தேர்தல் 2019: உத்தரப் பிரதேசத்தில் மோடி வித்தை பலிக்குமா?
உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில், இது அலையில்லாத் தேர்தல். ஒவ்வொரு மக்களவைத் தொகுதியின் முடிவையும் நிர்ணயிப்பதில் சாதியின் பங்குதான் அதிகம். உத்தரப் பிரதேசம் மிக அதிக எண்ணிக்கையிலான மக்களவைத் தொகுதிகளைக் கொண்டிருப்பதால், பொதுத் தேர்தல்களில் எப்போதுமே அம்மாநிலம் மீது கவனம் குவியும். 2014 தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான...