சத்குரு – ஆபத்தான இந்துத்துவ பிரசங்கி
சத்குரு ஜக்கி வாசுதேவ், ஒரு புதிரான மனிதர். இப்போது இந்துத்துவ தேசியவாதத்தின் ஆன்மிக, கலாச்சார அடையாளச் சின்னமாகியிருக்கிறார். நீண்ட வெண்தாடி மார்பில் புரள, மென்மையாக உரையாடுகிறார். பொறுமையாகவும் எதையும் அளந்துவைத்தும் பேசுகிறார். கால எல்லைகளைக் கடந்த ஞானத்தைப் பற்றி பிரசங்கிக்கிறார். சில சமயம் சர்வதேச அரசியல் குறித்தும்...