Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

இந்தியா ஜனநாயக நாடாக திகழ பாஜவை நாட்டை விட்டே விரட்ட வேண்டும் - கனிமொழி எம்பி ஆவேசம்

SAMYUKTHA28-03-2024
இந்தியா ஜனநாயக நாடாக திகழ பாஜவை நாட்டை விட்டே விரட்ட வேண்டும் - கனிமொழி எம்பி ஆவேசம்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி எம்பி, தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், ஓசனூத்து, மணியாச்சி, அக்கநாயக்கன்பட்டி, மருதன்வாழ்வு மற்றும் அயிரவன்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: தூத்துக்குடி எனக்கு 2வது தாய் வீடு என்று சொல்லக்கூடிய அளவிற்கு உங்களின் அன்பால் என்னை கட்டிப் போட்டு விட்டீர்கள். இந்த தேர்தல் பெரும் அரசியல் வெற்றிக்கான தேர்தல் அல்ல. இங்கு இருக்கக்கூடிய இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் இந்தியா என்னும் நாட்டின் மீது, அரசின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள். இந்தியா ஜனநாயக நாடாக இருக்க வேண்டும் என நம்பக் கூடியவர்கள். இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என யாரையும் பிரித்துப் பார்க்காமல் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என நினைப்பவர்கள். தமிழ்நாடு முன்னேற வேண்டும் என கனவு காணக் கூடியவர்கள். இவையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்றால் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தவறாமல் வாக்களிப்பதை கட்டாய கடமையாக கருதி அனைவரும் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து பாஜவை பதவியில் இருந்து மட்டுமல்ல, நாட்டை விட்டே விரட்ட வேண்டும். ஒன்றிய பாஜ ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் புதியம்புத்தூரில் ஆயத்த ஆடைகளுக்கான ஜவுளி பூங்கா நிச்சயம் அமைத்து தரப்படும். சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட போது பார்வையிட பிரதமர் மோடி வரவும் இல்லை. எந்த நிதியும் தரவும் இல்லை. தற்போது தேர்தல் வந்தவுடன் தமிழகத்துக்கு தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெள்ள நிவாரண தொகை, இடிந்த வீடுகளை கட்டுவதற்கு ₹4 லட்சம் என பல்வேறு உதவிகளை வழங்கி உள்ளார். மேலும் பல்வேறு நிதி நெருக்கடி இருந்தாலும் பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகையை வழங்கி வருபவர்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஒன்றியத்தில் பாஜ ஆட்சி மீண்டும் வந்தால் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தையே நிறுத்துவதற்கான வாய்ப்பை அவர்கள் ஏற்படுத்துவார்கள். எனவே இந்தியாவில் பாஜவிற்கு இடமில்லை என்ற நிலையை இந்த தேர்தலில் உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்