தமிழகம் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமான தேர்தலைக் கண்டுவருகிறது. திமுக அல்லது அதிமுக இரண்டில் ஒன்று தான் ஆட்சிக்கு வரும் என்பதே தமிழகத்தின் நிலையாக இருந்தது. இரண்டு கட்சிகளும் இருக்கின்றன. கட்டமைப்போடு உள்ளன. ஆனால் நாம் இதுவரை நம்பியது கட்சி என்பதைக் காட்டிலும் தலைமையைத் தான்...
நவம்பர் 8 , 2016 ஆம் நாள் பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு பற்றி அறிவிப்பு வெளியிட்டதும் நாடே பரபரப்பானது இந்திய மக்கள் திகைத்துப் போனார்கள். நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு ஏடிஎம் வாசல்களிலும் நீண்ட வரிசைகளில் நிற்கத் தொடங்கினார்கள். வங்கி வாசலில் மக்கள் கூட்டம்...
ஆகஸ்ட் 15ல், யார் அதிமுகவின் அதிகாரபூர்வ முதல்வர் வேட்பாளர் என்ற சர்ச்சை எழுந்ததன் பின்னால், கட்சியை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே எழுந்த அதிகார மோதலில், முழுமையான வெற்றி எடப்பாடிக்கே என்பதை உறுதியாக நிரூபித்தார் எடப்பாடி பழனிச்சாமி 2021 தேர்தல் வரவிருப்பதால்...
சொக்கிக்கிடக்கும் 100 தொகுதியின் அதிமுக நிர்வாகிகள்: எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்ஸை வீழ்த்தப்போகும் வெலுமணி. 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார்கள் என்ற சர்ச்சை எழுந்து, போஸ்டர் யுத்தம் வரை நடக்கத் தொடங்கி விட்டது. அதிமுகவில் என்ன நடக்க வாய்ப்பிருக்கிறது ?...
சென்னையில் நாளுக்கு நாள் நோய்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்கள் என்ன நடக்கிறது, என்ன நடக்கவிருக்கிறது என்கிற குழப்பத்தில் இருக்கிறார்கள். இந்தக் குழப்பத்தைத் தடுத்து , மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டிய இடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். ஆனால் அவருக்கு இந்த நோய் எத்தகையது, எப்படி...
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி. மக்களைப் போலவே எதிர்க்கட்சியினரும் இவரை மிகக் குறைத்து மதிப்பிட்டு விட்டனர். கூவாத்தூரில் நடந்த நாடகத்தில், போட்டியிலேயே இல்லாத எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற கதையை தெரிந்தவர்களுக்கு, இவர் எப்படிப்பட்ட அரசியல்வாதி என்பது புரியும். ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம்...