Logo
Logo

முக்கிய செய்தி:

விளையாட்டு

ஐபிஎல் 2024: சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் டி20 இறுதி ஆட்டம்?

PRITHIVIRAJ24-03-2024
ஐபிஎல் 2024: சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் டி20 இறுதி ஆட்டம்?

2024ம் ஆண்டு ஐபிஎல் டி20 சீசனின் இறுதி ஆட்டத்தை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, வெளிமாநிலங்களில் நடக்கும் தேர்தல்களையும் கருத்தில் கொண்டு சென்னையில் பைனல் ஆட்டம் நடத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

chepak1.jpeg

நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடக்கிறது. தேர்தலைக் கருத்தில் கொண்டு, ஐபிஎல் டி20 தொடருக்கான முதல்பகுதி ஆட்டத்துக்கான அட்டவணை மட்டுமே பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இன்னும் முழுமையாக போட்டி அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.

2வது கட்ட அட்டவணை அடுத்த சில நாட்களில் வெளியாகும் எனத் தெரிகிறது. அதில் அஹமதாபாத்தில் 2 ப்ளே ஆஃப் போட்டிகளும், சென்னையில் இறுதிப் போட்டியும் நடத்த அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் பைனல் ஆட்டத்தை நடத்திய ஆகமதாபாத் நரேந்திர மோடி அரங்கில், முதல் தகுதி ஆட்டத்தையும், ஒரு எலிமினேட்டர் ஆட்டத்தையும், சென்னை சேப்பாக்கத்தில் 2வது தகுதிச்சுற்று மற்றும்இறுதி ஆட்டத்தையும் நடத்த திட்டமிட்டுள்ளது.

csk.jpg

இந்த ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகினார், மேலும், இந்தத் தொடரிலிருந்து ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு பெறப் போவதாக தகவல்கள் வலம் வருகின்றன. சென்னை ரசிகர்கள் முன் ஆத்மார்த்தமாக விடைபெறுவதற்காக இறுதிப் போட்டியை சேப்பாக்கத்தில் நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ கடந்த ஆண்டு சாம்பியன் அணிக்கு சொந்தமான மைதானத்தில்தான் தொடக்க ஆட்டத்தையும், இறுதி ஆட்டத்தையும் நடத்த ஐபிஎல் நிர்வாகக்குழு முடிவு செய்துள்ளது.அதலால் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கலாம்” எனத் தெரிவித்தார்.

chepak1.jpeg

இதற்கு முன் சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 2011, 2012ம் ஆண்டுகளில் ஐபிஎல் இறுதிப்போட்டி நடந்தது. இதில் 2011ம் ஆண்டில் சிஎஸ்கேயும், 2012ம் ஆண்டில் கொல்கத்தா அணியும் சாம்பியன் பட்டம் வென்றன. இதில் இரு இறுதிப்போட்டிகளிலும் சிஎஸ்கே மோதியது குறிப்பிடத்தக்கது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்