Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் இருந்த 17 இந்தியர்களில் பெண் பணியார் தாயகம் திரும்பினார்

PRITHIVIRAJ18-04-2024
ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் இருந்த 17 இந்தியர்களில் பெண் பணியார் தாயகம் திரும்பினார்

ஈரானில் புரட்சிப்படையினரால் கடந்த வாரம் சிறை பிடிக்கப்பட்ட எம்எஸ்சி ஏரிஸ் சரக்குக் கப்பலில் இருந்த 17 இந்தியர்களில் பெண் பணியாளர் ஒரு இன்று தாயகம் திரும்பினார் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திருச்சூரைச் சேர்ந்த அன்ன டெஸா ஜோஸப் என்ற பெண் ஊழியர் இன்று கொச்சி சர்வதேச துறைமுகத்தில் வந்துபோது, அவரை வெளியுறவுத்துறை அதிகாரிகள் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இஸ்ரோல் கோடீஸ்வரர் இயால் ஆபருக்குச் சொந்தமான, லண்டனை தலைமையிடமாகக் கொண்ட ஜோடியாக் மரிடைம் நிறுவனத்தின் எம்எஸ்சி ஏரிஸ் சரக்கு கப்பலை கடந்த 13ம் தேதி ஈரானின் புரட்சிப்படையினர் சிறைபிடித்தனர்.இந்தக் கப்பலில் இந்தியர்கள் 17 பேர் உள்பட 25 ஊழியர்கள் இருந்தனர்.

இதையடுத்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மூலம் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூசைன் அமிர் அப்துல்லாவுடன் பேச்சு நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தைக்குப்பின், முதல்நபராக பெண் ஊழியர் நாடு திரும்பியுள்ளார். மற்ற 16 இந்தியர்களும் நலமுடன் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “ சரக்கு கப்பலில் இருக்கும் 16 இந்திய ஊழியர்களை பாதுகாப்பாக அழைத்து வர ஈரான் அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். இந்தியர்கள் நல்ல உடல்நிலையில் உள்ளனர், இந்தியாவில் உள்ள அவர்களின் குடும்பத்தாருடன் தொடரில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.

ஆனால் ஈரான் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் சரக்குக் கப்பல் சர்வதேச கடல்சார் சட்டத்தை மீறியதால்தான் சிறைபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கான ஈரான் தூதர் ஈராஜ் இலாஹி கூறுகையில் “ இந்திய மாலுமிகள் யாரும் சிறைபிடிக்கப்படவில்லை. அவர்கள் கப்பலின் கேப்டன் வசம் இருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள அதிகாரிகள், தூதரகத்துடன் ஈரான் அதிகாரிகள் நேரடித் தொடர்பில் உள்ளனர். இந்தியர்கள் நல்ல உடல்நிலையில் இருக்கிறார்கள். மோசமான வானிலை , கடல் கொந்தளிப்பால் அவர்கள் கடற்கரை பகுதிக்கு வரமுடியவில்லை. ஈரானிலிருந்து அவர்கள் எப்போது வேண்டுமானாலும் புறப்பட்டுச் செல்லலாம். அதற்குத் தடையில்லை” எனத் தெரிவித்தார். Iran இதையடுத்து, ஈரானில் சரக்கு கப்பலில் பணியாற்றி வரும் 17 இந்தியர்களில் பெண் ஊழியரான டெஸா ஜோஸப் விமானம் மூலம் கொச்சி நகருக்கு இன்று வந்து சேர்ந்தார். அவரை மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்