புல்வாமாவுக்குப் பிறகு – பாஜகவின் பிரசார இயந்திரமாக மாறிய இந்திய ஊடகங்கள்
பிப்ரவரி 14ஆம் தேதி, இந்தியத் துணை ராணுவப் படையின் வாகனம் புல்வாமாவில் தாக்கப்பட்டது. அதன் விளைவாக 40 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கம் உடனே இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக, இந்திய விமானப் படை, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா...