கசடற -9 – கண்ணீர் விட்டே வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை….
நாளை இந்தியாவின் 75வது சுதந்திர நாளை கொண்டாட இருக்கிறோம். எந்த ஒரு நாட்டின் வரலாறிலும், அடிமைத் தளையிலிருந்து விடுதலையான 75வது ஆண்டு என்பது கொண்டாடத்தகுந்ததே. நாமும் கொண்டாடுவோம். சுயபரீசிலனை செய்துகொண்டே. இந்த 75 ஆண்டுகளில் நாம் சாதித்தது ஏராளமான விஷயங்களில். சறுக்கியதும் பலவற்றில். பெற்றது பல. ...