புதிய சவுக்கு தொடக்கம்
அன்பார்ந்த வாசகர்களே…… சவுக்கு தளத்தோடு தொடர்ந்து பயணித்து வந்த அன்பு உறவுகளே……. சவுக்கு தளம் மூடப்படுகிறது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டதும் பல்வேறு வாசகர்கள் துடிதுடித்தனர். தொலைபேசியிலும் முகநூல் வழியாகவும் என்ன ஆயிற்று… ஏது ஆயிற்று என்று பதறினர். மின்னஞ்சல்கள் குவிந்தன. ஆனால், எதிரிகளோ எக்காளமிட்டனர். மகிழ்ச்சி பெருவெள்ளத்தில்...