செல்லப்பிள்ளையாக இருந்தார். தனக்கு அடுத்ததாக சஞ்சய் தான் எல்லாம் என்கிற பிம்பத்தை இந்திரா கட்டத்...