ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியை முறைகேடாக, தமிழக அரசு சுய உதவிக்குழுக்களுக்கான கட்டிடத்திற்கு செலவழிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி, தமிழக அரசின் செயல்பாட்டிற்கு அதிருப்தி தெரிவித்துள்ளது.
காவிரி ஆற்றிலிருந்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை பெங்களூரில் அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்ததும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்..
நுகர்பொருள் வாணிப கழகம் மூடு விழாவை நோக்கி போய் கொண்டு இருக்கிறது. காவிர் டெல்டா மாவட்டங்களில் சம்பா, குறுவை சாகுபடிகளில் விவசாயிகளுக்கு நல்ல விலைக்கு நெல் கொள்முதல் செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட நுகர்பொருள் வாணிப கழகம், இன்று அதிகாரிகளின் கூட்டுக் கொள்ளையால், பல கோடி நட்டத்தில் செயல்படுகிறது.
தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீதிபதி கோவிந்தராஜன் திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.
மேல்முறையீடு செய்துள்ள தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசுக்கும், நீதிபதி குழுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் ராஜிநாமா செய்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான போருக்குப் பின்னர், இலங்கை அரசே விடுதலைப் புலிகளை மறந்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்ட நிலையில், இன்னமும் இந்திய அரசு விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாகக் கருதி தடை செய்திருப்பது நியாயமா என்று எழுப்பப்படும் கேள்வி நியாயமானதுதான்.