Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

சட்டவிரோத மணல் விற்பனையில் அண்ணாமலைக்கு தொடர்பா??

LENIN DEVARAJAN28-03-2024
சட்டவிரோத மணல் விற்பனையில் அண்ணாமலைக்கு தொடர்பா??

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டவிரோத மணல் விற்பனை மூலம் அண்ணாமலை 5 கோடி வரை வசூல் செய்ததாக சிங்கை ராமச்சந்திரன் கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சியினர் ஒருவரை ஒருவர் மாறி மாறி சாடுவது சகஜம். ஆனால், கோவையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அவருக்கு எதிராக களமிறங்கும் பாஜக வேட்பாளர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’என் மண் என் மக்கள்’ யாத்திரை நடத்திய போது பலரிடம் வசூல் வேட்டையில் அண்ணாமலை ஈடுபட்டதாக அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதெல்லாம் சமூக வலைதளங்களில் வெளியான தகவலே தவிர நிரூபிக்கப்பட்டவை அல்ல.

தற்போது கோவை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரன், கோவை பாஜக வேட்பாளரும், மாநில பாஜக தலைவருமான அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்ட பிறகும், பலரிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக சிங்கை ராமச்சந்திரன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக ஆதரவாளர்களே கூறுகிறார்கள்.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் நடைபெற்ற சட்டவிரோத மணல் கொள்ளையில் அண்ணாமலைக்கும் தொடர்பிருப்பதாக சிங்கை ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 5 கோடி ரூபாய் வரை அண்ணாமலைக்கு சென்றதாக ராமச்சந்திரன் தெரிவித்திருப்பதை திமுகவும் கையிலெடுத்துள்ளது.

இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வர வேண்டாம் என அமலாக்கத்துறை அதிகாரி சுபம் அகர்வாலை வலியுறுத்தியும், அவர் கேட்காததால் டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்ததாக ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்ணமலையால் கோவைக்கு வளர்ச்சியை கொண்டு வர முடியாது என கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தெரிவித்திருப்பது கோவை மக்களவை தேர்தல் களம் யுத்த களமாக மாறியுள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்