நீதித் துறை நாடகம்: மாறும் பாத்திரங்கள், மாறாத காட்சிகள்!
பெரியதொரு நாடக மேடையாகிய இந்திய நீதித் துறையில் நடிகர்கள் மாறுகிறார்கள், அவர்களுடைய கதாபாத்திரங்கள் மாறுகின்றன.ஆனால் பிரச்சினைக்குரியதாக இருக்கிற மேடைக் கதையாக்கம் அப்படியே இருக்கிறது. 2018 ஜனவரியில் உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் – ஜே.செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் லோகூர், குரியன் ஜோசப் – ஆகியோர்...