Logo
Logo

முக்கிய செய்தி:

தலையங்கம்

பிரதமர் நரேந்திர மோடி வரும் 16ம் தேதி குமரி மாவட்டம் வருகை - 3 மாதங்களில் 5வது முறையாக தமிழ்நாடு வருகிறார்

SAMYUKTHA11-03-2024
பிரதமர் நரேந்திர மோடி வரும் 16ம் தேதி குமரி மாவட்டம் வருகை - 3 மாதங்களில் 5வது முறையாக தமிழ்நாடு வருகிறார்

3 நாள் சுற்றுப்பயணமாக மீண்டும் தமிழ்நாடு வருகை தருகின்ற பிரதமர் நரேந்திர மோடி வரும் 16ம் தேதி குமரி மாவட்டம் வருகிறார். 3 மாதங்களில் அவர், 5வது முறயைாக வருகை தர உள்ளார்.

மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

கடந்த மார்ச் 4ம் தேதி சென்னை வந்தார். பின்னர் கல்பாக்கம் அணு உலை மேம்பாடு திட்டத்தை பார்வையிட்ட அவர் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

இந்தநிலையில் 3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வரும் 15ம் தேதி மீண்டும் தமிழ்நாடு வருகை தருகிறார். 15ம் தேதி சேலத்திலும், 16ம் தேதி கன்னியாகுமரியிலும், 18ம் தேதி கோவையிலும் செல்லும் அவர் அங்கு நடைபெறுகின்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பொதுக்கூட்ட மேடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் 3ம் தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்திருந்தார். மேலும் திருச்சி விமான நிலைய 2வது முனையத்தையும் அன்று அவர் திறந்து வைத்திருந்தார். தொடர்ந்து ஜனவரி மாதம் 19ம் தேதி நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தொடக்க விழாவிலும் மோடி பங்கேற்றார். பின்னர் ராமேஸ்வரம் சென்ற அவர் வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

பின்னர் பிப்ரவரி மாதம் 27ம் தேதி தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடி பல்லடத்தில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். குலசேகர பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார். கடந்த 4ம் தேதி சென்னை நந்தனத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். கடந்த மூன்று மாதங்களில் ஐந்தாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை தர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்