Logo
Logo

முக்கிய செய்தி:

விளையாட்டு

ஐபிஎல் டி20 தொடரிலிருந்து தோனி ஓய்வு?

PRITHIVIRAJ22-03-2024
ஐபிஎல் டி20 தொடரிலிருந்து தோனி ஓய்வு?

2024 ஐபிஎல் டி20 சீசன் முடிந்தவுடன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரிலிருந்தே ஓய்வு பெறப் போவதாகத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காகத்தான் சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை வளர்ந்து வரும் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் தோனி வழங்கியுள்ளதாகவும் தகவல்கல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2020, ஆகஸ்ட் 15ம் தேதி ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்து ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வந்தார். இப்போது ஐபிஎல் தொடருக்கும் முழுக்கு போட தோனி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

MS-Dhoni.jpg

சிஎஸ்கே அணியைவிட்டு தோனி செல்லும்போது, கேப்டன் பதவி மாற்றம் லகுவாக நடக்க வேண்டும் என்று சிஎஸ்கே நிர்வாகம் விரும்பியது. இதற்காகத்தான் தொடக்கத்திலேயே கேப்டன் பொறுப்பு கெய்க்வாட்டிடம் ஒப்படைக்கப்பட்டதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிஎஸ்கே அணிக்கும், தோனிக்கும் இடையே இருக்கும் பந்தம் சொல்லிமாளாது என்பதால், வீரராக இல்லாவிட்டாலும்கூட, ஏதாவது ஒருவகையில் தோனியின் பங்களிப்பு அணிக்குள் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிஎஸ்கே கேப்டனாக கடந்த 2022 சீசனில் ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டு அது சரிவரவில்லை என்பதால், 8 ஆட்டங்களுக்குப்பின் தோனியே மீண்டும் கேப்டனாகினார். அதுபோல், ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டு அது சிறப்பாக இல்லை என்றால் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது.

இது குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ விஸ்வநாதன் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ ஜடேஜாவை கேப்டனாக நியமித்தோம் அது அந்த நேரத்தில் சரிவர பலன் அளிக்கவில்லை. ஆனால், இப்போது ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாகநியமித்துள்ளது வேறுவிதம்” என்றார்.

csk.jpg

மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் 250 போட்டிகளுக்கு மேல் விளையாடி 5ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து 135.92 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

42வயதான தோனி முழங்கால் காயம், வலி காரணமாகவே கடந்த சில சீசன்களில் 8-வது வீரராக களமிறங்கி வந்தார். இப்போது முழங்கால் அறுவை சிகிச்சையால், இந்த சீசனில் தோனி நடுவரிசையில்கூட களமிறங்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்