எத்தனை கோடி கொடுத்தாய் வைகுண்டராஜா ?
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து விதமான க்ரானைட் க்வாரி நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டன என்று ஜெயலலிதா ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து தமிழகமெங்கும் வருவாய்த்துறை மற்றும் கனிமத்துறை அதிகாரிகள் பரபரப்பாக ஆய்வுகளை மேற்கொண்டனர். வருவாய்த்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு ஆய்வுக் குழுவை...