மோடிக்கு நம்பகமான மாற்றாக ராகுல் இருக்க முடியும்
கடந்த நான்கு ஆண்டுகளில், நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் – முக்கியமாக புதிய ஆதரவாளர்கள் – களிப்பு நிலையிலிருந்து (ஒரு வழியாக காங்கிரஸ் தோற்றுவிட்டது, இந்தியாவிற்குத் தேவையான தலைமை கிடைத்துவிட்டது) நம்பிக்கைக்குச் சென்று (இது ஆரம்பம்தான், இவர் நிச்சயமாக இந்தியாவை மாற்றுவார்) எதையும் கண்டுகொள்ளாத பொறுமை நிலைக்குத் தாவி...