இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் – ஊழலல்ல, மதவெறியே
அது 2001ஆம் ஆண்டு நவம்பர். பெங்களூருவில் தொடங்கப்பட்டிருந்த, தற்போது செயல்படாத, பிரீமியர் இன்ஃபோடெக் என்ற சிறிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இளம் நிர்வாகிகள் என்னை அவர்களது அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தனர். குஜராத்தின் அன்றைய முதலமைச்சர் நரேந்திர மோடி தொடங்கியிருந்த அற்புதமானதொரு மின்னணு நிர்வாகம் (இ-கவர்னன்ஸ்) பற்றி எனக்குச்...